டாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/2011) Tata Grande Blogger Meet chennai

(clicks jackiesekar )இண்டி பிளாக்கர் என்பது ஒரு வலை திரட்டி..அவர்கள் இந்தியாவில்  உள்ள எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இண்டி பிளாக்கரில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே  அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். போன முறை நமது  பதிவுலநண்பர்கள்.. பலர் கலந்து கொண்டார்கள்....


இண்டி பிளாக்கர் உறுப்பினர்களுக்கு மாதத்தில் நான்கு மெயில்களாவது வரும் பெங்களூருவில் சந்திப்பு,லக்னோவில் சந்திப்பு கலந்து கொள்ளுங்கள் என்பதாய் அந்த செய்தி இருக்கும்... எனக்கு கம்பெனி இல்லாத காரணத்தால் நான் எங்கேயும் செல்வது இல்லை..


கடந்த வெள்ளிக்கிழமை கூட நான் அது சம்பந்தமாக வந்த மெயிலை நான் மறந்து விட்டேன்... ஆன்லைனில் எதேச்சையாக போகும் போது லக்கி.. தலைவரே சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணுங்க.. குறைவான சீட்டுகளே இருக்கின்றது என்று ஆன்லைனில் தெரிவித்தார்...


அதே போல இப்படி ஒரு சந்திப்பு நிகழ இருக்கின்றது என்பதை தனது வலைதளத்தில் எழுதி, தமிழ் வலைபதிவர்கள் பாதி பேருக்கு செய்தியை கொண்டு  சேர்த்ததும் அவரே...இன்பேக்ட் அவர் சொல்லித்தான் நான் ரெஜிஸ்டர் செய்தேன். அதே போல இந்த விழாவில் நான் முதல் முறையாக கலந்து கொள்கின்றேன்.


கடந்த ஞாயிறு காலையில் வித்தகன் பாடல் வெளியீட்டு விழா  சத்தியம் தியேட்டரில் நடந்தது அதில் கலந்து கொண்டு விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தேன்..

ஹீயாத் ஸ்டார் ஓட்டல் இப்படி பொலிவு பெரும் என்று நான் கனவிலும் நான் நினைக்கவில்லை...

பல வருடங்கள் கட்டி முடிக்கபடாத நிலையில் இருந்த கட்டிடம். இன்று கம்பீரமாக எழுந்து நிற்க்கின்றது. கார் பார்க்கிங் மூன்று பேஸ்மென்ட்டுகளில் கட்டி வைத்து இருக்கின்றார்கள்..

நண்பர் அடலேறுவைதான் முதலில் பார்த்தேன். அதன்பிறகு நண்பர்கள் வந்தார்கள்..

முதலில் என்டர் ஆனதும் வாலின்டியர் நமது இ மெயிலை ரிஜிஸ்டர் செய்ய சொன்னார்கள்..  பாக்சில் அடித்தேன்..பின்னால் திரும்பி திரையை பார்த்தேன்.. அதில் எனது போட்டோ போட்டு ஜாக்கிசேகர்  வந்து சில நொடிகள் ஆகின்றன என்று செய்தி சொல்லியது.. அதே போல ரெஜிஸ்டர் செய்தவர்கள்  விபரங்கள் உடனுக்குடன் பெரிய திரையில் தெரிந்து கொண்டு இருந்தது...
(clicks jackiesekar )
 

ரிஜிஸ்டர் செய்து முடித்தஉடன் கையில் ஒரு சாப்பாவை குத்தினார்கள்.. என் கருப்பு தோலில் அந்த சாப்பாவை குத்தினால் தெரியாது என்ற காரணத்தால் உள்ளங்கைக்கு சற்று மேல் புறத்தில் குத்தச் சொன்னேன்... வாலின்டியர்  சிரித்தார்...நம்ம கஷ்டம் நமக்குதானே தெரியும்....உள்ளே டாடாவின் புதிய காரான கிரான்ட் நிறுத்தப்பட்டு இருந்தது..பதிவர் சென்னை பித்தன் அந்த கார் எதிரில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னார்.. நண்பர்கள் எடுத்தார்கள்.258 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ் வலைப்பதிவர்கள் ஒரு 25 பேர் அளவில் கலந்து கொண்டார்கள்.. வழக்கமாய் நான் அதிகம் சந்திக்காத பல பேர் என்னிடம் கைகுலுக்கி தாங்கள் ஆங்கில வலை வைத்து இருப்பதாகவும் தொடர்ந்து என்பதிவுகளை  வாசிப்பதாகவும் தெரிவித்தார்கள்..இரண்டு மூன்று பெண்கள் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்..

(clicks jackiesekar )


நான் முன் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது அரங்கு நிறைந்து காணப்பட்டது...மொத்தம் எழுபத்தி ஜந்து பேர் ஆளுக்கு 42 செகன்ட்...258 பேரில் ரேண்டம்மாக எழுபத்தி ஐந்து பேரை செலக்ட் செய்து இருந்தார்கள்.. ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும் போது அடுத்து யார் பேசவேண்டும்? என்று பெயரை திரையில் போட்டோவோட பிளாக் நேம் உட்பட வரச்செய்து இருந்தார்கள்..

42 செகன்ட்டில் பேசிமுடித்த விடவேண்டும்.. இல்லையென்றால் பக்கத்தில் நிறுத்தி இருந்த காரில் இருந்து எச்சரிக்கையாக ஹாரன் அடித்தார்கள்..

தமிழ் பதிவர்களில் அன்புடன் மணிகண்டன் முதலில் அறிமுகபடுத்திக்கொண்டு பேசினார்... ஆங்கிலத்திலலும் தமிழிலும் பேசினார்.. இன்னும் சில நண்பர்கள் பேசினார்கள்.. அடுத்து என் பெயர் திரையில் வந்தது... மிகப்பெரிய கைதட்டல் எனக்கு கிடைத்தது.. அந்த கைதட்டல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை மாற்ற ஆங்கில பிளாக்கர்களிடம் ஏற்ப்படுத்தி இருந்தது.. யாருய்யா இவன்  என்று பலர் கவனித்தார்கள்.. பின் சீட்டில் இருந்த  தமிழ்பதிவுலக நண்பர்கள்.. ஜெய் ஜாக்கி என்று எல்லாம் கோஷங்கள் எழுப்பி கலாய்த்தனர்.. எனக்கு பிறகு கார்க்கி வலைமனை சுகுமார் போன்ற நண்பர்கள் அறிமுகபடுத்திக்கொண்டார் தமிழ் பதிவுலகில் ஒரு ஆறுபேருக்கு ரேண்டம்மாக வழங்கப்பட்டது.. ...மற்றவர்கள்  யாருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை..
  (photos sashi)


அதே போல இது கவிதை அல்ல என்ற தளத்தில் எழுதும் நண்பர் பிளாக் எழுத ஜாக்கி போன்றவர்கள் இன்ஸ்பிரேஷன் என்று சபையில் சொன்னார்...அது மிகப்பெரிய சந்தோஷம்..

அதன் பிறகு போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன...
 (clicks jackiesekar )


300க்கு மேற்ப்பட்ட உலகபடங்கள் எழுதி இருக்கின்றேன் என்று  சொன்னதாலா? அல்லது நிறைய பேர் அறிந்த ஆள் என்பதாலா என்று எனக்கு சரியாக தெரியிவில்லை...எனக்கு பரிசு கொடுத்தார்கள்.. பரிசுப்பொருள் ஒரிஜினில் சுவிஸ் ஆர்மி  கத்தியை கொடுத்தார்கள்...
அடுத்த செக்மன்ட்டில் டாடா கிரண்ட் கார் பற்றி சின்ன இன்ட்ரோவும் அதை பற்றிய விளம்பர படத்தையும் காட்டினார்கள்..

அதன் பிறகு நிறைய போட்டிகள்.. சின்ன சின்ன போட்டிகள்.. பரிசுகளை உடனுக்குடன் வழங்கினார்கள்..

டி பார்ட்டிக்கு பிரேக் விட்டு இருந்தார்கள்.. அந்த சமயத்தில் இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது எடுத்த ஃபன்னி புகைபடங்கள் பகிர்ந்து கொள்ள சொல்லி புகைபடப்போட்டி ஒன்றை வைத்தார்கள்.
(photos chennai piththan )
 ===================

(clicks jackiesekar )

இந்த மீட்டிங்கில் நடந்த ஒரு பெரிய கவுரவமான விஷயம் நண்பர் அதிஷா எழுதிய கதையை  ஸ்டெஜ் பிளேவாக போட தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள்... அது ஒரு போட்டி ...பிளாக்கிலாக்ஸ்...ஒன்றரை லட்சம் இண்டி பிளாக் குழுமத்தில் அந்த போட்டிக்காக 3500 கதைகள் போட்டியில் கலந்து கொண்டன...

அதில் மூன்று கதைகள் போட்டியில் வெற்றி பெற்றன.. சென்னை தமிழில் ஜென் தத்துவத்தை மையமாக கொண்டு அதிஷா எழுதிய அந்த கதையும் ஒன்று.. கதையை ஸ்டேஜ் பிளேவாக போடபோகின்றார்கள்... அது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.. அதனை மேடையில் பெருமையாக சொன்னார்கள்..
(photos chennai piththan )


எல்லாம் நல்லபடியாக நடந்தது... பெருமையாகவும் இருந்தது.. எல்லாம் அந்த  அறிவிப்பு வரும் வரை...


ஒரு டிஸ்கஷன் நடக்க போகின்றது என்று அறிவித்தார்கள்.. நிறைய பேர் இந்த இடத்தில் ஆர்வமாக நான் என்ன சொல்லபோகின்றேன் என்று படிக்க  காத்து இருப்பீர்கள்..  என் கருத்தை சொல்லிவிட்டேன்.. அதனால் அந்த சாப்டரை விட்டு விட்டு அடுத்து செல்வதையே  நான் விரும்புகின்றேன்...
(clicks jackiesekar )

நிறைய நண்பர்கள் கைகுலுக்கி நிறைய எழுதுங்கள்.. நீங்கள் அறிமுகப்படுத்தும் படங்கள் அத்தனையும் பார்த்து இருக்கின்றேன். என்று சொன்னார்கள்.. பெண்கள் பலர் வந்து  அறிமுகப்படுத்திக்கொண்டர்கள். சிலர் புதிதாய் என்னை இப்போதுதான் அறிந்தவர்கள், எனது வலைப்பூ முகவரியை எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள்..


 (photos sashi)


மைக்கில் பேசும் போட்டடோவில் எனக்கு வலது புறம் இருக்கும் நண்பர் ஜாக்கி உங்க கிட்ட நான் ஆட்டோகிராப் எதையும் எழுத சொல்லப்போறதில்லை .. காரணம் உங்களை நான் ரெகுலரா வாசிக்கறவன்...நீங்க ஒரு செலிப்பிரிட்டி என்று போகின்ற போக்கில் அடித்து விட்டு சென்றார்.. யப்பா சாமிங்களா...செம பார்ம்ல இருக்கிங்க..


வந்த அனைத்து நண்பர்களோடு மிகப்பெரிய குரூப்  போட்டோ நிற்க்க வைத்து எடுத்தார்கள்...ஆனால் கணனி மென்பெருட்கள் வடிவேலு ஆர்ரை  மட்டும் மறக்கவேமாட்டேன்..
  (photos sashi)டி சர்ட் கொடுத்தார்கள்....

விழா மிக நிறைவாக இருந்தது...நல்ல விழாவை அமைத்துக்கொடுத்த இண்டி பிளாக்கர் குழுமத்துக்கும் விளம்பரதாரர் டாடா (கிரான்ட்) நிறுவனத்துக்கும் நன்றிகள்..

இந்த உலகத்தில் யாருமே ஆதாயம் இல்லாம எதையும் செய்யமாட்டாங்க... நீங்க, நான் எல்லோரும் அப்படித்தான்..இண்டி பிளாக்கர் இந்திய அளவில் செயல்படுவதால் அவர்களுக்கு நல்ல ஸ்பான்சர் கிடைப்பதால் நிகழ்ச்சியை கிராண்டாக நடத்துகின்றார்கள். அதனை கொச்சைப்படுத்த வேண்டாம்...நிகழ்ச்சி நடத்தியவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தினார்கள். அடுத்த முறை இந்த சந்திப்பு சென்னையில் நடப்பது சந்தேகமே...நடந்தால் சந்தோஷம்.. நிறைய நண்பர்கள் வட்டம் மற்றும் புதிய அறிமுகங்கள்  கிடைத்தது.. வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இண்டி குழுவினருக்கு மீண்டும் நன்றி


கார்க்கி குருப் போட்டோ எடுத்து முடித்தவுடன் ஒரு டயலாக் சொன்னார்...


எந்த ஊருக்கு போனாலும் நாமதான் ஆளனும்... அந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கனும்னு சொன்னார்... ஏதுக்கு சொன்னார்னு  தெரியலை....??


========பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..


குறிப்பு
 புகைபடங்கள் எடுத்து வலையேற்றிய  பதிவர் சசி மற்றும் சென்னை பித்தனுக்கு என் நன்றிகள்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

22 comments:

 1. இதுதான் நடந்ததா?

  மாறன் வீட்ல ரெய்டு நடந்தப்ப சன் நியூஸ் பார்த்த எபெஃக்ட்! ஜெய் ஜாக்கி! :))

  ReplyDelete
 2. ஹலோ சார் உங்கள் வரிகளிலேயே இந்த விழா எப்படி இருந்திருக்குமென்று என்னால் அனுபவிக்க முடிகிறது கலக்குங்க....

  ReplyDelete
 3. ஒரு நிகழ்வை எப்படி எழுதவேண்டும் என உங்களிடம் கற்றுக்கொள்ளலாம் போல.... நன்றி. பாராட்டு்கள்

  ReplyDelete
 4. அன்பின் ஜாக்கி,

  நிகழ்ச்சி குறித்து உங்களின் விவரணை நன்றாக இருந்தது.

  உங்கள் பெயர் சொன்னதும் வந்த கைத்தட்டலுக்கு என்ன காரணம் தெரியுமா.?நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது நான் போட்ட இந்த டீவிட் தான் காரணம் :)) LOL
  “Is popular tamil blogger Jackie there.?#indiblogger”

  ReplyDelete
 5. இது உங்க எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரம்!!!
  வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 6. Good Post!

  //Shankar G said.. இதுதான் நடந்ததா? //
  ஆமாம் ஜி.. :))

  ReplyDelete
 7. நிகழ்வின் போது குறிப்பு எடுக்காமல் நினைவிலிருந்து நிகழ்ச்சினை எழுதுவது ஜாக்கியின் தனித்தன்மை..வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 8. Sekar Sir - அந்த மட்டும் Discussion என்ன என்று சொல்லிடுங்க :)

  ReplyDelete
 9. சிறப்பான பதிவு...மேலும் தொடரட்டும்...ஜாக்கியின் அட்டகாசங்கள்!!!!!

  ReplyDelete
 10. அருமை ஜாக்கி, எழுத்தின் நாசூக்கும், நாகரிக, பண்பட்ட எழுத்துக்கள் வாசித்தேன்.

  நிறைய உயரம் தொட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. உங்கள் கருத்தை எதிர்பார்திருந்தேன் ஜாக்கி. வேறு பதிவில் பின்னூட்டமாக எழுதிய உங்கள் கருத்தை இந்த பதிவிலும் பதிந்திருக்கலாமே? அதை படிக்காதவர்களுக்கு உதவும்.

  //அடுத்த முறை இந்த சந்திப்பு சென்னையில் நடப்பது சந்தேகமே// அந்த அளவுக்கு கலக்கியாச்சா? ;-)

  உங்கள் ப்ளாகில் பின்னூட்டம் இடுவதில் பிரச்சினை இருக்கிறது. I am getting "Your account number does not have access" error.

  அன்புடன்,
  அமரபாரதி

  ReplyDelete
 12. I received that error only in Internet Explorer. This feedback is from Google Chrome browser.

  ReplyDelete
 13. It looks like you had a lot of fun.
  Nice pics and interesting post.

  ReplyDelete
 14. அகில இந்திய அளவில் புகழ் பெற வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 15. நல்ல கவரேஜ்!
  நன்றியுடன்.

  ReplyDelete
 16. சிறப்பான பதிவு Jackie
  Click the below
  http://www.youtube.com/watch?v=y3O-Iisoi_c

  ReplyDelete
 17. மாறன் வீட்ல ரெய்டு நடந்தப்ப சன் நியூஸ் பார்த்த எபெஃக்ட்!

  சிரித்துவிட்டேன் ஷங்கர்.

  ReplyDelete
 18. HI Jackie,
  The below URL contains your Indiblogger Introduction. http://www.youtube.com/watch?v=y3O-Iisoi_c

  Regards,
  Muthuvel
  http://ivaikavidhaialla.blogspot.com

  ReplyDelete
 19. Jai Jackie!
  அன்று நிகழ்ச்சியில் நடந்ததை அப்படியே சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!
  http://www.youtube.com/watch?v=y3O-Iisoi_c - this video also super. thanks for sharing.

  ReplyDelete
 20. Great Boss. Congrats to JackieSekar. You are always on my mind

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner