ஜெ .ஜெயலலிதா ( தேர்தல்களம்/2011)




நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தொண்டி அதை குத்தாடி குத்தாடி போட்டு உடைத்தாண்டி....இந்த பாடல் ஜெவுக்கு மிக பொருத்தமான பாடல்...

திமுகவை வீழ்த்த ஒரு அருமையாக சந்தர்ப்பம்.. ஸ்பெக்ட்ரம் விஷயம் மட்டும் திமுக பக்கம் கிடைத்து இருந்தால் மிக அழகாய் மக்களிடம் சேர்பித்து இருப்பார்கள்... அதனை தனது பிரச்சாரத்தின் மூலம் மிக அழகாக ஓட்டு போடும் கிராமத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருப்பார்கள்.



ஆனால் அதிமுக தரப்பு அந்த விஷயத்தை ரொம்பவும் மேம்போக்காக அனுகியது...இன்னும் மக்களிடத்தில் நெருக்கமாக கொண்டு சேர்த்து இருந்தால் பல இடங்கிளில் திமுக தோற்க்க காரணமாக இருந்து இருக்கும்...

அப்படி உணர்ச்சி பூர்வமாய் மக்களிடத்தில் எடுத்து செல்லவேண்டிய வைகோ எனும் பிரச்சார  பிரங்கியை உதாசினபடுத்திவிட்டார்கள்.. நாஞ்சில் சம்பத்,வைகோ மற்றும் மதிமுக கழக பேச்சாளர்கள் எல்லாம் பிரயாணி தின்றுக்கொண்டு பல்குத்திக்கொண்டு இருக்க வைத்து விட்டார்.. அது ஒரு புரட்சி பேச்சாளர் படை அதனை ஜெ தனது அதிமேதாவிதன முடிவுகளினால் மிஸ் செய்து விட்டார்...

அதனால் செந்தில், ஆனந்தராஜ், விந்தியா, போன்ற சிறந்த பேச்சாளர்களை அதிமுக கழகம் நம்பி தொலைக்கவேண்டியதாகவிட்டது... 20சீட் கொடுத்து மதிமுகவை வளைத்து இருக்கலாம்... இப்போது எல்லாம் டூ லேட்....

வைகோவினை ஜெ விலக்கிய போதே திமுக பக்கம் பல்ப் எறிய ஆரம்பித்து விட்டது...

ஒரு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவி இன்னும் எழுதி வைத்து படிப்பது  எனக்கு ஏற்புடையதல்ல... மனதில் மக்கள் பிரச்சனை இருந்தால் மனதில் இருந்து சட சடவென்று பெருமழை போல வார்த்தைகள் விழ வேண்டாமா? சரி ஒரு சின்ன துண்டு சீட்டில் எழுதியாவது படிக்கலாம்...


இன்னும் காட்சிக்கு எளியவனாக ஜெ மாறவேயில்லை.. இன்னும் அதே பந்தாதான்... போப் என்ட்ரி போல தனது வேனில் மேல்பக்கம் என்ட்ரி கொடுத்து கருணாநிதி குடும்பத்தை திட்டிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறிபறந்து விடுகின்றார்....மக்களோடு ஒரு சினேக உறவு இந்த முறையும் மிஸ்சிங்....

ஆனால் அவரை இன்னும் பார்க்க மக்கள் கூட்டம் ஆவலாய் இருக்கின்றது.. பரம்பரை திமுகவான எங்கள் அத்தை வீட்டில்  ஆயிரம் ஜெவை விமர்சித்தாலும் ஜெவின் வருகையின் போது நடுத்தெருவுக்கு ஓடிப்போய் பார்த்து விட்டு வந்தார்கள்..

ஆனால் இந்த பிரச்சாரத்தின் போது நான் எங்கேயும் ஜெவோடு சசிக்கலாவை ஒரு பிரேமில் கூட பார்க்கவில்லை..

காலில் விழும் வைபவம் கொஞ்சம் குறைந்து இருந்தாலும் வேட்பாளர் மேடையில் இருந்தே ஜெ வேன் இருந்த பக்கம் மேடையிலேயே விழுந்து கும்பிட்டு தனது ஜெ விசுவாசத்தை சில வேட்பாளாகள் காட்டினார்கள்....

கடைசி வரை விஜயகாந்தை ஜெவும் ஜெவை  விஜயகாந்தும் ஒரு வரி கூட புகழ்ந்து பேசவில்லை...ஒருவரும் ஒரே மேடையில் காட்சி தரவேயில்லை...

கரண்ட் மேட்டரை மட்டும் மிக அழகாக காய் நகர்த்தி இருந்தால் இன்னும் கான்பிடன்ட்டாக ஜெ இருந்து இருக்கலாம்...குடும்ப அரசியல் என்று திரும்ப திரும்ப சொல்வதை விட்டு விட்டு நான் வந்தால் எதையெல்லாம் செய்வேன் என்று மக்கள் திட்டத்துக்கு பிரச்சாரத்தில் அதிக வலு சேர்த்து இருக்கலாம்...


பல ஊடகங்கள் திமுகாவுக்கு எதிராய் இருக்கின்றது...தேர்தல் கமிஷன் சப்போர்ட்டும் இருக்கின்றது..தன்னம்பிக்கையோடு நின்று ஜெயிக்க  வேண்டிய தேர்தல்... ஜெவின் சில முடிவுகளால் அது கடினமாகி இருக்கின்றது...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..






(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...





================

4 comments:

  1. வாழை பழத்தில் ஊசி ஜாக்கி...
    கலக்கல் பதிவு

    ReplyDelete
  2. Jackie.. I admire you a lot..

    But now a days you are going in the wrong track..

    ReplyDelete
  3. //அது ஒரு புரட்சி பேச்சாளர் படை அதனை ஜெ தனது அதிமேதாவிதன முடிவுகளினால் மிஸ் செய்து விட்டார்...//

    வீணாக இந்தப் பெரும் கருமமாற்றியது ஜெ எனக் புகழவேண்டாம். இது நமது "சோ" வின் கைங்கரியம்.
    அத்தோடு விகா வை உள்ளுக்குள் விட்டுக் குடையவிட்டதும் அவர் ஆலோசனையே!

    இவ்வளவு வசதியுள்ள ஜெ; அமெரிக்க, ஐரோப்பிய அரசியல்வாதிகளில் றீகன்; பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி யக் சிராக் போன்றோர் ஒரு வகைக் கண்ணாடி திரைகள்;முகத்துக்கு நேரே அதில் கணனியில் இருந்து பேசவேண்டிய விடயங்கள் வரிவரியாக தோன்றும்; அதைப் பார்த்துப் படிப்பார்கள்(பேசுவார்கள்) ஆனால் சபையோரைப் பார்த்துப் பேசுவது போல் இருக்கும். சிராக் அதை பாவிப்பதை
    தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner