மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் பதினெட்டு பிளஸ் 24/04/2011

ஆல்பம்


நண்பர் துக்ளக் பத்திரிக்கை வாங்கி இருந்தார்..பெரும்பாலும் அதனை வாசிப்பது இல்லை...ஏதெச்சையாக புரட்டினேன் கேள்விபதில் பகுதியை   பார்த்தேன் ஒரு கேள்வி பதில் எனக்கு சிரிப்பை வரவழைத்தது..

கேள்வி... ஒருவேளை திமுக  தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்து விட்டால்????

பதில்..
இன்று மக்கள் மனநிலையை நாம் அறிந்த வகையில் ... நீங்கள் சொல்கிறமாதிரி முடிவு வந்தால் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்து இருக்கின்றது என்று நான் சொல்லுவேன் என்று  சோ பதில் சொல்லி இருக்கின்றார்....

சோவுக்கான எனது பதில்....

தம்பி டீ இன்னும் வரலை...
============


இந்தவார படம்..
நல்ல விளம்பரம்.. ஒரு போட்டோ சொல்லிடும் பல வாக்கியங்களை..எனக்கு பிடித்த விளம்பரம்.,..
======
பெண்களூரின் ரோடுகளில் இடுப்பு அளவு தண்ணி மழையினால் ஓடுகின்றது..டிராபிக் ஜாம் வேறு... நன்றாக வெயில் அடிக்கின்றது.. சட்டென கருமேகம் சூழ்ந்து பொல காட்டு காட்டுகின்றது...தமிழகம் எங்குமே நல்ல மழை.. முக்கியமாக அதிக வெயில்  வாட்டி வதைக்கும் வேலூரிலும் நல்ல மழை....
===========
ஊழலை ஒழிக்க வந்த ஒரு நம்பிக்கை என்று இந்தியாவே அன்னா ஹசாரேவை நம்பியது ... பட் அவர்கள் சைடிலும் ஊழல் இருப்பதாக சொல்வது.. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்றே தெரியவில்லை....ஆனால் இது திட்டமிட்ட சதி என்றும் சொல்கின்றார்கள்...

=======

போர்க்குற்றவாளி ராஜபக்சே உலகில் சிறந்த 100 பேர்கள் பட்டியலில் நாலவது இடத்தில் இருந்து தற்போது தூக்கபட்டு இருக்கின்றார்....சந்தோஷம்......
===========
புட்டபர்த்தி சாய்பாப இன்று காலை 7,45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்...இன்று கிரிக்கெட் வீரர் சச்சின் பிறந்தநாள்.. பாபாவின்  இறந்தநாள்.. சச்சின் பாபாவின் தீவிர பக்தர்..
=======
நவரசு கொலைக்குற்றவாளி..ஜான்டேவிட் சென்னை வேளச்சேரியில் இருக்கும் சதர்லேண்ட்நிறுவனத்தில் கடந்த 5 வருடங்கள் மேனேஜராக பணியாற்றி இருக்கின்றான்...நேற்று கடலூர் மத்திய சிறையில் சரணடைந்து இருக்கின்றான்....

===========

இந்தவாரசலனபடம்...1
 ஏதோ எனக்கு எப்பவும்தெரிஞ்ச திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம்தான்... அதுவும் இனி மறந்து போயவிடும் போல் இருக்கின்றது.. முக்கியமா குவா குவா என அழும் குழந்தையின் அழுகையில் தமிழ் முதல் எழுத்து  அ இருப்பதை கண்டுபிடித்து இருப்பது... நல்ல கண்டுபிடிப்பு...=============
மிக்சர்..

எனது பிளாக் வாசகி சுரேகா அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்து இருக்கின்றது.. அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. சரிஇப்போதுதான் ஒரு  செய்தி நினைனவுக்கு வருகின்றது..

குட்பிரைடே லீவுக்கு போக வேண்டும் என்று இரண்டு நாட்களில் 29 கர்பவதி  பெண்களுக்கு கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவமவமணையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றார்கள்.. என்ன கொடுமை....பாருங்கள் .. ஒன்னு ரெண்டு எல்லாம் இல்லை 29 கேஸ்.. இவு இரக்கம் என்பதே இல்லையா??


கோ படத்து இயக்குனர் கேவி ஆனந்துடன் பேசினேன்... முதல் பாடலில் வரும் பிரபல நட்சத்திரங்கள் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி.. அது மட்டும் அல்ல... அது உங்கள் மேல் வைத்து இருந்த மரியாதைக்கு வந்து இருந்தார்கள் என்றேன்... அதற்கு அவர் அதனால்தான்... அவர்கள் முகங்களை நாங்கள் எந்த இடத்திலும் விளம்பரத்தில் பயண்படுத்தவில்லை என்றார்.. நட்புக்காக வந்தார்கள்..  அந்த நட்புக்கு மரியாதை என்றார்...நல்ல விஷயம்தான்..
========
சினிமா...
நடிகர் நரேன் போல நடிகர் பிருத்திவிராஜ்ம் டிவியில் இருந்நது பேட்டி எடுக்க வந்த பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ண போகின்றார்...மே 1 கல்யாணம்...
=====


இந்தவாரகடிதம்..

நண்பரே வணக்கம்
நான்  உங்கள் ரசிகன் , உங்கள் blogai ரெகுலராக படிப்பவன் . முக்கியமாக உங்கள்
1
சினிமா விமர்சனம் , அழகான  ஒரு முன்னோட்டம் , ஷர்ட் & சுவீட்ட  அந்த படத்தின் கதை , பிளஸ் அதில் இருக்கும் சுவாரஸ்யங்களில் சில & படத்தின் ஸ்டில்ஸ்
2 .
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் :
3 .
உலக சினிமா : உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்

சில விண்ணப்பங்கள்
1
உங்கள் ப்ளாக் background கலரை மாற்றுங்கள் ( My suggestion : WHITE )
நீங்கள் விமர்சிக்கும் உலக சினிமாவின் டவுன்லோட் லிங்கையும் முடிவில் கொடுக்கவும்

நிறைய எழுதனும்னு ஆசை தான் but என்ன எழுதரதுன்னு தெரியலை ...

வாழ்த்துக்கள்


With Regards

R.Krishna Moorthy...
Bangalore
 ====
மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி....டவுன்லோட் லிங்க மட்டும்  என்கிட்ட கேக்காதிங்க...நான் டவுன்லோட் செய்து எந்த படத்தையும் பார்ப்பது இல்லை....
======

இந்த வார சலனபடம்....2

இந்த படத்தை பார்த்து நீங்க சிரிக்கலைன்னா.. போங்க சார்..

========
பிலாசபி பாண்டி...

தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
பொண்ணு சிரிச்சா தானாவளரும் தாடி..
=========

நான்வெஜ்
ஜோக் ..1

உங்களுக்கு ராணி ன்னு ஒரு முதல் மனைவி இருப்பதை என் எனக்கு சொல்லலை...
நான் சொன்னெனே ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு....
========
ஜோக்..2
காதலின் காதலிக்கு எஸ் எம் எஸ் அனுப்பினான்

கண்ணே நீ அழுதால் உன் கண்ணீரை எனக்கு கொடு...
நீ..சிரித்தால் உன் புன்னகையை எனக்கு கொடு.....
நீ தூங்கினால் உன் கணவை எனக்கு கொடு....
கண்ணே நீ இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றாய்...???

பதில் காதலியிடம் இருந்து....

நான் டாய்லெட்ல இருக்கேன்....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...


=================

4 comments:

 1. ஜான் டேவிட் வேளச்சேரியில் வேலை செய்தார் என செய்தியில் பார்த்தேன். அது சதர்லாண்ட் நிறுவனம் என்று தங்கள் பதிவில் கண்டேன். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 2. Hello Sir
  yappadi unga kannil matum intha mathiri சலனபடம் mattuthu? Vijay tv,athu ithu yathu programle ... siricha pochu round le inthe padethe potangana, 3 perum OUT.
  Super!!!

  ReplyDelete
 3. ஜான் டேவிட் அவுஸ்திரேலியா விற்கு ஓடி விட்டதாக ஜூ.வி .இல் வந்ததாக ஞாபகம். பிடிபட்டது உண்மையாயின் சந்தோசம்.

  ReplyDelete
 4. //சோவுக்கான எனது பதில்....

  தம்பி டீ இன்னும் வரலை...//

  ********

  மே 13 வரும்... அன்னிக்கு இருக்கு தமிழ்நாட்டுல “தல”யோட ஓலம்....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner