வடிவேல் வெடிவேல் (தேர்தல்களம்/2011)

 
வடிவேல் தனது அரசியில் கன்னி பேச்சை முதன் முதலில் திருவாரூரில் இருந்து ஆரம்பித்த போது நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கையில் வடிவேலு இந்த தேர்தலில் மிகப்பெரிய எழுச்சிக்கு வடிவேலு காரணமாக இருப்பார் என்று சொன்னேன்.

நண்பர் அதுக்கு டிவியை போட்டு ஆதித்யா சேனல் வைத்து பாருங்க..நாள் புல்லா இந்த மூஞ்சியைதான் பார்த்துக்குனு இருக்காங்க..ஒரே போர் என்று அங்கலாய்த்தார்...ஆனால் விஜயகாந்த் ஜெவிடமே 40 சீட்டு வாங்கிய ஒரு கட்சியின் தலைவர் அவரின் பேச்சைதான் மக்கள் உன்னிப்பாய் பார்ப்பார்கள்...வடிவேல் ஒரு காமேடி பீஸ் என்று சொன்னார்...


விஜயகாந்தை விட மக்கள் செல்வாக்கு வடிவேலுக்கு இருக்கின்றது.. மிக முக்கியமாக வடிவேலுவுக்கு கிராமபுறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கின்றது... அவர் சொன்னால் கேட்டு ஓட்டு போட ஒரு இரண்டு சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னேன்... நண்பர்  கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை....

பட் கலைஞரை விட  வடிவலுவின் பேச்சுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்ப்பால் கலைஞர் பேசுவதையே குறைத்து வடிவேல் பேசுவதை இரண்டு டிவிக்களிலும் அதிகம் ஒளிபரப்பினார்கள்....

வடிவேல் விஜயகாந்தை திட்டிவிட்டு கலைஞர் அரசின் திட்டங்களை மிக அழகாக மக்களிடம் விளக்கி கூறினார்..அதுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்.. அந்த ரெஸ்பான்ஸ், அந்த எழுச்சி மாவட்ட செயலர்கள் மூலம் கலைஞர் காதுக்கு வர திமுகவுக்கு ஒரு பெரிய பிரச்சார பிரங்கியாக வடிவேல் மாறிப்போனார்....

வடிவேல் இப்படி பேச்சில் பின்னி பெடல் எடுக்க, அதே பேச்சில் விஜயகாந்த் மிகவும் சொதப்பினார்... அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கின்றார் என்று சொல்லிவிட்டு வேனின் கீழே இருந்து மாற்றி சொல்லிவிட்டு சொன்னதை சொல்ல நான் தப்பாக மாற்றி பேச இங்கு சத்தம் போட்ட மக்கள்தான் காரணம் என்று மக்களை சத்தம்போட.... அதையும் தனது பிரச்சாரத்தில் வடிவேல் விட்டு வைக்கவில்லை... ஒரு ஹீரோ மற்றும் கட்சிதலைவரை ஒரு காமெடியின்ன வறுத்து எடுத்ததை தமிழகம் வேடிக்கை பார்த்தது........... 


28வருஷத்துக்கு பிறகு போராடி  கப்பு வாங்கினானே அவன்தான் கேப்டன் நீ இல்லை... என்பது போன்ற  சரவெடிகளை தனக்கே உரிய பாணியில் நையான்டி செய்து கொண்டு அப்படியே கலைஞர் அரசின் நலதிட்டங்களை  மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு போனது பெரிய பிரச்சார ஹைலைட்...

இரண்டு பேரும் ஒரே மேடையில் ஏறி பேச முடியுமா? கூட்டனி தானே? அந்தம்மா எதிர்க்க நான்தான் சின்ன எம்ஜியார் என்று  அவர் எதிரில் மேடையில் சொல்லமுடியமா? என்று வடிவேல் சவால் விட, அதுக்கு எதிர்தரப்பில் இருந்து கடைசிவரை நோ ரெஸ்பானஸ்....

மக்கள் மிக உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்காங்க...நான் கேட்ட கேள்விக்கு எதிர் சைடில் இருந்து பதிலையே கானோம்.. இந்த தேர்தலோடு பேக்கப் ஆயிட வேண்டியதுதான் என்று போகின்ற போக்கில் தனது பிரச்சாரத்தின் வாயிலாக பேசிக்கொண்டு சென்றார்...

களப்பணியாற்று பவனுக்கே மக்கள் நாடி துடிப்பு தெரியும்... முதலில் ஸ்பெக்ட்ரம்பூதம் பார்த்து சுனக்கம் காட்டிய திமுக பெருந்தலைவர்கள் கூட பிரச்சாரம் நேற்று முடியும் போது நாங்களும் ஜெயிப்போம் என்று நம்பிக்கையுடன் சொன்னார்கள் அதுக்கு காரணம் வடிவேலுவின் பிரிச்சாரம் 5 பர்சென்டாவது இருக்கும் என்று நான் நம்புகின்றேன்....


முதலில் விஜயகாந்த் பக்கம் இருந்த படித்த மக்கள், ஒருவரை கை நீட்டியதும் அவருக்கு இருந்த செல்வாக்கு சடசடவென குறைய ஆரம்பித்தது... அதை தனது பிரச்சாரத்தில் ஒரு அப்பாவியை போட்டு இப்படி அடிக்கலாமா? யார் பெத்த புள்ளையோ? என்று வடிவேல் சொல்லும் போது கூட்டம் உன்னிப்பாக கவனிக்கின்றது....

வடிவேலுவுக்கு எதிர்ப்பாய் ஒரு ஆள் இறக்கினார்கள். அவர் சிங்க முத்து பெரிய அளவில் சோபித்தது போல எனக்கு தெரியிவில்லை ஏதோ வடிவேலுக்கு கவுண்டர் கொடுக்க வைத்துவிட்டோம் என்று  சந்தோஷப்பட்டுக்கொண்டனர் என்பது உண்மையே......

சுட்டி சுட்டி உன் வாலைக்கொஞ்சம் சுருட்டிகொள்ளடி என்று வெட வெடவென ஒல்லியான தேகத்துடன் விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படத்தில் ஆடிய வடிவேல், 2011 சட்டசபை தேர்தலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலர் ரேஞ்சிக்கு  மாறியது காலத்தின் கட்டாயம்... அதை மிக லாவகமாக தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுக...


எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை.. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் எனும் பழமொழிக்கு மிகச்சரியான ஆள் வடிவேல்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை....




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...





================

12 comments:

  1. //எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை..//

    தேர்தல் முடிவிற்குப் பிறகு அதிமுகவினர் மூத்திர சந்துக்கு இழுத்துக் கொண்டு போனாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

    ஜெ காலில் விழுந்து கிடப்பது போல் புகைப்படங்கள் கூட வரலாம்
    :)

    ReplyDelete
  2. Your perception is very true though it will be hard for opposition to believe. The irreparable damage caused by Vadivelu to Vijayakanth is 'making a hero into comedian and vice versa'. Vaikos inflammable speech is only one which motivates emotional people in Tamil Nadu. There is no other speaker like him. But Vadivelu has reached and touched the mass where in Vaiko could not have touched. Hope things would be good as usual for Tamils and Tamil nadu.
    Aru
    Male', Maldives.

    ReplyDelete
  3. ஒரு வேலை admk ஜெயித்தால் இவரின் நிலை ..ஐயோ நேநிக்கவே பாவமாக உள்ளது..

    ReplyDelete
  4. கோவி.கண்ணன் said...
    //எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை..//

    தேர்தல் முடிவிற்குப் பிறகு அதிமுகவினர் மூத்திர சந்துக்கு இழுத்துக் கொண்டு போனாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

    ஜெ காலில் விழுந்து கிடப்பது போல் புகைப்படங்கள் கூட வரலாம்
    :)//
    கருணாநிதியை விட ஜே தான் அதிகம் மகிழ்ந்திருப்பார். அதிமுக செயித்தால் விசயகாந்த்துக்குத்தான் ஆப்பு. உங்கள் தற்போதைய அரசியல் கருணாநிதியை எதிர்த்து என்பது தெளிவு. பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  5. //எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை..//

    தேர்தல் முடிவிற்குப் பிறகு அதிமுகவினர் மூத்திர சந்துக்கு இழுத்துக் கொண்டு போனாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

    ஜெ காலில் விழுந்து கிடப்பது போல் புகைப்படங்கள் கூட வரலாம்
    :)//

    வடிவேல் எடுத்த விஜயகாந்தின் மீதான தாக்குதலை,அமைதியாக ஜெ ரசித்திருப்பார் என்பது தான் உண்மையாக இருக்கக்கூடும்.

    ReplyDelete
  6. தனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதிற்கு பழி தீர்த்துக் கொண்டார் அவ்வளவுதான். என்னவோ தி.மு.க கொள்கைகள்(அப்படி ஏதாவது இருக்கா என்ன ?)பிடித்துப் போய் பிரச்சாரம் செய்தார் என்பது கேலிக் கூத்து. விஜயகாந்தை கிழித்த அளவுக்கு ஜெயலலிதாவை கிழிக்கவில்லை என்பதையும் பார்க்கவும்

    ReplyDelete
  7. ஜாக்கி...

    விபரம் தெரிந்த நீங்களே இப்படி எழுதினால் என்ன செய்வது... கருணாநிதியை நம்பி வடிவேல் இவ்ளோ சவுண்டு விட்டு இருக்காரே... நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்...

    நமக்கு கருணாநிதியை பற்றி நன்றாக தெரியும்.. அவர் கடைசி வரை வடிவேலுவை காப்பாற்ற சப்போர்ட் பண்ணுவாரா?

    வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் வெளியே இருக்கும் / இருந்த தகராறு இப்போது அரசியல் ஆக்கப்பட்டு விட்டது... “கைப்புள்ள” பலியாடுன்னு தெரியாமலேயே மாலையை கழுத்தில் வாங்கி போட்டுக்கொண்டு விட்டார்...

    ReplyDelete
  8. ஜாக்கி!நிறைய எழுதுறீங்க.எழுதுபவனின் பலமே சரி தவறுகளை சொல்லும்,தீர்மானிக்கும் தீர்க்கதரிசனம்தான்.சொல்வது தோற்றுப்போனாலும் கூட... வடிவேலு மூலம்தான் தமிழகத்துக்கு விமோச்சனம்ன்னு மக்களும், நீங்களும்,கருணாநிதியும் நினைத்தால் அடுத்த முதல்வராக வடிவேலை உருவாக்கிட வேண்டியதுதான்:)

    உடனே ஜெயலலிதா வந்துட்டா மட்டும்ன்னு கழக கண்மணிகள் கேள்வி கேட்க வந்துடுவாங்க...

    மாற்றங்கள் வருவதால் மட்டுமே இருவருக்குமே செக் வைக்க மக்களுக்கு வாய்ப்பு இருக்கும்.

    ReplyDelete
  9. ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்ய வேண்டியவை, infrastructure எனப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், நல்ல சாலை வசதிகள், தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், அதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குதல், நல்ல குடிநீர், கல்வி பயில வசதி, நேர்மையான காவல் மற்றும் அரசு ஊழியர்களை உருவாக்குதல். இதை செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிரார்கள் என்று சொல்லிதான் வாக்கு கேட்க வேண்டுமே தவிர இப்படி தனிப்பட்ட விரோதத்தை பொது பிரச்சனை ஆக்குவதும், இலவசங்களை அள்ளி விட்டு மக்களை சோம்பேரிகளாக ஆக்குவதுமாக இருக்ககூடாது. என்ன ஜாக்கி நீங்களுமா இதை ஆதரித்து எழுதுகிறிர்கள்?
    - Kevin, Hodeidah, YEMEN.

    ReplyDelete
  10. 1984-ல் இதேபோல் துள்ளிக் குதித்து. தலையைச் சிலுப்பி, எதுகை மோனையில் பேசி, குறிப்பாக ஜெயலலிதாவை மட்டமாகப் பேசி திமுக மக்களிடம் பெரும் கைத்தட்டலை அள்ளிய டி. ராஜேந்தர் என்ற காமடி பீஸ் இப்போது நினைவிற்கு வருவதில் தப்பேதும் இல்லை.

    அன்று கருணாநிதிக்குக் கூடிய கூட்டத்தைவிட ராஜேந்தர் என்ற சினிமாக்காரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம்.

    எந்தக் காமடி பீஸ் வந்தாலும், கருணாநிதி கும்பலின் பீஸ் போவது நிச்சயம்.

    ReplyDelete
  11. 1996-2001 தேர்தலில் ஆச்சி மனோரமா ரஜினியை படு கேவலமாக திட்டி பிரச்சாரம் செய்து பின் அதிமுக தோற்றதும் , அருணாச்சலம் பட பூஜையில் வெட்கப்பட்டு நின்றது இன்னமும் நினைவில் இருக்கிறது :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner