Trust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.







குறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..




1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...

டிவி,செல்போன்,இணையம், கம்யூட்டர்,செல்போன்கேமரா,டிஜிட்டல் கேமரா, யூடியூப், பேஸ்புக்,ஆர்குட்,மெயில்கள் ,பிளாக்,செக்ஸ் சாட் ரூம்கள்,வீடியோசாட்,சிடி,டிவிடி,மெரிகார்ட், என்று இதன் லிஸ்ட் மிகப்பெரியது...மேலே சொன்ன எல்லா லிஸ்ட்டில் நம்வாழ்வோடு எதாவது ஒரு வகையில் அவைகள் பின்னி பினைந்து இருக்கின்றன..

இந்த தொழில்நுட்பங்களால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு  இதை வேண்டிய அளவுக்ககு தவறாகவும் பயண்படுத்தலாம்..அதில் முக்கியமானது வயது பெண்களின் நிர்வாண வீடியோக்கள்.. முதன் முதலில பெங்களூரில் காட்டேஜில் இரண்டு காதலர்கள் தங்கள் உடைகளற்ற தனிமையை பதிவு செய்த வீடியோதான் தமிழகத்தில் பிரபலம்..

அதன் மார்கெட் தெரிந்து கொண்ட சில கும்பல்கள் அது போலான வீடியோக்களை பெரும் பணம் கொடுத்து வாங்க செய்தன..அதன் நீட்ச்சி இப்போது உடை மாற்றும் அறையில் இருக்கும் பிளக்பாயின்ட்டில் கூட கேமரா பொருத்தி விடுகின்றார்கள்...

தமிழ்நாட்டின் முன்னனி நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் குளித்ததில் இருந்து தலை துவட்டுவது வரை வீடியோவாக வெளியிடபட்டது...அதனால்தான் அவர் புகழின் உச்சிக்கு போனார் என்று சொல்லிபவர்களும் உண்டு...

இது எல்லாம் பெரிய இடங்களில் நடப்பதுதான் என்றுபலரும் நினைத்து இருந்தார்கள்.. வந்தவாசிக்கு பக்கத்தில் எதோ ஒரு பாலிடெக்னிக் மாணவன் மாணவியின் நிர்வாண வீடியோ சில மாதங்களுக்கு முன்  இணையங்களில் வெகு பிரபலம்..

பையன் பாத்ரூம் சுவரில் செல்போனை பப்பில்காமில் ஓட்டி வைத்து விட்டு வருவதும், அந்த சின்ன பெண் பள்ளி சீருடையுடன்  அந்த பையணுக்கு வாய்புணர்ச்சி  செய்வது மற்றும் முழு உடலுறவுக்கு தயராவது என அந்த வீடியோ அடுத்த கட்ட உச்சத்தை நோக்கி செல்லும்...ஆனால் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்..இந்த சின்னபெண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று ? காரணம் இணையம் எல்லாத்தையும் கற்றுக்கொடுத்து விட்டது..

நம் பணிபுரியும் இடம் மற்றும் அக்கம் பக்கங்களில் பார்த்து இருக்கலாம்.. சில பெண்கள் எப்போதும்  செல்போனும் கையுமாகவே இருப்பார்கள்..இணைய்ததிலும் அதிக நேரம் செலவிடுவார்கள்..அவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸ் சேதவறிவிழ வாய்ப்பு இப்போது அதிகம்.

என் பொண்ணு ரொம்ப கில்லி சார்.. ரொம்ப தைரியாசாலி, எவன்கிட்டயும் ஏமாறமாட்டா? ஏமாத்தறவனுக்கே இனிமா கொடுத்துடுவா.. என்று நீங்கள் பெருமையாக ஒரு போதும் நினைக்க வேண்டாம்.. காலம் மாறிவிட்டது..எல்லாத்தையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்ளும் இளயதலைமுறை இப்போது இருக்கின்றார்கள்..

சார்..அப்ப இந்த அப்பாவி பெண்களின் வீடியோ ஸ்கேன்டல்களை தடுக்கவே முடியாதா?
1990ல் ஒரே ஒரு வீடியோ ஸ்கேன்டல் வெளியானது..ஆனால் இன்று நாள் ஒன்றுக்கு  நான்கில் இருந்து பத்து வீடியோக்கள் வரை வெளியாகின்றது...இதில் காதலன் மேல் நம்பிக்கை வைத்து உடை அவிழ்த்து மாட்டிக்கொள்ளும் பெண்கள்தான் அதிகம்..

சார் இதை ஒழிக்கவே முடியதா?

சான்சே இல்லை.... காரணம் உலகில் ஒரே ஒரு மனிதன் மான்கறி சாப்பிடுவதை நிறுத்தாத வரை, மான் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. நாம்தான் நம்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...

எல்லோருக்கும் அவர்  அவர் பிள்ளைகள் மீது பெரிய நம்பிக்கை வைக்கின்றோம்.. ஆனால் அந்த நம்பிக்கையை சில பிள்ளைகள் பொய்த்து விடுகின்றார்கள்.. காரணம் பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது அதீத நம்பிக்கை.. அப்படி வைக்க வேண்டாம்... அவர்கள் உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது..

ஏதோ ஒரு காம போதையில், அல்லது நாம் நேசிப்பவர் மீது கண்மூடித்தனமாக இருந்த நம்பிக்கையில் உடலுறவின் போது நடந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து, அது ஒரு நாள் இணையதளங்களில் வெளியானால் அந்த பெண்ணுக்கு மனநிலை எப்படி இருக்கும்?? 

அதையே அந்த பெண்ணின் அப்பா அந்த காட்சியை பார்க்கும் போதோ அல்லது கேள்வி படும் போதோ அவர் மனது என்னபாடுபடும்? அந்த குடும்பம் எப்படி தவித்து போகும்?என்பதை உணர்ச்சிகரமாக சொல்லுகின்றது டிரஸ்ட் என்ற இந்த ஆங்கில படம்..
===================================

Trust (2010)  படத்தின் கதை என்ன??


14 வயசு டீன் ஏஜ் பெண் ஆனி....அவள் அப்பா வில் (Clive Owen) ஆனியின் பர்த்டேவுக்கு ஒரு லேப்டாப் பரிசளிக்கின்றார்...அதன்பின் அவள் லேப்டாப்பே வாழ்க்கை என்று  பழியாக கிடைக்கின்றாள்...சார்லி என்ற 15 வயது பையன் இணையத்தில் சாட் மூலம் பழக்கமாகின்றான்.. அவனோடு மிகவும் நெருக்கமாக சாட் மூலம் ஆனி பழகுகின்றாள்.. செல்லில் எங்கு இருந்தாலும் அவனோடு சாட்  செய்து கொண்டு இருக்கின்றாள்..அவன் மீது தீரகாதலும் நம்பிக்கையும் கொண்டு இருக்கின்றாள்...

ஆனால் ஒரு நாள்  சாட்டில் சார்லி என்னை மன்னித்து விடு எனக்கு 15 வயது இல்லை எனக்கு 25வயது ஆகின்றது என்று சொல்ல முதலில் ஆனி வருத்தப்பட்டாலும் அவன் மீது இருக்கும் காதலாலல் அந்த பொய்யை மன்னிக்கின்றாள்.....
ஒரு நாள் ஆனியின் அப்பா அம்மா, அவளது அண்ணனை பக்கத்து ஊரில் இருக்கும் கல்லூரியில் சேர்க்க செல்லுகின்றார்கள்..ஆனி வீட்டில்தனியாக இருக்கின்றாள்...சார்லியிடம் நாம் நேரில் பக்கத்தில் இருக்கும் மாலில்  சந்திக்கலாம் என்று சொல்லுகின்றாள்..நிறைய கனவுகளுடன்.. சார்லியை சந்திக்கும் ஆவலில் இருக்கும் அவளுக்கு 30 வயதை கடந்த ஒரு ஆள் வந்து தன்னை சார்லி என்று அறிமுகபடுத்திக்கொள்கின்றான்..அவள் இடிந்து போகின்றாள்..அழுகின்றாள்.. 

ஏன் இப்படி என்னை ஏமாற்றினாய்...? என்னை நம்பவைத்து கழுத்து அறுத்து விட்டாய்..? என்று ஆனி புலம்பினாலும், சார்லி ...வயது நம் நட்புக்கு ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லி அவள் அழகை வர்ணித்து, பக்கத்தில் இருக்கும் ஓட்டலுக்கு  அழைத்து சென்று அவளை சூறையாடுகின்றான்.. அதை ஒரு ரகசிய கேமரா விழுங்கின்றது...அதன் பிறகு அது போலிஸ் கேஸ் ஆகின்றது..

போலிஸ் விசாரனையில் சார்லி பற்றி எதையும் ஆனி சொல்ல மறுக்கின்றாள்.. காரணம் அவன் மீது வைத்து இருக்கு கண்மூடித்தனமாக லவ் மற்றும் நம்பிக்கைதான் அதுக்கு காரணம்...அப்பா வில் அது பற்றி கேட்டாலும் அப்பாவின் மீதே எரிந்து விழுகின்றாள்...

சார்லியை மலை போல் நம்பும் ஆனி அப்பாவை கடுமையாக வெறுக்கின்றாள்..ஆனி அப்பா வில் தன் பெண்ணை இப்படி நம்பிக்கை ஏற்படுத்தி அவள் வாழ்வோடு விளையாடியவனை கண்டுபிடித்து கொலை  செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றான்... ஆனி சார்லி மீது  பெரிய நம்பிக்கை வைத்து இருக்கின்றாள். அந்த நம்பிக்கை எப்போது உடைகின்றது..? அப்பாவை அவள் புரிந்து கொண்டாலா? சார்லியை ஆனி அப்பா வில் கண்டுபிடித்து பழி வாங்கினாரா?? என்பதை வெண்திரையில் பாருங்கள்..
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

முதலில் ஒரு சமுக பிரச்சனையை செல்லுலாய்டில் பதிவு செய்தமைக்கு இயக்குனர் David Schwimmerக்கு பெரிய பொக்கே....
இந்த படத்தில்  நடிக்க ஒத்துக்கொண்டு அந்த வயதின் உணர்வுகைளை நடிப்பில் கொண்டு வந்த Liana Liberato வுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.....
தான் நம்பிக்கை கொண்ட மனிதரை அப்பா வீனாக சந்தேகபட்டு தன் மனதை புண்படுத்துகின்றார் என்று ஆனி (Liana Liberato) அவள் அப்பாவை திட்டும் இடங்களில் நல்ல நடிப்பு..
அதே போல ஆண்பிள்ளை ஏன்றால் ஒரு டிரீட்மென்ட்  பெண் பிள்ளை என்றால் ஒரு டிரீட்மென்ட் என்பதை, சாப்பிடும் போது டைனிங் டேபிளில் குத்திக்காட்டி விட்டு ஆனி  சாப்பிடாமல் எழுந்து செல்வது நல்ல பன்ஞ்...வளர்ந்த நாடான அமெரிக்காவாக இருந்தாலும் இதுதான் என்று இயக்குனர் சொல்லி இருக்கின்றார்....
தன் மகளை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பான்? அவளை மெல்ல படுக்கையில் வீழ்த்தி  சின்ன பெண்ணை உடலுறவுக்கு அந்த எருமை முய்ற்ச்சிக்கும் போது, தன் மகள் எப்படி எல்லாம் துடித்து இருப்பாள் என்று ஒரு அப்பாவின் என்ன ஓட்டத்தில், பாயிண்ட் ஆப்வியூவில் விரியும் காட்சிகள் கொடுமை..
ஒரு வயதுப்பெண்ணுக்கு என்ன சைஸ் பிரா அணியவேண்டும்? எப்படி மார்பகத்தை பராமரிக்கவேண்டும்? என்ற  விபரம் தெரிந்த தமிழ் அம்மாக்கள் மிக குறைவு..அப்படி பட்ட அம்மாஞ்சி அம்மாக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்..

எல்லா செயலிலும் தன் மகளை ஏமாற்றியவனை பற்றிய நினைப்போடு இருப்பது... பார்ட்டிக்கு செல்லும் போது அங்கு அது பற்றிய நினைப்போடு இருப்பது, ஆபிசில் முக்கிய மீட்டிங்கில் அந்த  நினைவாகவே இருப்பதாக கிளைவ் ஓவன்  நடிப்பில் பின்னி இருக்கின்றார்...
இப்படி ஒரு தவறை செய்து விட்டு  வந்தால் நம்ம ஊராக இருந்தால் மானத்துக்கு பயந்து மண்ணெண்ணை ஊற்றி மகளை  கொளுத்தி விட்டு , மறுநாள் தந்தியில் ஏட்டாம் பக்கத்தில் நாலாம் பத்தியில் வயிற்றுவலி காரணமாக இன்னார் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொணடாள் என்பதாய் முடிப்பார்கள்..

பெண் அடுத்த ஜாதியில கல்யாணம் பண்ணிக்கொண்டாளே? தேடிப்பிடிச்சி அவளை வெட்டும் ஆட்கள் நம் ஆட்கள்..ஆனால் தன் மகள் பெரிய தவறு செய்ததும் இல்லாமல், தன்னை நம்பாமல கெடுத்தவனை நம்பும் பெண்ணை, நம்மவர்கள் அடிதே கொன்று விடுவார்கள்..ஆனால் அமெரிக்காவில் மெல்ல மெல்ல தன் பெண்ணுக்கு உண்மையை உணர வைப்பதும், அவளை எந்த இடத்திலும் அற்ப்ப புழுவாக பார்க்காமல் அவளுக்கு பிரச்சனையை புரிய வைப்பதும் அற்புதமான காட்சிகள்.
.எமாற்றப்பட்ட ஆனியிடம் அவளின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. என்ற வரிக்கு ஏற்ப்ப அங்கு வளரும் பிள்ளைகள் மதிக்கப்படுவது பெரிய விஷயம்...

காலம் காலமாக  குடும்பத்தின் மானம் என்பது பெண்ணின் கன்னித்தன்மையில் புதைந்து இருப்பதாக நினைத்தே தமிழ் சமுகத்தில் வளர்ந்த பெற்றோர்கள் கண்டிப்பா இந்த படத்தை பார்க்க  வேண்டும்...  

இந்த படம் பல உலகதிரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது..
கிளைமாக்ஸ் எதிர்பாராமல் இருந்தாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகளை நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு..
====================================
படத்தின் டிரைலர்..



==========
படக்குழுவினர் விபரம்

Directed by     David Schwimmer
Produced by     Avi Lerner and David Schwimmer
Written by     Andy Bellin
Robert Festinger
David Schwimmer (uncredited)
Starring     Liana Liberato
Clive Owen
Catherine Keener
Viola Davis
Noah Emmerich


Music by     Nathan Larson
Cinematography     Andrzej Sekula
Editing by     Douglas Crise
Distributed by     First Look
Release date(s)     September 10, 2010 (TIFF)[1]
Running time     104 minutes
Country     United States
Language     English
===========
பைனல் கிக்..

இந்த படத்தை டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும்..பெற்றோர்கள்  அனைவரும் பார்க்கவேண்டும்.. செல்போனும் லேப்பும் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பது பெரிய பிரச்சனையே இல்லை..ஆனால் அதைனை எப்படி யூஸ் செய்கின்றார்கள்  என்று கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் முதல் கடமை...எனக்கு இப்போது பெரிய பயம் என்னவென்றால் அரசு இப்போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் அரசு வழங்க போகின்றது.. இணையம் பற்றிய விழப்புனர்வு பிள்ளைகளுக்கு ரொம்பவும் அவசியம்...இணையம் பற்றிய விழிப்புனர்வுடன் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினால் இன்னும் நல்லது...
இந்த படம் சென்னை மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது.. 

=======================

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. கண்டிப்பா பார்க்கனும்... பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. வெறுமனே சினிமா விமர்சனம் என்பதற்கு அப்பால் எமது வாழ்வியலையும் அதன் தொடராய் விமர்சித்திருப்பது சமுதாயத்தின்மீதான உங்கள் அக்கறையை உணர்த்துகிற்து. நன்று.

    ReplyDelete
  3. அன்பின் ஜாக்.கி..

    "ஆனியிடம் அவளின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. " - மிகுந்த அர்த்தம் மற்றும் எதார்த்தம் நிறைந்த வரிகள் ... அதை நீங்கள் கையாண்ட விதம்..really super.. and hats off to Jackiee...

    "இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகளை நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு.." - Yes this is 100% real and true.. பாசம், நேசம், அன்பு என்பதை தவிர பராமரிப்பும், கண்டிப்பும் பிள்ளைகளிடம் எப்போதும் காட்ட வேண்டும்..

    ஜாக்கி=ஜாக்கி No one equals to him.

    என்றும் நட்புடன்..
    NTR

    ReplyDelete
  4. இப்போதுதான் படத்தைப் பார்த்து முடித்தேன். விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, நன்றாக இருந்த குடும்பத்தை புரட்டிப்போட்டதைப் பார்க்கும் போது மனம் கனத்தது. எல்லா பெண்பிள்ளைகளும், பெற்றோரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner