வைகோவுக்கே விஜயகாந்த் அவர்களின் பிரசாரத்தை பார்க்கும் போது நாம் எந்த விதத்தில் இவரை விட குறைந்து போய்விட்டோம், பேச்சிலா? அல்லது அரசியல்அனுபவத்திலா? எந்த விதத்தில் நாம் விஜயகாந்தை விட குறைந்து போய்விட்டோம் என்று வைகோ நினைத்து பார்க்காத இரவுகள் மிக குறைவாக இருக்கும்.....பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசுவதை மட்டும் வைத்து வைகோ நினைத்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
40 சீட் விஜயகாந்துக்கு கொடுத்ததில் பாதியாவது தனக்கு கொடுத்து இருக்கலாமே? அப்படி ஒரு களப்பணியை நாம் பாரபட்சம் பார்க்காமல் அதிமுகவுக்கு செய்தோமே? 40 சீட் விஜயகாந்த் வாங்கும் அளவுக்கு நமக்கு என்ன குறைச்சல் என்று ஒருமுறையாவது யோசித்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கின்றது....
40சீட்டுகள் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு ஜெ சட்டென ஒத்துக்கொண்ட போது, அரசியல் பார்வையாளர்கள் ஆடித்தான் போனார்கள்.. பலருக்கு அஸ்தியில் ஜுரமே வந்து விட்டது..
அவ்வளவு பெரிய எழுச்சி சக்தி விஜயகாந்திடம் இருக்கின்றதா? இருந்தது... காரணம் அவர் தனியாக நின்ற போது நிச்சயம் பெரிய எழுச்சியாக இருந்தது... இரண்டு திராவிடகட்சிகளின் கொட்டத்தை அடக்க வந்த மகான் என்று நடுநிலையாளர்கள், இதுவரை அரசியலில் சலிப்புற்றவர்கள் எல்லோரும் விஜயகாந்துக்கு ஓட்டுப்போட்டு கொண்டாடினார்கள்.....படித்தவர்கள் ,இணையத்தின் மூலம் தமிழகத்தில் எழுச்சி மாற்றம் செய்து விடலாம் என்று சமுகநலனில் அக்கரைகொண்டோர் அப்படித்தான் யோசித்தார்கள்.
விஜயகாந்த் ஜெவோடு கூட்டனி வைத்தவுடன் அந்த நடுநிலை ஓட்டுக்கள் அதிருப்தி அடைந்து இருப்பது நிஜம்..இப்படி தனியே அரசியல் நடத்திக்கொண்டு இருந்தால் விஜயகாந்த் போண்டி ஆகிவிடும் வாய்ப்பும் தமிழக அரசியலில் இருக்கின்றது... அதனால் கூட்டனி நிலைப்பாடு இந்த தேர்தலில் அவர் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்...
ஆனால் பிரச்சாரங்களில் புதியவர் என்பதாலும் 40 தொகுதிகள் மற்றும் கூட்டனி கட்சியின் தொகுதிகள் என தேர்தல் பிரச்சார வேலை மிக கடினமாக இருந்து இருக்கும் என்பதால் களப்பணியின் அனுபவம் இப்போதுதான் விஜயகாந்துக்கு கிட்டி இருக்கின்றது...
நிறைய சர்ச்சைகள்.. தமிழகத்தில் தாமரைக்கனியின் அடி பேமஸ், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நினைவுகூறப்பட்டது விஜயகாந்தின் பிரசாரத்தின் போதுதான்.. நிறைய தடுமாற்றங்கள்.... ஆனால் பேச்சில் ஒரு காந்ததன்மை மிஸ்சிங்...குடிகாரர் குடிகாரர் என வடிவேலு பிரச்சாரம் செய்ய ....டயர்டில் இருந்து பேசினாலும் குடித்து விட்டு பேசுவது போல இருக்கு என்று சொல்கின்றார்கள் பொதுஜனங்கள்..
எம்ஜியார் காலத்தில் சினிமா பூட்டிய திரைக்குள் இருந்தது.. அதனால் அப்போது மக்கள் சினிமாவை உண்மை என்று நம்பினார்கள். அதனால் நடிகர் எம்ஜியார் அசைக்க முடியாத மக்கள் சக்தியாக திகழ்ந்தார்.16 வயதினிலே படத்துக்கு பிறகு சினிமா பூட்டிய திரை விட்டு வெளியே வந்து விட்டது... எது டூப், எது உண்மை என்று சினிமாவை பொதுஜனம் கரைத்து குடித்து விட்டு இருப்பதால் இப்போது எந்த நடிகரும் எம்ஜியார் போல முதல்வர் பதவிக்கு வர முடியாது என்பதை அடித்து சொல்லுவேன்...
விஜயகாந்த் மக்கள் மத்தியில் கூட்டனி இல்லாமல் தனித்து இருந்த போது இருந்த செல்வாக்கு ஜெவோடு கூட்டனி வைத்தவுடன் நடுநிலையாளர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டை லிஸ்ட்டில் சேர்த்து விட்டார்கள்...
கூட்டங்கள் வருகை போன்றவற்றை தொலைகாட்சியில் காணுகையில் வடிவேலுக்கு கூடும் கூட்டம் விஜயகாந்துக்கு குறைவாகத்தான் இருக்கின்றது...
கடைசிவரை ஜெ மற்றும் விஜயகாந்த் மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்யவேயில்லை... அதுவும் மக்களிடம் இருக்கும் அதிருப்திதான்...
வேட்பளாரோ அல்லது மைக்செட்காரரோ அவரை விஜயகாந் அடித்தது இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை... அதைவிட பெரிய திருப்புமுனை எதிராளி இன்னும் காமெடி பண்ண வசதியாய், நான் அடித்தால் அவர்கள் பிற்காலத்தில் மகராஜாவாக ஆகி விடுவார்கள் என்பது இந்த தேர்தலில் ஹைலைட்.....
தன் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டிய வடிவேல்,தனக்கு இப்படி தலைவலியாக மாறுவார் என்று சின்னக்கவுண்டர் படத்தில் நடித்த போது விஜயகாந்த் நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார். ஏன் வடிவேலு கூட நினைத்து பார்த்து இருக்க வாய்பில்லை.....
விஜயகாந்த் மற்றும் வடிவேல் இருவரும் இரவு நேரத்தில் தண்ணி சாப்பிட்டு விட்டு,குடிதண்ணிதான்... பழசை நினைத்துப்பார்க்கும் போது.....
உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்ற பாடல் இருவர் நினைவுக்கும் வந்தே தீரும்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
================
0 comments:
Post a Comment