மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ்(பதினெட்டுபிளஸ்) ஞாயிறு03/04/2011


ஆல்பம்...

28 வருடம் கழித்து இந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றுகாட்டிஇருக்கின்றது. எவ்வளவு போராட்டம்? எவ்வளவு விமர்சனங்கள்? எல்லாம் தாண்டி இந்திய அணி  வென்றது மகிழ்சி இது குறித்து தனி பதிவுகள் எழுதலாம் என்று இருக்கின்றேன்.
============
தினம் தினம் தமிழகத்தில் அரசியல் சூடு சூறாவளியாக அடித்துக்கொண்டு இருக்கின்றது. என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை முக்கியமாக மதுரையை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு ஒரு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. பொறுத்து இருந்து பார்ப்போம்...
============
இந்த எலெக்ஷனில் மீடியா போர் நடக்கின்றது. விஜயகாந்த் அடித்த காட்சிக்கு ரிப்பிட் போட்டு எக்ஸ்ட்ரா சவுண்ட் கொடுத்தார்கள்.  இப்போது வடிவேலு குடித்து விட்டு அடிக்கும் காட்சி என்று டைட்டில் போட்டு ஜெயாவில் காட்டினார்கள்.. வடிவேலு அடித்தாரா இல்லையா என்பதை பொதுமக்கள் பார்த்து முடிவு செய்து கொள்வார்கள். சிங்கமுத்து சொல்லும் டயலாக்குகள் இன்டர்கட்டில் போட்டு காட்டினார்கள். எது எப்படியோ மக்களுக்கு சுவாரஸ்யமாக பொழுது போகின்றது...

=================
ஜெயா மற்றும் கேப்டனில் திமுகவை திட்டு போடும் சின்ன சின்ன விளம்பரபடங்கள் செமை சுவாரஸ்யமாக இருக்கின்றன.....கண்டுகளியுங்கள்..  அல்டிமேட் விளம்பரம் ஜெயாவில் ஹோமம் பண்ண ஒரு ஐயர் செங்கல் கேட்பதாகவும் அதுக்கு ஒரு செக்யூரிட்டி  பேசும் புள்ளிவிபரங்கள் அபாரம்... பார்த்து  பரவசபடவேண்டிய ஒரு விளம்பரம்...
==============

மிக்சர்

எனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் ஒரு மெயில் அல்லது கடிதம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்.. அது நிச்சயம் உணர்பூர்வமானதாய் இருக்கும். பட் அதுக்கு பதில் நல்லமுறையில் பதில் சொல்வோம் என்று நினைத்து அந்த  கடிதத்தை மறந்து விடும் ஒரு போபியா எனக்கு இருக்கின்றது..எனக்கே இதை நினைக்கையில் வருத்தமாக இருக்கின்றது.... மன்னித்துவிடுங்கள்  நண்பர்களே..
===============
நான் உன்னை படிக்க வரும்போது என்னோட சுதந்திரம் பதிக்கபுடாது விளம்பரத்தை கவனி நண்பா  //
பாண்டியன் என்ற நண்பர் இப்படி ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.
படிக்கும் போது ஒரு விளம்பரம் படுத்துவதாக  நண்பர்கள் சொல்கின்றார்கள். விளம்பரத்துக்கு மேல் ஒரு குளோஸ்ன்னு  ஒரு பட்டன் இருக்கின்றது அதனை குளோஸ் செய்து விட்டு படிக்கவும்....மாதம் இந்த தளம் இயங்க அது உதவி செய்கின்றது...என் கஷ்டம் எனக்கு மட்டும் தெரியும்.. அதனால் குளோஸ் பட்டனை குளோஸ் செய்து விட்டு படிக்கவும்...
==================
வாழ்த்துகள்..

28 வருடத்துக்கு கோப்பை வாங்கி சென்னையை மற்றும் இந்தியாவை புத்தாண்டு தினத்தை போன்ற  உற்சாக தினமாக மாற்றியமைக்கு....
==========

பிலாசபிபாண்டி

ஆஸ்திரிலேயாவுக்கு ஆப்பு வச்சி,பாகிஸ்தானுக்கு பாடை கட்டி, ஸ்ரீலங்காவுக்கு சங்கு ஊதி வாங்கிய கப்பு வேர்ல்ட் கப் நம்ம இந்தியர்கள் வாங்கிய கப்...


===========================
நான்வெஜ்18+

மார்கெட் போன நடிகையை திருமணம் செஞ்ச தொழிலதிபர் ஒருத்தன்  முதலிரவுல ஒரு கேள்வியை கேட்டான்.. இதுக்கு முன்னாடி யாருகூடயாவது உறவு  வச்சி இருக்கியான்னு கேட்டான்.. அதுக்கு அந்த பொண்ணு ரொம்ப அமைதியாக இருக்க... ஐயையோ நாமதான் இப்படி சந்தேகபட்டுவிட்டோமோ..? என்னை மன்னித்து விடு என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே... கவுண்ட் பண்ணும் போது டிஸ்டர்ப் பண்ணாதிங்கன்னு அந்த பொண்ணு சொல்லுச்சி..

===========(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
=========

2 comments:

  1. Dear Jacki Google won't allow popup ads.It's against Google ad sense policy.If they found this type of ads they will disable your adsense accounts.So remove this ad.and try with some other type.
    Regards
    Arjunan.R
    www.justsharethis.net

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner