நேத்து நைட்டு ஒரு எட்டு மணி இருக்கும் ...என் வீட்டுக்கு அருகில் இருக்கும் 20 வயது இளைஞன்..அவன் வீட்டில் குடியிருக்கும் ஒருவரின் குழந்தையை அழைத்துக்கொண்டு கடைக்கு போய்விட்டு, வருகின்ற வழியில் என்னை பார்த்தான்... அந்த குழந்தை எப்போது என்னை பார்த்தாலும் மிரளும்...மிரளும் குழந்தைக்கு தைரியம் சொல்லி அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு அபி என்று அந்த குழந்தையிடம் சொன்னான்..
அந்த குழந்தை என்னை பார்த்து விட்டு பயந்து அவன்கழுத்தைக்கட்டிக்கொண்டது.. நேற்று இரவுதான் அவனை கடைசியாக பார்த்தேன்..இன்று மதியம் அவனை என் வீட்டு மாடியில் இருந்து பார்த்த போது தனது வயலில் களைஎடுத்துக்கொண்டு இருந்தான்...இன்று இரவு ராயபேட்டை மாச்சுவரியில் சவக்கிடங்கில் கிடக்கின்றான்... ஓத்தா என்ன வாழ்க்கைடா இது...???
வளசரவாக்கம் மெகாமார்ட், ஆழ்வார் பேருந்து நிறுத்தத்தில் தனது பல்சர் பைக்கில் சிக்னலுக்கு காத்து இருக்கும் போது.. சிக்னல் விழுந்ததும் மூவ் ஆகி இருக்கின்றான் அவனுக்கு முன் பக்கம் இருக்கும் மேன் ஹோலில் ஏறி இறங்கியதும் முன்பக்கம் இருந்த ஆட்டோவில் இடிந்து நிலைதடுமாறி கிழே விழ பின்பக்கம் சிக்னலில் இருந்து புறப்பட் அரசு பேருந்து அவன் உடல் மீது ஏறி இறங்கி ஸ்தலத்திலேயே மரணம் அடைந்து விட்டடான்..
நாளைதான் போஸ்மார்டம் முடித்து பாடி கொடுப்பார்கள்.. பிள்ளையை பெற்றவர்கள் கதறல் நெஞ்சை பிளக்கின்றது.. முடி வெட்டிகொண்டு வருகின்றேன் என்று சென்றவன். அதன் பிறகு இற்ந்த செய்தியை அந்த குடும்பத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை....
என்னிடம் சொற்பவார்த்தைகள்தான் இதுவரை பேசி இருக்கின்றான். தாம்பரம் கிருஸ்த்துவ கல்லூரியில் படிக்கின்றான்...
அவனின் அம்மா அப்பா என்னிடம் நிறைய பேசுவார்கள்.. அவர்கள் கதறல்களை எழுத வார்த்தைகள் இல்லை..
இந்த அதிர்ச்சியை என்னால் ஜீரனிக்க முடியவில்லை...
கோபி உன் அன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
===========
very sad to hear, condolence
ReplyDeleteபடித்தவுடன் அதிர்ச்சி முன் நிற்கிறது.
ReplyDeleteசிங்கார சென்னை நகர பயண நெருக்கடியில் அடிக்கடி நிகழும் விபத்து குறித்து நீங்கள் முன்பும் இடுகையிட்டும் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியும் பயன் ஏற்பட்டிருக்கிறதா?
நெருக்கடியான பயணமா?
ஒழுங்கின்மையான பயண மனநிலையா?
சாலைகளின் அமைப்பா?
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசின் திட்டமின்மையா?
அஞ்சுல போகனும் இல்லாட்டி 60ல போகனும்ன்னு சொல்வாங்க...20 கொடிய விச்யம்.
மீண்டும் அதிர்ச்சியுடன்
very sad to hear, condolence to the family
ReplyDeleteஅந்த மேன் ஹோலை மூட எதுவும் நடவடிக்கை எடுத்தார்களா?பாவிகள்.அந்த ஆத்மா சாந்தியடையட்டும்
ReplyDeleteRomBa kastama eruku
ReplyDelete:( very sad..and shocking...!!
ReplyDeleteநண்பர் கோபியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்..
மனதை கணக்க செய்யும் பதிவு
ReplyDeleteஐந்து வருடங்களுக்கு முன்பு என் நண்பர் இதே போன்ற ஒரு விபத்தில் ஐ.சி.எப் அருகில் இறந்தார். என் கடவுள் நம்பிக்கையைக் குலைத்த சம்பவம் அது. அதிலிருந்து மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிப்பது இறைவனின் வேலை அல்ல. அது சம்பந்தப்பட்ட மனிதனாலும், அவனைச் சுற்றி உள்ளவர்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்ற புரிதல் ஏற்பட்டது. இறைவனின் வேலை பிரபஞ்சத்தையும், முதல் செல்லையும் படைத்ததோடு முடிந்து விட்டது என்றே தோன்றியது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் கடவுளை வழிபடுவதை நிறுத்தி விட்டேன்.
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகள்.
Truly sorry to hear your neighbor's loss. Condolence to the family.
ReplyDeleteஅதிர்ச்சியாகத்தன் உள்ளது.கோபியின் ஆதமா சாந்தி அடையட்டும்.
ReplyDeletemy condolences to the family.,
ReplyDeleteரொம்ப கஷ்டம் தான் நண்பரே!
ReplyDeleteநானும் பிராரித்திக்கிறேன் அவருடைய ஆத்மா சாந்தியடைய!
சில நேரங்களில் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் இது போன்ற கொடூரம் நடக்கிறது என்று புரியவில்லை. நம்மால் முடிந்தது இப்பதிவின் தலைப்பை சொல்ல மட்டுமே...த்தா...
ReplyDelete