கோ... பரபர சரசர....(திரைவிமர்சனம்)
கோ என்பது அக்மார்க் தமிழ் சொல்.,... கோ என்றால் அரசன்....இந்த படத்துக்கு கிங்மேக்கர் என்ற பெயர் வைப்பதாக பரிசீலத்ததாகவும் அதுக்கு நிகரான தமிழ் வார்த்தை இல்லாத காரணத்தால் கோ என்ற வைத்ததாக எனது நண்பர் எழுத்தாளர் பாலா சொன்னார்.....


ஆனால் படத்துக்கு ஆங்கில அர்த்தத்தையும் விளையாட்டையும் சேர்த்து அர்த்த படுத்தி பார்த்தால் இந்த படம் வேறு ஒரு அர்தத்தை தருகின்றது....

கோ விளையாட்டு விளையாடி இருக்கின்றீர்களா? மற்ற  விளையாட்டு போல் கோ விளையாட்டை சாதாரணமாக விளையாட முடியாது.. பர பரவென்ற இருக்க வேண்டும்.. பரபரவென்றால் சகல நேரமும் என்று அர்த்தம்....

 எப்பவேணா நம்ம பின்னாடி வந்து கோன்னு ஒத்த வார்த்தை சொல்லிட்டு உட்கார்நதுடுவான்.. அதுக்கு பின்னாடி நாமதான் ஓடனும்.... எதிரியை அவுட் ஆக்கற பெரிய பொறுப்பு நம்ம தலைமேல திடும்னு வந்து விழும்...அப்படி ஒரு சாதரண பத்திரிக்கை போட்டோக்கிராபர் தலையில நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் இந்த படத்தின் கதை.....

 ================
கோ படத்தின் கதை என்ன?

தின அஞ்சல் பத்திரிக்கையின்  போட்டோகிராபர் அஸ்வின் (ஜீவா) ஒரு பேங்க் கொள்ளையை பேடம் பிடித்து விடுகின்றார்...ரேனுகா(கார்த்திகா)சரோ( பியா ) இருவரும் அதே பத்திரிக்கையின் பெண் ரிப்போர்டர்கள். பல காண்டர்வர்சியல் மேட்டரை இந்த டீம வெளிக்கொண்டு வரும் போது....தேர்தலில் படித்தவர்கள் வர வேண்டும் என்று சிறகுகள் என்ற அமைப்பு மூலம் வசந் (அஜ்மல்) தனது படித்த நண்பர்களுடன் தேர்தலை சந்திக்க இருக்கின்றார்கள்.. இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரிடத்தில் இருந்தும் எதிர்ப்பு வருகின்றது...சிறகுகள் அமைப்பு தேர்தலில் ஆளும்கட்சி எதிர்கட்சி இரண்டு பேரின் எதிர்ப்பையும் மீறி ஜெயித்த்தார்களா?? இப்படி ஒரு கதையில் சாதரணா பத்திரிக்கைபுகைபடக்காரனின் வேலை என்ன???? படத்தை பாருங்கள்.....
 ===========
படத்தின் .சுவாரஸ்யங்களில் ஒரு சில...

பத்திரிக்கை போட்டோகிராபராக பயணத்தை தொடங்கிய கேவிஆனந்....ஒளிப்பதிவளாராக உயர்ந்து இயக்குனராக ஜெயித்து இருக்கும் படம் இது..


தனது முந்தைய படங்களான கணாகண்டேன் மற்றும் அயனுக்கு பிறகு இந்த படத்தில் தனது வெற்றியை மீண்டும் உறுதி செய்து இருக்கின்றார்....இந்த விஷயத்தில்  அவரது குருநாதர் பிசியை விட 16 அடி பாந்து இருக்கின்றார் என்பதே  உண்மை....

சிம்பு கமிட் ஆகி இயக்குனருக்கும்  அவருக்கும் மனஸ்தாபம்  ஏற்பட்டு பிரிந்து அந்த இடத்தில்  வந்து உட்கார்ந்தவர் ஜீவா.... அவருடைய கேரியரில் கற்றதுதமிழ்,சிவாமனசுலசக்தி,கோ என்று சொல்லிக்கொள்ளலாம்... அசத்தி இருக்கின்றார்...

ராதா பெண் கார்த்திகா லட்சணமாக இருக்கின்றார்... அவரது கண்கள் பலரை வீழ்த்தும் என்று நினைக்கின்றேன்... அவரது உடம்பில் வெயில் படாத பல இடங்களை கேமரா லென்ஸ்கள் தேடி பிடித்து விழுங்குகின்றது.... நிறைய இடங்களில் புதுமுகம் போல இல்லை.. கார்திகா புடவையை இறக்கி இடுப்பை காட்டியபடி அதுக்கு பியா அடிக்கும் கமென்ட் அசத்தல்..பியா இந்த படத்தில் தாராளம்தான்.. நடிக்கவும் செய்கின்றார்...பரிதாபத்தையும்  தேடிக்கொள்கின்றார்....முக்கியமாக அலுவலகத்தில் நடக்கும் உரையாடல்களில் இளமை கொப்பளிப்பு....

அஜ்மல் அஞ்சாதேவுக்கு பிறகு அவருக்கும் இந்த படம் பெயர் சொல்லும்...

ரிச்சர்ட்நாதன் ஒளிப்பதிவு குருவுக்கு உதவுசெய்து இருக்கின்றது.. முதல் டிஸ்கோத்தே பாடலில் பல முன்னனி ஹீரோக்கள் வந்து ஆடியது, கேவி மீது வைத்து இருக்கும்  மரியாதை என்று நினைக்கின்றேன்...ஆனால் அந்த பாடலில் வெறும் ஸ்கேனர்லைட்டுகளை மட்டுமே நம்பி இருக்கின்றார்கள்.. அதனால்  ஆர்டிட்ஸ்டுகளின் அந்த பிரமிப்பு மிஸ் ஆகிவிடுவதை மறுக்க முடியாது...


எடிட்டிங் பர பர வென்று ஆன்டனி அடித்து துவைத்து இருக்கின்றார்... பரபரப்புக்கு அண்டனியின் கத்திரியும் ஒரு காரணம்.........


இந்த மூன்றாவது படத்திலும் எழுத்தாளர்கள் சுபாவோடு வெற்றிக்கூட்டனி அமைத்து இருக்கின்றார்....இரட்டையர்கள் இந்த படத்தில் நடித்தும் இருக்கின்றார்கள்...


தனக்கு தெரிந்த பத்திரிக்கை ஆபிஸ் அனுபவங்களை  பின்புலமாக வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருக்கின்றார்...பர பர என்று சொல்லி இருக்கின்றார்கள்..ஹாரிஸ் ஜெயராஜின் இரண்டு பாடல்கள் செமைரகம்.... முக்கியமா என்னமோ எதோ பாடல் நல்ல மெலடி......

அமளி துமிளி பாடலில் லோக்கஷன் தேடி போய் படமாக்கியதில் அந்த டீமின் உழைப்பு தெரிகின்றது....அந்த பாடலில் ராதா மகள் கார்த்திகா மிக அழகாக இருக்கின்றார்...அந்த பாடலில் காஸ்ட்டுயூம் செமையாக இருக்கின்றது.. எல்லா டெக்னிஷியன்களின் பெண்டும் கான்ட பாடல் அதுவாகத்தான் இருக்கும்.,...லோகேஷன் பரபரப்பாக  பலரால் பேசப்படும்....


கதையில் லாஜிக் அதிகமாக உதைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்...கிளைமாக்சில் முடிச்சி அவிழும் இடங்கள் அருமை.. கிளைமாக்சில் மட்டும் சின்ன லேக் இருக்கின்றது..


ஏன்டா இந்த படம் எலெக்ஷ்ன் முடிஞ்சி ரிலிஸ் ஆச்சின்னு படம் பார்த்து விட்டு வெளிய வரும் போது உங்களுக்கே பிரியும்....
==========

படத்தின் டிரைலர்....


===

படக்குழுவினர் விபரம்....

Directed by     K. V. Anand
Produced by    Kumar
Jayaraman
Written by      K. V. Anand
Subha
Starring           Jeeva
Ajmal Ameer
Karthika Nair
Piaa Bajpai
Prakash Raj
Music by         Harris Jayaraj
Cinematography         Richard Nathan
Editing by       Anthony
Studio R. S. Infotainment
Distributed by            Red Giant Movies
Release date(s)          April 22, 2011 (2011-04-22)
Country           India
Language        Tamil

 =======
தியேட்டர் டிஸ்கி...

பெங்களுர் வண்ணார்ர் பெட் பாலாஜி தியேட்டரில் இந்த படத்தை பார்தேன்....
பெரிய தியேட்டர் முகப்பு பழைய தியேட்டர் போல இருக்கின்றது....

கியூப் ,டிடிஎஸ், எசி.... டிக்கெட் 50, 70தான் டிக்கெட்.... 

தமிழ்படத்துக்கு அண்டை மாநிலத்தில் நல்ல கூட்டம்....பால்கனி ரொம்பவில்லை....

பெண்கள் 5 பேர் வரை இருந்தார்கள்... தியேட்டர் சுத்தமாகத்தான இருந்தது...


தமிழ்நாடு போல பெரியஆர்பட்டம் எல்லாம் இல்லை... கைதட்டல் மட்டும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக கேட்டது..

================
பைனல்கிக்.... 

இந்த படம் பார்க்கவேண்டியபடம்...பரபர திரைக்கதைக்காக....பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

5 comments:

 1. இன்னைக்கே பாத்துருவோம் , பிரகாஷ்ராஜ் பத்தி ஒண்ணும் சொல்லவில்லை ?

  ReplyDelete
 2. எல்லாப் பெருமையும் சுபாவுக்கே போய்ச்சேரும்.... இன்னும் நிறைய படங்கள் அவர்கள் செய்ய வேண்டும்.. இது மாதிரி ராஜேஷ் குமார் வந்தா எப்படி இருக்கும்னு ஆசைப்பட்டேன்..

  ReplyDelete
 3. ஜாக்கி இல்லாத கொக்கி !

  ReplyDelete
 4. இந்த படத்தில் அஜ்மலின் கேரக்டர் ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது கவனித்தீர்களா..
  ..அவரது முகம் மற்றும் உடைமைப்பு.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner