Mr. Perfect-telugu- திரைவிமர்சனம்..வீட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை
எனக்கு ரஜினி பிடிக்கும்
எனக்கும்...

எனக்கு முட்டை தோசை பிடிக்கும்
எனக்கும்

எனக்கு தலைகறி பிடிக்கும்
எனக்கும்

எனக்கு சுஜாதா ரைட்டிங்ஸ் பிடிக்கும்
எனக்கும்

எனக்கு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்கும்
எனக்கும்இப்படி உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு அல்லது காதலிக்கு உங்களுக்கு பிடித்த எல்லாம் பிடித்தால் போர் அடித்து விடும் அல்லவா?... ஆனால் இப்படி ஒரு சில விஷயங்களில் பிடித்து இருந்தால் மேட்பார் ஈச் அதர் கப்பிள் என்று சொல்லலாம்....


ஆனால் வீட்டுக்கொடுப்பதில் இருக்கும் ஒரு சந்தோஷம் வேறு எதிலும் இருப்பதில்லை.. ஆனால் வாழ்வில் எதுக்கும் யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று சொன்னால் அது விதண்டாவாதம் அல்லவா?, அப்படி இருக்கும் ஒருவன் எப்படி உண்மை புரிந்து மாறுகின்றான் என்பதே மிஸ்டர் பெர்பெக்ட் படத்தின் கதை.......

================
மிஸ்டர் பெர்பெக்ட் தெலுங்கு படத்தின் கதை என்ன??

விக்கி (பிரபாஸ்) ஆஸ்திரேலியாவில்  சாப்ட்வேர் என்ஜினியர்.. தன் தங்கை திருமணத்துக்கு இந்தியாவுக்கு வருகின்றான்... அவனுக்கும் பிரியா(காஜல்)வுக்கும் (சின்னவயது வகுப்பு தொழி) திருமணம் நிச்சயம் செய்கின்றார்கள். ஆனால் தனக்கு பிரியா சரியாக வரமாட்டாள் என்று சொல்லி நிச்சயதார்தத்தை நிறுத்துகின்றான்... ஆஸ்திரேலியாவில் மேகி (தாப்சி) என்ற பெண்ணோடு  பழக்கம் ஏற்படுகின்றது....அந்த பெண் தன் டேஸ்ட்டோடு ஒத்து போவாள் என்று நினைக்கின்றான்... ஆனால் அவளின் அப்பா பிரகாஷ்ராஜ் இரண்டு பேருக்கும் டேஸ்ட் ஒத்து வராது என்று சொல்கின்றார்.. விக்கி செலன்ஞ் செய்கின்றான்.... சவாலில் ஜெயித்தானா? கிராமத்தில் இவன் மீது மனதை பறிகொடுத்த பிரியா என்னவானாள் என்பதை திரையரங்கம் போய் மீதியை தெரிந்து  கொள்ளுங்கள்....

===========

 ==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

வர்ஷம் படத்தில்தான் முதன் முறையாக இந்த ஹீரோவை பார்த்தேன் ரசிக்க ஆரம்பிதேன்...

இந்த படத்தில் சாப்ட்வேர் ஆசாமி வேடம்... மனிதர் பின்னு பின்னு என பின்னி இருக்கின்றார்.. டயலாக்கில் நிறைய லேக் விட்டு பேசினால் படித்தவன் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை... பிபாஸ் உயரத்துக்கு 48 பிரேம்ஸ் அல்லது 96 பிரேம்சில் நடக்கும் போதும், திரும்பும் போதும் ரசிக்க வைக்கின்றார்... அவரது காஸ்ட்யூம்  செமை......


காஜல்அகர்வால் சதை போட்டு இருக்கின்றார்...நல்ல நடிப்பு அந்த வெள்ளை சிரிப்பு, அவருடைய காஸ்ட்யூம்கள் எல்லாம் ரசனை காரன்களின் தேர்வாக இருக்கின்றது....  முதல் முறையாக  காஜல் 96 பிரேம்சில் புடவையில் படியில் இறங்கி வரும் காட்சியில் பிபாஸ் அதிர்ந்து பார்ப்பது போல எல்லோரும் அந்த அழகை பாத்துக்கொண்டே இருக்கலாம்...முக்கியமாக புடவையில் அவருடைய தெகிலான வெள்ளை வயிறும், அந்த தொப்புளும் படம் முடிந்தும் நினைவில் இருக்கின்றன...


தாப்சி.... அவரும் நன்றாக நடித்து இருக்கின்றார்...... அப்புறம் பிரகாஷ்ராஜ் வழக்கம் போல சிறப்பு...

மேக்கிங்கில் பார்த்தேன் செமையாக  உழைத்து இருக்கின்றார்கள்.. ஒளிப்பதிவாளர் பெய்ர் தெரியவில்லை... எல்லா எழுத்தும்  ஜிலேபி சுட்டு இருந்த காரணத்தால் தெரியவில்லை...

எல்லாக்கதைகளும் அரைத்த மாவுக் கதைகள்தான் ஆனால் அதை பிரசன்ட் பண்ண விதத்தில் இந்த படம்  ஜெயித்து இருக்கின்றது என்பேன்....

இந்த படம் செண்டிமென்ட்தான்.இந்த படம் ஜெயிக்க முக்கியகாரணம்... அப்புரிரவி... அப்புரி ரவி யாருங்கன்னு கேட்கறிங்களா? பொம்மரிளுன்னு ஒரு தெலுங்கு படம்.. சூப்பர் டூபபர் ஹிட்...  அந்த படம்தான் தமிழ்ல சந்தோஷ் சுப்ரமணியம்.. இப்ப ஒகேவா?, அவர்தான் இந்த படத்துக்கும் கதை.......


புரொட்யூசர் தில் ராஜு தெலுங்கு சினிமாவின் பிதாமகன்... பணத்தை பொட்டி பொட்டியா  கொட்டி படம் எடுக்கறதல தில்லானவர்.... இந்மத படத்தின் பிரேம் சொல்லும்...


இவர் தயாரிக்கும் படங்கள் எல்லாம் பெண்களையும் மனிதனின் மென்உணர்வுகளையும் வெளிக்கொணடுவரம் விதமாகவே இருக்கும்.. இவருடைய படங்கள் பொதுவாக வீட்டில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கும்  பெண்களை திரையரங்கம் வரவைப்பதே இவருடைய டார்கெட்... 

முதல் பாதியில்  பிரபாஸ் மற்றும் காஜல் இருவரின் சண்டையும் ஊடலும் காதலர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
========

படத்தின் டிரைலர்....

===========
படக்குழுவினர் விபரம்
 Directed by     Dasaradh
Produced by     Dil Raju
Written by     Abburi Ravi
Starring     Prabhas
Kajal Agarwal
Taapsee Pannu
Music by     Devi Sri Prasad
Distributed by     Sri Venkateshwara Creations
Release date(s)     April 2011 (2011-04)
Country     India
Language     Telugu
Budget     35 crores

============
தியேட்டர் டிஸ்கி...
பெங்களுர் தாவக்கரை லட்சிமி திரையரங்கில் இந்த படத்தை பார்த்தேன்...


வெளியே மழை பெய்தாலும் நல்ல கூட்டம்..
50ரூபாய் டிக்கெட்டில் போய் பார்த்தேன்...


 என்க்கு முன் வரிசையில் கையில் ஒரு பிளாஸ்ட்டிக் பை வைத்துக்கொண்டு மாவா எச்சிலை தப்பிக்கொண்டே படம் பார்த்தான்
பக்கத்தில் படம் பார்த்த  ஒரு ரசிகர் படத்தில் ஒன்றி போய் பார்த்தார்..காஜல் அழுதால் அவரும் டென்ஷன் ஆனார்... 

அவள் சிரித்தால் அவரும் சிரித்தார்... ரோம்ப டென்ஷன் ஆனால் ஹான்சை உள்ளங்கையில் வைத்து தேய்த்து முன் உதட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டார்....

கொஞ்ச நேரத்தில் பிரபாஸ் வில்லன்களை புரட்டும் போது ஹான்ஸ் பாக்கெட்டோடு கை தட்டினார்,...

ஜனகனமன முதலில் போடுகின்றார்கள்... இரண்டு எருமைகள் பைல்ஸ் வந்தது போல் எழுந்திரிக்காமல் உட்கார்ந்தே இருக்க எல்லோரும் அவர்களை ஙே என்று பார்க்க பிறகு எழுந்து நின்றன...

========================

 பைனல்கிக்....

பார்க்கவேண்டியபடம்.... வழக்கமான சென்டிமென்ட் காட்சிகள் இருந்தாலும்  திரும்பவும் ரசிக்கலாம்.. காஜவ் தாப்சியின் தெகிலான.. வேண்டாம்.... பாருங்கள்.,..
===================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
===================

7 comments:

 1. படம் நல்லா இருக்கும் போலிருக்கு ஜாக்கி..
  பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 2. HHH ammani super. name kudutha nalaa irukkum jackie.

  ReplyDelete
 3. அன்பு ஜாக்கி...

  படம் பார்க்கதுண்டும் விமர்சனம்..
  எங்கே என் கூகிள்..

  அது சரி..
  (பிபாஸ் உயரத்துக்கு 48 பிரேம்ஸ் அல்லது 96 பிரேம்சில் நடக்கும் போதும்,)
  நீங்க "ஒளி" பதிவாளர் என்பதற்காக.. இந்த மொழி யா..

  புரியல..ஆனா.. புரியுது..

  NTR

  ReplyDelete
 4. ஜாக்கி சார் மிஸ்டர் பெர்பெக்ட் ஒளிப்பதிவாளர் பெயர் 'விஜய் கே சக்கரவர்த்தி'.

  ReplyDelete
 5. இந்த படம் ஒரு பில் குட் மூவி.. ஒளிபாதிவாளர் பேடிர சொன்னதுக்கும் கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner