யாராக வேண்டுமானாலும் இருந்து போகட்டும்...திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்கும் அல்லது கூட்டனி ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கும் அவ்வளவுதானே?
சார்பு நிலையாக பேச ஆரம்பித்தால் வண்டி வண்டியாக பேசலாம்.. அரசியல் சாக்டையில் யாரும் யோக்கியம் இல்லை என்பதுதான் உண்மை...
அதனால்தான் முன்னாள் கர்நாடகா முதல்வர்... காந்தியே இருந்தாலும் ஊழல் செய்து இருப்பார் என்று ஒரு ஸ்டேட்மென்ட் விடுத்து இருக்கின்றார்..
நான் இணையத்தில் எந்த கட்சிக்காவும் உயிரை கொடுத்து சண்டை போடும் ரகம் நான் அல்ல...அதனால் ஒரு பயனும் இல்லை... என்பது எனக்கு தெரியும்...
எனக்கு என் பார்வையில் யார் ஒரளவுக்கு சரியாக இருக்கின்றார்கள்? நன்றாக கவனியுங்கள்.. ஒரளவுக்கு சரியாக இருக்கின்றார்களோ? அவர்களை நான் ஆதரிக்கின்றேன்...அப்படி நான் ஆதரிப்பவர்களை கண் மூடி தனமாக ஆதரிப்பவனும் அல்ல...
அவர்கள் தப்பு செய்தாலும் தப்புதான்... ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மற்றும் படித்தவர்களை தாண்டி இன்னும் கிராமபுறங்களில் இன்னும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? அவர்கள் தற்போதைய அரசியல் பற்றிய கருத்து என்ன? என்பதையும் நம்மில் பலர் ஆராய்வது இல்லை...
நான் மக்களோடு மக்களாக பழகுபவன்.. வெளியூர் பயணங்களின் போது பக்கத்து சீட் நண்பருடன் பழகி பேசிக்கொண்டு வருபவன்... சின்ன கூரைக்கொட்டாய் டீக்கடைகளில் டீ குடித்து பேச்சு கொடுத்து அல்லது பேச விட்டு தற்போதைய தமிழக அரசியல் பற்றிய மக்கள் பார்வையை தெரிந்து கொண்டு இருக்கின்றேன்.
என்னை விட பதிவர் அப்துல்லா மக்களோடு பழகி இருக்கின்றார்.. அவர் ஒரு கணிப்பை வெளிபடுத்தினார்.. அவர் திமுக்காரர் என்பதால் அவர் அப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருப்பார் என்று சொல்லுவார்கள்...
நான் அப்போது சொன்னேன்.. திமுக 90லிருந்து 95வரை தனித்து வரும் என்றேன். ஆனால் ஊடகங்கள் மொத்த கூட்டனியுமே 95தான் வரும் என்று சொல்லின...
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் நானும் பதிவர் டாகடர் புருனோவோடு பேசும் போது 100க்குமேல் வரும் என்றேன். அவரும் அதையே ஆமோதித்தார்...100க்கு மேல் திமுக தனித்து வர வாய்ப்பு இருப்பதாக முதலில் நாங்கள் இரண்டு பேர்தான் பேசினோம்.. நாங்கள் சொன்னது போல வரலாம் வராமலும் போகலாம்... இது ஒரு கணிப்பு அவ்வளவே...நாங்கள் சொன்னது போல வந்தாலும் பத்து பைசாவுக்கு புரோயோஜனம் இல்லை வரவிட்டாலும் லாஸ் இல்லை இதுதான் எங்கள் நிலைப்பாடு....
60 சதத்துக்கு மேல் போனாலே திமுக தனித்து நிறைய சீட்டுகளில் வரும் என்றோம்... அது 70 சதவீதம் வந்தது.. இப்போது கடைசியாக 78 சதவீதம் சொல்லி இருக்கின்றார்கள். பட் இந்த சதவீகித வாக்குக்கு முன்பே 100க்கு மேல் என்று இரண்டு பேரும் முதன் முதலில் பேசி இருந்தோம்..
ஒரு மாதம் வெயிட் செய்யவேண்டியதுதான்...
எலக்ஷனுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு ஊடகங்கள் திமுக கூட்டனி இந்த முறை மண்ணை கவ்வும் என்றார்கள்... ஆளும்கட்சி பயந்து போய் சீட்டை அள்ளி இரைத்தது
அதனாலே ஜெ... நாமே பெரும்பாண்மை இடத்தில் மக்கள் எழுச்சி காரணமாக வெற்றி பெற் வாய்ப்பு இருக்கும் போது வைகோ நமக்கு எதற்கு என்று கழட்டி விட்டார்...
ஆனால் மக்களிடம் ஆளும் கட்சி செய்த தவறுகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல சரியான ஆட்கள் எதிர்கட்சியில் இல்லை என்பது பெரும்சோகம்...
வடிவேல் பிரச்சாரம் மற்றும் நல திட்டங்கள் மட்டும் சொல்லி எதிர்கட்சியினரை அதிகம் திட்டாமல் ஆளும்கட்சி வாக்கு சேகரித்த விதம்...மற்றும் நெகிழ்ச்சியாக பேசிய முதல்வர் என்று மக்கள் திசை திரும்ப ஆரம்பித்தார்கள்..
ஊடகங்கள் ஏற்படுத்திய மாயை..
முதலில் ஆளும்கட்சி மண்ணை கவ்வும்..
தேர்தல் கமிஷன் ஆளும் கட்சி குடைச்சலையும் மீறி சிறப்பாக செயல் படுகின்றது.. என்று எல்ல்லாம் சொல்லிவிட்டு எலெக்ஷனுக்கு முதல் நாள் ஆளும் கட்சி பணம் வினியோகம் செய்து விட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். அப்ப எலெக்ஷ்ன் கமிஷன் பூப்பறித்துக்கொண்டு இருந்ததா?
அதே போல் பொத்தாம் பொதுவாக எல்லா இடத்திலேயும் பணம் விளையாடி விட்டது என்று சொல்லிவிட முடியாது.. பணம் விளையாடியது உண்மை ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டுமே அந்த திருப்பணியை செய்தன. அதுதான் உண்மை... அதுவும் குடிசைபகுதி மக்கள் வசிக்கும் இடங்களில் பெரும்பாண்மையாக பணப்பட்டுவாட நடந்தது என்பது உண்மை...
ஸ்டாலின் ஓட்டு போட்டு விட்டு எங்கள் கூட்டனி 230 தொகுதிவரை ஜெயிக்கும் என்றார்... அது ஆசை தோசை ஆப்பளம் வடைதான்..ஆனால் ஒரு தலைவன் அப்படித்தான் தனது தொண்டர்களை உற்சாகபடுத்த சொல்ல வேண்டும்... 100சீட்டுக்கு மேல் திமுக வர வாய்பு இருப்பதாக மக்கள் மனநிலையை வைத்து சொல்கின்றேன்..
70 சதத்துக்கு மேல் போன எல்லா எலெக்ஷனும் திமுக வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று சொல்லி வருகின்றார்கள்.. பட் இந்த இடத்தில் ஒரு சின்ன நெருடல்.... ஸ்பெக்ட்ரம் மட்டும் இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளலாம்.. பட் இந்த எலெக்ஷன்... அப்படியே தலைக்கிழாக மாறவும் வாய்ப்பும் இருக்கின்றது.. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்... வளர்ப்பு மகன் திருமணத்தால் அதிமுக எதிர்ப்பு அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விஷயம் கிராமபுறமக்களிடத்தில் இல்லை அதனால் திமுக வாஷ் அவுட் ஆக வாய்ப்பு இல்லை.............
எது எப்படியோ அடுத்த மாதம் இதே நேரத்தில் தமிழக முதல்வர் யார் என்று தெரிந்து விடும்... யார் முதல்வர் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..எவ்வளவு அடித்தாலும் மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===============
எது எப்படியோ அடுத்த மாதம் இதே நேரத்தில் தமிழக முதல்வர் யார் என்று தெரிந்து விடும்... யார் முதல்வர் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..எவ்வளவு அடித்தாலும் மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.
ReplyDeleteசரி ஒரு மாத காலம் கழித்து பார்போம்
வாக்கு பதிவுகள் மிகுதியாக இருந்த எல்லாத் தேர்தலிலும் ஆளும் கட்சியை அகற்றியே ஆகவேண்டும் என்றே மக்கள் வாக்களித்து வந்துள்ளார்கள்.
ReplyDelete:)
நிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..
ReplyDeleteஉண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..
அந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..
1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..
2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது
போல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..)
நேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா ??? பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..
2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..
ReplyDeleteஇரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது
2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..
இதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. !
இந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..
2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் ..
இரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.
என்னைப்பொறுத்த வரையில் உங்களது கருத்துக்கு முழுவதும் உடன்படுகிறேன். தி.மு.க தோற்கும் என்ற ஊடகங்கள் எழுப்பிய மாயையே போதும் என்று ஜெயாவும் பதிவுலக போராளிகளும் இருக்கின்றனர். தி.மு.க இம்முறை வெண்றால் அதற்கு முழுக்காரணம் ஜெயாவத்தானரிப்பார்.
ReplyDeleteகருணானிதிக்கு தான் முழுமையான மாற்று என்று அடித்தள மக்கள்வரை நம்பிக்கை ஊண்டாக்க ஜெயா தவறிவிட்டார்.
உண்மைதமிழன் போன்ற்வைகளும் ஊடகங்களும் கருணாவின் குடும்ப ஊழலையும் தமிழினத்துரோகத்தையும் பறைசாற்றினார்கள் தவிர, ஜெயா மாறி விட்டார், ஆணவத்தை விட்டு விட்டார், சசிகலாவின் அட்டகாசம் இனி இருக்காது என்று அடித்தள மக்கள்வரை எடுத்து செல்லவில்லை. தவறி விட்டனர்,
நகர்ப்பகுதிகளில் தி.மு.க. அட்டகாசத்தால் நேரடியாகவோ மறைமுகக்காவோ பாதிக்கப்பட்டவர்களை தவிர நீங்கள் சொல்வது போல் பொதுமனிதனுக்கு அதுவும் கிராமப்புறங்களில் தி.மு.க வின் மீது அத்தனை வெறுப்பும் இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்ற நிலைப்பாடோ இல்லைதான்.
இது முயல் ஆமை போட்டி கதைதான். ஜெயா தனது குணத்தை மாற்றிகொள்ளவில்லை என்று வெளிப்படையாக நடந்தது இதனால்தான். நாமதான் ஜெயிக்க்கபோகிறோம், எதற்கு வைகோ, வியஜகாந்த் போன்றவர்களுடன் இறங்கி வந்து தனது தனிதன்மையயும் பிறவிக்குணத்தையும் விடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துவிட்டார்.
கருர் தொகுதியில் இளைஞர் ( இளைநி) காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதி என்கின்றனர் கரூர்வாசிகள். ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கு கொடுத்து உள்ளனர்.
இவரின் (காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி) வெற்றிக்கான காரணங்களில் முக்கியமாக்போவது இவரின் மேல் மக்களுக்கு ஏற்பட்ட க்ளீன் இமேஜ்., மற்றும் இவரின் ராகுல்காந்தியின் அறிமுகம். மற்றும் இவரின் எளிமையான அணுகுமுறையால் பெண்களின் ஒட்டு கூடுதலாக விழுந்ததாக சொல்கிறார்கள். எந்த ஊடகங்களுலாலும் உண்டாக்கா முடியாத பெண்களிடையே கிடைத்த செவிவழி செய்தி ( செல் போன்)
ஆதரவும், ஜோதிமணியைப் பற்றிய நேர்மறையான பிரச்சாரம் முக்கியானது
தற்போதைய அ.தி.மு.க வின் வேட்பாளரின் கடந்த கால மோசமான செயல்பாடுகளும் ஆகும்.
ராகுல் காந்தியின் வருகைக்கு பின் (பிரச்சாரத்தால் அல்ல) கரூரின் வணிகம் சமுகம் கடைசி நேரத்தில்,
ஜோதிமணியின் டெல்லி செல்வாக்கு கருருக்கு நண்மை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தொடங்கியது போன்றைகள் என பல உள்ளூர் காரணங்கள்தான்.
ஸ்பெக்ட்ரமோ கருணாவின் குடும்ப ஆதிக்கமோ, சீமான் கருருக்கு வந்து நடத்திய காங்கிரஸ் எதிர்ப்பு பிரசரங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
கரூர் தொகுதி காங்கிரஸ்க்கு எண்றவுடன் ணான் உள்பட கரூர் மக்களில் பெரும்பான்யானவர்கள் காங்கிரஸ் தோற்கும் என்று நினைத்த்னர்
'இந்த மாற்றங்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எதிர்பார்க்காத ஒன்று. கருரில் கங்கிரஸ் தோற்றுவிடும் என்ற நிலையிலிந்து,
சரியான வேட்பாளர் தேர்வினால் வெற்றி பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
கருரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் உள்ளூர் நிலவரங்களின் அடிப்படையிலும் ஒட்டுப்பதிவின் போக்கையும் வைத்து இதை எழுதுகிறேன்
பூபதி துபை.
ஜாக்கி
ReplyDeleteஓட்டுப் பதிவு மிக அதிக அளவில் இருக்கும் போது பொதுவாக அது Anti Incumbency ஓட்டுக்களாக இருக்கும். அதாவது ஆட்சியில் இருப்பவர்களின் மீதான கோபம். மே 13 தெரியும் அதுவரை காத்திருப்போம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஐயா, அதிமுக ஆட்சியின் (திமுக எதிர்பாளர்களே)ஆதரவாளர்களே தயவுசெய்து அதிமுக ஜெயிக்கும் என்று மாற்று கருத்தாளர்களின் (நடுநிலையாளர்களாம்) தளத்தில் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று வாதிடுவதை தவிர்க்கவும். ஜெயித்தபின் பேசிக்கொள்ளலாம்.
ReplyDeleteதிமுகவைப் பொறுத்தவரை என்னுடைய கணிப்பு: 75 - 80 தொகுதிகள்.. திமுகவின் மீது பல வெறுப்புகள் இருந்தாலும் - கட்டுக்கோப்பான கட்சி, கலைஞரின் பிரசாரம், ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்திருக்கும் அதன் திட்டங்கள் என்று பல
ReplyDeleteசாதகமான விஷயங்கள் இருப்பது ஓட்டுகளாக மாறும்
என்பதே உண்மை..
95 - 100 தொகுதிகள் என்பதெல்லாம் மிகைபடுத்தப்பட்ட கணிப்பு என்பது என் கருத்து.. அவர்கள் நிற்பதே 119 தொகுதிகளில் மட்டுமே என்பதை மறந்துவிட வேண்டாம்..
Boston - NO Anti Incumbency Factor.. Seeing the past Anti Incumbency will always be very visible and will also leave the result prediction very clean.. like in 1991. Everyone were came out against jaya govt.. every one predicted Jaya will be thrown out of power..
ReplyDeletebut now, only in cities, the specturm is there.. in villages nothing of that sort.
real issue is ADMK + failed in miserably in their campaign.. they could have done a better job.. just attacked kalainjar and family very personally which was already rejected in 2009 and 2006.
i could say the 16 laksh families who were given token for concrete house brought in more voters to poll.. since they know it is very important to bring DMK to power to get their houses..
I don't know about DMK or ADMK but one thing is sure Congress is going to lose most of the 63 seats.
ReplyDeleteEven after congress govt assistance to srilankan govt efforts to cleanse srilankan tamilians as well as Indian fisher men only few ignorant educated folks will vote for congress. I believe uneducated masses know the difference between Indian national congress and Antonio maino congress.
Whatever is happening to Indian Tamil fishermen that is going to affect us someday
தி.மு.க. தான் ஜெயிக்கும் என்பதற்கு என் நண்பன் வேறு ஒரு புது காரணம் கூறினான். கடைசி இரண்டு மணி நேரத்தில் இருபது சதவிகித ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. இது ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஓட்டுக்களாக இருக்கும் என்று அவன் கூறுகிறான்.
ReplyDeleteஜாக்கி முதல்கொண்டு இங்கு சிலர் 1996-2001 மிக நன்றாக ஆட்சி செய்தார் இருந்தாலும் மக்கள் கூட்டணியை பார்த்து ஏமாந்து அநியாயமாக கருணாநிதியை தோற்கடித்து விட்டார்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். சரிங்க அவர் இஸ்டத்துக்கு பாரதீய ஜனதாவோட கூட்டணி வைச்சிட்டு வருவார் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணுமா? மத்தியில் கவிஞர் மாநிலத்தில் கலைஞர் என்று வாய் கூசாமல் ஓட்டு கேப்பார்கள் இசுலாமிய கிருத்துவ மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணுமா? என்னங்கய்யா உங்க நியாயம்?
ReplyDeleteஅவரது அந்த ஆட்சியில்தான் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் களுக்கு ஆதரவாக போராடிய மக்கள் பதினெட்டு பேரு காவல்துறையால் தாமிரபரணியில் அடித்து கொல்லப்பட்டார்கள் அதையும் மக்கள் மறந்துவிட்டு கருணாநிதிக்கு ஓட்டு போடணும். வெகுஜன மனநிலையில் ஜாக்கி அவர்கள் எழுதிவிட்டு நாங்க மக்களோடு மக்களாக கலந்து நின்று கருத்து கேட்டேன் என்பதை என்ன செய்ய? மக்களுக்குத்தான் மறதி அதிகம் என்றால் ஜாக்கிக்கு அதைவிட அதிகமாக இருக்கும் போல. இருக்கட்டும் கருணாநிதியே பெரும்பான்மையாக போட்டியிட்ட 119 தொகுதிகளில் 120 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கட்டும்.
எவன் வந்தாலும் நம்ம கடனை ஒரு லட்சம் கோடிய இரண்டு லட்சம் கோடியா மத்த போறாங்க
ReplyDelete//ஸ்டாலின் ஓட்டு போட்டு விட்டு எங்கள் கூட்டனி 230 தொகுதிவரை ஜெயிக்கும் என்றார்//
ReplyDeleteஇதையேத்தான் எதிர் கட்சியும் சொல்கிறது. தமிழ் நாட்ல மொத்தம் 460 தொகுதி இருக்கா??
நாம் நினைப்பது ஒன்று அவன் நடத்துவது வேறு எதற்கு இப்பவே ஆருடம் கூறி நமக்கு நாமே மகிழ்ச்சிபபட்வேண்டும் பொறுப்போம் திடமான பதிலை பெறுவோம் இன்னும் சில நாட்களில்
ReplyDeleteபுதுக்கோட்டை ஜி வரதராஜன்
tommy ungal karuththu arumai!!!
ReplyDeleteதம்பி நீங்க இன்னும் மக்களோட பழகனும்... படிக்க வேண்டியது நிறைய இருக்கு....
ReplyDelete