சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்20/04/2011

ஆல்பம்...

சாதாரணமாகவே நாம் என்றால் அந்த சிங்கள பண்ணாடைங்களுக்கு நாமன்னாலே செம கடுப்பு.. அதுவும் இந்தியா கிரிக்கெட்ல பைனல் மேட்சில் அவர்களை நம்ம ஆளுங்களால் தோற்கடிக்கப்பட்டதும் இன்னும் அவனுங்க காண்டு ஆயிட்டானுங்க.. இந்த லட்சனத்துல ஒரு 4 மீனவர்களை போட்டு தள்ளிட்டானுங்க... அப்படி அவனுங்க செய்யவே மாட்டானுங்கன்னு சந்தியம் செஞ்சு பொங்க வச்சி சொல்ல, இங்கே பல கபோதிங்க இருக்கு....எல்லாத்தை விட உச்சம் ஐபிஎல் அணியில்  இந்தியாவில் விளையாடும் அவனுங்க ஆளுங்களை திரும்ப அழைத்து இருக்கின்றார்கள்..இதுலயே அவனுங்க புத்தி என்னன்னு எல்லோருக்கும் தெரிஞ்சி போய் இருக்கும்...அவனுங்க போங்கு பசங்கன்னு எத்தனைவாட்டி சொன்னாலும் மத்திய அரசு ஒத்துக்கபோறதுஇல்லை...... இருந்தாலும் டைம் பத்திரிக்கையில் அந்த ராஜபக்சே பண்ணாடை முதல் 100 பேர்ல 4வது இடத்துல வந்து இருக்காம் அதனால் அதுக்கு ஒரு மைனஸ் ஓட்டு குத்தி உங்க எதிர்ப்பை தெரிவிங்க.. இன்னும் விரிவா தம்பி கார்த்திகேயன் எழுதி இருக்கார்....அந்த லிங்கை படித்து விட்டு அப்படியே மைனஸ் ஓட்டு போடுங்க.... எனக்கு தொடர்ந்து மைனஸ் ஓட்டு குத்தும் பண்ணாடைகளும் ராஜபக்சேவுக்கும் ஒரு மைனஸ் ஓட்டு குத்திட்டு எனக்கும் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.....
===============
சென்னை வெயிலில் இருந்து பெண்களூருக்கு நேற்றுதான் வந்தேன்.. சென்னையில் அக்குள் கச கசப்பில்லாமல் வெளியில் செல்லமுடியவில்லை... பட் சென்னையில் விடியலில் பனி பெய்கின்றது. என்னதான் பெண்களூருவில் வெயில் அடித்தாலும் குளிர் காற்று வீசுகின்றது..பாருங்கள் நேற்று மழை கொட்டு என கொட்டி தீர்த்தது...350கிலோ மீட்டரில் கோடை மழை.... சான்சே இல்லை.. நேற்று இரவு மழை தூறலின் நடுவே  மடிவாளாவரை நடந்து போனேன்....நனைந்து போன டீசர்ட் பெண்கள் கடக்கையி்ல பெண்களூர் இன்னும் அழகாய் இருந்தது,...
=========================
யுகாதி அன்றே பெண்களூரில் மெட்ரோ ரயில் ஓடத்துடங்கும் என்று சொன்னார்கள்... இந்தமுறை அதில் பயணிக்கலாம் என்று ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன்.. இன்னும் காலதாமதம் ஆகின்றது.. ஏன் என்று தெரியவில்லை... பார்ப்போம்.....
=============

போனவாட்டி ராக்கெட்டை கடலுக்கு தாரை வார்த்தோம்.. உலக அளவில் அது கொஞ்சம் அசிங்கம்தான்.. ஆனா இந்த வாட்டி சிங்கமா சீறிட்டோம் இல்லை....இன்று காலை பத்து மணிக்கு நாம அனுப்பிய ராக்கெட் சரியான வட்டபாதையில இன்னும் 5 வருசத்துக்கு எந்த எதிர்ப்பும் போராட்டமும் செய்யாமல் அதுக்கு சொன்ன ரோட்டுல போயிகிட்டே இருக்கும்... வாழ்த்துகள் இந்திய சயின்டிஸ்ட்...
 ===================
தமிழக அரசின் கல்விகட்டணம் சிபிஎஸ்சி சிலபஸ் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு உத்தவிட்டு இருக்கின்றது..  அதே போல சமச்சீர் கல்வி முறையும் பத்தாம்வகுப்பு இந்த வருடத்தில் இருந்து நடைமுறை படுத்த இருப்பதும் சிறப்பான விஷயம்தான்..
=========================
அண்ணாமலை யுனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க போன இடத்துல தம்பி நவரசுவை கொண்ணு உடலை பிஸ் பிஸ்ஆக சிதைத்து சூட்கேசில் பேக் பண்ணிய ஜான்டேவிட்டுக்கு கடலூர் கோட்டில் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பணபலத்தால் உயர்நீதிமன்றத்தில் விடுதலை வாங்கி , எஸ்சாகி நேர தலைவர் ஆஸ்திரேலியா போயிட்டார்... இப்ப உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றத்தின்தலையில் ஒரு கொட்டு வைத்து அவனை பிடிச்சி உள்ளே போடுன்னு தீர்ப்பு கொடுத்து இருக்கு... தலைவர் ஆஸ்திரேலியாவில் இருந்து எஸ்சாகி இருந்தாலும் இந்தியாவுல எங்க  கால் வச்சாலும் கைது பண்ண உத்தரவு போட்டு இருக்கு.....
============
இந்தவார சலனபடம்..எலக்ஷ்ன் முடிஞ்ச பிறகுதான் இது என் கண்ணில் பட்டது.. இருந்தாலும் அட்டகாசம் போங்க...
=============

மிக்சர்...

மே13 எலேக்ஷ்ன் ரிசல்ட் என்றாலும் அதுக்குள் ஆளும்கட்சி பெட்டியை மாற்றிவிடுவார்கள் என்று படித்த சிலரே சொல்லும் போது அவர்களை பார்க்கையில் வியப்பாக இருந்துச்சி...போற போக்குல பேசிவிட்டும் கொளுத்தி விட்டு போகும் இவர்கள் எந்த வகையான ஜென்மங்கள் என்று தெரியில்லை.... அப்ப எதிர்கட்சி தேர்தல் கமிஷன், இரவு பகலாக காவலுக்கு இருக்கும் தணை இராணுவபடையினர்  எல்லாம் கேனையர்களா??? இதில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வேறு.....

=======================
வரும் சனிக்கிழமை சென்னை வானொலி முதல் அலைவரிசையில் காலையில் 7,15 டெல்லி செய்தி ஒளிபரப்பு முடிந்ததும் அதாவது 7,25லிருந்து சனிக்கிழமை தோறும் மக்கள்மேடை என்ற நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது...இந்த வாரம் உதவும் பண்பு என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் என்னுடைய சின்ன பேட்டி ஒளிபரப்பாகின்றது...  எனது பிளாக் வாசக நண்பர்  கீதப்பிரியன், தாய் பத்திரிக்கையிலும்,கடந்த 25 வருடங்களாக சென்னை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருக்கின்றார்....அவருக்கும் எனக்குமான அறிமுகத்தை பெற்று கொடுத்த எனது பிளாக்கு என் நன்றி... எனது முதல் கன்னி பேச்சு வானொலியில் ஒளிபரப்பாகின்றது.. நான் பெண்களூரில் இருப்பதால் என்னால் கேட்க முடியாது.... யாரவது கேட்டவர்கள் கருத்தை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.... மிக்க நன்றி..
=========
 
இந்தவாரசலனபடம்..2


இந்த வீடியோ கொஞ்சம் கவலையை மறக்க உதவும்...
 ================
இந்த வார கடிதம்...

Dear Jackie,
Hope you are doing great! After a long time, I visited your blog...and it's a sweet surprise that I came to know that you are blessed with a baby girl. Congratulations Jackie sir!!! You got a brand new Angel :-) Enjoy maadi :-) (I do have a 15 months old Angel at home).
Howz your wife and new born are doing? which hospital?
Btw, are you still in Bangalore, if so where do you stay...do you have any local number to contact...let's try to catch up some time if time permits.
Cheers,
Shoban
Times பத்திரிக்கை நடத்தும் 2011-ம் ஆண்டிற்கான "Most Influential People" பட்டியலில் மகிந்த ராஜபக்ஷ நான்காம் இடத்தில் இருக்கிறார்... அவரை தோற்கடிக்க வேண்டுமெனில் நீங்களும் கீழ்கண்ட முகவரிக்கு சென்று ஓட்டு போடலாம்... மேலும் இன்று நீங்கள் சாண்ட்வேஜ் எழுதும் நாள்... இந்த இணைப்பை அங்கு கொடுக்கவும்...

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
--
Regards,

Senthil Kumar M
=================
நன்றி செந்தில் சோபன்...
==========
வாழ்த்துகள்...


உயிர்மை நடத்திய எழுத்தாளர் சுஜாதா நினைவு போட்டியில் சிறந்த இணையதளப்பிரிவில் தோழர் லக்கி, முதலிடத்திலும் தோழர் அதிஷா இரண்டாம்இடடத்திலும்வெற்றி பெற்று இருக்கின்றார்கள்... இருவருக்கும் எனது வாழ்த்துகள்...

=============== 
இந்தவாரசலனபடம்...3

இந்தியாவின் லேட்டஸ்ட் அண்டு ஹாட்டஸ்ட் ஆட் இதுதான்...


===============
பிலாசபி பாண்டி
 உண்மையான காதல் தோற்றுப்போவதில்லை உண்மையான காதலனையோ அல்லது காதலியையோ தேர்ந்து எடுப்பதில்தான் தோற்றுபோகின்
 ================
நான்வெஜ்18+

முதல் இரவு எப்படி இருந்துச்சின்னு புதுசா கல்யாணம் ஆனவகிட்ட அவ பிரண்டூ கேட்டா??? அதுக்கு புது பொண்ணு சொன்னா... 5 பர்சசென்ட் என்ஜாய் மென்ட், 5பர்சென்ட் திரில்லிங், 5பர்சென்ட் பெயினா இருந்துச்சி?? அப்ப மீதி என்பத்திஅஞ்சு பர்சென்ட் என்று அவள் ஆர்வமாக கேட்க?? மீதி 85 பர்சென்ட் கல்லூரி காலத்து  மலரும் நினைவுகள்  என்று சொன்னாள்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...================

9 comments:

 1. http://surekaa.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 2. தலைவர் கலைஞர் பொதுக் கூட்டங்களுக்கு திருச்சி போனாலும், திண்டுக்கல் போனாலும் அங்கிருந்தே கட்டுரைகள், கவிதைகள், அறிக்கைகள் எழுதி முரசொலிக்கு தவறாமல் அனுப்புவாராம்.

  கலைஞரைப் போன்றே கடலூர் சிங்கம் ஜாக்கி அவர்களும் எந்த ஊர் போனாலும் தவறாது பொறுப்புணர்வோடும் கடமையுனர்வோடும் பதிவிடும் பாங்கை மாற்றாரும் பாராட்டுவரே

  ReplyDelete
 3. "அந்த" வாக்கெடுப்பு சுத்தப் பேத்தல்!நான் கடந்த ஒரு வாரமாக எதிர்ப்பு ஓட்டுப் போடுகிறேன்!என்ன ஆகிறது தெரியுமா?ஒரு எதிர் ஓட்டு நான்கு சார்பு ஓட்டாக பதிவாகிறது!அந்த டைம் சஞ்சிகையின் ஊழியர்கள் தான் "அவரை" தேர்வு செய்தார்களாம்.இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான?!ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை(இலங்கை அரசால் கசிய விடப்பட்டது)பற்றி டைம் சஞ்சிகை இதே ராஜபக்ஷேவுக்கு எதிராக முகாரி பாடியது!பணம் கொடுத்து இந்தியாவில் மட்டுமல்ல அமேரிக்காவிலும் சாதிக்கலாம்!அது போக இதுவொன்றும் "நோபல்"பரிசுக்கான சிபாரிசு அல்ல!முடிந்தால் பயங்கரவாதத்தை?!,முப்பது ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை இலங்கையில் நிலை நாட்டியவரென்று நோபல் குழுவுக்கு யாராவது பரிந்துரை செய்து பரிசைப் பெற்றுக் காட்டியிருக்கலாமே?அது முடியாது என்று தெரிந்து தான் "டைம்"சஞ்சிகை ஊழியர்களுக்கோ,நிர்வாகத்தினருக்கோ பணப் பட்டுவாடா செய்து பிரபலமானவரென்று காட்ட முயற்சிக்கிறார்கள்!அப்படிப் பிரபலமானவர் தான் ஒக்ஸ்போர்ட்டில் உரை நிகழ்த்த முடியாமல் "தப்பி" ஓடினார்!அழையா விருந்தாளியாய் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கு இந்தியா வந்து மூக்குடைபட்டு திரும்பினார்!இன்னும் இருக்கிறது அவர் பிரபலமாக வலம் வரும் சந்தர்ப்பங்கள்!இப்போது தானே பான் கி மூனுக்கு ஆலோசனை சொல்ல அவர் நியமித்த குழுவின் அறிக்கை வந்திருக்கிறது? இனி மேல் தான் கச்சேரி களை கட்டப் போகிறது!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 4. அண்ணே ஓட்டு போட சொல்லி சுட்டி கொடுத்தமைக்கு நன்றி,இன்னொரு கீதப்ப்ரியன் இருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி,நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.உலகம் ரொம்ப சின்னது

  ReplyDelete
 5. 350கிலோ மீட்டரில் கோடை மழை???

  ReplyDelete
 6. டைம்ஸ் பத்திரிக்கையில் பணம் கொடுத்து, 1 எதிர்பு ஓட்டை 4 சாதகமான
  ஓட்டாமாத்தி 100 ல 4 வதா வரமுடிம்னா, டைம்ஸ் என்ன கேனையா இந்த கேள்விக்கு
  பதில் ஆமாம்னா -- ஆளும்கட்சி பெட்டியை மாற்றிவிடுவார்கள் என்ற படித்தவர்களின் பயத்திற்கு "அப்ப எதிர்கட்சி தேர்தல் கமிஷன், இரவு பகலாக காவலுக்கு
  இருக்கும் துணை இராணுவபடையினர் எல்லாம் கேனையர்களா??? என்ற உங்கள்
  கேள்விக்கு பதில் அவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் கேனையர்கள்தான்
  என்பற்கு நிறைய சம்பவங்களும் சாட்சிகளும் இருக்கின்றன.( வினவு போன்ற பதிவுகளையும் வாசியுங்கள் )

  ReplyDelete
 7. ஆமாண்ணே,வினவு படிங்கண்ணே!ஆறே மாசத்துல தலையை பிச்சுக்கிட்டு தெருவுல அலையலாம்!உண்மைய அப்புடியே உண்மையா சொல்லுற?!ஒரே தளம் வினவு தாண்ணே!!!!!

  ReplyDelete
 8. எனக்கு தொடர்ந்து மைனஸ் ஓட்டு குத்தும் பண்ணாடைகளும் ராஜபக்சேவுக்கும் ஒரு மைனஸ் ஓட்டு குத்திட்டு எனக்கும் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

  சேகர் இதுக்கு பெயர் தான் கொலவெறியோ?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner