தமிழக அரசியலில் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று எல்லோராலும் போட்டு வார்த்தைகளால் தாக்கபடுபவர் முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்..
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து முடிந்து போது கலைஞர் கவர்மென்ட் அவ்வளவுதான் என்றார்கள்.. வாஷ் அவுட் என்றார்கள்..
கிராமங்களில் மக்களோடு பேசியபோது அவர்கள் சொன்னது எவன் கொள்ளை அடிக்கலை இந்த மகராசன் எங்களுக்கு கொடுக்க்கறானே அது போதும்.... அதனால்தான் நான் திரும்ப திரும்ப ஸ்பெக்டராம் பிரச்சனை வந்த போது, ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னேன்.
பேசிவிட்டு ஓட்டு போடாமல் சத்தியம் தியேட்டர் போகும் படித்தவனை விட, தனது வீட்டில் நடக்கமுடியாத ஆளையும் தோளில் தூக்கி போய் ஓட்டு போடும் கிராமத்து மக்கள் கலைஞரை வெகுவாக ஆதரிக்கின்றார்கள் என்று சொன்னேன்.அதனால் ஸ்பெக்டரம் பெரிய விஷயமாக எடுபடாது..
எனக்கு தெரிந்து ஜெ வளர்ப்புமகன் திருமண எதிர்ப்புக்கு பிறகு கலைஞர் அரசு வந்த போது முதலில் பாலம் காட்டினார்கள்.. கிராமம்தோறும் சிமென்ட் ரோடு போட்டார்கள். ஒட்டு கேட்டார்கள்.. நிறைய திட்டங்கள் நிறைவேற்றினார்கள்... ஆனாலும் மாற்றம் வேண்டி திரும்ப ஜெ வந்தார்....
நல்லது செஞ்சி எந்த ஊழலும் இல்லாமல் இருந்தும் நம்மை தோற்க்கடிக்கும் போது என்ன பிரச்சனை என்ற போதுதான் கலைஞர் கண்டுபிடித்தார்...
ரோடு போட்டா எனக்கு என்ன? சிமெண்ட் ரோடு போட்டா எனக்கு என்ன?? பல நலத்திட்டங்கள் செஞ்சா எனக்கு என்ன??? எனக்கு என்ன லாபம் நான் இன்னும் நிம்மதியா மூன்று வேளைசோறு சாப்பிட்வில்லை என்ற கிராம மக்களின் பொது புத்தியின் கணக்கை நாடி பிடித்தார்.....ஒட்டு போட போவது ஏழை கிராமபுற மக்கள்தான்... அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி அவ்வளவுதான்... ஏழை மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதைதான் கலைஞர் செய்தார்....
குடும்ப அரசியல், சினிமாவில் கலைஞர் குடும்பம் எல்லாம் காமன் மேனை அது பாதிக்கவில்லை அதனால் அதுப்பற்றி கவலை இல்லை..
ஈழ படுகொலையின் போது ஒரு அடிமை இன்னோரு அடிமைக்கு என்ன செய்து விட முடியும் என்றார்...அதே போல ஈழ பிரச்சனைக்காக அதிகமாக உருட்டபட்டதும், ஆட்சி பறிகொடுத்தது கலைஞர்தான்..வேறு எந்த அரசியல் கட்சியும் இல்லை..
மூன்று மணி நேரம் தென் மாவட்டங்களில் மின்தடை இருக்கின்றது... இது கலைஞருக்கு எதிர்ப்பாக மாறும்... பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தின் காரணமாகவும் அரசின் மெத்தனத்தின் காரணமாகவும் எதிர்ப்பு இருக்கின்றது..
ஆள்பவருக்கே அடுத்த முறையும் விட்டுக்கொடுக்காமல் அடுத்தவன் வந்தால்தான் முன்னால் செய்தவன் தவறு வெளிப்படும் என்ற பொதுபுத்தி இல்லாமல், இந்தவாட்டி திமுக கொள்ளை அடிச்சிது,அடுத்த வாட்டி அதிமுக கொள்ளை அடிக்கட்டும் என்ற பொதுபுத்திதான் தமிழக அரசியல் பொதுபுத்தி அதன் காரணமாகவும் இந்த முறை ஆட்சி மாற்றம் நடக்கவும் வாய்ப்பு இருக்கின்றது....
அதாவது மின் தடை மற்றும் ஆட்சி மாற்றம் இந்த இரண்டு விஷயம் மட்டுமே திமுகவுக்கான எதிர்ப்பாக பெருபாண்மையான இடத்தை இழக்கலாம்....
ஆனால் வயது முதிர்வின் காரணமாக திட்டுபவர்கள் யாரையும் கலைஞர் திட்ட வில்லை அதுக்கு பதில் தான் போகும் இடங்களில் திமுகவுக்கு உழைத்த பல தலைவர்கள் பெயரை நினைவு கூர்ந்தார்... உருக்கமாய் ஓட்டு கேட்டார்...
செய்த நலத்திட்டங்களை சொல்லி ஓட்டுக்கேட்கின்றார்... நக்கல் நையான்டி எந்த பிரச்சாரத்திலும் இல்லை.....
160 தொகுதிக்கும் முதலில் ஒரு வேட்ப்பாளர் பட்டியில் அறிவித்து விட்டு அதை மாற்றி திரும்ப ஜெ அறிவித்தது திமுகவுக்கு பெரிய பிளஸ்....
வடிவேலுவின் பிரச்சாரம் பெரிய பலம்...
ஸ்டாலின்,அழகிரி, என எதாவது குடும்ப பி பிரச்சனை வெடிக்கும் அது இந்த முறை இல்லை....
படித்தவர்கள் மத்தியில் மட்டுமே அதுவும் இணையத்தில் மட்டுமே அதிக அளவில் திமுக எதிர்ப்பு அலை இருக்கின்றது....மற்றபடி மக்களிடம் பெரிய எதிர்ப்புஅலை இல்லை...
இந்த ஆட்சிக்கு பெரிய அளவில் எதிர்ப்பு அலையோ அல்லது ஆதரவு அலையோ இல்லை என்பதே உண்மை... பலரால் கலைஞருக்கு மாற்று ஜெவாக இருக்கவே முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்..
வயது முதிர்வின் காரணமாக அவர் நடை, வீல் சேர், மற்றும் இயற்கை உபாதைக்கு டயபர் வைக்கின்றார் என்று அதை எல்லாம் வைத்து கலைஞர் கிண்டல் செய்யபடுகின்றார்...பட் இந்த வயதில் எல்லாம் நாம் இருந்தால் எழுந்து நடக்க முடியுமா ? என்பது தெரியிவில்லை.... அதுவும் இந்த ஏப்ரல் வெயிலில்... ஒரு மாத அலைச்சலில் நாமாக இருந்தால் சுருண்டு விடுவோம்.....
கலைஞர் இந்த தள்ளாத வயதிலும் மிகவும் எழுச்சியாக இருக்க என்ன காரணம் என்று ஒரு இணைய நண்பர் கேள்வில கேட்டார்...
நாலு வரி எழுதிட்டு ஒரு சின்ன பின்னுட்டம் வந்தாலே நீ எவ்வளவு சந்தோஷமா இருக்கே... கலைஞர் தள்ளாத வயதிலும் எழுச்சியா இருக்க ஒரே காரணம்....
எங்கு போனாலும் வரவேற்க்க பெரும் படை....
முதல்வர் ஜயா என்ற கோஷம்
தலைவா நாங்க இருக்கோம் என்ற வார்த்தைகள்..
ஓயாத கைதட்டல்
இது எல்லாம் அவரை பின் தொடர்வதால் அவர் இன்னும் எழுச்சியாக இருக்கின்றார் என்பது என் எண்ணம்...
நிறைய நலத்திட்டங்கள் செய்து இருக்கின்றேன் மக்கள் என்னை அந்திம காலத்தில் கரையேற்றுவார்கள் என்று நம்பி இருக்கின்றார்....பட் பொய்த்து போனாலும் இடிந்து உட்கார்ந்து விடாமல் எழுந்து நிற்பவர்தான் கலைஞர்...
85வயதுக்கு மேல் நான் சொல்லியகாரணங்கள் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்த வயதிலும் அவரின் தன்னம்பிக்கை இருக்கின்றது பாருங்கள் அது எந்த அரசியல் கொம்பனுக்கும் தமிழகத்தில் இல்லை ஏன் உலக அளவில் கூட இல்லை என்று மார்தட்டி சொல்லலாம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
================
Always your postings are in favor of DMK anyway that is your choice nothing to say on this, but as usual there will be a change in the government. People still not much intelligent in selecting leaders or they do not have choice.
ReplyDelete//தமிழக அரசியலில் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று எல்லோராலும் போட்டு வார்த்தைகளால் தாக்கபடுபவர் முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்//
ReplyDeleteஅப்படியெல்லாம் ஒரு வெண்ணையும் கிடையாது 2008 மே மாதத்திற்க்கு முன் வலையுலகம் முழுவதும் கருணாநிதி திராவிட ஆதரவுதான் இந்த கிழநரியின் இனத்துரோகம் உணரப்பட்ட பின்பே உண்மையான ரோசமுள்ள தமிழின ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்...
உண்மைதான் தன் மக்களுக்கு நல்ல தலைவர் ...............
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்.. ! கலைஞரிடம் அனைவருக்கு பிடித்தது அதுவே.. இங்க்ஹே இணையத்தில் மட்டுமே படித்த மேதாவிகள் என்ற நினைப்பில் கலைஞர் எதிர்ப்பு
ReplyDelete=====
யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்
யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்
தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?
பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?
தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?
30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?
செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?
டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?
சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?
சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?
வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?
மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?
ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?
கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?
பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?
சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?
ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?
பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?
சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?
மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?
சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?
சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?
மேலோட்டமான பதிவு . . .
ReplyDeleteநன்றி
ஆஹா, இனிமே ஒரு ஏழெட்டுப் பேர், ரவுண்டு கட்டி திட்ட ஆரம்பித்து விடுவார்களே!!
ReplyDeleteஎனி ஹவ், மென்மையான, நல்ல புரிதலுடன் கூடிய, நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
//இந்தவாட்டி திமுக கொள்ளை அடிச்சிது,அடுத்த வாட்டி அதிமுக கொள்ளை அடிக்கட்டும் என்ற பொதுபுத்திதான் தமிழக அரசியல் பொதுபுத்தி//
ReplyDelete//பலரால் கலைஞருக்கு மாற்று ஜெவாக இருக்கவே முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்..//
100% agreed with this lines. So Pl Don't vote to JAYALALITHA & Alliance.
Pl vote to an Educated Indipendant Candidate in your Assembly Constituency.
உங்களை வெளிபடுத்திக்கொள்ள தைரியம் இருப்பவர்கள் மட்டும் இங்கே கருத்துக்களை இடவும் புரோப்பைலை மறைத்து விட்டு பொங்குபவர்களோடு நான் வாதம் செய்வதில்லை...,
Intha dealing enakku romba pidichirukku!!!!
//ஆள்பவருக்கே அடுத்த முறையும் விட்டுக்கொடுக்காமல் அடுத்தவன் வந்தால்தான் முன்னால் செய்தவன் தவறு வெளிப்படும் என்ற பொதுபுத்தி இல்லாமல், இந்தவாட்டி திமுக கொள்ளை அடிச்சிது,அடுத்த வாட்டி அதிமுக கொள்ளை அடிக்கட்டும் என்ற பொதுபுத்திதான்//
ReplyDeleteஇந்தப் பொதுப் புத்தியில் நானும் சங்கமம்.
/85வயதுக்கு மேல் நான் சொல்லியகாரணங்கள் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்த வயதிலும் அவரின் தன்னம்பிக்கை இருக்கின்றது பாருங்கள் அது எந்த அரசியல் கொம்பனுக்கும் தமிழகத்தில் இல்லை ஏன் உலக அளவில் கூட இல்லை என்று மார்தட்டி சொல்லலாம்...//
இப்படிச் சொல்லுவதியிலும்; அதை இப்படி உணர்வதே நன்று!
85 வயதிலும் தன் சுற்றம் பற்றித் தெளிவாகச் சிந்திப்பது 200 தலைமுறைக்குத் தேவையானதைத் எப்படியும் தேடிவைத்து; பதவிக்கும், பவுசுக்கும் பல்டி அடித்து, தன் கட்சி சார்ந்தோரை ஜல்ராவாகவே
வைத்திருக்கும் திறமை எந்த நல்ல தலைவனுக்கும் வராது.
நெல்சன் மண்டலா நினைவில் வருகிறார்.
மற்றும் படி "நாய்க்கு நடுக்குளத்துக்க போனாலும் நக்குத் தண்ணிதான்" நம் நிலை
ராமராண்டாலென்ன? ராவணனாண்டாலென்ன?
Cannot agree . You dont you say about RAJA /Kalaigner TV / Spectrum :)
ReplyDeleteகலக்கல் பதிவு ஜாக்கி,
ReplyDeleteஎல்லாம் சொன்னீங்க ஓட்டுக்கு பணம் கொடுப்பது - வாங்குவது , தேர்தல் கமிஷன் கெடுபுடி இதைச் சொல்லவில்லை
- வாழைப் பலத்தில் ஊசி - நல்ல பதிவு என்று ஜெயலலிதா தேர்தல் களம் - என்
கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணவில்லை ?
- இதனால் நீங்கள் உடன்பிறப்பு அபிமானி என்று எடுத்துக் கொள்ளமாட்டேன்
நடுநிலைவாதிதான் !
ஜாக்கி,
ReplyDeleteஇதுதான் உன்னோட Master Piece Article. இனிமே உன்னப் பாத்து ஒரு பய உனக்கு அழுகாச்சி மட்டும்தான் எழுத வரும், காமடி போஸ்ட் எழுத வராதுன்னு சொல்ல முடியாது, அப்படி ஒரு காமடி இந்த போஸ்ட்
ஒரு ரூபாய் அரிசி - வேணாம் ஜாக்கி இவ்ளோ காமெடி உடம்புக்காகாது - கக்கா போக அஞ்சு ரூபா, ஒரு கப் டீ அஞ்சு ரூபா, பருப்பு விலை என்னன்னு தெரியுமா ஜாக்கி??
கடத்தல் பண்ணி ஒரு சிலர் பணம் சம்பாதிக்க மட்டுமே இந்த அரிசி பயன் பட்டது
குடும்ப அரசியல் - நாடே பாத்து சிரித்தது, சினிமாவில் குடும்பம் - காமன் மேனை பாதிக்கவில்லை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் குடும்பமே ஆக்டோபஸ் போல தமிழகத்தைச்
ஆக்ரமித்துள்ளது நாட்டுக்கு நல்லதில்லை என்பதை காமன் மேன் உணர்ந்திருக்கிறான்.
ஈழப் பிரச்சனை : அடப்பாவி, இப்படி கூட உன்னால் பேச முடியுமா? நான் எதுவும் சொல்லவில்லை, உன்னோட பழைய பதிவுகளை படிச்சுப் பாரு உனக்கே புரியும்.
அப்புறம் அது என்ன காமடி? கருணாநிதி ஈழப் பிரச்சனைக்காக ஆட்சியைப் பறி கொடுத்தாரா? சொல்லவே இல்லை??? Break Fastக்கும் Lunchக்கும் நடுவே
உண்ணாவிரதம் இருந்தது மட்டுமே கருணாநிதி ஈழப் பிரச்சனைக்காகச் செய்தது.
இந்த ஆட்சி மாறினால் அதுக்குக் காரணம் பொதுப் புத்தியாக இருக்காது, மக்களுக்கு நல்ல புத்தி வந்திருக்குன்னு அர்த்தம் கொள்ளணும்.
”திமுகவுக்கு உழைத்த பல தலைவர்கள் பெயரை நினைவு கூர்ந்தார்” - அட்ரா சக்கை அட்ரா சக்கை, ஜாக்கி ஒரிஜினல் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் பெயர் தெரியுமா? அவங்க
குடும்பங்கள் இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா? ஆதித்யன் என்பது யாருன்னு எல்லாருக்கும் தெரியும் - மதியழகன் யாருன்னு தெரியுமா? என் வி என் அவர்களின் குடும்பம்
எப்படி இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?
”உருக்கமாய் ஓட்டு கேட்டார்” இன்னும் எத்தனை தடவை “இப்படம் இன்றே கடைசி” டயலாக்கை ஓட்டுவாரோ தெரியல
”வடிவேலுவின் பிரச்சாரம் பெரிய பலம்” - joke of the century Jackie. அவர் விஜயகாந்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் மேடையேறினார். ஜெயா முதல்வர் ஆனால்
அப்பவும் இந்த வடிவேலு கருணாநிதியை நல்லவர், வல்லவர்னு சொல்வாருன்னு உன்னால சொல்ல முடியுமா? நேத்து பெஞ்ச மழையில் இன்னிக்கு முளைத்த காளான் அது..
அந்தோ பரிதாபம் - அண்ணாதுரை, கருணாநிதி, வை கோ போன்றோரை நம்பிக் களமிறங்கிய தி மு க (அதுவும் எம் ஜியாருக்கு எதிராக) ஜெயாவையும் விஜயகாந்தையும்
சமாளிக்க வடிவேலுவையும் குஷ்புவையும் நம்புவது காலத்தின் கோலம்.
”இந்த ஆட்சிக்கு பெரிய அளவில் எதிர்ப்பு அலையோ அல்லது ஆதரவு அலையோ இல்லை என்பதே உண்மை” என்னது காந்தி செத்துட்டாரா?
”பலரால் கலைஞருக்கு மாற்று ஜெவாக இருக்கவே முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்” யார் அந்தப் பலர்? நீ, லக்கி, அபி அப்பா நீங்க எல்லாருமா?
”கலைஞர் தள்ளாத வயதிலும் எழுச்சியா இருக்க ஒரே காரணம்..” அடப்பாவி, இவ்ளோ அப்பாவியா நீயி?? கருணாநிதி ரிட்டையர் ஆக எப்பவோ தயார், ஆனா அப்படி ஒண்ணு
நடந்தா குடும்பத்துக்குள்ள ரணகளம் ஆகிப் போகும். கட்சி, ஆட்சி எல்லாம் கோவிந்தா ஆகிப்போகும் (ஆறாவது முறை மட்டுமல்ல ஏழாவது முறையும் கருணாநிதியே முதல்வர்-
சொன்னவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி - இதுக்கு அர்த்தம் சொல்லு பாப்போம்)..
”இடிந்து உட்கார்ந்து விடாமல் எழுந்து நிற்பவர்தான் கலைஞர்” - எம் ஜி யார் இனி எழுந்து வரமாட்டார் எனக்கு ஓட்டு போடுங்கள், செய்த தவறுக்கு 14 ஆண்டுகள் வன வாச தண்டனை
போதாதா?, எம் ஜி யார் வந்ததும் ஆட்சியை ஒப்படைக்கிறேன் அதுவரை என்னை முதல்வர் பதவியில் உக்கார வைக்கக் கூடாதா, இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா மிசாக்கு அப்புறம்
வந்த தேர்தலில் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”ன்னு வெக்கமில்லாம கெஞ்சிக் கேட்டவர் கருணாநிதி. தோத்துப் போனதும் தமிழக மக்களை கேவலமாய்ப்
பேசியதும் கருணாநிதிதான். இதெல்லாம் தெரியுமா? தெரிஞ்சுதான் எழுதினியா? இல்ல இது எதுவுமே தெரியாம நானும் ரவுடின்னு அரசியல் பதிவு எழுதிட்டியா??
எனக்குத் தெரிந்து இத்தேர்தலில் ஜெயா தோற்றால் அதுக்குக் காரணங்கள் - கூட்டணியில் குழப்பம் விளைவித்தது, வைகோ வை அவமதித்தது, கூட்டணித் தலைவரோடு மேடை
ஏறக்குடத் துப்பில்லாதது இவை மட்டுமே. அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது, அதை அவர் கண்டிப்பாகக் கெடுத்துக் கொண்டார். எந்த அளவுக்குக் கெடுத்துக் கொண்டார் என்பது
மே 13 தெரியும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete@ Sriram,
ReplyDeleteI agree with you.
@Sriram,
ReplyDeleteI agree with you 100%. Hope the people agree with you too!
WONDER FULL WORDS SRIRAM
ReplyDelete100% correct. DMK alliance secure 165 seats!
ReplyDelete//தமிழக அரசியலில் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று எல்லோராலும் போட்டு வார்த்தைகளால் தாக்கபடுபவர் முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.//
ReplyDeleteஎவ்ளோ தப்பு பண்ணினாலும், அவரையும் சப்போர்ட் பண்ணி எழுத நம்ம ஜாக்கி மாதிரி பதிவர்கள், மக்கள் இருக்கறது நம்ம “தல”க்கு மட்டும் தான்...
அதுதான் அவரோட பலம்... நல்லா அடிச்சு ஆடுங்க ஜாக்கி... சச்சின் மாதிரி ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க..
//தோளில் தூக்கி போய் ஓட்டு போடும் கிராமத்து மக்கள் கலைஞரை வெகுவாக ஆதரிக்கின்றார்கள் என்று சொன்னேன்.அதனால் ஸ்பெக்டரம் பெரிய விஷயமாக எடுபடாது.//
ReplyDelete1,76,000 கோடி அளவிலான ஊழல் செய்தவர்களுக்கு இந்த வகையான பாராட்டு பத்திரம் வாசிப்பது தேவைதானா ஜாக்கி?
நியாயமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிய அளவில் எடுபட்டு இவர்கள் வரும் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டாமா? அதுதானே நியாயம்?
//குடும்ப அரசியல், சினிமாவில் கலைஞர் குடும்பம் எல்லாம் காமன் மேனை அது பாதிக்கவில்லை அதனால் அதுப்பற்றி கவலை இல்லை.//
ReplyDeleteஅதானே... எவன் எங்க செத்தா நமக்கென்ன என்று பதவிக்காக அரசியல் செய்பவர்களை ஆதரிக்க நம்மை போல பல கோடி ஆட்கள் இருக்கும் போது கழகத்திற்கு என்ன கவலை?
//எங்கு போனாலும் வரவேற்க்க பெரும் படை....
ReplyDeleteமுதல்வர் ஜயா என்ற கோஷம்
தலைவா நாங்க இருக்கோம் என்ற வார்த்தைகள்..
ஓயாத கைதட்டல்
இது எல்லாம் அவரை பின் தொடர்வதால் அவர் இன்னும் எழுச்சியாக இருக்கின்றார்//
சத்தமா சொல்லிடாதீங்க... இதுக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்துட போறாய்ங்க....
// பாஸ்டன் ஸ்ரீராம்//
ReplyDeleteநான் துண்டு துண்டாக பல கமெண்டில் சொன்னவற்றை எல்லாம் அழகாக ஒரே கமெண்டில் சொல்லி விட்டீர்கள் தல... வாழ்த்துக்கள்...
ஆனாலும் ஜாக்கி லக்கியை விட எவ்வளவோ மேல்...
ஜாக்கி முதல்முறையா என்னோட மைனஸ் ஓட்டு.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇவங்களுக்கு ஓட்டு போடலாமே. இவங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு. கொஞ்சம் பார்த்துட்டு பிடித்திருந்தால் பகிருங்களேன்.
ReplyDeleteமக்கள் சக்தி கட்சி
www.makkalsakthi.net
This comment has been removed by a blog administrator.
ReplyDelete