im juli-உலகசினிமா/ஜெர்மன்/காதலியை தேடும் காதலன்

 
ஒரு பழமொழி இருக்கின்றது.... காதல் எப்போதுமே தோற்பதில்லை.. ஆனால் காதலிக்க தேர்தெடுக்கும் ஆளை பொறுத்து சில வேளைகளில் காதல் தோற்றுவிடுகின்றது.. அதுக்காக ஒட்டு மொத்தமாக காதலை தப்பு என்று புறம் தள்ள முடியாது அல்லவா??...

வருடத்துக்கு ஒரு முறை சுற்றுலா செல்லும் வழக்கம் நம் தமிழ்குடும்பங்களை பொறுத்தவரை அறிது என்பேன்....பல வருடங்களுக்கு ஒரு முறை  எதாவது ஒரு ஊருக்கு செல்வார்கள்... முக்கியமாக அந்த லிஸ்ட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நிச்சயம்..... இப்படித்தான் நம்ம சுற்றுலா இருக்கும்....

ஆனால் வெளிநாட்டினர் வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக எதாவது ஒரு புதிய நகரத்துக்கு சென்றுவருவார்கள்...காரணம் வாழ்க்கையை வாழ்பவர்கள் அவர்கள் மட்டுமே....சரி அப்படியே ஊருக்கு போனாலும் எந்த ஊருக்குன்னு முடிவு செஞ்சிட்டுதான் நம்மில் பல பேர் போவோம்... ஆனால் காற்று அடிக்கும் திசையெல்லாம் பயணிக்க உங்களால் முடியுமா???




 நம்ம ஊரில் வயதுக்கு வந்த பெண் ஊருக்கு போகின்றாள் என்று வைத்துக்கொள்வோம்.. டிக்கெட் புக் செய்து ரயில் பெட்டியில் ஏறி அவளுக்கு இடம் பிடித்து, ஜன்னல் விழியாக வாட்டர் கேன், பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து, நாலு வாட்டி இடம் சௌகர்யமா இருக்கா? என்று பைத்தியக்காரதனமாக கேட்டு, அரக்கோணம் போனதும் ஒரு போன்,ஜோலார்பேட்டை போனதும் ஒரு போன் என்று அந்த பெண்ணை  தூங்க விடாமல் டார்ச்சர் செய்வதில் நம்ம பாசக்கார அப்பாக்கள் கெட்டிக்காரர்கள்.. இத்தனைக்கு அந்த பொண்ணு1 பெங்களூரூக்கு நேர்முக தேர்வுக்கு வரும் அவ்வளவுதான்....

பட் ஜெர்மணியில் ஹம்பர்க் நகரில் வசிக்கும் ஜுலைக்கு அதாங்க அந்த பொண்ணு பேரு.... வெக்கேஷனுக்கு ஊருக்கு போவனும்னா என்ன செய்வா தெரியுமா??? பாஸ்போர்ட்,பணம் எடுத்து வச்சிகிட்டு ரோட்டுக்கு போய் நிப்பா லிப்ட்கேப்பா முதலில் நின்று லிப்ட் கொடுக்கும் கார்  எங்க போவுதோ ?அந்த ஊருக்கு அந்த பொண்ணு போகும், வேற நாட்டுக்கு போனாலும் அந்த பொண்ணு போகும்.....

அது எப்படி சார் கார்லயே அந்த பொண்ணு வேறநாட்டுக்கு போகும்.. அட கிறுக்கா?? நீ தமிழ்நாட்டுக்காரன்.. உனக்கு மூன்று பக்கமும் கடல் அதனால் அடுத்த நாட்டுக்கு போகும் வாய்ப்பு ரொம்ப குறைவு...ஆந்திரா, கேரளா,பெங்களூர் டோல் கேட் போலதான் அங்க பக்கத்து நாடு எல்லாம்...இங்கதான் பாகிஸ்தான் இந்தியா பார்டர்ல கொடி ஏத்தி இறக்கி தினமும் டார்சர் பண்ணறானுங்க.... அங்க எல்லாம் ரோட்டுக்கு நடுவே ஒரு சின்ன கேட்தான்... அதுதான் பார்டர்....புரிஞ்சுதா??

சரி கதையை பார்ப்போம்....
 ===============

Im Juli உலகசினிமா/ஜெர்மன் படத்தின் கதை என்ன??


ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் வசிக்கு டேனியல் ஒரு மேக்ஸ் டீச்சர்.. ஒரு பெண்ணை சந்திக்கின்றார்ன் அவள் அழகில் மயங்குகின்றான்.. அவள் இஸ்தான்புல் என்று தெரிந்து கொண்டு அவளை சந்திக்க காரில்  செல்கின்றான்... கார் நிறுத்தி எவன் லிப்ட் கொடுத்தாலும் அந்த ஊருக்கு  செல்லும் ஜுலை என்ற பெண் இவன் காரில் எறுகின்றாள்.. அவளும் இஸ்தான்புல் செல்லுகின்றாள்... காரணம்.. இவ்வளவு நேரம் கதை கேட்டு விட்ட சீதைக்கு ராமன் சித்தப்பான்னா என்ன சார் அர்த்தம்.....????

 ஜுலைக்கு எவன் லிப்ட் கொடுத்தாலும்... அதாவது உதாரணத்துக்கு  ஜுலை  வெக்கேஷனுக்கு கிளம்பி ரோட்டுக்கு போய் நின்னு நீங்க காரை நிறுத்தி நான் சந்திர மண்டலத்துக்கு போறேன் சொன்னலும் அவ வருவா....ஊராக்காளி மாடு மாதிரி சுத்தும் ஜுலை மற்றும் டேனியில் இஸ்தான்புல்லுக்கு பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதை....டெனியல் லவ்வரை பார்த்தானா?? சார் அது ஒரு பெரிய கதைசார்.. படத்தை டவுன்லோட் செஞ்சி பார்த்து தொலைங்க....
 ===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படம்...

காதல் வயபட்டு இருப்பவர்களுக்கு காதலை கொண்டாடுபவர்களும் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.. காரணம் இந்த படத்தில் வரும் காதல் பாடல் மற்றும் காதல் வசனங்கள் சான்சே இல்லாத ரகம்.....


வருடத்துக்கு ஒரு அவார்டாவது வாங்கலைன்னா தூக்கம் வராத டைரக்டர்...பயத் அகின் டைரக்ட் செய்து இருக்கும் படம் இது.

இதுக்கு முன்னாடி இவருடைய சோல்கிச்சன், எட்ஜ்ஆப் ஹெவன் போன்ற படங்கள் உலகசினிமா ரசிகர்களிடத்தில் ரொம்பவும் பிரசித்தம்.

சோல்கிச்சன் போன வருடம் எல்லா உலகசினமாவிழாக்களிலும் செக்கை போடு போட்ட படம். அந்த படத்தை பத்தி நான் ஏற்கனவே எழுதி இருக்கேன்.

சிங்கில் கட்டிலில் டேனியில் மற்றும் ஜுலை படுத்து இருக்க பொசிஷன் மாற்றி ஸ்பூன் போல படுத்தால் நன்றாக படுக்கலாம் என்று சொல்லி அது போல் படுக்கவைக்கும் இடம் அருமை......

போட்டில் இருவரும் பயணிக்கும் போது ஒரு கஞ்சாவை ரெண்டு பேரும் அடித்துக்கொண்டு பேசும் அந்த காட்சி ஒரே ஷாட்.. மற்றும் செம ரொமாண்டிக் மூட்...நல்ல மூட் போட்டோகிராபி...அந்த சீன்..

காதலியை பார்த்து விட்டு என்ன பேச வேண்டும் என்று டேனியலுக்கு ஜுலை சொல்லி கொடுக்கும் அந்த வசனம் மிக சிறப்பு....

படத்தின் ஒப்பனிங் கிரைம் படம் போல ஆரம்பித்து, நகைச்சுவையாக கதையை சொல்லி இருப்பது திரைக்கதை டச்..

ஹங்கேரியன் மற்றும் ரூமேனியா பார்டர் பார்த்தால் உங்களுக்கே நான் சொல்வது புரியும்.... அதுவும் செட் தான்...

இந்த படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் தமிழில் சிக்கு புக்கு என்ற படத்தில் உபயோகபடுத்தி இருப்பார்கள்.....


படத்தின் டிரைலர்..



விருதுகள்..

 * Deutscher Filmpreis 2001: Moritz Bleibtreu (Best actor)
    * Tromsø International Film Festival: People's choice award: Fatih Akin (Best direction)
படக்குழுவினர் விபரம்.....

  Directed by     Fatih Akın
Starring     Moritz Bleibtreu, Christiane Paul
Distributed by     Koch-Lorber Films
Release date(s)     2000
Country     Germany
Language     German
===========

 பைனல் கிக்....

இந்த படம் பார்த்தேதீரவேண்டிய திரைப்படம்.. காதலர்கள் அனைவரும்...
==========

என்னசார் பட விமர்சனமே எழுத மாட்டேங்கிறிங்க என்று அன்பாக வேண்டுகோள் விடுத்த  மும்பை வாசகர்... வருனுக்கு இந்த பதிவு சமர்பணம்...படம் பார்க்க நேரமும் மூடும் இல்லை...ஒரு சில துரோக மனிதர்களினால்  நான் கொஞ்சம் அப்செட்..அதில் இருந்து மீள கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன்...இனி வெளிவருவேன்...நல்ல நண்பர்களையும் இறைவன் கொடுத்து இருக்கின்றான்... அது போதும்...

மிக்க நன்றி....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...







============

3 comments:

  1. இந்த மாதிரி விமர்சனம்தான் படிக்க நல்லா இருக்கு.. படத்த பார்த்துட்டு ஒரு நண்பனிடம் அதைப்பற்றி சொல்வதுபோல உள்ளது.

    ReplyDelete
  2. Jackie..

    I like you Movie review than other posts..

    Keep going more like this..

    ReplyDelete
  3. /*என்னசார் பட விமர்சனமே எழுத மாட்டேங்கிறிங்க என்று அன்பாக வேண்டுகோள் விடுத்த மும்பை வாசகர்... வருனுக்கு இந்த பதிவு சமர்பணம்*/ என்னுடைய மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி சார் வருண் பிரகாஷ் - மும்பை
    --

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner