உங்கள் அம்மா ஒரு பெரிய பண்ணைக்கு அதிபதி...வயது முதிர்வின் காரணமாக இறந்து போய்விட்டார்.. அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும்?? அதை அவர் உயிலில் தெரிவித்து இருக்கின்றார்..
என்னை எரித்து அந்த அஸ்த்தியை நம்ம சென்னை ஈசிஆரில் இருக்கும் முட்டுக்காடு பாலத்தின் நடுப்பகுதியில், என் சாம்பலை தூவி விட்டுவிடுங்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஒரு ஆர்வம் இயல்பாய் வரும்தானே..
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தனது பண்ணை வீட்டில் தனது அஸ்தியை தூவச்சொல்லாமல் முட்டுக்காடு பாலத்தில் அந்த சாம்பலை ஏன் தூவ அம்மா சொல்ல வேண்டும்...? அந்த பாலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? அப்படி என்ன முக்கியத்துவம்.. ???
உயிரோடு இருக்கும் காலத்தில் இப்படி ஒரு ஆசை தனக்கு இருக்கின்றது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? என்ன காரணம்...? பாலத்தை பற்றி ஒரு பேச்சுக்கூட எந்த உரையாடலிலும் நிகழ்ந்தது இல்லை.... ஏன் ?ஏன்? என்ற கேள்வி இயல்பாய் வரும் அல்லவா??
======
உங்கள் அம்மா இறந்த பிறகு ஒரு கடிதம் உங்களுக்கு எழுதி விட்டு சென்று இருக்கின்றார்.. அந்த கடிதத்தில், நான் உன் அப்பா இல்லாத போது நான் ஒரு வெளியாளோடு செக்ஸ் வைத்துக்கொண்டேன் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்... அம்மா என்றாலும் கண்டாரஓழிமுன்டை... எப்படி அப்பாவுக்கு துரோகம் செஞ்சே??? அவன் உனக்கு என்ன குறை வச்சார்???என்று அசிங்கமாக திட்டுவீர்கள்...
சரி அமெரிக்காவுல இருந்தா? அங்கயும் அப்படித்தான்....உலகம் எல்லாம் உள்ள மனிதர்களின் மனநிலை ஒரே மாதிரிதான்.. என்ன சில நாடுகளில் உணர்வுகளின் வெளிப்பாடு கூடவோ அல்லது குறையவோ இருக்கும் அவ்வளவே...
என்ன.... உயிரோடு இருக்கும் போது இந்த மாதிரி அம்மா வேறு ஒருவருடன் படுக்கையை அப்பா இருக்கும் போதே பகிர்ந்து கொள்கின்றாள் என்று நம்மவர்களுக்கு தெரிந்தால்? அரிவாள் எடுத்து வெட்டிப்போட்டு விடுவார்கள். ஆனால் அம்மா... ஏன் அப்பா இருக்கும் போது அடுத்தவனுட்ன் செக்ஸ் வைத்துக்கொண்டார் என்பதை யாரும் யோசிப்பதேயில்லை..
ஆண்பிள்ளையை விட ஒரு பெண்பிள்ளை மிக நிதானமாய் ஆராய முடியும்...காரணம் ஒரு பெண்ணின் மன ஓட்டத்தில் அதனை அனுக முடியும் என்பதால்... அப்படி ஒரு அம்மாவின் பர்சனல் கதை... தான் இறந்த பிறகு தன் பிள்ளைகளுக்கு அந்த கதை தெரியவேண்டும் என்று விரும்பி,இறக்கும் போது மன பாரத்தை இறக்கி வைத்து இறந்து போன ஒரு அம்மாவின் கதைதான் இந்த படம்...
=========
The Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன??
மைக்கேல்,கரோலின் இரண்டு பேரும் அண்ணன் தங்கச்சி.. அவுங்க அம்மா பிரான்சிஸ்கா (MeryStreep) இறப்புக்கு அவர்கள் வாழ்ந்த பண்ணை வீட்டுக்கு வருகின்றார்கள்... அம்மாவின் உயிலை படிக்கின்றார்கள்.. ஆனால் அம்மா ஒரு பர்சனல் கதையை கடிதத்தில் எழுதி இருக்கின்றார்..அதில் தான் ஒரு போட்டோகிராபருடன் நான் காதல்வயப்பட்டேன் என்று எழுதி இருக்கின்றார்..என் அஸ்தியை மெடிசன் கவுண்ட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் தூவ வேண்டும்.. என்றுசொல்லி இருக்கின்றார்..மேலும் விபரங்கள் தேவை என்றால் மூன்று நோட்டு புத்தகத்தில் அந்த சம்பவங்களை விவரித்து இருக்கின்றேன் என்று சொல்ல.. அதனை பிள்ளைகள் படிக்கும் போதுதான் தெரிகின்றது.. நான்கே நாட்கள் அந்த காதல் தோன்றி மறைந்து இருப்பதை தெரிய அந்த மூன்று நோட்டு புத்தகங்கள் படிக்க படிக்க அந்த காதல் கதை காவியமாக விரிகின்றது..
==================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
இந்த படம் ஒரு காதல் காவியம்...இந்த படத்தை இயக்கி தயாரித்து இருப்பது கிளின்ட் ஈஸ்ட்வுட்
கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்...
20 ஆம் நூற்றாண்டில் 50 மில்லியன் காப்பிகள் விற்றுத்தீர்த்த
த பிரிட்ஜ் அப் மேடிசன் கவுண்ட்டி என்ற புத்தகத்தின் திரைவடிவம்தான் இந்த படம்..
இந்த பெருமைக்குறிய நாவலை எழுதியவர்..ராபர்ட் ஜேம்ஸ் வால்லர்.. ராபர்ட் ஜேம்சின் வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு இந்த நாவல்... இதை கிளின்ட ஈஸட்வுட் திரைக்கதை அமைத்து செல்லுலாய்டில் சிறைபிடித்து காலத்துக்கும் அழியாத காவியமாக மாற்றிவிட்டார்...
மொத்தம் இரண்டு மெயின் லொக்கேஷ்ன், மெயின் கேரக்டர்கள் இரண்டு பேர் அவ்வளவுதான் படம்...135 நிமிஷம் ரொம்ப இண்ட்ரஸ்ட்டா கொண்டு போனது கிளின்டின் இயக்கத்திறமை என்றால் அது மிகையில்லை...
கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் இந்த படம் மெல்லிய உணர்வுகளை மிக அழகாக வெளிக்கொண்டு வந்து இருக்கின்றது.
ஒரு நேஷனல் ஜியாகாரபிக் புத்தகத்த்துக்கு ஒரு பிரிட்ஜை போட்டோ எடுக்க வரும் போட்டோகிராபர் கிளின்ட்.. அவர் வழி கேட்கத்ததான் பிரான்சிஸ்க்காவிடம் (மெரில்) கேட்கின்றார்...அதில் தோன்றும் நட்பும் அது மெல்ல மெல்ல படுக்கை மற்றும் வாழ்க்கையையே அந்த போட்டோகிராபருடன் நாலு நாளில் கழிக்கும் அளவுக்கு செல்வதை மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றார்..
என்னதான் வழி கேட்டவனாக இருந்தாலும் ஒருவனின் செயல் பிடித்தால்தான் அவனுடன் அடுத்த பேச்சையே பெண்கள் பேசுவார்கள்.. அவனின் செயல் பிடித்த காரணத்தால், வழிகாட்ட சென்று என்று கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு சுவாரஸ்யம் பெருவது அருமை...
வரும் போன்கால்கள் எல்லாவற்றையும் எடுத்து பேசும் போது, கணவர்பெயர் மட்டுமே சொல்வது என அந்த குடும்பத்தலைவியின் வாழ்க்கை மிக அழகாக சொல்லப்படுகின்றது...
சிலரிடம் மட்டுமே பேசும் போது மனது லேசாகும், இன்னும் கொஞ்சம் பேசத்தோனும்..அதுவரை அந்த கேரக்டர் அதிகம் பேசாமல் காட்டிவிட்டு கிளின்ட் இடம் மட்டும் அவர் எது பேசும் போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாக காட்டுவது நல்ல கேரக்டரசேஷன்.
மாலை எனக்கு வேலை இருக்கின்றது என்று சொல்லும் போது வெட்கத்தை விட்டு மாலை நீ வர வேண்டும் என்று சொல்வது கவிதை..
ஒரு போன்காலுக்காக வெயிட் செய்து கொண்டு இருப்பது, கார் வருகின்றதா என்று வெறுமையான சாலையை பார்த்துக்கொண்டு இருப்பது என்று நடிப்பில் மேர்ரி ஸ்டிரிப் பின்னி இருக்கின்றார்...
போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏதேச்சையாக கிளின்ட் சட்டை காலரில் கை வைத்து அது மெல்ல மெல்ல உதடு மற்றும் படுக்கை நோக்கி போவதையும்... அதுக்கு முன் மெல்ல தயக்கங்களை உடைக்க கிஸ் பண்ணும் அந்த காட்சி நான் இதுவரை இதுக்கு முன் கண்டிராத ரொமான்ஸ் காட்சி.
நன்றாக கிஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது உடை நெகிழ்ந்து பிராவரை தெரியும் போது நெகிழ்ந்த உடையை சரிசெய்து விட்டு இப்போது வேண்டாம் என்றாலும் சொல் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கிளின்ட் சொல்லும் இடம் கண்ட்ரோலாக இருக்கும் கேரக்டரை வெளிப்படுத்தும் காட்சி..
நாளை இந்த வாழ்க்கை இல்லை என்றதும் வரும் கோபத்தில் கிளின்டை திட்டுவது.. போட்டோ எடுக்கும் போது கூச்சத்தில் தவிப்பது என்று நடிப்பில் ஸ்கோர் செய்கின்றார் மெரில்.. அதே போல கிளைமாக்சில் சிக்னலில் தவிக்கும் தவிப்பு வாவ்...
இவ்வளவு சந்தோஷத்தை அம்மாவுக்கு ஒருவன் கொடுக்கின்றான் என்றால் அவனுடன் வாழாமல் எதுக்கு அப்பாவுடன் கடைசிவரை ஏன் அம்மா காலம் தள்ளினாள் என்று கேட்க ? அதுக்கு கடிதத்தில் அம்மா சொல்லி இருக்கும் பதில் வாழ்வின் நிதர்சன உண்மை...
அந்த பிரிட்ஜ் ஒரு கதாபாத்திரமாக மாறி இருப்பதும் படம் முடியும் போது அந்த பிரிட்ஜை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றுவதும் இந்த படத்தின் வெற்றி என்பேன்......
படத்தின் போட்டோகிராபி கண்ணில் ஓட்டிக்கொள்ளவேண்டும் முக்கியமாக ரோட் ஷாட்ஸ் ஏரியல் வீயூவ் ஷாட் எல்லாம் அசத்தல்.. கடைசி டைட்டில் எரியல் வீயூவில் அந்த பிரிட்ஜை பல கோணங்களில் காட்டுவது வாவ்....
கிளின்ட் இடம் மெரில்லுக்கு வரும் பார்சல் அதில் இருக்கும் கேமரா? அதுவரை அவளே பார்க்காத போட்டோ...அந்த சீனில் வரும் பின்னனி இசை.. ஒம்மால இதுதான்டா படம்னு சொல்ல வைக்கும்..
தாலிகட்டி, வருடத்துக்கு ஆறு செட் துணி எடுத்து கொடுத்து,இரண்டு வருடத்துக்கு 3பவுன் செயின் எடுத்து கொடுத்து, வாரத்துக்கு இரண்டு முறை வியற்வை வர மனைவியோடு புரண்டு விட்டால், மனைவி சந்தோஷமாக இருக்கின்றாள் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..அப்படி நினைப்பவராக இருந்தால் அவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டும்..
பெண்களுக்கு இருக்கும் மனஉணர்வுகளை 80 சதவீத கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லை. அவர்கள் விறுப்புவெறுப்புக்கு ஆண்கள் மதிப்பு கொடுப்பதே இல்லை..அதை என்னவென்று கேட்ககூட பலர் விரும்புவதில்லை...
படம் பார்த்து விட்டு,உங்களுக்கு திருமணம் முடிந்து இருந்தால் உங்கள் மனைவியை அழைத்து மெலிதாய் அனைத்து உதடு நோகாமல் முத்தமிட்டு அவள் காதில் ஐலவ்யூ என்று உங்களை சொல்லவைப்பதே இந்த படத்தின் வெற்றி..
==============
படம் வாங்கிய விருதுகள்..
Won
ASCAP Film and Television Music Awards:
Top Box Office Films
Blue Ribbon Awards (Japan):
Best Foreign Language Film
BMI Film & Television Awards:
BMI Film Music Award (Lennie Niehaus)
Kinema Junpo Awards (Japan):
Best Foreign Language Film Director (Clint Eastwood)
Mainichi Film Concours (Japan):
Best Foreign Language Film
Nominated
68th Academy Awards:
Best Actress in a Leading Role (Meryl Streep)
American Society of Cinematographers:
Outstanding Achievement in Theatrical Releases (Jack N. Green)
Awards of the Japanese Academy (Japan):
Best Foreign Film
César Awards (France):
Best Foreign Film
53rd Golden Globe Awards:
Best Actress in a Motion Picture - Drama (Meryl Streep)
Best Motion Picture - Drama
2nd Screen Actors Guild Awards:
Outstanding Performance by a Female Actor in a Leading Role (Meryl Streep)
ASCAP Film and Television Music Awards:
Top Box Office Films
Blue Ribbon Awards (Japan):
Best Foreign Language Film
BMI Film & Television Awards:
BMI Film Music Award (Lennie Niehaus)
Kinema Junpo Awards (Japan):
Best Foreign Language Film Director (Clint Eastwood)
Mainichi Film Concours (Japan):
Best Foreign Language Film
Nominated
68th Academy Awards:
Best Actress in a Leading Role (Meryl Streep)
American Society of Cinematographers:
Outstanding Achievement in Theatrical Releases (Jack N. Green)
Awards of the Japanese Academy (Japan):
Best Foreign Film
César Awards (France):
Best Foreign Film
53rd Golden Globe Awards:
Best Actress in a Motion Picture - Drama (Meryl Streep)
Best Motion Picture - Drama
2nd Screen Actors Guild Awards:
Outstanding Performance by a Female Actor in a Leading Role (Meryl Streep)
======
படத்தின் டிரைலர்
===========
படக்குழுவினர் விபரம்..
Directed by Clint Eastwood
Produced by Clint Eastwood
Kathleen Kennedy
Screenplay by Richard LaGravenese
Based on The Bridges of Madison County by
Robert James Waller
Starring Clint Eastwood
Meryl Streep
Music by Lennie Niehaus
Cinematography Jack N. Green
Editing by Joel Cox
Studio Malpaso Productions
Amblin Entertainment
Distributed by Warner Bros.
Release date(s) June 2, 1995
Running time 135 minutes
Country United States
Language English
Budget $22 million
Box office $182,016,61
=============
Produced by Clint Eastwood
Kathleen Kennedy
Screenplay by Richard LaGravenese
Based on The Bridges of Madison County by
Robert James Waller
Starring Clint Eastwood
Meryl Streep
Music by Lennie Niehaus
Cinematography Jack N. Green
Editing by Joel Cox
Studio Malpaso Productions
Amblin Entertainment
Distributed by Warner Bros.
Release date(s) June 2, 1995
Running time 135 minutes
Country United States
Language English
Budget $22 million
Box office $182,016,61
=============
===========
பைனல்கிக்..இந்த படம் டயலாக்குகள் நிறைந்த படம் அதனால் பார்க்கும் போது கவனம் தேவை... 17 வயதில் ஒரு பையன்,16 வயதில் ஒரு பெண் பிள்ளை ,இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் ஒரு பெண்மணியின் கனவுகள் என்று சீன் பை சீன் ரசித்து...... பாத்தே ..பார்த்தே...பார்த்தே தீரவேண்டியபடம்.சென்னை மூவிஸ்நவ் டிவிடி கடையில் இந்த படத்தின் டிவிடி கிடைக்கின்றது.
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
என்னைய்யா இப்படிச்சொல்லி பாடத்தைப் பார்த்தேயாகணும் என்று தீர்மானம் போடவைத்துவிட்டீர்.
ReplyDeleteரொம்ப விரிவான விமர்ச்னத்திற்கு thanks
ReplyDeleteஜாக்கியை நக்கல்விட்டு பதிவு போட்டு, பெரிய ஆளாக ஆக நினைக்கும் பொறம்போக்கு ........ பசங்க இப்போவாவது திருந்தலாம். தான் ரசிச்சத எவ்ளோ அழகா கோர்வையா சொல்லி படிக்கறவங்க அந்த படத்தையே பக்கற மாதிரி எழுதி இருகாரு.
ReplyDeleteஇதுதான் எழுத்து...........
அவரோட உருவத்தை வைத்து நக்கவிடுவது..........etc இதெல்லாம்--------- .மாறி பசங்களோட வேல. ............ கொம்மால அடக் ......... அடங்குங்கடா
Dear Jackie
ReplyDeleteIf I click on the udanz like button it takes to the submit URL page. Normally it should add a vote right? Could you please check this.
The article is very nice
Thanks
Aravind
Dear Jackie,
ReplyDeleteReally very nice article thanks.
Then you see the Nobody Knows (2004)Japanese movie
i think you will like it and any of the people want to see this movie, so don't forget to see please. If you seen the movie please give some article about that movie.
Thanks Again
Hi Jackie,
ReplyDeleteI have heard that many people complaining about your Tamil spelling errors. I just found a Tamil spelling checker website, where we can input Tamil sentences, and it will check the words and highlight you the words with wrong spelling, and also it provides the correct replacement word for the wrong one. It is still in testing stage, but works well. The service is 100% free. May be you can have a look at this site and also inform to everyone who is in need of a spell checker.
Here is the link to the spell checker page.
http://www.searchko.in/spellchecker_test/index.html
Thanks,
Elangovan
அன்பின் ஜாக்.கி ..
ReplyDeleteபோதும் இப்படி எல்லாம் ..செய்யாதிர்கள்..
நீங்கள் சொல்லும் எல்லா படங்களும் சூப்பர் ராகம் தான்..
ஆனால் நேரம் தான் இல்லை..
அம்பலத்தார் சொன்னது போல
நானும் ரிபீட்டு..
"என்னைய்யா இப்படிச்சொல்லி பாடத்தைப் பார்த்தேயாகணும் என்று தீர்மானம் போடவைத்துவிட்டீர். "
டிஸ்கி..
[நேரமின்மை கருதி..குறைவான..feedback..]
என்றும் நட்புடன்..
NTR