வன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர் செய்யப்பட்ட கத்தி எந்த பக்கம் பிடித்தாலும் காயம் உறுதி...வன்முறையில். ஒருமுறை இறங்கிவிட்டால் புலிவால் பிடித்த கதைதான்..
சில மாதங்களுக்கு முன் தினசரியில் அந்த பத்தியை படித்து வெறுத்து போனேன். டெல்லியில் உள்ள ஒரு பார்க்கில் எல்லை மீறிய காதல் ஜோடியை கண்டித்தார் அந்த பார்க்கின் காவலாளி...ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த காவலாளி இப்போது உயிரோடு இல்லை... காரணம் காம போதையில் இருந்த காதலன் கோபத்தில் அந்த பூங்கா காவலாளியை கொன்று விட்டான்..இது ஒரு நொடியில் கோபத்தில் நடந்த ஒரு நிகழ்வு...
கோவையில் சிக்னலில் குடி குடித்து விட்டு நண்பர்களுக்குள் நடந்த தகராறில் சிக்னலில் நின்றவர்கள் அனைவர் கண் எதிரில், 42 செகன்ட்டில் ஒரு கொலை நடந்தேறியது...
ஆனால் சில கொலைகள் அப்படி நடப்பதில்லை.. திட்டமிட்டு நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, திட்டமிட்டு,சரியாக எதிர்பார்க்கும் அந்த ஒரு நொடி நேரத்துக்கு காத்து இருந்து,கொலைகள் நடத்தபடுகின்றன....
யார் செய்வார்கள்..??காசு கொடுத்தால் திட்டமிட்டு கொலை செய்ய புரோபஷனல் கொலைகாரர்கள் நிறையவே இருக்கின்றார்கள்...அப்படி கொலை செய்வதையே தொழிலாக கொண்ட இரண்டு கொலைக்காரார்கள் பற்றிய கதைதான் இந்த படம்...
=======================
Assassination Games படத்தின் கதை என்ன??
வின்சென்ட் (Jean-Claude Van Damme ) Vincent Brazil, ரோலன் (Scott Adkins) Roland Flint இரண்டு பேருமே பக்கா புரொபஷனல் கொலைக்காரர்கள்.. எள்ளுன்னா எண்ணைதான்... எலிப்புழுக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை...
வின்சென்ட் பொருத்தவரைக்கும் காசு கொடுத்தா கழுத்தை அறுத்துட்டுதான் மறுவேலையே பார்ப்பான்.....ரோலன் முன்னாடி அப்படிதான் இருந்தான்.. ஆனா ஒரு போதைமருந்து ஆசாமி ரோலன் கண் எதிரிலேயே அவன் மனைவியை கெடுத்து நாஸ்த்தி பண்ணதால அவ இப்ப கோமாவுல இருக்கா.... அதனால தொழிலை தற்க்காலிகமாக தள்ளி வச்சி இருக்கான்.. ஆனா தன் மனைவியை மானபங்கபடுத்திய அதே போதை ஆசாமியை கொலை செய்ய ரோலன்கிட்ட ஒரு கிளைன்ட் பேரம் பேசறான்...
அதே போதை ஆசாமியை கொலை செய்ய வின்சென்ட் இடமும் ரெகுலர் வேலை கொடுப்பவன் டீல் பேசறான்... ஒருத்தனை ரெண்டு பேருமே தனித்தனியா கொலை பண்ண போறாங்க....ஒருத்தன் பணத்துக்காக....மற்றவன் பழிக்கு பழி.. யார் செயிக்கறாங்க.,..வெண்திரையில் பாருங்க..
=======================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில,...
முதல்காட்சியில் வெயிட்டர் உடையில் வான்டேம் செய்யும் முதல் கொலை செமையான திரில்....யாரும் எதிர்பார்க்காத அசாசிநேஷன்..
வான்டேம்முக்கு கிழக்களை முகத்தில் வந்து விட்டது. ஆனால் அந்த உடம்பு முறுக்கு இன்னும் இந்த மனிதரை விட்டு போகவில்லை... எப்படித்தான் மெயின்டெயின் செய்கின்றாரோ? அந்த மெயின்டேன் பண்ணும் அந்த டெடிகேஷனுக்கு ஒரு சல்யூட்..
பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணோடு சட்டென ஏற்படும் தொடர்பு.. அது கடைசியில் அல்பாயுசில் போவதும்.. ஆனாலும் அதுக்கான பழிவாங்கள் காட்சியாக கடைசியில் ஒரு ஷாட் வைத்து இருப்பது செமை...
ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே ஒரே ஆளை கொலைசெய்ய நடக்கும் அந்த சேசிங் பர பர சர சர.....
உலகபடம் பார்ப்பது போல ஷாட்டுகள் வைத்து இருக்கின்றார்கள்..
படம் பக்கா ராவான சப்ஜெக்ட் என்பதால் படத்தை ஸ்கின் டோனை லைட்டாக வைத்து பிளாக் டோனுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து இருக்கின்றார்கள்..
வான்டேமுக்கு வேலைகொடுக்கும் நீக்ரோ...நீ ஓவர் ரீ ஆக்டிங் செய்யற என்று சொல்லும் போது, பதிலுக்கு நான் அப்படி ஓவர் ரீஆக்டிங் செய்தால் நீ உயிருடன் இருக்கமாட்டாய் என்று வான்டேம் சொல்லுவது செமை பஞ்ச்
முதலில் இந்த படத்தில் Scott Adkins பாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஸ்டீவன் ஸீகல்.. அவர் நடுவுலேயே கழட்டிக்கிட்டார்..ஆனா அவருகிட்ட சொன்ன கதையே வேறு.. Scott Adkins நடிக்க வந்த பிறகு திரைக்கதையில் சேஞ்சு பண்ணி எடுத்த படம் இது...
வில்லன் மாடல் அழகிகளை பார்த்து செலக்ட் செய்யும் காட்சியில் ஒரு பெண்ணின் மார்பகத்தை பாதி திரையில் வரும் படி வைத்து இருக்கும் அந்த ஒரு ஷாட் ஓப்பனிங் கலக்கல்...
==========
படத்தின் டிரைலர்
=========================
படக்குழுவினர் விபரம்.
Directed by Ernie Barbarash
Produced by Justin Bursch
Brad Krevoy
Patrick Newall
Written by Aaron Rahsaan Thomas
Starring Jean-Claude Van Damme
Scott Adkins
Music by Neal Acree
Cinematography Phil Parmet
Editing by Peter Devaney Flanagan
Studio
MediaPro Studios
Rodin Entertainment
Distributed by Samuel Goldwyn Films
Sony Pictures Home Entertainment
Release date(s)
Releases[show]
Running time 101 minutes
Country United States
Language English
Budget $8 million
Produced by Justin Bursch
Brad Krevoy
Patrick Newall
Written by Aaron Rahsaan Thomas
Starring Jean-Claude Van Damme
Scott Adkins
Music by Neal Acree
Cinematography Phil Parmet
Editing by Peter Devaney Flanagan
Studio
MediaPro Studios
Rodin Entertainment
Distributed by Samuel Goldwyn Films
Sony Pictures Home Entertainment
Release date(s)
Releases[show]
Running time 101 minutes
Country United States
Language English
Budget $8 million
==========================
பைனல்கிக்...
இந்த படம் பார்க்க வேண்டிய படம்... நல்ல பரபரப்பான திரில்லர் ..இந்த படம் மூவீஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
thanks jackie...
ReplyDeleteஅந்த கடைசி காட்சி தமிழ் படத்துலேருந்து சுட்ட மாதிரி இல்ல பாஸ்???
ReplyDelete- புதிய வாசகன்
அஜீஜ்
நீக்ரோ என்ற ஒரு சொல்லே கிடையாது . அது வெள்ளையர்கள் ஒரு இனத்தை அவமான படுத்த உருவாக்கிய சொல். இந்த உலகத்தில் மக்களை ஆப்ரிகன்ஸ் ,ஆசியான் ,அமெரிகான்ஸ் என்றே அடையாள படுத்த குடும் . தமிழர்களை தமிழர்கள் என்று சொல்லாமல் பண்றீகள் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி தான் "நீக்ரோ " என்ற சொல்லும். அது ஒரு தடை செய்ய பட்ட வார்த்தை. தயவு செய்து தவிர்கவும். அதே போல் வெளிநாட்டிற்கு செல்வதானால் தப்பி தவறி "நீக்ரோ" என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் .
ReplyDeleteநான் நினைக்கிறன் இதுல Assassins - 1995 ஒட பாதிப்பு நிறைய இருக்கும் எண்டு.......
ReplyDeleteMM Good Review Gonna Watch this Movie
ReplyDeleteFree Hacking Tips and Tricks
பாத்தேன் சார்.... அந்த VAN DAMME ட கரெக்டர் JEAN RENOட Leon: The Professional (1994)ல இருந்து உருவின மாதிரியே ஒரு பிரமை
ReplyDelete