DELTA / உலக சினிமா/ஹங்கேரி/பதினெட்டுபிளஸ்/ தப்பான ரத்த உறவு...


எனக்கு தெரிந்த ஒரு நண்பரின்  நண்பர் குடும்பத்தில் அவரது சித்தப்பா 1960களில் எங்கள் ஊரில் இருந்து வீட்டை  விட்டு ஓடி  சென்னைக்கு வந்து இங்கு ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக உயர்ந்து 5 பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்... இன்று  அந்த பிள்ளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல நிலையில் வாழ்க்கை நடத்துகின்றார்கள்..


சார் நல்ல விஷயம்தானே? இதுல என்ன? பெரிய சுவாரஸ்யம்???


சுவாரஸ்யம் இல்லாமையா இந்த விஷயத்தை சொல்லுவேன்...??? அவர் திருமணம் செய்து கொண்டது.. தனது  சொந்த சித்தியை.....1960களில் அந்த காதலுக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்...

இரண்டு நாளைக்கு முன் பெங்களுருவில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை தன்னிடம் படித்த பையனை மனம் செய்து கொண்டு இருக்கின்றார்....


பாதை மாறிய உறவுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... பட் இந்த ஹங்கேரி நாட்டு படத்தில் அண்ணன் தனது சொந்த தங்கையை காதலிக்கின்றான்?? ஊர் உலகம் எப்படி இதை அனுமதிக்கும்???


நம் தமிழக சூழலில் சித்தி மகளை தங்கையாக பாவித்தாலும் ஒரு மதப்பிரிவில் திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.. சோ... ஒரே மாநிலம், ஒரே  மொழி என்றாலும் ஒருவருக்கு சரி  என்பது மற்றவருக்கு தவறு என்பதாய் இந்த உறவு முறை படுகின்றது...
==========
(DELTA )டெல்டா ஹங்கேரி  படத்தின் கதை என்ன??


பிலிக்ஸ் சின்ன வயசுலேயே வீட்டை விட்டு போனவன்.. பெரியவனாக ஊருக்கு திரும்புகின்றான்.. அவனுடைய சொந்த ஊர்லயே தங்க நினைக்கின்றான்... அப்போதுதான் அவனது தங்கையை முதல் முறையாக நேரில் பார்க்கின்றான்....ஊர் என்பது ரொம்பவும் ரிமோட் வில்லேஜ்.. ஊரை சுத்தி  சதுப்புநிலகாடு.... ஒரு  ஆறு அதுக்கு நடுவுல அவன் ஒரு மரவீட்டை கட்ட முயல்கின்றான்... அதுக்கு அவன் தங்கை ஹெல்ப் செய்யறா...வீடு கட்டி முடிக்கும் போது அவர்களுக்குள்  காதல் அரும்புகின்றது....ஆனால் இந்த ஊர் உலகம் சும்மா இருக்குமா??? எட்டு பட்டு  பஞ்சாயத்தையும் கூட்டும் அல்லவா??? தம்பி அது இங்க மட்டும்தான்...அப்ப அங்க??? படத்தை பாருங்க.....


=======


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இந்த படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய படம் இது....


இன்செஸ்ட் கதையாக இருந்தாலும் கதை சொன்ன விதத்தில், வேறு பார்வையில் பயணிக்கின்றார்...காரணம் கதையில் சொல்லப்பட்டு இருக்கும் லாஜிக்....
பொதுவாக வெளிநாடு என்றாலே எல்லா பெண்களும் சோரம் போனவர்கள்.. தங்கள் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்... நினைத்தவுடன், அல்லது  அழைத்தவுடன்  வந்து படுத்து சல்லாபிப்பார்கள் என்ற தவறான எண்ணம் நம்மிடத்தில் வெகு ஆழமாக பதிந்து இருக்கின்றது... பட்  உண்மை அதுவல்ல.... என்ன ?நம்மை போல  அவர்கள் நடிக்கமாட்டார்கள்...நான் யோக்கியன்... நான் பத்தினி என்பது போல...


சார் இது மாதிரி எல்லாம் நம்ம நாட்டுல நடந்தா வெட்டி போட்டுவிடுவாங்க...
ஹலோ மிஸ்டர் உங்க ஊர்ல மட்டும் அல்ல  எல்லா ஊர்லயும் அப்படித்தான்.....முறை தவறிய உறவுகளை யாரும் எந்த நாட்டிலும் கொஞ்சுவது கிடையாது என்பதைதான் இந்த படம் உணர்த்துகின்றது....

அவர்களே ஒத்து போனாலும்  இந்த சமுகம் ஒத்துக்கொள்ளாது என்பதை சொல்லி இருக்கின்றார்....


அந்த பெண்ணுக்கு ஸ்டெப்பாதராக வருபவன் முதலில் இந்த உறவை எதிர்த்து கொண்டு இருப்பதை சமுகம் எதிர்ப்பதாக சித்தரித்து விட்டு....அதே ஸ்டேப்பாதர் தன் மகள் முறைப்பெண்ணையும் புணருவதாக காட்சி படுத்தி இருப்பது... சமுகத்தின் மீது ஒரு பலமான சாட்டை வீச்சு..


சின்ன வயதில் இருந்து பார்க்கவில்லை  அதனால் அண்ணன் மேல் காதல் என்ற லாஜிக்கோடு இயக்குனர் பயணித்து இருக்கின்றார்..
========
அப்படியே இயக்குனர் என்ன சொல்லவரார்னு பாருங்க....


======
படத்தின் அடிநாதம் இந்த படத்தின் ஒளிப்பதிவு.........எல்லா பிரேமையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் பிரேம்கள் இருக்கும்... அந்த பின்னனி இசை....


படத்தின் டிரைலர் பார்த்தால் அதுவே உங்களுக்கு நிறைய புரியவைக்கும்....


இரண்டு பேர்தான் பிரதான பாத்திரம் என்பதால் அதுக்காக ஆற்றுக்கு நடுவில் வீடு கட்ட மெனெக்கெட்டு இருப்பது அருமை....
முக்கியமாக  மூன்று ஆணி  வரிசையாக அடிக்கும் காட்சிகளில் ஷப்ட் போக்கஸ் ஆவதும் வேலை பரபரப்பாக, நடப்பதாக காட்டுவதும் வெகு அழகு....

எம்டி பிரேமில் ஒவ்வோரு சட்டமாக அடித்து அந்த பிரேமை ஆணி அடித்து மூடுவதை காட்டும் போது பார்வையாளன் வீடு கட்டும் வேலை நடக்கின்றது என்பதை சொல்ல அந்த இரண்டு காட்சிகள் போதும்....

இரண்டு பேர் பலகையில் படுத்துக்கொண்டு இருக்கும் போது கீழே  ஆற்று நீரில் மீன்பிடிக்க வைத்து இருக்கும் வழியை அதாவது சின்ன பலகையை திறக்கும் போது..... மிக அழகாக பிரேம் வைத்து இருப்பார்கள்... டிரைலரில் கூடஅந்த ஷாட்டை பார்க்கலாம்...
ஒரு இரணடு வரி கதையை இரண்டு மணிநேரத்துக்கு காட்டுகின்றார்கள் என்றால் எவ்வளவு ஸ்லோவாக  எல்லா ஷாட்டும் இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.


எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள்தான்..


 =========
 படம் வாங்கிய விருதுகள்...
Year    Result    Award    Category/Recipient(s)
2008     Won     FIPRESCI Prize     Competition
Kornél Mundruczó
Nominated     Palme d'Or     Kornél Mundruczó

Cottbus Film Festival of Young East European Cinema
Year    Result    Award    Category/Recipient(s)
2008     Won     Don Quixote Award     Kornél Mundruczó
Nominated     Grand Prize     Kornél Mundruczó

European Film Awards
Year    Result    Award    Category/Recipient(s)
2008     Nominated     European Film Award     Prix d'Excellence
Márton Ágh
For production design.

Ghent International Film Festival
Year    Result    Award    Category/Recipient(s)
2008     Nominated     Grand Prix     Best Film

Hungarian Film Week
Year    Result    Award    Category/Recipient(s)
2008     Won     "Gene Moskowitz" Critics Award     Kornél Mundruczó
Best Music     Félix Lajkó
Grand Prize     Kornél Mundruczó

=====


தர்பூசினி பழத்தில் சரக்கு ஊற்றி அந்த பெண்ணை பளிர் பளிர் என்று அடித்து தின்ன வைக்கும் இடங்களில்  அந்த பெண் நடிப்பில் பின்னி இருக்கின்றார்...


கிளைமாக்ஸ்  பரிதாபத்தை வரவைக்கும்....
இயக்குனர் Kornél Mundruczó

இந்த படத்தல் முதலில் அண்ணன் கேரக்டரில் நடித்தவர் இறந்து விட்ட காரணத்தால் அப்புறம் வேறு ஆர்டிஸ்ட் போட்டு ரீ ஷுட்  செய்து இருக்கின்றார்கள்...
 


பெங்களூர் வாசிகள்.... இந்த படத்தை பார்க்கலாம்... காரணம்..லுமீயர் சேனலில் இந்த படத்தை பார்த்தேன்...இந்திய சென்சாருக்கு ஏற்றது போல நிறைய கத்திரி படம்முழுக்க பாய்ந்து இருக்கும் படத்தைதான் நான் பார்த்தேன்..
=========


படத்தின் டிரைலர்..
========
படக்குழுவினர் விபரம்.


Director:
Kornél Mundruczó
Writers:
Yvette Biro (screenplay), Kornél Mundruczó (screenplay)
Stars:
Félix Lajkó, Orsolya Tóth and Lili Monori
Country:
Hungary | Germany
Language:
Hungarian
Release Date:
12 March 2010 (USA)
Runtime:
96 min  | Canada: 92 min (Toronto International Film Festival)
Sound Mix:
Dolby
Color:
Color
Aspect Ratio:
1.85 : 1 

=======
பைனல்கிக்..


இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்... ஒளிப்பதிவுக்கும்... விரசமில்லா மென்மையான கதை சொல்லும் ஸ்டைலுக்கும்.....


 =======

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 


==========

2 comments:

  1. Will watch this weekend, thanks for sharing !

    ReplyDelete
  2. //// உண்மை அதுவல்ல.... என்ன ?நம்மை போல அவர்கள் நடிக்கமாட்டார்கள்...நான் யோக்கியன்... நான் பத்தினி என்பது போல...///

    100% ரைட்டு சார்.. நெருக்கமாக ஒருவரோடு பழகும்போது தான் அவர்களுடைய உண்மையான சுயரூபம் தெரியுது. இது என்னை சுற்றி உள்ளவர்களிடம் நான் கண்டது. எல்லோரும் தான் மட்டுமே இந்த உலகத்தில் நல்லவர்கள் என்பது போல் நடிக்கிறார்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner