கிரிக்கெட் செண்டிமென்ட் (உலககோப்பை கிரிக்கெட்/2011)



கிரிக்கெட் விளையாட்டை ரொம்ப தனியாக ஒரு நாளும் நான் பார்த்தது இல்லை... எங்கள் அத்தைக்கு மூன்று பசங்க... அவுங்க வீட்லதான் கிரிக்கெட்  பார்ப்பேன். அது மட்டும் இல்லை அங்க கிரிக்கெட்  பார்க்க ஒரு பெரிய கூட்டமே வரும்...

இந்தியா விளையாடும் போது எல்லாம் ஒரு பெரிய உற்சாகத்தோடு பார்ப்போம்.. அந்த ஹாலில் ஒரு 20க்கும் குறையாத நபர்களோடு கிரிக்கெட்டை பார்ப்போம்...

அரை லிட்டர் பாலில் 20  பேருக்கும் டீ போட்டு கொடுக்கும் திறமை எங்கள் அத்தைக்கு மட்டுமே உண்டு.


இன்று எனது அத்தைக்கு வயது 60.. அவர்களை போல வெறித்தனமாக கிரிக்கெட் பார்க்க முடியாது... அதே போல என் சின்னமாமா எப்போதோ விளையாடிய மேட்ச்களை எல்லாம் தொலைகாட்சியில் வைத்து பார்த்துக்கொண்டு இருப்பார்.. அந்த அளவுக்கு கிரிக்கெட் வெறி...

அப்போதைய ஹீரோக்கள்... அசார்,கிரான்மோரே,ஜடேஜா,  சச்சின் போன்றவர்கள்தான். அசார் கேட்ச் பிடித்து விட்டால் ,அசார் கேட்ச் பிடித்த வித்த்தை சிலாக்கித்து போசிக்கொண்டு இருப்போம்....

இப்படி எல்லாம் பார்த்த கிரிக்கெட் நிறைய சென்டிமென்ட்களோடுதான் பார்ப்போம்... அது பலரது வீட்டுகளிலும், பலரது நண்பர்கள் அறையில் அந்த செண்டிமென்ட் பழக்கம் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றது....

ஒரு பலம் வாய்ந்த அணிகள் என்றால் அது ஆஸ்திரேலியாவும் சவுத் ஆப்பிரிக்காவும்தான்... பட் அப்போது இந்திய அணி சோதா அணி... அதனால் நிறைய செண்டிமென்ட்டை நம்பினோம்... அந்த செண்டிமென்ட்காமேடிக்கள் இந்த உலக்கோப்பையிலும் தொடர்ந்த்துதான் உச்சம் என்ன செய்ய??  என்ன செய்ய டென்ஷன்..

சரி அந்த செண்டிமென்ட் பற்றி இப்போது பார்க்கலாம்... இது பைத்தியக்காரதனம் என்றாலும் நாங்கள் ரிலாக்சாக இப்படி எல்லாம் பேசியபடி  கிரிக்கெட்டை பார்ப்போம்...


1,  எங்கள் அத்தை வீட்டில் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்றால் முதலில் குளித்து இருக்க வேண்டும்.... இரண்டு விக்கெட் இந்தியா பக்கம் விழுந்தால் எந்த நாய் குளிக்கமா வந்து உட்கார்ந்துச்சோ என்று சத்தம் போடும் போதே அடுத்து இரண்டு பால் போடும் போது  யாருக்கும் தெரியாமல் குளிக்காத நபர் எழுந்து போய் விடுவார்..

2,அம்பயர் செண்டிமென்ட் ரொம்பவும் பார்ப்போம்...அப்பவே முடிவு செய்து விடுவோம்.. ஆட்டத்தின் போக்கு எப்படி இருக்கும்?? இன்று ஒரு பெரிய பஞசாயத்து ஆட்டத்தின் போது இருக்கும் என்று அது போலவே அன்று இருக்கும்.

3, 1990களில் எல்லாம் தினேஷ் ஷர்ட்டிங் அண்டு  ஷுட்டிங்(கார்மேன்ட்) கவஸ்கார் விளம்பரம் ஓவர் மாறும் போது  போட்டால் அடுத்து இந்திய விக்கெட் ஒன்று விழுந்து விடும்... அது போல பல முறை நடந்து இருக்கின்றது.. அதனால் அந்த விளம்பரத்தை நாங்கள்  முழுமையாக வெறுப்போம்.,

4,  சச்சின்  விளையாடும் போது  நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும் போது கிளவுஸ் அல்லது பேட்  வேண்டும் என்று பெவிலியன் பக்கம் கேட்டால், தலைவர் சிக்கிரம் பெவிலியன் பக்கம் போக போகின்றார் என்று அர்த்தம்.

5,சச்சின் விளையாடும் போது முன் பக்கம் ஒரு பெரிய கருப்பு ஸ்கரீன் இருக்கும் அதனை தள்ள சொன்னால் அடுத்த பால்  அவுட் ஆகிவிடுவார்....

6,ரொம்ப நேரம் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருப்போம்.. அப்போதுதான் ஒருத்தனுக்கு  ஒன்னுக்கு வருதேன்னு போய் ஒன்னுக்கு இருந்துட்டு வருவான்... அந்த நேரம் பார்த்து இந்தியா பவுலிங் போடும் போது ஒரு விக்கெட் விழுந்துச்சின்னா.. அடுத்த விக்கெட்  விழ அவனை திரும்ப பாத்ரூமுக்கு போய் விட்டு வரச்சொல்வோம்... ஜயோ எனக்கு இப்ப வரலை.. அப்படியா? போய் பாத்ரூம்ல போய் காலையாவது கழுவிகிட்டு வா என்போம்.... அதே போல இந்தியா பேட்டிங் விளையாடும் போது பாத்ரூம் வந்தாலும் அவர் போக கூடாது.. போனால் இந்தியாவுக்கு விக்கெட் விழுந்து விடும் என்பதால்  போக சொல்ல மாட்டோம். போகவிடமாட்டோம்...

6ஏ, உட்கார்ந்து டிவி பார்க்கும் இடத்தை மாற்றி வேறு இடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்போம்...

7,நல்லா வெள்ளாடிகிட்டு இருப்பானுங்க நம்ம பசங்க....எதாவது கமென்ட்ரி சொல்லும் பொறம் போக்கு அப்பதான் வாய வைக்கும்

// யா திஸ் பார்ட்னர் ஷிப் இஸ் குட், மோர் ஸ்ட்ரகில் டூ கெட்  திஸ் ஸ்கோர்...வெரி அண்டர்ஸ்டேண்டிங் அண்டு லக்கி பார்ட்னர் ஷிப் //

என்று சொல்லி வாய முடும் முன்பே ஒரு விக்கெட் விழுந்து விடும்..  யார் கமெண்ட்ரி சொன்னானோ அவனை ங்கோத்தா கொம்மான்னு திட்டி தீர்ப்போம்....நாறவாயை வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க...

8,எந்த விக்கெட்டும் விழாம இந்தியா பேட்டிங்ல 75 ரன் எடுத்து இருப்பானுங்க.. அப்பதான் அந்த கமெண்ட்ரி பன்னி
// நோ லாஸ் பார் இந்தியான்னு சொன்னா அடுத்த நிமிடம்  கிளின் போல்ட் விக்கெட் ஆகும்...

9. எங்க அத்தை வீட்டை பொறுத்தவரை இந்தியா இந்த  மேட்சுல தோர்த்துடும்னு சொன்னா அடுத்த நிமிஷம் எங்க அத்தை அவனை வீட்டு விட்டு அனுப்பிட்டுதான் மறுவேளை பார்ப்பாங்க....

10, சச்சின் 100ரன் கடக்கும் எந்த மேச்சும்  இந்திய அணி ஜெயிக்கும் வாய்ப்பு ரொம்ப குறைவுதான்.

11,இந்த உலக  கோப்பையில் சச்சின் அவுட் ஆனாதும் உலக கோப்பை வாங்கிவிடலாம் என்று உறுதிபடுத்தபட்டது. எந்த போட்டி மற்றும் தொடரில் எல்லாம் சச்சின்  சோபித்தால் அந்த தொடரில் இந்தியா கேவலமாக தோற்று இருக்கும் ஆனால் சச்சின் என்ற தனிமனிதனுக்கு செமையாக கவுரமும் பேரும் கிடைத்து இருக்கும்.

12,அசார் கழுத்து தயாத்து,சிக்சர் அடித்து விட்டு சூரியனை பார்ப்பது ஸ்ரீகாந் ஸ்டைல் அண்டு சென்டிமெட்.

13,இந்த 2011 உலக கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா மேட்ச் பார்க்க பிரதமர் கிலானி வந்தார்.. வெறுங்கையோடு தன் அணி வீரர்களை அழைத்து சென்றார்.. அது போல ராஜபக்ஷே வருகின்றார் என்று சொன்னதும், அதே போல தனது இலங்கை அணி வீரர்களை வெறுங்கையுடன் அழைத்து செல்வார் என்பதால்  இந்திய அணி வெற்றி அப்போதே  உறுதி செய்யப்பட்டது.


14, இந்த 2011 உலக கோப்பையில்  முதலில் ஸ்டார் கிரிக்கெட்டில் மாட்ச் பார்த்தோம் தொடர்ந்து  ரெண்டு விக்கெட் விழுந்தது... அப்படியே டிடிக்கு மாற்றினோம் கொஞ்சம் சோபித்தார்கள்..3வது விக்கெட் விழுந்தது அவ்வளவுதான் திரும்பவும்  ஸ்டார் கிரிக்கெட்க்கு மாற்றி மேட்ச் பார்த்தோம்.

இப்படியான சென்டிமெண்ட்களை பேசியபடி மேட்ச் பார்ப்பது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும்...உங்கள் சைடில் எதாவது செண்டிமென்ட்  இருந்தாலும் பின்னுட்டங்களில்  பகிர்ந்து கொள்ளுங்கள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..






(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...




=================

12 comments:

  1. அன்பு அண்ணன் ஜக்கி உங்களுக்கு ஒரு விண்ணப்பம் இப்போது youtube l Forth Horseman in Egypth வீடியோ கிளிப் பற்றி ஒரு தெளிவான பதிவு எழுத vendrum . athil கிராபிக்ஸ் irukuthaa? இல்லையா உங்களுக்கு photography பற்றி mulumayaaka arinthavar என்பதாலும் எந்த விசயத்யும் தெளிவாக சொல்பவர் என்பதாலும் இந்த விண்ணப்பம் .

    Endrum anbudan........
    DENNIS C
    Bahrain

    ReplyDelete
  2. // சச்சின் 100ரன் கடக்கும் எந்த மேச்சும் இந்திய அணி ஜெயிக்கும் வாய்ப்பு ரொம்ப குறைவுதான் //

    இது மிகவும் தவறான கணிப்பு ஜாக்கி சார்.பலரும் இவ்வாறான தவறான எண்ணத்திலேயே உள்ளார்கள். சச்சின் சதம் அடித்த 48 தடவைகளில் 13 தடவைகள் மட்டுமே இந்தியா தோற்று இருக்கிறது. சதவீதத்தில் பார்க்கும் போது 75 % வீதம் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது சச்சின் சதம் அடித்த போது.

    ReplyDelete
  3. " 1990களில் எல்லாம் தினேஷ் ஷர்ட்டிங் அண்டு ஷுட்டிங்(கார்மேன்ட்) கவஸ்கார் விளம்பரம் ஓவர் மாறும் போது போட்டால் அடுத்து இந்திய விக்கெட் ஒன்று விழுந்து விடும்... அது போல பல முறை நடந்து இருக்கின்றது.. அதனால் அந்த விளம்பரத்தை நாங்கள் முழுமையாக வெறுப்போம்.,"

    Good one :)

    ReplyDelete
  4. i read ur blog more than one year, but still i m not put any comments, this article make me more happy, what is in our mind u convert very clearly-great skill


    muthu kumar -saudi arabia

    ReplyDelete
  5. இந்த உலககோப்பை விளையாட்டின் போது என் மனைவியை இந்தியா பேட்டிங் செய்தபோது பார்க்க அனுமதிக்கவில்லை.... இந்தியா வெற்றி உறுதியான பிற்கு கடைசி இரண்டு ஓவர் மட்டும் பார்க்க அனுமதித்தேன்

    ReplyDelete
  6. மனசுல நினைப்பதை எழுத்தில் கொண்டுவரும் திறமை உங்களுக்கு நிறைய இருக்கிறது , வாழ்த்துக்கள். இந்த பதிவில் உள்ள அணைத்து செண்டிமென்ட்களும் எனக்கும் உள்ளது , அதிகம் சிரித்தேன். முதல் முறையாக கமெண்ட் போட்டே தீரவேண்டும் என்ற என்னத்தை உங்கள் பதிவு தூண்டிவிட்டது உங்களின் எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றியே..(கமெண்ட் டைப் பண்ணி போடுறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது இருந்தாலும் போட்டே தீருவேன். )

    muthu saudi arabia

    ReplyDelete
  7. ஐயோ.. எங்க வீடு மாதிரியே இருக்குதே! நம்ம அணி ஆடினால் , சூடாக பகோடா போட்டாக வேண்டும்.
    பாக் ஆட்டத்தின் போது என்னை படுத்துக்கொண்டே இருக்க வைத்தார்கள். விக்கட் விழுந்தவுடன் நான் ரீப்ளே பார்க்கலாம்..;-)

    ஒரே க்ரேஸி ....

    முதல் முறையாக கமென்ட்..hope you don't mind..

    ReplyDelete
  8. anbin nanbare

    austalia ippodhum strong thaan

    4 perusa? 2 perusa?

    ReplyDelete
  9. My superstition is that if I watch live cricket, India will lose the match. So, it has been a while I had watched the match. This world cup was very tempting. Still, I paid my dues for our team by not watching the match. :-)

    ReplyDelete
  10. peviliyanla oruthen rediya helmet pottu kattunangana vikket vilappokuthunu artham ithu enga sentiment anna

    ReplyDelete
  11. except 10th point, rest all r good sentiments..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner