சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்)புதன் 06/04/2011


பதினைந்து வருடத்துக்கு முன் கோமாவில் இருந்து ஒருவர் எழுந்து வந்தால்? வந்தவரிடம் தமிழகத்தில் எலக்ஷன்நடக்கின்றது என்று சொன்னால் கொப்புரான சத்தியம் செய்தாவது அவரை நம்பவைக்க வேண்டி இருக்கும். அவர் நிச்சயம் நம்ம வாய்ப்பே இல்லை... காரணம் எலெக்ஷன் நடப்பது போல எந்த பழைய படோபடமும் இல்லை என்பதுதான் நிலமை...

======================
இப்போதுதான் எங்கள் வீட்டு அருகில்,தனது பேட் சின்னத்தில் ஓட்டு போட வேண்டி எல்லோருக்கும் பெரிய கும்பிடு வைத்துகொண்டு செல்கின்றார்.. நடிகர் மன்சூர்அலிகான்.. ஒரு பதினைந்து பேர் அவரை பாலோ செய்கின்றார்கள்...


========
கொய்யலா மக்கள் தொகை கம்மியா இருக்கும் போது எல்லாம் எழுமணிக்கு ஆரம்பிச்சு 5 மணிக்கு எலெக்ஷன் முடிப்பானுங்க.. இப்ப என்னடான்னா? காலையில எட்டு மணிக்குதான் தொடங்குவாங்களாம்?? என்ன கொடுமை இது.... எங்க அம்மா அப்பா இரண்டு பேரும் காலையில் எழு மணிக்கு எல்லாம் போய் ஓட்டு போட்டு விட்டு வந்து விடுவார்கள்...அந்த எழுமணி பார்ட்டிங்க இப்ப எட்டு மணிவரை காத்து இருக்கனும்... இந்த பெருமை வாய்ந்த ஐடியைவை கொடுத்த ஐடியா சிகாமணி யார் என்று தெரியவில்லை...மக்கள் தொகை 121கோடி தமிழகத்தில் ஏழேகால் கோடி....
==============

கள்ள ஓட்டு போட்டு மாட்டிக்கொண்டால் ஒருவருடம் சிறையில் களி திங்க வேண்டும்., உங்கள் ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டாலும், நீங்கள்  உங்கள் ஓட்டினை பதிவு செய்யலாம்.. இது இந்த தேர்தலில் புதுசு...


=============
மாசம் 800ரூபாய் நெட்கணெக்ஷனுக்கு பணம் கட்டுவதற்குள் நாக்கில் நுரை தள்ளி விடுகின்றது..கார்டு எடுக்க பத்தாயிரத்துக்கு நாயாய் பேயாய் அலைகின்றேன்... பொறம் போக்கு பண்ணாடைகள் திருச்சியில் பஸ் மேற்க்கூரையில் ஐந்தரை கோடி வைத்து இருந்து இருக்கின்றார்கள்..திருச்சி ஆர்டிஓ சங்கீதா மடக்கி பிடித்து இருக்கின்றார்கள்.. ஏன்டா என்கிட்ட  சின்ன மஞ்சள் பையில் எவ்வளவு முடியுமோ திணிச்சி கொடுத்து இருக்கலாமே....அந்த முழு பணமும் வேணாம்... பேராசை பெறுநஷ்ட்டம்னு நானும் படித்து இருக்கின்றேன்.. அதே போல தமிழகத்தில் கட்டு கட்டாய் பணத்தை சுக்கு நுறாக கிழித்து போட்டு இருக்கின்றார்கள். அவன் மட்டும் என் கையில கிடைச்சான்... அவன் செத்தான்.. எதாவது மூள்ளுகாட்டில் வீசி எறிந்து இருந்தாலும் யாராவது பயண் பெற்று இருப்பார்கள்..
========================
இந்தவார சலனபடம்...1
இந்த உல்லாசம் பட பாடலை நீங்கள் நிறைய முறை கேட்டு இருக்கலாம், பார்த்தும் இருக்கலாம். ஆனால் நான் அப்படியோ வரிகளில் லயித்து கேட்கும் ஆள் இல்லை...பட் சில வேளைகளில் லயிக்கும் போது சில வார்த்தைகள் எனக்கு புரியாது.. சில இடத்தில் தேவையான வார்த்தைகளை நானே பில்லப் செய்து பாடுவேன்..

இந்த பாடலான சோலாரே  சொச்சலாரே பாடலில் மெக்கா மெக்கா நீ சூத்து பெருத்த மெக்கா என்பதாய்தான் எனக்கு கேட்கும் நீங்களும் கேட்டு பாருங்கள்  அந்த வரிக்கு வேறு அர்த்தம் இருக்கும் இருந்தாலும் எனக்கு அந்த வார்த்தை வரும் போது நீ சூத்து பெருத்த மெக்கா என்றே கேட்டு தொலைக்கின்றது... இந்த பாடலை  இனி நீங்கள் கேட்கும் போது இந்த வார்த்தை உங்களுக்கு ஞாபகம் வராமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 
கீழே அந்த பாடல் ஒரு முறை கேளுங்கள்....  நான் சொல்லும் உண்மையை உணர்வீர்கள்..


==========
மிக்சர்..


பிரசார மேடை பேச்சாளர்களில்  அல்ட்டிமேட் காமெடியாக பேசிவருவது.. செந்தில்தான்... இரண்டு வார்த்தை  கோர்வையாக பேச தெரியவில்லை... பட் போன எலெக்ஷனை விட இந்த எலெக்ஷனில் கொஞ்சம் தைரியம் வந்து இருப்பது திக்கிதினறி பேசும் பேச்சையும் மீறி தெரிகின்றது...
================


இதுவரை நான் ஒளிபதிவாளர் சங்கத்தில்   சேர்ந்து கார்டு எடுக்கவில்லை...காசு இருக்கும் போது இதற்க்கான முயற்சியில்  இருக்கும் போது அது சாத்தியபடவில்லை.. இப்போதுகார்டு எடுக்க போனால் 30,000த்தில் இருந்த ஜூனியர் கார்டு.. இப்போது60,000ம் அதுவும் ஒரே பேமன்டாக கட்ட  வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.. எனக்கு தலை சுற்றுகின்றது...சேத்த முட்டை செவ்வாகிழமை எல்லாம் சேர்ந்து என்னை படாய் படுத்துகின்றது.. என்ன செய்ய???
===================
சூழ்நிலைகள்தான் நம்மை எல்லா காரியத்தையும் செய்ய வைக்கின்றன...சில வருடத்துக்கு சினிமாவை மூட்டை கட்டி வைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்..பாக்கெட்டில் பணம் சுத்தமாக இல்லை.. இரண்டு வருடத்தில் சினிமாவில் இருந்து நான் சம்பாதித்த தொகை 25ஆயிராம்தான்...நிறைய வலிகள் துரோகங்கள்...அதனால் சினிமாவுக்கு பிரேக்...கடன் கொடுத்தவர்களிடம் கால அவகாசம் கேட்டு இருக்கின்றேன்..இப்போது எதாவது சேனலில் கேமராமேனாக போகலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்..மீடியா நண்பர்கள் எவருக்காவது ஓப்பனிங் இருப்பது தெரிந்தால் எனக்கு  சொல்லவும்...
========================================

யுகாதி அன்று அமெரிக்க பதிவர் இளாவுக்காக நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன. நீண்ட  நாட்களுக்கு பிறகு ஒரு பதிவர் சந்திப்பு.. நான், லக்கி, அதிஷா,கேபிள், கேஆர்பி செந்தில், புருனோ,வக்கில் சுந்தர்ராஜன், இளா, இளாவின் நண்பர், விந்தைமனிதன்,பலாபட்டறை சங்கர், பேசிக்கொண்டு இருந்தோம் நிறைய மன உளச்சலில் இருந்த எனக்கு அந்த சந்திப்பு ஒரு மன நிறைவை கொடுத்தது.. மிக்க நன்றி நண்பர்களே..
===============

பார்த்ததில் பிடித்தது..


பெங்களூரில் இருந்து சென்னைக்கு இரவு பேருந்தில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.. எதிர் சீட்டில் இரண்டு தம்பதிகள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்கள். அவர்கள் பெண் பிள்ளை இரண்டு வயதுதான் இருக்கும் அது மட்டும் முழித்துக்கொண்டு இருந்தது.. முதலில் நான் அந்த குழந்தையை பார்த்து சிரித்தேன். அதுவும் சிரித்தது... நான் கொஞ்சம் தலை அசைத்தேன்.. அதுவும் அதே போல செய்தது... நான் இரண்டு  கண்களை முடி திறந்தேன். அதுவும் அதே போல திறந்தது..நான் ஒரு  கண்ணை முடி ஒற்றைக் கண்ணால் பார்த்தேன்... இப்போது குழந்தையால் அதை செய்ய முடியவில்லை.. சட்டேன வேறுபுறம் திருமபிக்கொண்டு ஒரு கண்ணை மூடி திறந்து முயற்சி செய்தது... அது எனக்கு நன்றாக தெரிந்தது.. திரும்ப அது இரண்டு கண்ணை மூடி திறந்தது.. அதை பொறுத்தவரை ஒற்றைக்கண்ணால் பார்ப்பதாய் அதுக்கு நினைப்பு....நான் இப்போது எனது கடைசி அஸ்திரத்தை பயண்படுத்தினேன்.. அதாவது ஒரு கண்ணை மூடி மறு கண்ணை திறந்து என்று மாற்றி மாற்றி செய்தேன்... குழந்தை இப்போதும் அதன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை... திரும்ப அந்த பக்கம் திரும்பி ஒரு கண்ணை மூடி எல்லாம் பிராக்டிஸ் செய்தாள்... இருந்தாலும் இரண்டு கண்ணைதான் மூடி திறக்கமுடிந்தது... திரும்ப  என் பக்கம்  இரண்டு கண்களை படபடவென பட்டாம்பூச்சி சிறனை அடிப்பது போல கண்களை மூடி திறந்தாள்..எனக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவளும்  சிரித்தாள்.. தன் மகள் தூங்காமல் என்ன செய்து கொண்டு இருக்கின்றாள் என்று அந்த பெண்மணி எழுந்தார்... இவ்வளவு சுட்டியாக இருக்கின்றாளே என்ன? பெயர் என்று அறிய அவலாய் இருந்த்தேன்... குழந்தையின் அம்மா அழகாக இருந்தார்...அதனால் கேள்வியை சுக்குநுறாக்கிவிட்டு  பேருந்தின் ஜன்னல் பக்கம் இருளை நோக்கி வாண்டட் ஆக பார்வையை இருட்டின் மீது செலுத்தினேன்.
===============
திருநெல்வேலியில் இருக்கும் சினிமா ஆர்வலர்களுக்கு அரிய  வாய்ப்பு...விபரம் கீழே படத்தை கிளிக்கி படிக்கவும்..

===============
இந்தவார கடிதம்

அன்புடையீர்

வணக்கம். நான் தாங்களின் மானசீகமான ரசிகன். இதை சொன்னாலே அதிலுள்ள சக்தி போய்விடும் என அச்சம் எழுகிறது. எனக்கு உடனடியாக இராதாமோகனின் இ மெயில் விலாசம் தேவைப்படுகிறது. தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

தனுஷ்
=====================
 நண்பர் தனுஷ்  அவர்களே எனக்கு தெரியாது... யாராவது நண்பர்கள் இயக்குனர் ராதாமோகன் மேயில் ஐடி தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..
=============
அன்பு நண்பருக்கு வணக்கம்.
இத்துடன் தமிழ்நாடு எலக்க்ஷன் பற்றிய எனது சமீபத்திய டாக்குமென்ட்ரி ஸ்டைல் குறும்பட லிங்கை இணைத்துள்ளேன். இந்த குறும்படம் எந்தக் கட்சியும் சாராமல், பொதுமக்களின் "சோத்துக் கட்சி"யை சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.

எந்த பொதுநலத்திலும் பங்கெடுக்காமல் ஓட்டு கூட போடாமல் எதையும் விமர்சனம் மட்டுமே செய்யும் நம்மில் சிலரை உட்கருத்தாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.

உஙகளுக்கு இந்தக் குறும்படம் பிடித்து உங்களுக்கு ஆட்சேபம் இல்லா பட்சத்தில்
உங்கள் வலைப் பக்கத்தில் இணைத்தால் உங்கள் வலைப்பக்கத்திற்கு வரும் பரந்த வாசக வட்டத்திற்கு இந்த குறும்படம் போக வாய்ப்பிருப்பதால், முடிந்த போது இணைக்க வேண்டுகிறேன். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ, இணைக்க விருப்பமில்லாவிட்டால் எந்த கட்டாயமும் இல்லை - அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.


You tube lInk -->  http://www.youtube.com/watch?v=x39y1jU_lJM

ஒரு படைப்பாளியாய் படம் குறித்து உங்கள் கருத்துகள் அறிய ஆவலாயிருக்கிறேன்.

மிக்க நன்றி
டுபுக்கு என்ற ரெங்கா..
==============
அன்பின் ரெங்கா...

குறும்படம் பார்த்தேன்...இலவசத்தை குறை சொல்வதை விட மற்றபடி குறை கூறிவிட்டு தனது கடமையை செய்யாமல் இருக்கும் நபர்களை ஒரு பிடி பிடித்து இருக்கின்றது... ஓட்டு போடவேண்டிய அவசியத்தை இந்த குறும்படம் பொட்டில்  அடித்து சொல்கின்றது..வாழ்த்துக்கள்.

சவுர்யமாக உட்காரும்  சோபா,கார்ன்பிளக்ஸ், புருட்டி பாட்டில்கள், பெரிய வால்மவுன்ட்  டிவிக்கள் இவர்களோடு வாழும் நண்பர்கள் வேண்டுமானால் இலவசத்தை எள்ளி நகையாடலாம்.. பட் இது எதுவும் இல்லாமல்  நம் ஊர்   கிராம புற மக்கள் இருக்கின்றார்கள். என்பதையும் அந்த இலவசங்கள் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றது என்பதை மறுப்பது என்பது கிராமங்களின் மக்களின் நிலை தெரியாதவர்களாக இருப்பார்கள்..

இதில் எனக்கு பிடித்த ஒரு டயலாக்.. படிச்சவன் ஓட்டு போட்டோம் அடுத்த வருசம்  அவனை காணவே கானோம் என்று ஒரு குறிப்பிட்ட நபரை இடிந்துரைப்பது எனக்கு பிடித்து இருக்கின்றது.... மற்றபடி.. உயர்வகுப்பாய் மாறினாலும் சமுகத்தின் மீதான இந்த அக்கரையை நேரம் செலவிட்டு படம் பிடித்து வெளியீட்டமைக்கு குழுவினருக்கு எனது நன்றிகள்..

நண்பர்களே அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு கீழே...

 

============ 
சினிமா...

சக்தி படத்தை ரிலிஸ் ஆனா அன்றே இலியானாவுக்கா பார்த்தேன்...  பூந்தமல்லி பகவதியில்...
இந்த படத்தையே பார்த்து இருக்கலாம் போல என்ன செய்ய ?? நேரம்....


=============
ஒரு சோக செய்தி..

நடிகை சுஜாதா காலமாகிவிட்டார்.... அவள் ஒரு தொட்ர்கதை, விதி போன்ற திரைப்படங்களில் நடித்தவர்..மாவீரனில் ரஜினிக்கு அம்மா....


================


பிலாசபி பாண்டி...

 இந்த உலகத்தை போன்ற ஒரு அழகான விஷயம் இல்லவே இல்லை...
இந்த உலகத்தை போன்ற மிக கேவலமான விஷயம் இல்லவே இல்லை..

==============

நான்வெஜ் 18+

ஒரு போலிஸ்காரர் டூட்டியில இருந்த  மனைவியை கவனிக்க முடியவில்லை...கூட்டுக்குடும்பம் வேற.. அதனால் ஒய்ப்போடு பேசிகிட்டு இருக்க பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அழைச்சிகிட்டு போனார்... உணர்ச்சிவசப்பட்டு பொது இடம்னு கூட பார்க்காம எல்லை மீற பார்க்கு பக்கம்  ரோந்து போன போலிஸ்காரர் இதை பார்த்து விட்டு பின்பக்கம் ரெண்டு தட்டு தட்ட   ரெண்டு பேரும் வெலவௌத்து எழுந்தாங்க.. சாரி சார் நான் ஒரு போலிஸ்காரர் உணர்ச்சிவசப்பட்டு நான் கொஞ்சம் எல்லை மீறீட்டேன்..பாருங்க ஜடி கார்டு.. சரி நீங்க போங்க சார்.. ஏம்மா பொண்ணு நீ  எங்க போற?? நீ எனக்கு மாமுல் 1000 கொடுத்துட்டு போ...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
=====


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...






=============

12 comments:

  1. //உங்கள் ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டாலும், நீங்கள் உங்கள் ஓட்டினை பதிவு செய்யலாம்//

    அப்படியா பரவாயில்லையே! போன தேர்தலில் கள்ள ஓட்டால் ஒட்டு போட முடியாததற்கும் சேர்த்து போடலாமா?!

    ReplyDelete
  2. //ஒரு சோக செய்தி..

    நடிகை சுஜாதா காலமாகிவிட்டார்.... அவள் ஒரு தொட்ர்கதை, விதி போன்ற திரைப்படங்களில் நடித்தவர்..மாவீரனில் ரஜினிக்கு அம்மா....//

    எல்லோரும் தேர்தல் ஜுரத்தில் இருக்க இரங்கல் செய்தி சொன்னது நீங்கதான்:(

    ReplyDelete
  3. நான் கேட்ட வரையில், அது "மெய்யா, மெய்யா, தூது வந்த மெயிலா"

    ReplyDelete
  4. // கொய்யலா மக்கள் தொகை கம்மியா இருக்கும் போது எல்லாம் எழுமணிக்கு ஆரம்பிச்சு 5 மணிக்கு எலெக்ஷன் முடிப்பானுங்க.. இப்ப என்னடான்னா? காலையில எட்டு மணிக்குதான் தொடங்குவாங்களாம்?? என்ன கொடுமை இது.... //

    ஜாக்கி... எலக்ஷன் பூத்தில் வேலை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு உண்மையிலேயே நிறைய வேலை இருக்கும்... தவிர போரூரில் இருக்கும் உங்களை காலை 7 மணிக்கெல்லாம் கும்மிடிப்பூண்டியில் இருக்கனும்ன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க... நிறைய பேருக்கு அப்படித்தான் தொலைதூரத்தில் போஸ்டிங் போடுறாங்க... ஒருவேளை அவர்களுக்காக நேரத்தை மாற்றியிருக்கலாம்...

    ReplyDelete
  5. // இப்போது எதாவது சேனலில் கேமராமேனாக போகலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்..மீடியா நண்பர்கள் எவருக்காவது ஓப்பனிங் இருப்பது தெரிந்தால் எனக்கு சொல்லவும்... //

    கேப்டன் தொலைக்காட்சியில் வாய்ப்புகள் குவிந்துக்கிடக்கின்றன... அதுவும் உங்களைப் போன்ற திறமைசாலிகள் கிடைத்தால் அப்படியே கொத்திக்கொள்வார்கள்... முயற்சிக்கவும்...

    ReplyDelete
  6. கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  7. பிரபா ஊழியர் தினமும் ஏழுமணிக்கு வரவில்லை.. ஒரு நாள்தான்.. ஆனால் காலையில் ஏழுமணிக்கு ஓட்டு போட வருபவர்கள் எத்தனை பேர் தெரியுமா??? நான் பூத் ஏஜென்டாக இருந்து இருக்கின்றேன்.. அதனால் சொல்கின்றேன்.

    ReplyDelete
  8. கடவுள் இருக்கலாம் ப்ட் எனக்கு கேட்டதை சொன்னேன். அம்புடுத்தேன்.

    ReplyDelete
  9. கடிதப்பக்கங்கள் வித்தியாசமாகவும் நல்லாவுமிருக்குங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

    ReplyDelete
  10. Tough times never last but tough people do..மகள் வந்த நேரம் எல்லாம் நல்லபடியாக மாறும்..

    ReplyDelete
  11. வீடியோ தொடுப்புக்கு மிக்க நன்றி ஜாக்கி. மன்னிக்கவும் தாமதமாக தற்போது தான் சுட்டி குடுத்திருப்பதை பார்த்தேன். உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியால் தற்போது வீடியோ பல்வேறு தரப்பினராலும் பார்க்கப் பட்டு வருகிறது.

    மற்றபடி இலவசம் குறித்து ஏழை மக்களை நகையாடவில்லை. //அந்த இலவசங்கள் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றது// - உங்கள் இந்த கருத்தை மதிக்கும் அதே வேளையில் நான் அதிலிருந்து மாறுபடுகிறேன். இலவசங்களை நம்பி அவர்கள் வாழ்வை சுத்தி அமைத்து முதுகெலும்பாய் இருக்க வேண்டிய கிராம மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து. இலவசங்கள் எந்தப் பொதுநிதி பிரதிநியின் பாக்கெட்டிலிருந்து காசை செலவழித்து கொடுப்பதில்லை அந்தப் பெயரில் மக்கள் பணத்தை சுண்டல் போடுவது மாதிரி தூக்கி கொஞ்சம் தூக்கி எறிந்துவிட்டு சுரண்டல்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் உண்மையாய் உழைத்தால், இந்த கிரம மக்கள் வாழ்வியல் நிலமையை பல மடங்கு உயரும்.

    ReplyDelete
  12. Polling officials must be present in the previous day evening. Previously only ballot box and polling officer, police. Now, EVM setting, polling officers, police, Laptop for online or offline monitoring (Final year engg. or MCA students used), Micro observers etc. For preparation time that one hour.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner