Eye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளிஉங்க நாட்டுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்.??

சார் நான் என்ன செய்யறது? அதான் நான் வாங்கற ஹமாம் சோப்புக்கு கூட வரிக்கட்டறேனே அது போதாதா??


குட் உங்க சேவை நாட்டுக்கு தேவை...

ஆனா உளவாளிகள் கதை அப்படி இல்லை..மரணத்தோடு அனுதினமும் போராடி எதிரி நாட்டு ரகசியங்களை  கலெக்ட் பண்ணி தன் நாட்டுக்கு அனுப்பபறது சாதாரணமா நாயர் கடையில டீ சாப்பிட்ற மாதிரி அவ்வளவு சுலபம் இல்லை...

கல்யாணம் கூட செஞ்சிக்காம தாய்நாட்டுக்கு உளவு வேலை செய்யும் கொடுர உளவாளியை பற்றிய கதை இந்த படம்...
===============
Eye of the Needle-1981  ஜெகஜால ஜெர்மன் உளவாளி..ஐ ஆப் த நீடில் படத்தின் கதை என்ன??

Henry Faber(Donald Sutherland ) ஜெர்மன் உளவாளி.. பல வருடம் அந்த ஆள்  எங்கிருந்தான்? எப்படி இருப்பான்? என்று யாருக்கும் தெரியாது...தன் தாய்  நாடான ஜெர்மனுக்காக உளவு செய்திகளை இங்கிலாந்தில் இருந்து சேகரிப்பது கொடுப்பதுதான் அவன் வேலை...அது இரண்டாம் உலகப்போர் சமயம்...ஹென்றியை ஒரு கட்டத்தில் இங்கிலாந்து உளவு அமைப்பு அவனை ஸ்மல் செய்கின்றது...

தன்  அடையாளங்களை அழித்து விட்டு சில  வெயிட்டான ரகசிய செய்திகளுடன் ஜெர்மனுக்கு சின்ன போட்டில் பயணிக்கும் போது படகு விபத்துக்குள்ளாகின்றது.. அது ஒரு தீவு அதில் மொத்தம் நான்கு பேர் மட்டுமே வசிக்கின்றார்கள். 
கால் இழுந்த இராணு விமான பைலட் அவனது மனைவி அவனது மகன்.. மற்றும் அந்த தீவில் இருந்து ரேடியோ தொடர்பு கொள்ளும் டாம் என்பவர் என நால்வர் மட்டுமே வசிக்கின்றனர்...பைலட் குடும்பம் ஹென்றிக்கு உதவி செய்கின்றது..பைலட் மனைவி (Kate Nelligan)Lucy Rose ஹென்றி மீது காதல்வயப்படுகின்றார்...
ஹென்றி சாதாரண ஆள் இல்லை எதிரி என்று  தெரிந்து விட்டால் கொலை செய்யக்கூட அவன் தயங்கவே மாட்டான்....துப்பாக்கி எடுத்து சூடுவதை விட ஸ்டில்லோ கத்தியை எடுத்து பர்த்டே கேக்ல கத்தியை இறக்கறது போல  எதிராளி வயத்துல கத்தி  பாச்சறதுததான் ஹென்றியோட பிரதான ஸ்டைல்... 
இப்ப பிரியுதா எதுக்கு நீடில்ன்னு படத்தோட டைட்டில்ல பேர் வந்துச்சின்னு.. உளவாளி ஜெர்மனுக்கு தப்பிச்சி போனானா? அந்த குடும்பம் என்ன ஆச்சி? இதுதான் மீதி கதை.. அதை திரையில் பாருங்க....

==================

மிகப்பெரிய பிரபல எழுத்தாளர் Ken Follett எழுதிய நாவலின் திரைப்படம்தான் இந்த படம்...இந்த படம் அவர் எழுதிய நாவலின் பெயரிலேயே வெளியே வந்தது...

நாவலாசிரியர் Ken Follett நாவலுக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இருப்பவர் Stanley Mann...ஸ்டேன்லி திரைக்கதைக்கு செல்லுலாய்டில் உயிர் கொடுத்தவர் இயக்குன்ர் Richard Marquand

இரண்டாம் உலகப்போரின் போது நிறைய உளவாளிகளின் கதைகள் நீட்டி முழக்கி சொல்லப்பட்டு வந்தன.. அதன் பாதிப்பில்தான் இந்த நாவலை எழுதினேன் என்று சொல்லுகின்றார்.. Ken Follett

31 வருடத்துக்கு முன் வந்த படம்..1981 ல் இந்த படம் ரிலிஸ் ஆனது...

ஹென்றியை எதிர்க்கும் அத்தனை பேரையும் ஸ்ல்லோ கத்தியால் கொலை  செய்து விட்டு அடுத்து அடுத்து என்று முன்னேறிக்கொண்டே இருப்பதை பார்க்கும் போது உளவாளி வேலைக்கு சரியான ஆள் என்று தோன்றும்..

அந்த ஸ்ட்ரோம் ஐலேன்ட் ஒரு அற்புதமான லோகேஷன் அற்புதமானது...

30 வருஷத்துக்கு முன்ன வந்த படம்.. கேமரா மூவ்மென்ட் ஷாட் எல்லாம் செமையா இருக்கும்..இறந்த போன ஒளிப்பதிவாளர் Alan Hume  கேரியரில் தவிர்க்க முடியாத படம் இந்த படம்...

தனக்கு கால் போய் விட்ட காரணத்தால் அந்த இண்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் காரணமாக மனைவியிடம்  எரிந்து விழுவதும் படுக்கையில் கூட தள்ளி படுப்பதும்.. அதன் காரணமாக புயலுக்கு ஒதுங்கியவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதை லாஜிக்காக சொல்லி இருப்பது நைஸ்...

தன் மனைவி  ஹென்றியோடு படுத்து விட்டாள் என்று  அறிந்து கொள்ளும் காட்சி அற்புதம்..

ஹென்றியோடு முதல்நாள் உடலுறவில் காட்டும் நெருக்கம்... அந்த பேஸ் ரியாக்ஷன் எல்லாம் மறு நாள் அவன் கெட்டவன் என்று தெரிந்த போது உடலுறவின் போது   முகத்தில் மட்டும் குளோசப்பில் கேமரா இருக்க... அதில் காட்டும் வெறுப்பும்,லூசி தன் உடலை நேராக வைத்து உடலுறவுக்கு ஒத்துழைக்காமல் அடிக்கடி திரும்ப முய்ற்ச்சிப்பது நல்ல ஷாட்..

திருமணம் செய்து கொள்ளாத உளவாளி..புயலில் ஒதுங்கி எதெச்சையாக கிடைத்த திடிர் காதலி என்பதால் அந்த காதல் காரணமாக எல்லார் வயிற்றிலும் கத்தி இறக்கும் ஹென்றி அவளை மட்டும் விட்டு வைப்பது லாஜிக்..

அந்த ரேடியோ டவர் போராட்டம் நல்ல சஸ்பென்ஸ்.. கடைசி காட்சியும் அற்புதம்..
===========
படத்தின் டிரைலர்..30 வருடத்துக்கு முன் டிரைலர் எப்படி இருக்கின்றது  என்று பாருங்கள்..=======
படக்குழுவினர் விபரம்

Directed by     Richard Marquand
Produced by     Stephen J. Friedman
Written by     Stanley Mann
Starring     Donald Sutherland
Kate Nelligan
Music by     Miklós Rózsa
Cinematography     Alan Hume
Studio     Kings Road Entertainment
Distributed by     United Artists
Release date(s)     July 24, 1981
Running time     118 minutes
Country     United States
Language     English
 
==========
பைனல்கிக்..

 இந்தபடம் பார்க்கவேண்டிய கிளாசிக் திரில்லர் திரைப்படம்...30 வருடத்துக்கு முன் இரண்டாம் உலக போர் பேக்ரவுண்டில் ஒரு திரில்லர் படம்..இந்த படம் சென்னை மூவீஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது.


=======
உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
 
=========
நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

5 comments:

 1. பழைய பாடங்களின் திரைவிமர்சனம் தொகுப்பு அருமை

  ReplyDelete
 2. இத்தனை தகவல்களை எங்கிருந்து திரட்டிநீங்க, நீங்கள்சொன்ன விதம் அருமை மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. u can now view comments in google readers itself when use google chrome...use this


  https://chrome.google.com/webstore/detail/bakgcnaldcjegdemmmkkmghcbmliojjd?hl=en-US

  ReplyDelete
 4. வழக்கம் போல....நல்ல பதிவு.
  தீபாவளிக்கு மயக்கம் என்ன ரிலீசானால் அதை முதலில் விமர்சியுங்கள். பின்னர் ஏழாம் அறிவு.
  வேறு குப்பைகளை கிளறி விடாதீர்கள். அன்பான வேண்டுகோள்.

  ReplyDelete
 5. இந்த படத்தைத்தான் உல்டா செய்து இந்தியில் அமீர்கான் “ஃபனா” என்று எடுத்தார்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner