லேட் மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ் (பதினெட்டுபிளஸ்) ஞாயிறு12/04/2011

 
ஆல்பம்.

ஊழல் தினமும் சாப்பிடும் இட்லி சட்னி ரேஞ்சுக்கு மலிந்து போய்விட்ட இந்த நிலையில் அந்த ஊழலுக்கு போர் கொடி தூக்கிய ஹசாரே பாராட்டுக்குறியவர் என்றாலும்.. அவரும் ஒரு ஸ்டன்ட் பார்ட்டி என்று சிலர் சொல்லி வருவது வேதனையை அளிக்கின்றது.. இந்த உலகத்துல அப்ப எவனுமே யோக்கியமா இல்லையா?? இப்படி எல்லோர் மேலேயும் சந்தேகம் அடைந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது????
=========
ஜுவி  தேர்தல் ரிசல்ட்டில்  அதிமுக கூட்டனி 141 இடங்களை கைப்பற்றும் என்றும் திமுக கூட்டனி 92 என்றும் தனது கருத்துகணிப்பை சொல்லி இருக்கின்றது..நக்கீரன் பத்திரிக்கை திமுக கூட்டனி 140 என்றும் அதிமுக கூட்டனி 94  வாங்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. பார்ப்போம்... யார் சொல்வது பலிக்கின்றது. என்று...முதலில் திமுக இந்த தேர்தலில் மரண அடி வாங்கும் என்று சொல்லியது நினைவுக்கு வருகின்றது..
===========



தேர்தல் நிலவரம் மற்றும்  கருத்துகணிப்புகள் அதிக அளவில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், கருத்து கணிப்புகள் வெற்றித்தோல்வியை தீர்மானிக்கபோவதில்லை. ஜீவி நாடளுமன்றதேர்தலில் பெருவாரியாக அதிமுக வெற்றிபெரும் என்று சொன்னது ஆனால் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.. இந்த தேர்தல் டப்பான தேர்தல் என்பதில் ஐயம் இல்லை....
==============
இந்த தேர்தலின் பியூட்டி என்னவென்றால் நான் முன்பே சொன்னது போல ஒரு மாதம் கழித்துதான் ரிசல்ட் அதுக்குள் எத்தனை பேருக்கு பீபி எகிற போகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் காத்திருத்தலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்...  வாக்கு எந்திரங்களை பாதுகாக்கும் பாதுகாப்பு போலிசாருக்கு ரிய தலைவலிதான்.. எப்படி மே13 வரும் என்று அடி மடியில் நெருப்பைக்கட்டிக்கொண்டு இருப்பார்கள்.
===========
இன்று மாலையோடு பிரச்சாரம் முடிவடைகின்றது...இரண்டு பக்கமுமே பணம் இந்த தேர்தலில் விளையாடுகின்றது.. யாருக்கு வேண்டுமானலும் ஓட்டு போடுங்கள் ஆனால் ஓட்டு போட மறாவாதீர் மக்களே.
===========

மிக்சர்...

அந்த இளைஞனின் உடல் நேற்று மாலை 5மணிக்கு எரியூட்டபட்டது... பிள்ளையை பறி கொடுத்து விட்டு எல்லோரும் சோகமாக நடந்து போய் கொண்டு இருக்கும் போது.. பட்டாசு வெடிக்க இரண்டு கோஷ்ட்டி சண்டை போட்டுக்கொண்டது.. வேதனையாக இருந்தது... இவனுங்க என்னைக்கு திருந்துவானுங்க? என்று தெரியவில்லை...
============
ஞூயிறு மாலை அய்யப்ப மாதவனின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போய் இருந்தேன்... பல பதிவர்கனை சந்தித்தேன்.. அங்கு போன பிறகுதான் அந்த   சோக மேட்டரில் இருந்து வெளியே வந்தேன்..

=================

பிலாசபி பாண்டி

வாழ்க்கை ஒரு காட்டாறு போல  திடிர் திருப்பம் சூழல் எல்லாம்வரும்.  எதுவாக இருந்தாலும் அனுபவிக்க பழகி கொள்ள வேண்டும்.. திரும்ப அந்த திடிர் திருப்பங்கள் நம் ஒரு போதும் சந்திக்க போவதில்லை...வேறு ஒரு அதிரடி திருப்பம் வேண்டுமானால் வரலாம்..
‘============
நான் வெஜ் 18+
குளக்கரையில் ஆடைகள் அதிகம் நெகிழ  குளித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை பார்த்ததும் காமம் அதிகமாகிய வெளியூர்காரன் அந்த பெண்ணிடம்  உனக்கு 1000 ரூபாய் தருகின்றேன் என்னோட இன்று இரவு படுக்கைக்கு வர முடியுமா என்றான்...? அவளும் சரி என்றாள்.. இதை பக்கத்து மரத்துக்கு பின்னால் மறைந்து இருந்து  ஒருவன் கேட்டு விட்டு விசில் அடிக்க சில இளவட்டங்கள் ஓடி வந்தன... அவர்கள் காதில் அவன் விஷயத்தை சொல்ல வெளியூர்காரனை போட்டு செம மொத்து மொத்தினார்கள்.. தெளிய வைத்து தெளியவைத்து எதுவும் பேசாமல் உதைத்தார்கள்... அரை மணி நேரத்துக்கு அப்பறம் ஒருவன் வாய் திறந்தான்... 500ரூபாய் கொடுத்துட்டு ஐந்து பேர் போறவகிட்ட ஒரே ஆளு ஆயிரம் ரூவா கொடுத்த நாளை பின்ன எங்களை எப்படிடா அவ மதிப்பா? என்று சொல்லி திரும்பவும் உதைத்தனர்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
திரட்டிகளில் ஓட்டு போட மறவாதீர்..



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...




============

2 comments:

  1. jackie
    anna hazarae is not opportunist. some people are spreading malign against him and his organization. People dont believe it. He transformed his village from draught into self-sustaining village.... He is instrumental in bringing Right to information act...This is not the first time he is fighting against corruption.....People of maharastra knows him very well for his fight against corrupt netas and babus.... It is only now people of india recognizing him as true leader.....

    Regards
    Jagadees

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner