நான் ரசிக்காத கிரிக்கெட் (உலககோப்பை/2011)

 
கிரிக்கெட் விளையாட்டுக்காகஒரு குடும்பமே சண்டை போட்டுக்கொள்ளுமா?? எங்கள் அத்தை வீட்டில் நடக்கும்...மேட்ச் முடிந்து பல மணிநேரம் அந்த சண்டை நீடிக்கும்... இரவு சாப்பாட்டின் போது சோத்து குண்டானை டொப் என்று தரையில் வைப்பதில் தெரியும். இன்னமும் கோபம் அத்தைக்கு  குறையவில்லை என்று...


சண்டைக்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிரிப்பீர்கள்..

சச்சின் விளையாட வந்தால் எப்போது நாலு பயலுகளுக்கு ஹெல்மட் மாட்டி எதிர் அணி கேப்டன்,  கீப்பருக்கு பக்கத்தில் ஆப்சைடில் வரிசையாக நாலுபேரை நிறுத்துவார்கள்.


சச்சினுக்கு ஆப்சைடில் சும்மா போகும் ஒய்டு பாலை கூட வம்புக்கு இழுத்து அவுட் ஆவது என்பது அப்போது ரொம்ப பிரசித்தம்....இந்த வேல்டு கப்பிலும் அப்படித்தான் சச்சின் அவுட் ஆனார்...


சச்சினை எதாவது சொன்னால் எங்கள் அத்தையால் பொறுத்துக்கொள்ளமுடியாது...

ஒய்டுபாலை டச் செய்து எதுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆக வேண்டும்  என்று பெரியவன் ஆரம்பித்தால்,உடனே சண்டை பெரிதாகும் உனக்கு என்ன மயிறு தெரியும்... அவனுக்கு தெரியாதது என்று சண்டை வலுக்கும்...

சச்சின்  அந்த ஒய்டு பாலை தொட்டு அவுட் ஆகி இருக்க்கூடாது என்று ஒரு அணி சண்டை போடும்.. வேணும்னு யாரைவது ஆவுட் ஆவாங்களா? எதோ தொட்டான் அவுட் ஆகிட்டான் இதுக்கு போய் அவனை எதுக்கு திட்டனும்... அடிக்கும் போது எல்லாம் இனிச்சுது இல்லை இப்ப அவுட் ஆனதுக்கு எதுக்கு சச்சினை திட்டனும் என்பது என் அத்தையின் வாதம்....

இத்தனை பேர் வேலையை விட்டு விட்டு தேசமே இந்த விளையட்டை பார்க்கின்றது .. குறைந்தபட்ச பொறுப்பு இல்லாமல் இப்படி அவுட் ஆகி போகின்றார்களே, ஒப்பனிங்ல இருக்கறவங்க  இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அவிட் ஆனா பின்னாடி வருபவன் எப்படி நின்னு விளையாடுவான்?? என்று பெரியவன் தன் தரப்பை வெளிப்படுத்துவான். இப்படி அந்த  சண்டை மறுநாள் காலைதினத் தந்தி வீட்டு வாசலில் வந்து விழும் வரை நடக்கும்....

அப்படி நான் ரசித்த கிரிக்கெட்.............

1990களில் நியூசிலாந்து இந்தியா மேட்ச் என்று நினைக்கின்றேன்.. நான் பத்தாம்வகுப்புக்கு டுயூஷன் போகும் போது, இந்திய நேரப்படி விடியலில் 4மணிக்கு அந்த மேட்ச் ஸ்டார்ட் ஆகும்... விடியலில் 4 மணிக்கு எழுந்து ஒரு 5 ஓவர் பார்த்து விட்டு டியூஷனுக்கு  அவசரமாக ஓடி டியூஷன் முடிந்து என்ன என்று ஆர்வமாக திரும்ப ஓடிவந்து டிவி பார்த்து அதன் நினைவாகவே பள்ளிக்கு கிளம்பி போக காரணமாய் இருந்த 

நான் ரசித்த கிரிக்கெட்.

இப்படி எல்லாம் நான் ரசித்த கிரிக்கெட், அசார்,ஜடேஜா என்று வரிசையா கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்க.. வேலைவெட்டியை விட்டு விட்டு பார்த்தா? நம்மையே பைத்தியக்களி ...ண்டைங்காளா ஆக்கிட்டானுங்களேன்னு  செமை  கோபம்... அதன் பிறகு அந்த விளையாட்டை நான்  பார்க்கவேயில்லை...அதன் மீது ஒரு  ரசிப்பே இல்லை....கங்குலி தலைமையில் இந்திய அணி விளையாடிகொண்டு இருக்கும் போது  ஸ்கோர் மட்டும் கேட்டுக்கொள்வேன்....நேரம் கிடைத்தால் பார்ப்பேன்...

அதன் பிறகு 20/20 கிரிக்கெட் விளையாட்டு பாஸ்ட்புட் போல உடனடி ரிசல்ட்டும், சிக்சருக்கும், போருக்கும் பால் போகையில் 6 பிகர்கள் கையில் ஜிகினா துணி வைத்துக்குதித்துக்கொண்டு இருந்த போது அந்த 20/20கிரிக்கெட் விளையாட்டின் மீது கொஞ்சம் ஈர்ப்பு வந்தது....

இந்த மூன்று வருட காலத்தில் நான் எந்த கிரிக்கெட் பதிவையும் சிலாகித்து எழுதியது இல்லை...காரணம் ஜடேஜா, அசார் எற்படுத்திய வலி....

இந்த உலக்கோப்பை ஜெயித்ததின் மூலம் அந்த ரனமான மனக்காயம் வடுவாக மாறிவிட்டது..

முன்பு போல் எல்லா மேட்ச்சும் இப்போது பார்ப்பதில்லை.. முக்கிய ஆட்டங்களை மட்டும் பார்க்கின்றேன்.

பத்தாம் வகுப்பு அவுட் ஆகிபோன சச்சினே அன்று இரவு ஷாம்பெயின் குடித்துக்கொண்டு இருக்கும் போது, இரவு சாப்பாட்டின் போது சச்சின் அவுட்டுக்காக அத்தை குடும்பமே அடித்து கொண்ட சண்டைகளை நினைத்துப்பார்க்கும் போது, அந்த சண்டையை இப்போது மீண்டும் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கின்றது...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


==============

5 comments:

 1. உலககோப்பை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த ஐ‌பி‌எல் ஆரம்பமாகிவிட்டது.

  இப்படி இருப்பதால் தான் எனக்கு கிரிக்கெட் மீது இருந்த ரசிப்பு ஈர்ப்பு குறைந்து விட்டது. மற்றவர்களுக்கும் இதே நிலைமை தான் என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete
 2. பத்தாம் வகுப்பு அவுட் ஆகிபோன சச்சினே?? இந்த வரி தேவையா?

  ReplyDelete
 3. Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

  Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

  http://indiaagainstcorruption.org/citycontacts.php
  http://www.facebook.com/IndiACor

  ReplyDelete
 4. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

  தனுசு நீங்கள் சொல்வது உண்மைதான்..

  அண்மை குறையேல்.. அது தவறதலாக காப்பி பேஸ்ட் ஆகும் போது நிகழ்ந்து இருக்கின்றது... அதை திருத்தி விடுகின்றேன்.. அவுட் ஆகி போன என்றுதான் எழுதினேன்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner