நடுநிலையாளர்கள் மிரண்டு போனார்கள்...40சீட் கொடுத்தால் எந்த பக்கமும் இவர் பேசுவாரா என்று? என்று கேள்வி எழுப்பினார்கள்..
அப்ப கொள்கையே அந்த கட்சிக்கு இல்லையா ? என்று வினா எழுப்பினார்கள்..
ஆனால் இப்படி எழுந்த விமர்சனங்களை புறம் தள்ளினார் ராமதாஸ்.. எது ஜெயிக்கும் குதிரையோ அதில் பணம் கட்டுவதில் வல்லவர்...இதுவரை எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதில் மாறி மாறி அங்கம் வகித்து வரும் ஒரே கட்சி பாமக மட்டுமே...இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க அச்சபட்டுதான் வைகோ இன்னும் 21 சீட்டுக்கு அல்லாடிகொண்டு இருக்கின்றார்....
இது பச்சோந்திதனம் அல்லவா ?என்று நிறைய பேர் குரல் கொடுத்தாலும் கொடுக்கும் குரல்களை விட ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், பாமகவின் குரல் எப்போதும் ஒர எதிர்கட்சியாகவோ அல்லது ஆளும் காட்சியாகவோ ஓங்கேயே இருந்தது..
எதுவும் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய் என்பதையும் அரசியலில் காலம் தள்ள எதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு கால் ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் தொண்டர்கள் ஆக்டிவாக இருக்க முடியும்...
இதை வெளிப்படையாக பல நடுநிலையாளர்கள் எதிர்த்தாலும் அதை பற்றி கவலைகொள்ளாமல் கட்சியை உயிர்ப்போடு வைத்து இருக்க இது போலான நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டு இருக்கின்றார் மருத்துவர்..
அதனால் இந்த முறை ஜெ எடுத்த எடுப்பிலேயே ராமதாசுக்கு ரெட்சிக்னல்காட்ட ,இன்றைய மதிமுக நிலை பாமகவுக்கு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினார்கள்.. கலைஞர் கை கொடுத்தார்... இன்று 30 சீட்டில் நிற்கின்றார்கள்...
இத்தனைக்கும் ராமதாஸ் வைகோபோல உணர்ச்சியாய் தீப்பிழம்பாய் பேசும் பேச்சாளர் அல்ல... பட் ஓடும் குதிரையில் மிக சாமர்த்தியமாக பணம் கட்டும் திறமைகொண்டவர்.....அல்லது அதன்மீது ஏறி சவாரி செய்வதில் திறமை சாலி... வெற்றிபெற்றவனை மட்டுமே உலகம் நினைவில் வைத்து இருக்கும் என்ற வரியை தினமும் மனப்பாடம் செய்பவர்.
இன்றும் தூய தமிழ் சொற்கள் நம் இல்லங்களில் உள்ள வரவேற்பரையில் ஒலிக்க ராமதாஸ் நடத்தும் மக்கள் தொலைகாட்சி போற்றுதலுக்கு உரியது....
மின்னனு வாக்கு எந்திரத்தில் கோல்மால் செய்யலாம் அதனால் வாக்கு சிட்டு முறைக்கு மாற வேண்டும் என்று ஜெ ,ராமதாஸ் இருவரும் ஒன்றாக இருந்த போது குரல் கொடுத்தார்கள்.. ஆனால் ரெண்டு பேருமே இந்த விஷயத்தில் இப்போது அடக்கி வாசிக்கின்றார்கள் அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை...
மே 13க்கு நான் வெயிட்டிங் ....பார்ப்போம் 30 சீட்டுகளில் எத்தனை என்று??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=====================
//வெற்றிபெற்றவனை மட்டுமே உலகம் நினைவில் வைத்து இருக்கும் என்ற வரியை தினமும் மனப்பாடம் செய்பவர்.
ReplyDeleteநிதர்சனமான உண்மை
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
http://speedsays.blogspot.com/2011/04/1.html
// //வெற்றிபெற்றவனை மட்டுமே உலகம் நினைவில் வைத்து இருக்கும் என்ற வரியை தினமும் மனப்பாடம் செய்பவர்.// //
ReplyDeleteபா.ம.க குறித்து அவதூற்று சேற்றை மட்டுமே வாரியடிக்கும் பதிவுலகில் நிதர்சனத்தை எடுத்துக்காட்டிய தங்களுக்கு நன்றி
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
அரசியலில் சந்தர்பவாதத்திற்கு இன்னொரு பெயர் ராஜதந்திரம்....ராமதாஸ் ஒரு சந்தர்பவாதி சே....ராஜதந்திரி
ReplyDelete