எல்லா கட்சி அலுவலகமும் கல்யாண கோலத்தில் இருக்க எங்கள் கட்சி அலுவலகம் மட்டும் இழவு வீடாக இருக்கின்றது.. இதுக்கு காரணம் துரோகம் செய்த ஜெயலலிதா என்று சொல்லியவர் வைகோ அல்ல...மதிமுகவின் ஸ்டார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களிடம் இப்படித்தான் குமுறி இருக்கின்றார்......
வைகோ கரைபடியாத கைக்கு சொந்தக்காரர். அரசியலில் அவர் மிக யோக்கியர் என்று பல நடுநிலையாளர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன். அதே போலதான் அவரும்...ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார்...காரணம் விடுதலைபுலிகள் பற்றி பேசியதால் சிறையில் இருந்தார்.அவர் வெளியே வந்த போது கூட அவருடைய நிலைபாட்டை இன்று வரை புலிகள் விஷயத்தில் மாற்றிக்கொள்ளவில்லை...
வைகோ கவர்ந்து இழுக்கும் பேச்சாளர்... தோளில் இருக்கும் கருப்பு துண்டை இப்படியும் அப்படியும் மாற்றி மாற்றி போட்டு வீரமாகபேசுவதில் வல்லவர்... ஆனால் ரொம்பவும் பிளைன்டாக ஜெவை நம்பியதால் இந்த சட்டசபை தேர்தலில் மோசம் போனார்..
இன்னும் 5 வருடம் அடுத்த எலெக்ஷனுக்கா காத்து இருக்க வேண்டும் என்பது கட்சியின் கடை கோடி தொண்டனில் இருந்து மதிமுகவின் பெருந்தலைவர்கள் வரை எவ்வளவு கொடுமையான விஷயம்.....
இப்போது கூட அதிமுகவை தோற்கடியுங்கள் என்று தனது தொண்டர்களுக்கு வைகோ பகிங்கர அறிவிப்பை அவர் செய்யவில்லை...நேற்று அரசியலுக்கு வந்த கார்த்திக் கூட தன் வேட்பாளர்களை கடத்தி மிரட்டியதால் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் வைகோ அப்படி சொல்லவில்லை.......
மிக அழகாக இவரை வைத்து திமுகாவை எளிதில் வீழ்த்தி இருக்கலாம்...பேச்சுக்கு மயங்குபவர்கள் தமிழர்கள்.. அந்த வித்தையை நன்றாக கற்று வைத்து இருப்பவர் வைகோ.. அவரின் அனல் பறக்கும் பேச்சை ரசித்துக்கொண்டே இருக்கலாம்... ஆனால் இந்த தேர்தலில் அவருடைய கட்சி ஆபிஸ் இழவு வீடாக காட்சி அளிக்கின்றது.. ஜெவின் அதிபுத்திசாலிதனம் இந்த முறை அவருக்கு பெரிய இழப்புதான்...
வைகோவின் பிரச்சார வாகனம் சூடுபிடித்து தமிழகம் எங்கும் ஸ்பெக்ட்ராம், மின்வெட்டை பற்றி மக்களிடம் எடுத்துச்சொல்லி சூளுரைக்க வேண்டிய வாகனம் ...எப்போதோ நிரப்பிய டீசலுடன் பிரம்மை பிடித்து அதே இடத்தில் நிற்கின்றது. காரணம் ஜெவின் துரோகம் என்று வைகோ சொன்னாலும் அவரால் ஜெவை வெளிப்படையாக எதிர்க்கவில்லை.... வைகோவின் இமயம் டிவி பேட்டி பார்த்தால் கல்மனதையும் கரைய வைக்கும்.
ஆனால் இன்று அவருடைய கட்சி ஸ்டார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஜெ தனது ஆட்சி காலத்தில் அனுமதி கொடுத்து ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இருந்து ஜெ பணம் பெற்று இருக்கின்றார் அதனால்தான் தேர்தலில் வைகோவை பறிக்கணித்தார் என்று பகிங்கர குற்றசாட்டை முன் வைக்கின்றார்..
அதே போல ராஜபக்சேவிடம் இருந்தும் ஜெ பணம் வாங்கி இருப்பதாகவும சொல்லி இருக்கின்றார்.... நாஞ்சில் சம்பத்...
வைகோ இன்னமும் அமைதி காக்கின்றார் .. என்ன பேசி என்ன சொல்லி என்ன ஆகப்போவுது இந்த கடைசி நேரத்தில் என்ற சமான்யனின் சராசரி கோபமாக இருக்குமோ??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
==================
இவருக்கு இலங்கை தமிழன் கண்ணில் பட்ட அளவுக்கு இந்திய தமிழன் பட வில்லையே!
ReplyDeleteஓவரா உணர்ச்சி வசபடுகிறார். அன்று ஒரு சீட்டுக்கு ஓடி வந்ததன் பலன் இன்று.
இரண்டு இடமுமே இவருக்கு பாதகமே
தனித்து இருந்தால் மட்டுமே இவருக்கு சிறப்பு
பேச்சு திறமை மட்டுமே அரசியலுக்கு போதாது, தலைமை பண்பு இவருக்கு குறைவோ என்ற சந்தேகம் எனக்கு
அ இ அ தி மு க வுக்கு வைகோ மாபெரும் இழப்பு என்று வைத்து கொண்டாலும், வைகோ தரப்பு ஸ்டெர்லைட் மூலம் ஆயிரம் கோடிகள் வந்ததாக சொல்வது ரொம்ப ரொம்ப ஓவராக படவில்லையா?
ReplyDeleteஜெவால் தி மு க வை எதிர்த்து கடைசி வரை தாக்கு பிடித்து வெற்றி பெறமுடியுமா, கலைஞரின் அதிகார பலத்துக்கு முன் ஜெயிக்க முடியுமா என்ற ஐயம் ஒவ்வொரு வாக்காளனுக்கும் உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, இப்படி ஒரு அபாண்ட குற்றசாட்டு ஏன்? இதனால் என்ன சாதிக்க முடியும்?
இதே பணத்தை கருணாநிதிக்கு கூட வைகோவுடன் சேர்த்தே அ இ அ தி மு க வும் வரக்கூடாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்திருக்கலாமே?
அப்படி வைகோவுக்கு ஸ்டெர்லைட் தான் பிரதான எதிரியாக கருதினால் தூத்துக்குடியில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கலாமே...ஏன் செய்யவில்லை?
அப்படியும் இல்லாவிட்டால் இன்று நீலி கண்ணீர் வடிக்கும் வீரமணி, ராமதாஸ், திருமாவளவன், நக்கீரன் கோபால் மூலம் திராவிட இயக்கங்களை ஒன்றின்னைக்க முற்படுவதாக முகாரி பாடும் கருணாவின் ஆதரவைப்பெற்று களம் கண்டு சட்டமன்றத்துக்கு வந்து ஜெ..முதல்வராவும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக முழங்க முயற்சித்திருக்கலாமே...?ஏன் செய்ய வில்லை?
அறுபத்தி மூன்று சீட்களை தானமாக இத்துப்போனவர்களுக்கு தந்த கருணாநிதியால் தன அன்பு தம்பிக்கு ஒரு சீட் தரமுடியாதா ..?
கடந்த எம்பி, எம்மெல்யே எலேச்ஷங்களில் தொடர்ந்து தோற்பது மட்டுமல்ல... வெற்றிபெற்று உடன் இருந்தவர்களையும் இழந்தது யார் தப்பு..?
நாஞ்சில் சம்பத் போன்றோர்களை நம்பினால் கட்சி கரை சேராது...வைகோவும் அவரது புதிய ஆதரவார்களுமான முன்னாள் வசவாளர்களும் புரிந்துகொள்ளட்டும்.