மறக்கமுடியாத கிரிக்கெட் (உலககோப்பை கிரிக்கெட்/2011)

பொதுவாக இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் மைதானத்தில் பீல்டிங் செய்கின்றார்களா? என்பதை எப்படி கண்டு பிடிப்பது.. ரொம்ப சிம்பிள்... எந்த பால் போனால் எதிராளிக்கு கை காட்டுவார்கள்... மற்ற டீமில் பால் ஓடினால் இரண்டு பேர் துரத்துவாகள்.. ஒருவர் மிஸ் பண்ணினாலும் அடுத்தவர் பிடிக்கவும்... போர் லைன் அருகில்  பாலை தடுத்து விட்ட்டால் அடுத்த ஓடிவருபவர் அந்த பாலை எடுத்து கீப்பரிடம்  வீச ரெடியாக வருவார்... இப்படி பேர் லைனுக்கு ஓடும் பாலை இரண்டு பேர் இந்திய அணியில் துரத்தி நான் பார்த்ததே இல்லை.. அப்படி பீல்டிங்கில் சிறப்பு வாய்ந்த அணி நமது அணி..


ஹர்பஜன் ஒரு பயந்தாங்கோலி எந்த பால் துரோ பண்ணாலும் சென்னை28 பிரேம் போல அந்த பாலை பிடிக்கவே மாட்டான்.. பாலை மிஸ் பண்ணிட்டு கண்ணைவேற மூடி திறந்துக்குவான். அதை பார்க்கும் போது வயறு எல்லாம் எரியும்.. அப்படி ஒரு பயம்.,.. முக்கியமா ரன் ஆவுட் செய்யும் போது ஸ்டெம்புகிட்ட ஹர்பஜன் இருந்த செம காமெடியா இருக்கும்.ஒரு ஆளு விக்கெட் விழுந்துட்டா அடுத்த வருபவன் அப்படியே மளமளவென சரிந்து விடும் ஒரு அணி இந்திய அணி அதுக்கு பல  உதாரணங்கள் இருக்கு......இப்படி ஒரு அணி உலக கோப்பை வாக்கிச்சின்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு...

ஓத்தா சேம ஆட்டம் அது அது போலான  ஆட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்று இதுவரை நான் பார்த்த மேட்சுகளில் இரண்டை மட்டும்  சொல்லுவேன்...

பெங்களூர்ல நடந்த மேட்ச்.. அந்த மேச்... எதிர் அணியாருன்னு நான் சொல்லும் அளவுக்கு நான் கிரிக்கெட் டேட்டா பேஸ்சில் நான் புலி அல்ல.. பட் எல்லா விக்கெட்டும் சரிந்து விட்டது.. பௌலர்கள் பேட்டிங் பிடித்து  இருக்கின்றார்கள்.. கும்பளே மற்றும் ஸ்ரீநாத் இரண்டு பேர்தான் இருக்காங்க.. வேற விக்கெட் கைவசம் இல்லை...50 ரன்னோ என்னவோ எடுக்கனும்... சிக்சர் போர்ன்னு அடிக்கறாங்க... வேண்டாத தெய்வம் இல்லை... தே ஆர் நட் பேட்ஸ்மேன்....சோ ஒரு டெக்னிக்கல் பால் அவுங்களுக்கு போட்டா அவுட் ஆகி பெவிலியன் திரும்ப வேண்டியதுதான்..


எந்த பாலையும் விட்டு வைக்கலை வெளுத்து வாங்கறானுங்க ரெண்டு பேரும்... மாரியாத்தா , காளியாத்தான்னு எங்க அத்தை சாமிகும்பிட்டு கிட்டு இருக்காங்க... கேலரியில... கும்ளே அம்மாவும் ஸ்ரீநாத் அம்மாவும் எங்களை மாதிரியே சாமிகும்பிட்டு கிட்டு இருக்காங்க.. அவுங்க சாமி கும்பிட்டு டென்ஷனா இருப்பதை டிவியில் காட்டும் போது மனசு ரொம்ப நெகிழ்ந்து கண்ணுல தண்ணி கரகரன்னு சுரக்குது... என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை நெகிழ்ச்சியில அழறேன்... அந்த மேட்ச்ல நாம்  ஜெயிச்சோம்.. அன்னைக்கு நான் அடைஞ்ச  சந்தோஷத்துக்கு அளவே இல்லை.. அன்னைக்கு எங்க வீட்ல இருக்கும் அத்தனை பேருக்கும் வேர்ல்ட் கப் வாங்கனது போல இருந்துச்சி... அதுத்தான் சந்தோஷம் அது போலன சந்தோஷத்தை இந்த பைனல் தந்துச்சி....


ஜாகிர்கான் மூன்று மெயிட்டின் ஓவர் போட்டதும் எதிராளி பயம் புரிந்து போய் விட்டது... ஓத்தா வந்தாண்டா பால் போட அஸ்வினுக்கு பதிலுக்கு எடுத்த லொடுக்கு பாண்டி ஸ்ரீசாத், பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் நகைகடையை கழுத்துல போட்டு இருப்பது போல  அந்த பண்ணாடை நகைகடையையே கழுந்துல வச்சி இருந்துச்சி.. அது ரன்னா கொடுத்து கிட்டே இருக்குது... இதுல பெரிய மயிறு போல பால் போட்டு விட்டு பேட்ஸ்மேனை முறைச்சிவிட்டு வேற போவுது... ஆஸ்திரேலியாகாரண் போல பேட்ஸ்மேனை டென்ஷன் எத்தறராமாம்.... பொடா டொக்குன்னு ஜெயவர்த்தனே அடிச்சி  ஆடுறான்...

நாம விளையாட வந்தோம்... இரண்டு விக்கெட்... தெண்டுல்கர் அவுட்.. அவ்வளவுதான்னு எங்க உறவுக்கார பசங்க சொன்னாங்க... ஏன்டா இன்னும் கம்பிர், டோனி,யுவராஜ்ன்னு இருக்காங்க அதுக்குள்ளே இப்படி சொன்ன என்ன அர்த்தம்?? அப்ப பின்னாடி  விளையாடவருபவனுக்கு திறமை இல்லைன்னு சொல்ல வரிங்களான்னு???

இந்த உலக கோப்பை நம்மகிட்ட இருக்க முக்கிய காரணம் கம்பீர் நிதானமா ஓடி ஓடி குருவி சேர்ப்பது போல  சேர்த்த ரன்தான்..கூடவே கோலி பெரிய சப்போர்ட்..  கோலி அவுட்.. டோனி இறங்குனார்.....

ஆனா நிதானமா சிங்கிளா அடிச்சி இருந்தா நிச்சயம் கம்பீர்  சென்ட்டியூரி அடிச்சி இருக்க முடியும்.... பட் ஒரு போருக்கு தூக்க அது கிளின் போல்ட்... அந்த இடத்துல நிதானமா விளையாடி இருக்கலாம்....அதே போல யுவராஜ் பில்டிங்...  சான்சே இல்லை.


யாருக்குய்யா கிடைக்கும் இந்த பாக்கியம் எவனுக்கும் இனி கிடைக்க போவது இல்லை...இனி வரும் காலத்தில் கேப்டன் களத்துல இருக்கனும், கடைசி பாலா இருக்கனும்  அதையும்  வின்னிங் ஷாட்டா சிக்சர் அடிக்கனும், அப்படியே  அடிச்சாலும் அதை எவனும் போர் லைன்கிட்ட கேட்ச்பிடிக்கா இருக்கனும்  அப்படி அடிச்சிட்டு  கொஞ்ச நேரத்துல  வேர்ல்டு  கப்பை கையில வாங்கனும்.. இது  எந்த கேப்டனுக்கு இது சாத்தியம் இல்லை.. நடுவுல முதுகுவலின்னு டோனிக்கு மருத்தவர்  கிரவுண்ட்ல படுக்கவச்சி கையை மடக்கும் போது.. டேய் இவன் தொள்பைட்டை வலின்னு  சொல்லிட்டு அவுட்டாகி போயிட போறான்னு எல்லாரும் நினைச்சிகிட்டு இருக்கும் போது நான் சொன்னேன்.....

இந்தியாவின் 100 கோடி  கண்களும் அவனை பார்த்து கொண்டு இருக்கின்றது... லைட்டா சீன் போட்டு ஜெயிச்சாதான்... பாருங்க நான் எவ்வளவு வலியோடு ஆடினேன்னு  சொல்லறதுக்கு கூட ஒரு காரணமா இருக்கும் என்று சொன்னேன்... அதாவது அது பொய்யா கூட இருக்கும்...அல்லது உண்மையாவும் இருக்கும்.

டோனி சிக்சர் அடிச்சி மதுரை வீரன் போல நின்னு அந்த பால் ஏங்க போவுதுன்னு பார்த்துட்டு அந்த மட்டையை ஸ்டைல சுழட்டினான் பாருங்க, அதுதான் உண்மையான ஸ்டைல்... ஓத்தா அந்த காட்சியை பார்த்துகிட்டே இருக்கலாம்...  கப்பை எடுத்துகிட்டு தெண்டுலகரை தூக்கி தொளில் வைத்துக்கொண்டு ரவுண்ட்  அடித்த போது நெகிழ வைத்து விட்டார்கள்.. திருஷ்ட்டியாக ஸ்ரீசாத் கூடவே வந்த போது அவ்வளவு  கோபம் வந்தது  எனக்கு......

ஜெயவர்த்தனே 50 அடிக்கும் முன் கேமராமேன் அவருடைய  மனைவியை தேடி பிடித்து காட்ட அவர்  மனைவி தனது முகத்தை  சின்ன அட்டையால்  மறைத்துக்கொள்ள.. 50 அடித்து விட்டதும்  மனைவி பக்கம் பேட்டை திருப்ப மனைவி முகத்தை காட்டி கிரவுண்டில் இருக்க ஆசி வழங்கினாள்  பாருங்கள் எதிராளியாக இருந்தாலும் அந்த காதல் எனக்கு பிடித்து இருந்தது...


அதே போல கிரவுன்டில் தனதுமகள் மகனோடு ஒரு கிரிக்கெட் சகாப்தம் உலக கோப்பை  தூக்கி கொண்டு வலம் வந்த அந்த  சச்சிள் எனும் தகப்பனை நான் ரசித்தேன்... நேற்றுதான் பாலகனாக கிரவுண்டில் பார்த்தது போல இருக்கின்றது...வயதுக்கு வந்த பெரிய பெண் இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது....

இரண்டு விக்கெட் விழுந்த உடன் கம்பியை  பலமாய் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்த சூப்பர் ஸ்டார்.. ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்... ராகுல் மக்களோடு மக்களாக உட்கார்ந்து இருப்பதாக காட்டிக்கொண்டார்... அம்பானி மனைவி அமிர்கான்  பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கடலை  போட்டுக்கொண்டு இருந்தார்...

எல்லா  மேச்சிலும் தெண்டுல்கர் நம்பர் பத்தை உடம்பில் ஓவியமாக  வரைந்து கொண்டு தலையில் கப்பை டிசைன் செய்து கொண்டு இருந்த அந்த பையன் தென்டுலக்ர் ஸ்பான்ச்ர் என்று செவி வழியாக செய்தி.. நானும் பல இடத்தில் தே பார்த்து விட்டேன் எங்கேயும் அவரை பற்றி செய்தி இல்லை.. பட் கேமராமேன்  எல்லா மேட்சிலும் அவரை போகஸ் பண்ணதவறவேயில்லை...

இந்த உலக கோப்பையில் நான் ரசித்த படம்.. பிளக்ஸ் வந்த பிறகு ஓவிய தொழில் முன்பு போல இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது...போட்டோகிராபர் மேல எனக்கு பெரிய வருத்தம்.... சரி விடுங்க...அவருக்கு எடுக்க தெரியலை..பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
================

5 comments:

 1. Hai boss,
  I have been reading all the WC news over the past week. To be honest this a real " Pakka " analysis in our own terms...........
  Thank you boss.............

  ReplyDelete
 2. அண்ணே! சூப்பரா எழுதியிக்கிங்க... உங்களுக்குள்ளேயும் ஒரு ரசிகர் இருக்காங்க.


  எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!

  ReplyDelete
 3. அந்த மாட்ச்ல எதிரணி ஆஸ்ட்ரேலியா தல .. ஸ்ரீநாத் கும்ப்ளே அடிச்ச அடி இன்னமும் எனக்கும் ஞாபகம் இருக்கு ...

  ReplyDelete
 4. Dear Jackie,

  The man with Tendulkar holding the World Cup is a long time FAN of Tendulkar. His name is SUDHIR GAUTHAM. I remember reading somewhere that he has even got lifetime Entrance Ticket for every match in India

  ReplyDelete
 5. jackie anna,
  antha australlia matchla nama jeyicha anaiku nan thoonkave illa kadaisila enga appa than rendu poosai kuduthu thoonkuda....nu sound vitathelam niyabagapadutheetinga!!!!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner