லேட் மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ்(பதினெட்டுபிளஸ்) ஞாயிறு17/04/2011

 
ஆல்பம்...

தேர்தலுக்கு முன் கடைசி இரண்டு நாளில் பணம் பாதாளம் வரை பாய்ந்து இருக்கின்றது... முக்கியமாக இந்த வேலைகளில் திமுககாரர்கள் கில்லாடிகள்.... அதே போல் பணம் கொடுத்தால் எந்த இடத்தல் பிரச்சனை இல்லையோ, பணத்தை யார் வாங்கி கொண்டு சத்தியத்துக்கு கட்டு பட்டு ஓட்டு போடுகின்றார்களோ? அந்தவகையான மக்கள் வசிக்கும் இடங்களில்தான் பணபட்டுவாடா நடந்து இருக்கின்றது.. இதில் இருக்கட்சிகளும் களத்தில் குதித்து தங்கள் திறமையை காட்டின என்பதை மறுக்க முடியாது...தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் பணம் கொடுப்பது என்பது சாத்தியம் இல்லை...கடலூரில் நான் வசிக்கும் குடிசைபகுதி சுற்றிலும் பணத்தை கொடுப்பார்கள்... எங்கள் வீட்டுக்கு மட்டும் கொடுக்கமாட்டார்கள்.. காரணம் என் அப்பா அந்த பணத்தை தொடக்கூட மாட்டார்... அதனால் பணம் எங்கள் வீட்டுக்கு மட்டும் வராது....
=============================
ராமநாதபுரத்தில்  பணம் வாங்காதவர்கள் வீடுகளில் கூரைகளில் பணத்தை சொருகிவிட்டு சென்று இருக்கின்றார்கள்.. என் வீட்டு கதவில் ஒரு தபால்பாக்ஸ் வாங்கி மாட்டி வைத்து இருந்தேன்.. நாம் இல்லையென்றாலும் யாராவது பணம் கொடுக்க வந்தால் அதில் போட்டு விட்டு போகட்டும் என்று ஆர்வமாக இருந்தேன்.. வீட்டுக்கு வரும் போது பாக்சில் ஏதாவது பணம் இருக்கும் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டே தினமும் இருந்தேன்..  ஏதோ ஒன்று உள்ளே இருப்பதாக தெரிந்தது.. ஆர்வமாக திறந்து பார்த்தேன்....திகையாதே உன் தேவன் இருக்கின்றேன்...இயேசு வருகின்றார் நல்லவர் போன்ற பெந்தகொஸ்த்தேகாரர்களின் பிட் நோட்டிஸ் திருவிளையாட்டை பார்த்து விட்டு நொந்து போனேன், இயேசு மீது கோபம் வர வைத்துவிட்டார்கள்...

=======================
ஸ்ரீரங்கம் தொகுதிகளில் கடைசிவரை அதிமுகவினர் பணம் பட்டுவடா செய்ய முடியாமல் தவித்து இருக்கின்றனர்... அதே போல பணம் ஒரு இடத்தில் கொடுக்கின்றார்கள் என்றால் அந்த இடத்தில் கட்சிகாரர்கள்  அதிக அளவில் இருந்தால்தான்.. பணம் கெடுப்பார்கள்... உதாரணத்துக்கு என் வீட்டுக்கு பக்கத்தில் எல்லோரும் அதிமுக அபிமானிகள்....எம்ஜிஆர் வெறியர்கள்.. பட் இந்த திமுக ஆட்சியில் டிவி மற்றும் கேஸ் அடுப்பு வாங்கியவர்கள்.. அவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடும் மனநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பணம் பட்டுவடா நடக்கும்..... காரணம் அவர்கள் கட்சிகாரர்கள்..ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் கொடுத்து இருக்கின்றார்கள்.. அதே போல திமுக்காரர்கள்.. அவர்கள் ஆதரவு வீடுகளில் ஒரு ஓட்டுக்கு 300 வரை கொடுத்து இருக்கின்றார்கள். முடிந்தவரை பணத்தை  இருவரிடம் வாங்கி கல்லா கட்டி இருக்கின்றார்கள்.. எந்த எழுச்சியும் இல்லாமல் 78 சதவிகிதம் ஓட்டு சாத்தியமா? என்றால் இதுதான் பதில்....


==================
இந்தவார சலனபடம்.

இந்தபாடல் வந்த போது தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் தேசியகீதமானது..இந்த பாடல்ல முழுவதும் நைட் சீக்வென்ஸ்தான்...முக்கியமாக இந்த பாடலின் வார்த்தையை உள் வாங்கி முதல் சரணத்தை பட நான் மிகவும் பிரயத்தனம் பட்டேன்..மிகப்பெரிய வாக்கியத்தை அடைப்பது ரகுமானுக்கு சாத்தியம்... முக்கியமா ராஜுசுந்தரம் மாஸ்டர் போர்ட்டர் வேஷத்துல ஆடும் போது.. அந்த ஸ்டெப் எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் கண்டபடி ஆடுவது போல இருக்கும்... அவரோடு பின்னனியில் தாளம் தப்பாமல் ஆடும் டான்சர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ராஜுமாஸ்டர் ஸ்டெப் வரும் போது மட்டும் நின்று பார்த்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பது பழகிபோய்விட்டது...


மிக்சர்..

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை ஒரு வருடத்துக்கு சப்ஸ்கரிப்ஷன் வாங்கி இருந்தேன்.. நானாக எந்த முகவரி மாற்றமும்  என் கை பட எழுதி கொடுக்கவில்லை... எனக்கு ஒரு மூன்று மாத காலமாக எனக்கு பத்திரிக்கை வரவில்லை... நான் ஊருக்கு போனாலும் காலை பேப்பரை பக்கத்து வீட்டு நண்பரை எடுத்து வைத்துக்கொள்ள சொல்லி இருந்தேன்.. ஆனால் பேப்பர் வரவில்லை.....காரணம் வீடு பூட்டி இருப்பதாக வென்டர் சொல்லி இருக்கின்றார்.... நான் வீடு பூட்டி இருந்தாலும் என் வீட்டு வாசலில்  எழு மணிக்கு பேப்பர் இருக்க வேண்டும்.... எச்சி இலையை எடுக்க சொன்னால் என்ன சாப்பிட்டு இருக்கின்றார்கள் என்று எதுக்கு உங்க வென்டர் பார்க்கின்றார்..?? என்று சொல்லி பார்த்தேன்... சரிங்க இன்னும் மூணு மாசத்துக்கு எக்ஸ்டேன் செய்து கொடுக்குன்றேன் என்று சொல்லி இதுவரை மூன்று வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது......

இன்னும் பேப்பர் வரவில்லை.. நானும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் வருகின்றேன்.. அதைவிட கொடுமை மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போடும் போது சார் நான் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து பேசறேன். உங்க அட்ரஸ் செக் பண்ணறேன் என்று சொல்லி எனது விலசத்தை வாசித்து விட்டு நாளைக்கு பேப்பர் வந்து விடும் என்று சொல்லுவார்கள்,. ஆனால் வந்த பாடு இல்லை....தினமும் போன் செய்து கொண்டு இருக்கின்றேன். ஆனால் இன்னும் வரவில்லை.. ஒரு ஆள் கேட்டான்  நான் வேண்டுமானால் உங்க வொண்டர் போன் நம்பர் தரேன் நீங்க அவுங்க கிட்ட பேசறிங்களா?- நான் சொன்னேன் என்ன மயித்துக்கு நான் பேசனும்  அதுக்குதானே உனக்கு சம்பளம் கொடுத்து உட்கார வச்சி இருக்கு??? நீ பேசு .. எனக்கு வொண்டருக்கும் என்ன சம்பந்தம்??  ஏன் பேப்பர் என் வீட்டுக்கு வரவில்லை, போடவில்லை என்று கேள்...???? நானும் தொடர்ந்து பேசிவருகின்றேன்... நான் விடுவதாய் இல்லை....உன் வேலையை செய்யாமல் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் டைம்ஸ்ஆர் இந்தியா கஸ்டம்கேர் ஒரு உதாரணம்...


==================
சந்தோஷ அறிவிப்புகள் ....

இப்போதுதான் நீயா நானாவில் பேசினேன்....வரும் 23ம் தேதி சென்னை வானொலி முதல் அலைவரிசையில் காலை எழு மணிக்கு உதவி செய்வதன் அவசியம் என்ற தலைப்பில்   எனது சின்ன பேட்டி ஒளிபரப்பாக உள்ளது...பேட்டி போனிலேயே எடுத்து விட்டார்கள்... 5நிமிடத்துக்கு பேசி இருக்கின்றேன்... சென்னை வானொலி நிலையத்தில் பணிபுரியும் திரு கீதப்பிரியன் அவர்கள் எனது நெடுநாள்  பிளாக் வாசிப்பாளர்.... அடுத்தநாள் ஒரு போன்... சார் நாங்க ராணிபத்திரிக்கையில் இருந்து பேசறோம்...உங்க பிளாக் வாசகர்நான்... காதல் திருமணம் மற்றும் மரபு வழி திருமணம் குறித்த உங்கள் பார்வை என்ன? என்று  எனது சின்ன பைட் எடுத்தார்கள்..அது போட்டோவோடு வெளிவரும் சார்..... கட்டுரை வெளிவரும்நாள் குறித்து சொல்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்கள். மிக்க நன்றி நண்பர்களே......
================
இரண்டு நாளாக திண்டிவனம் திருமணத்துக்கு போய் இருந்தேன்...பையன் திருச்சி பெண் திண்டிவனம்... திருமணம் முடிந்து இரண்டு மூன்று மூறை மாப்பிள்ளை வீட்டுக்கு போய்விட்டு வரவேண்டும் என்பது சடங்கு...திருச்சி போய்விட்டு வருவது என்பது சாத்தியம் இல்லை அதனால் மணமகன் அறைதான் திருச்சி.. மணமகள் அறைதான் திண்டிவனம் என்று சொல்லிவிட்டு பெண்ணை அவரது உறவுகள்  அழைத்து போய் திருச்சியில் விட்டார்கள்.... அதாவது மணமகன் அறையில்... அதே போல் மாப்பிள்ளை உறவுகளும் திருச்சியில் இருந்து சட்டென திண்டிவனம் வந்தார்கள்.. அதுக்கு அப்புறம் அவர்கள் மணமகளின் உறவுகள் திருச்சி கிளம்ப இருந்த சமயம்  எனக்கு ஒன்னுக்கு வந்து விட்டாதால் டாய்லெட்டுக்கு போய்விட்டேன்..


============================



சலனபடம் 2

சிக்கு புக்கு ரயிலுக்கு முன்னால் பல வருடங்களுக்கு முன்பு நைட் சிக்குவன்சில் பட்டையை கிளப்பியபாடல் ..இந்த பாடல் ஒளிப்பதிவுக்காக மிகவும் பாராட்ட பட்ட பாடல்  சிக்கு புக்கு பாடலில் மெயின் என்ற2ல் இந்த பாடலில் பத்தோடு பதினொன்று என ஆடுவார்.. இந்த பாடலும் வீடியோவுடன் பார்த்து ரசிக்க பிடிக்கும்....இந்த பாடல் நைட்சீக்வென்ஸ் ரயில் நிலையம் ஒளிப்பதவு பிசிஸ்ரீராம்.. சிக்கு புக்கு ரயில் நைட் சிக்வென்ஸ் சிஷ்யன் அமரர் ஜீவா... இரண்டுக்கும்  ஒரே சம்பந்தம் பிரபுதேவா..


பிலாசபி பாண்டி...

நடந்து முடிஞ்ச எந்த சமாச்சாரத்தையும் நம்மாள திருத்த முடியாது.. பட் நடக்கபோறதை சரியா பண்ணலாம்.....
============

நான்வெஜ் 18+

தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கும் காரணத்தால் செக்ஸ் மூட்  வந்தால் இருவரும் சொல்லும் சக்கேதவார்த்தை வாஷிங்
மெஷின்...அன்னைக்குன்னு பார்த்து புருசபய புள்ளைக்கு செமை மூடு... பசங்க தூங்கனதும் பத்து மணிக்கு மனைவி காதில் வாஷிங் மெஷின்னு சொன்னான்... காலையில இருந்து செம வேலை பிளிஸ்ன்னு மனைவி சொன்னா.....
பதினோரு மணிக்கும் வாஷிங் மெஷின் சொன்னான்... மனைவி எரிச்சலோடு இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ் பண்ணா என்ன? என்று கேட்டாள்..? கணவனுக்கு செம கடுப்பு...திரும்ப ஒரு மணிக்கு காதில் வாஷிங்மெஷின்னு சொன்னான்...உங்ககிட்ட ஒரே ரோதனையா போச்சுன்னு திரும்பிபடுத்தா மனைவி....ஒரு அரைமணிநேரம் கழிச்சி ,புருசன் மேல  பரிதாபப்பட்டு அவங்காதுல போய் வாஷங் மெஷின்னு பொண்டாட்டி ரகசியமா சொன்னா.... அதுக்கு புருசன்... இல்லை கையாலயே துவைச்சிட்டேன்னு சொன்னான்....



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...








===============

4 comments:

  1. இயேசு மீது கோபம் வர வைத்துவிட்டார்கள்.. : :)

    ReplyDelete
  2. HAHAHA...
    Brother... Intha maathiri joke ellaam enga pudikkireenga...?

    ReplyDelete
  3. Very Nice. I Like it.
    (நடந்து முடிஞ்ச எந்த சமாச்சாரத்தையும் நம்மாள திருத்த முடியாது.. பட் நடக்கபோறதை சரியா பண்ணலாம்....)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner