TEEN MAAR -telugu // திரைவிமர்சனம்..



பவன் கல்யாணின் முந்தைய படமான கொமரம்புலி பார்த்து விட்டு மிரண்டு போய் இருந்தேன்.... பட் இப்போது தீன்மார், பார்க்க போகலாமா? அல்லது வேண்டாமா? என்று இருந்தேன்.... சரி நம்ம திரிஷாவுக்காக போய் விட்டு வரலாம் என்று இருந்தேன்.

=======

தீன்மார் தெலுங்கு படத்தின் கதை என்ன??


மைகேல் வேலாயுதம் (பவன்)கேப்டவுனில் செப், மீரா சாஸ்திரி(திரிஷா)  இரண்டு வருடம் இணைபிரியா நண்பர்களாக இருக்கின்றார்கள்... தனது ஆர்கியாலஜி வேலை காரணமாக   மீரா இந்தியா போக  நேர்கின்றது.. அதனால் இரண்டு வருடம் பழகியது காதல் இல்லை என்று இருவரும் முடிவு செய்து பிரேக்கப் பார்ட்டி கொண்டாடுகின்றார்கள்..

மீரா இந்தியாவுக்கு வந்து விட்டாள்...மைக்கேலுக்கு ஒரு ஆங்கிலேயே பெண் நண்பியும், மீராவுக்கு ஒரு பொலிட்டிஷியன் பையனும் நட்பாகின்றார்கள்...மீராவும் அரசியல்வாதி பையனுக்கும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என்னும் போதுதான்.. மீரா மற்றும் மைக்கேலும் இருவரும் தங்கள் காதலை உணர்கின்றார்கள்....மைக்கேல் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவன்  காதலின் மேல் நம்பிக்கை வர என்ன காரணம்?- அது ஒரு பிளாஷ் பேக்.. அது என்ன? என்பதை  அறிய படத்தை பாருங்கள்...




============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


இந்த படம் இந்திப்படமான லவ் ஆஜ்கல்  படத்தின் தெலுங்கு பதிப்பு.... அதனால் எனக்கு பெரிய ஈர்ப்பு இந்த படத்தின்மீது  இல்லை.. முன் பாதியில் பெரிய சுவாரஸ்யம் ஏதும் இருப்பதாக எனக்கு படவில்லை......


பவன் எல்லா பெண்களையும் கட்டி பிடிக்கின்றார்.. மார்பில் முகம் புதைக்கின்றார்.. (கொடுத்து வச்சவன்யா) திரிஷாவின் உதட்டை கவ்வுகின்றார்....




திரிஷா படம் முழுவதும் தொடை தெரிய தெரிய வருகின்றார்... உடம்பு  பூசி இருப்பது சகல இடங்கிளிலும் தெரிகின்றது. நீமோ மீனில் எந்த மாற்றமும் இல்லை...அழகாக இருக்கின்றார்.... திருமணத்துக்கு முந்தைய பார்ட்டி உடையில் சிவப்பு கவுனில் முழு முதுகும் தெரிவது போல வரும் உடையில் கொள்ளை கொள்கின்றார்.. மிக அழகாக இருக்கின்றார்.,.


பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் இல்லை என்றாலும்.. அந்த பிளாஷ்பேக்  காட்சிகளுக்கு கொஙசம் மெனக்கெட்டு இருக்கின்றார்கள்...பிளாஷ் பேக்கில் கரி ரயில் என்ஜினை காட்டி விட்டு  பிளட்பார இணைப்பு மேம்பாலத்தில் ஓடம் போது டேஞ்சர்  440 வோல்ட் என்று எழுதி இருப்பதை பார்த்தால் சிரிப்பாய் இருக்கின்றது.....


கிளைமேக்சில் லாஜிக் இல்லாவிட்டாலும் பவனின் அந்த இயலாமை நடிப்பை ரசிக்கலாம்......


பவனை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கின்றார்கள்..
==========
தியேட்டர் டிஸ்கி...

பெங்களூர் தாவக்கரை ஆரக்கள் எதிரில் இருக்கும்.. சினுவாசா திரைஅரங்கில் இந்த படத்தை பார்த்தேன்....

தியேட்டர் மிக நேர்த்தியாக பரமாரிக்கபடுகின்றது...50,80,100 தான் நுழைவுக்கட்டணம்...


கூட்டம் குறைவுதான்... மொத்தம் 20 பேர் இருந்தோம்....
====
பைனல் கிக்....


இந்த படம் டைம்பாஸ் படம்  ஒரு சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன..... முன்பாதியில் ஜீவனே இல்லை...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 


===========

3 comments:

  1. விமர்சனம் பகிர்ந்தமைக்கு நன்றி தலைவா

    ReplyDelete
  2. விமர்சனம் ஒகே தலைவா. நானும் அந்த தியேட்டர்ல தான் படன் பார்த்தேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner