புட்டபர்த்தி சாய்பாபா....

 
சாய் பாபா ஒரு மனிதன்....
அவர் கடவுள் அல்ல
அவர் மேஜிக் சாமியார்
சாய் பாபா மீது வைத்து இருக்கும் எந்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்லபோவதில்லை..

காரணம் இவைகள் எல்லாம் எனக்கும் தெரியும்தான்...அவர் மீது  நீங்கள் வைக்கும் எல்லா விமர்சனங்களும் எனக்கும்  உண்டு...



ஆனால் 1998ல் நான் சரவணா வீடியோவில் வேலை செய்து கொண்டு இருந்த போது வருடா வருடம் நடக்கும்...  சாய் பாத விளக்கு பூஜைக்கு வீடியோ எடுக்க பத்து நாட்கள் புட்டபர்த்தியில்  வேலை நிமித்தமாக இருந்து இருக்கின்றேன்.

புட்டபர்த்தியில் தினமும் பஜனை நடக்கும்.. ஸ்டேண்டில் கேமாராவை பொறுத்தி பிரேம் வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவோம்... நாராயண நாரயண ஓம் சத்திய நாரயண நாராயண ஓம் என்று பாடல் உச்சஸ்தாயில் போகும் போது அதுவரை அமைதியாக உட்கார்ந்து பஜன் கேட்டுக்கொண்டு இருந்த பாபா.. ஒரு கற்பூர தீப ஆராதனை செய்வார்.. கண்களில் நீர்வர பலர் பிரார்த்திக்கொண்டு இருப்பார்கள்..


முக்கியமாக வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து உட்கார்ந்து பஜனை செய்வார்கள்..நாங்கள் வேலை விஷயமாக வந்தாலும் இந்த இடத்தில் வர ஒரு பெரிய புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.....


அந்த பஜைனை  ஹாலில் மேலே எல்லாம் தங்க மூலாம் பூசி இருப்பார்கள்..அந்த பத்து நாளில் அமைதியின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டேன்... அத்தனை  லட்சம் பேர் இருக்கும் அந்த இடத்தில் இரவு எழு மணிக்கு மேல் ஒரு பொட்டு சத்தம் இருக்காது..சுவர்கோழிகளின் ரீங்காரம் மட்டும் கேட்கும்.....

பிசா உணவு அப்போதுதான் சென்னைக்கு வந்த நேரம்.....100க்கு விற்ற பிசா  அங்கு பத்துரூபாய்க்கு கொடுத்தார்கள்... ஆயிரம் ரூபாய்க்கு  விலை சொல்லும் கம்பெனி மின்விசிறிகள் 200க்கு கொடுத்தார்கள்..பிராண்ட் டிசர்ட்டுகள் 50க்கு மேல் இல்லை.....அந்த பிரசாந்தியை சுற்றி உள்ளபல்பொருள் சிறப்பங்காடி இப்படித்தான் விற்றார்கள்.. எனக்கு செமை ஆச்சர்யம்...


சாப்பாடு எல்லோருக்கும் இலவசம்.... எச்சில் தட்டை ஐஏஎஸ் ஐபிஎஸ் போலிசார், ஜட்ஜ் மனைவிகள், பெரும்பணக்காரர்கள் மனைவிகள்  என்று எல்லோரும் எச்சில் தட்டு கழுவி பாபாவுக்கு சேவை செய்தனர்...சிலரை காட்டி அவர் யார் மகள் தெரியுமா? என்று கேட்டு அடையாளம் தெரியும் போது மிரட்சியாய் இருக்கும்...

எனக்கு தெரிந்து அத்தனை அழகான பணக்கார பெண்களும் எச்சில் தட்டு கழுவிக்கொண்டு இருந்தார்கள்... யாரிடத்திலும் அலட்டல் இல்லை.. ஒரு ஒழுங்கு பிரசாந்தி நிலைய்த்தி சுற்றி இருந்த மக்களிடத்தில்  இருந்தது..ஒரு இடத்தில் முனுக் என்று சத்தம் கேட்டதில்லை...அப்படி ஒரு அமைதியான இடம்.....


பிரசாந்தி நிலையத்தின் நுழைவாயில் ஒரு ராமர் சீதை, மற்றும் அனுமர் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு சிலை இருக்கும் அந்த சிலை பிரதிஷ்ட்டையின் போது பாபா வந்தார்...அந்த மேடையில் நாங்கள் வேலை நிமித்தம் வீடியோ எடுத்தோம்... சிலைக்கு அபிஷேகம் செய்தார்... நான் அப்போது  நான் நிகழ்வுகளை யூமேட்டிக் டெக்கை கழுத்தில் மாட்டிக்கொண்டு ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்தேன் கேமராமேன் பொள்ளாச்சி சரவணன்  காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.. பாபா எங்கள் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்..கைகள் ஆட ஆட எல்லோருக்கும் கை தூக்கி ஆசிர்வாதம் செய்தார்...புது படத்துக்கு டிக்கெட் எடுக்கும் போது முன் இருப்பவர் நமக்கும் இருக்கும் நெருக்கம் அளவுக்கு பாபா என்  பக்கத்தில் நின்று இருந்தார்...நான் அவரை பார்ப்பதை விட மக்களைதான் பார்த்தேன்.. அவர்கள் எழுச்சி, அவர்களின் வசியம்....

 உலகம் புல்லா இருக்கும் பக்தர்கள்.. பார்க்க அலை மோதும் கூட்டம்.. பட் பாபா பக்கத்தில்  நான் இருந்தேன்...மேடை விட்டு கிழே இறங்கி வந்ததும்..இந்த ஒரு வாரத்தில்  எனக்கு நட்பான பல வெளிநாட்டு நண்பர்கள் என்னையும் என் சட்டையையும் தொட்டுக்கும்பிட்டார்கள்... சிலர் எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்...பாபா மீதான வெறியை  என்னால் உணர முடிந்தது...


ஜெ ஆட்சியில் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் சரி செய்ய பணத்தை அரசிடம் கொடுக்க வேண்டும் என்று ஜெ சொன்னார்... பாபா ஒத்துக்கொள்ளவில்லை.. பணத்தை தனது டிரஸ்ட் மூலம் மட்டுமே செய்யும்...என்றார்....

கலைஞர் வந்தார்... அரசு ஆதரவை கொடுத்தார்.. பாபாவின் டிரஸ்ட் மூலம் பணமும்  உழைப்பும் கொடுத்தாகள்... இன்று தண்ணீர் சிந்தாமல் சிதறாமல் சென்னைக்கு வந்துக்கொண்டு இருக்கின்றது...


200 கிராமத்துக்கு மேல் தண்ணீர் கொடுத்து வாழ்வாதாரத்தை கொடுத்த மனிதர்...புட்டபர்த்தியில் செய்யும் சேவைகள் கணக்கிலடங்கா.....

சார்  பாபா நம்ம பணத்தை கடவுளின் பெயரால் எடுத்து நம்ம கிட்டயே கொடுக்கறார் அதுக்கு போய்  என்ன பீலிங்....சார் அவர் மோடிமஸ்தான் சார்....அவன் திருட்டுபையன்சார்...

எல்லாருமே 100 பர்சென்ட் யோக்கிய பசங்க இல்லை...  சொல்லற நீ.. கேக்கற நான்... எல்லாரும்தான்...

சார் உங்களை சொல்லுக்குங்க...

எங்களை அப்படி சொல்லாதிங்க??

ஏன்??

நாங்க ரொம்ப யோக்கியம்...

மன்னிச்சிடுங்க  யோக்கியம்......


கடவுளின் பெயரை சொல்லி இன்னமும் அனைத்து மதத்திலும் திருடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்....எல்லா பெரும் சொத்துக்கு பின்னும் ஒரு பெரிய குற்றம் இருப்பதாக சொல்வார்கள்...அதற்கு என்னால் நிறைய உதாரணத்தை சொல்ல முடியும்...இன்னும் நிறைய ஆன்மீக திருட்டுபயல்கள் இருக்கின்றார்கள்.. பாபாவும் திருடன்தான்...

1000ம் கோடி அடிச்சி 500 கோடி மட்டும் செலவு செய்து இருக்கின்றார் பாபா...

நிறைய ஆன்மீக திருடர்கள்..1000ம் கோடி அடிச்சி அப்படியேதான் வச்சி இருக்கானுங்க...இதுல நிறைய என்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாறி ஏழை மாணவர்களிடம் இன்னமும் சுரண்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 நீங்கள் சொல்வது போல கடவுளின் பெயரால் மோசடி செய்து 1000ம் கோடி கொள்ளை அடித்து, 500கோடியை  மக்களுக்கு செலவு செய்த, அந்த மோடிமஸ்தான், கடவுள் அவதாரம் நானே  என்று சொல்லிய, ஹைடெக் சாமியார் வேஷம் போட்ட ,அந்த இறந்து போன சாய்பாபா  திருடனை எனக்கு பிடித்து இருக்கின்றது...





பிரியங்களுடன்..
ஜாக்கிசேகர்..

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...




=====================

21 comments:

  1. அண்ணே நானும் உங்க சைடு தான். யாரிடமும் அடித்து பிடுங்க வில்லை அதிகமாக இருக்கிறவன் கொடுக்கிறான். அதை வைத்து கொள்கிறார். ஒருவேளை அனைத்து சொத்துக்களையும் அவரின் குடும்பத்தின் பெயரில் எழுதி கொடுத்திருந்தால் அதை தவறு என கூறலாம் ஆனால் ஒரு ட்ரஸ்ட் உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளை செய்ததை எப்படி தவறாக கூற முடியும்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா அனுபவப்பூர்வமா எழுதியிருக்கீங்க அண்ணா...

    பிரபாகர்...

    ReplyDelete
  3. எல்லாருமே 100 பர்சென்ட் யோக்கிய பசங்க இல்லை... சொல்லற நீ.. கேக்கற நான்... எல்லாரும்தான்...

    சார் உங்களை சொல்லுக்குங்க...

    எங்களை அப்படி சொல்லாதிங்க??

    ஏன்??

    நாங்க ரொம்ப யோக்கியம்...

    மன்னிச்சிடுங்க யோக்கியம்...
    fine

    ReplyDelete
  4. ஆமாண்ணே! நீங்க சொல்றது உண்மைதான். எவனொருவன் பிறருக்காக வாழ தொடங்குகிறானோ அவன் கடவுள்.

    ReplyDelete
  5. Jackie, Your liking on Baba..... it's your wish and I'm not going to comment on that. But what is not convincing is his magic gimmicks. Service to human kind doesn't need 'Magic' cosmetics. What is the need for him to do that? Is it not amounting to cheating the same poor, ignorant people? Even if his 'Service' to society would have cost some 2000 Cr which is just 1% of his Assets worth 2.00 L Crs, what big deal in this? He is the one who set a precedent for all cheat spiritual gurus like Premananda, Bangaru, Nithy, Kalki, etc., to claim themselves as Gods. Tomorrow Nithy also will be one more 'Baba' and some one like you will post, "Despite all...I like Nithy".

    ReplyDelete
  6. புரியுது புரியுது கரெக்டா பிளான் பண்ணுங்க ஜாக்கி, நாங்க கூட இருக்கோம், என்ன ஜாக்கி பாபா பேருதான் கொஞ்சம் மாத்தனும் மத்தபடி ஓகே, ஜமாய்ச்சிருவோம் ஆயிரம் கோடி ஐநூறு போன கூட மிச்சம் ஐநூறு இருக்கே போதாதா நமக்கு

    எதையுமே பிளான் பண்ணிதான் பண்ணனும், லாச்சக் டோச்சக் பச்சக்

    ReplyDelete
  7. இவரு யானை மாதிரி இந்த ஆளு இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் இனிமே இவங்க டிரஸ்ட் என்ன செய்ய போகுது ? அடுத்த சாய்பாபா வேட்டைதான்............

    ReplyDelete
  8. உங்களையும் எனக்கு பிடித்து இருக்கின்றது...

    ReplyDelete
  9. ஜாக்கி,

    அழகு. இந்த பதிவு அருமை. ஏன் என்ற கேள்வி கேட்க வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எதற்கெடுத்தாலும் ஏன் என்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வளவு கேள்விகளும் விமர்சனங்களும் கேட்கும் இவர்களை (சாய்பாபாவைத் திட்டுபவர்கள்) கேள்வி கேட்டால் மட்டும் கோபித்துக் கொள்வார்கள். இதெல்லாம் பிரபலமாக இருப்பவர்களைத் திட்டும் ஒரு மன நோய்.

    ReplyDelete
  10. பாபா-வை திருடன் - ன்னு சொன்னதுக்கு நிறைய கண்டனங்கள் வரும்....

    ReplyDelete
  11. intha sai pathivukku pongubavarkalai avasiyam "balathin adiyil bhagavath geethai" - sirappu sirukathaikal 15 vikatan prasuram (by ja.ra. sundaresan) kathaiyai padikka sollavum athuve pothumanathu enbathu en ennam. nandri.
    sundar g (ICAF - Film Festival) chennai

    ReplyDelete
  12. சொல்வதற்கு ஒன்றுமில்லை

    ReplyDelete
  13. @ Gopi: True.. Sai Baba has done lot of gimmicks... no doubt on that. Tell me honestly for how many NGO's you have donated money lavishly? It's very difficult to get donation from public. Either you have to show gimmicks or create fear.. Baba has done gimmicks to attract people.. Unless he shows gimmicks, you will not accept him better than normal human.. It's fate of this country.. He utilized his following in a right way to get money, and channelized it in a better way.. In one way or other he has done what a govt. has to do.. I'm no follower of Sai Baba, I have never been to puttaparthy, but I always wish to be part of what he was doing under the name of trust.. If you can't create and manage such wealth, at least help those doing it... Donate at least 3% of your annual salary to some NGO.. there are plenty of children starving to death in this country.. am happy at least some in puttaparthy are blessed to have people like Sai Baba

    ReplyDelete
  14. எல்ல்லாத்தையுமே எல்லாருடைய பார்வையில் இருந்து விலகி தான் அணுகனும்னு உங்களுக்கு சொல்லி கொடுத்தது யார்

    ReplyDelete
  15. @ Rajesh Kumar Manoharan: You talk like Karunanidhi. When some one questions him "Why you did that?" He will not reply straight, instead he will say "Hadn't Jayalalitha done that?". Latest is, when asked whether Kanimozhi will appear in court on May 6, his reply was "Did Jayalalitha appeared in all her cases?". I need not prove you what I do to NGO's. But is it not a shame on Sai Baba, that such a mighty personality like him stands stripped after being exposed in a media seen world wide (Internet)for his gimmicks? If no one should be doubted or questioned on their grey side if they do some welfare activities, then Karunanidhi also should not be accused on his freebies or 1 KG Rice for Rs.2/- schemes. Likes of A.Rasa and Dawood also can do welfare activities and get away from being questioned. If this trend continues with others in line like Nithy and Bangaru, will you support them too?

    ReplyDelete
  16. 1000ம் கோடி அடிச்சி 500 கோடி மட்டும் செலவு செய்து இருக்கின்றார் பாபா...

    நிறைய ஆன்மீக திருடர்கள்..1000ம் கோடி அடிச்சி அப்படியேதான் வச்சி இருக்கானுங்க...இதுல நிறைய என்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாறி ஏழை மாணவர்களிடம் இன்னமும் சுரண்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    நீங்கள் சொல்வது போல கடவுளின் பெயரால் மோசடி செய்து 1000ம் கோடி கொள்ளை அடித்து, 500கோடியை மக்களுக்கு செலவு செய்த, அந்த மோடிமஸ்தான், கடவுள் அவதாரம் நானே என்று சொல்லிய, ஹைடெக் சாமியார் வேஷம் போட்ட ,அந்த இறந்து போன சாய்பாபா திருடனை எனக்கு பிடித்து இருக்கின்றது..

    ReplyDelete
  17. But, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!

    ReplyDelete
  18. பாபா-வை திருடன் - ன்னு சொன்னதுக்கு கண்டனங்கள்

    ReplyDelete
  19. jackie,

    its true that no one is perfect,

    but see these guys exploit others to make themself comfortable,

    as far i was concern politicians, mass heros and these kind of babas are using others innocence to gain supremacy.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner