சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு


ஆல்பம்..

தோ பாரும்மா ஏற்க்கனவே உங்க ஸ்டேட்டுக்கு மின்தட்டுப்பாடு அதிகம் இருக்கு...
இப்ப கூடங்குளம் அனுமின்சாரம் ரெடியானதான்.. உங்க தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று ஒரு லட்டரை பிரதமர், ஜெயலலிதாவுக்கு எழுதி வைக்க, அந்த லட்டரே எனக்கு வந்து சேரவில்லை என்று ஜெ சொல்லி இருக்கின்றார்... கலைஞர் பிரதமருக்கு லட்டர் எழுதினா நக்கல் விட்டானுங்க.. இப்ப பிரதமரும் கூடங்குளம் எதிர்ப்பு தொடர்பா முதல்வர் ஜெவுக்கு லட்டர்தான் எழுதி இருக்கார்.. லட்டர்ல என்ன எழுதி இருக்கார்னு தமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஊடகங்களுக்கும் தெரிஞ்சி போய் இருக்கு..அந்த  வச்சி வீச்சு வீச்சுன்னு கத்திகிட்டு கிடக்குதுங்க...ஆனா இதுல கொடுமை என்னன்னா இந்த லட்டர் இன்னும் என் கைக்கு கிடைக்கலைன்னு இந்தஅம்மா சொல்லுது... நல்லா இருக்கு கதை... டெல்லி என்ன வாஷிங்டன் டிசிக்கு பக்கத்துலயா இருக்கு??? ஏம்பா நான் சரியாதான் பேசறனா??? உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடன் கூடன்குளம் அணுமின் நிலையம் வேலைகள் தொடங்கும்.. பார்ப்போம் இப்போது சொன்னது போல மக்கள் பக்கம் ஜெ இருக்கின்றாரா? இல்லையான்னு...??? காரணம் மக்களை சந்திக்க இதோடு 2014 அன்று சந்தித்தால் போதும் அல்லவா???
======================
நாளை தமிழ்நாட்டில் உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல் நடக்க போகின்றது... தமிழ்நாட்டில் இருக்கும், சின்ன முட்டு சந்தை கூட விட்டு வைக்காமல்,  ஆட்டோவில் கட்டி இருக்கும் கூம்பு ஒலிபெருக்கி மூலம், உங்கள் வீட்டு பிள்ளைக்கு ஓட்டுபோட பொற்பாதகமலங்களை தொட்டு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... எல்லா வீட்டு சுவர்களிலும் சின்ன சின்ன வேட்பாளர்களின் பெயர்கைளையும் சின்னங்களையும் தாங்கிய நோட்டிஸ்களை ஓட்டிச்செல்லுகின்றார்கள். காலஓட்டத்தில் காணமல் போன பல பொருட்களை சின்னங்களாக வைத்து இருக்கின்றார்கள்.. கை உருளை, அரிக்கேன் விளக்கு என்று பெரிய லிஸ்ட்டே இருக்கின்றது..

கடைசியாக அதோ இதோ என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்து விட்டார்கள்.. நில முறைகேட்டி கீழ் இந்த கைது நடவடிக்கை..இதனிடையே ஊழலுக்கு எதிராக ஆதவானி ரதயாத்திரை மேற்க்கொள்ள போகின்றார்.. பெங்களூருக்கும் வர இருக்கின்றார்... அன்னா ஹசாரே டிரண்ட்டை எல்லோரும் கையில் எடுப்பதுதான் கொடுமை.

======================
கூகுள் அறிமுகபடுத்திய (பிளாக்)வலையுலகம் போல அவர்கள் அறிமுகபடுத்திய கூகுள் பஸ் ரொம்ப பேமஸ் இன்பேக்ட் இந்த பஸ் காரணமாக பல பதிவர்கள் பதிவு எழுதுவதை விட்டு விட்டு கூகுள் பஸ்சில் சின்ன சின்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.. நிறைய மோதல்கள்.. சண்டை சச்சரவுகள்.. நெகிழ்வான உதவிகள், என்ற இந்த பஸ் என்னற்ற சாதனைகளை தமிழ் வலைபதிவர்களிடையே உருவாக்கியது என்றால் அது மிகையில்லை... பஸ்சில் பெரும்பாலனவ்ர்கள் தெரிந்வர்கள் என்பதால் நம் வீட்டு தாழ்வரத்தில் பனியன்  லுங்கியோடு வீட்டுக்கு வந்த நண்பரோடு உரையாடுவோமோ? அது போல சுதந்திரம் இதில் இருந்த காரணத்தால் இந்த பஸ் உலகில் பல நண்பர்கள் ஆக்டிவா இருந்தார்கள்.. இப்போது கூகுள் இந்த சேவையை மூடப்போவதாக சொல்லி இருக்கின்றது.,. பலருக்கு தூக்கம் இல்லை.. சிலர் ரொம்ப பீலிங் ஆகிவிட்டார்கள்.. எனக்கு வருத்தம் இருக்கின்றது.. சின்ன செய்திகைளை பகிர்ந்து கொள்ள நல்ல தளம் பஸ் என்பதில் சிறுதும் ஐய்யம் இல்லை. உங்களுக்கு  ஒன்று தெரியுமா? உலக அளவில் இந்த சேவை தோற்றுப்போன சேவை..ஆனால் அது நம்மவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குட் பை பஸ்..

=====================
இந்த வாரசலனப்படம்..

இண்டி பிளாக்கர் மீட்டில் நான்  பேசும் போது நிறைய கைதட்டல்கள்...நிறைய ஆங்கில பதிவர்களில் ஆண்களும் பெண்களும் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டு  தொடர்ந்து என்னை வாசிப்பதாக சொன்னது மகிழ்வை கொடுத்தது... நான் பிளாக் எழுத  ஜாக்கி போன்றவர்கள் இண்ஸ்பிரேஷன் என்று  சபையில் சொன்ன முத்துவேல் சிவராமனுக்கு எனது நன்றிகள்...இந்த வீடியோவுக்கும் சேர்த்துதான்....


======================
மிக்சர்..
 தமிழ்நாட்டுல இப்ப நடக்கற போராட்டத்துல பெரிய போராட்டம் கூடங்குளம் போராட்டம்... அதே போல பக்கத்து மனவாடுங்க ஸ்டேட்ல நடக்கற  ரொம்ப பெரிய போராட்டம் தெலுங்கானா....போராட்டம்..  தனித்தெலுங்கானாவேண்டி இரண்டு நாள் ரயில் மறியலால், வெகுதூரம் பயணம் செய்யும்  மக்கள் திண்டாடி போயிட்டாங்க..என்னைக்குதான் முடிவுக்கு வருமோ??
==========================
சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக   எதிர்க்கட்சிதலைவர் என்ற நல்ல வாய்ப்பு கிடைத்தும், தமிழகத்தில் இதுவரை நடந்த  எந்த முக்கிய பிரச்சனைக்கும் குரல் எழுப்பாமல்  இருக்கும் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்கின்றார்.. கொடுத்த வாய்ப்புக்கு அவர் இதுவரை என்ன செய்தார்? என்று தெரியவில்லை...??

==========================
பத்து மணிக்கு துயில் கலையும் யாழினி எட்டுமணிக்கே எழுந்துக் கொண்டாள்..எட்டு மணியில் இருந்து என்னிடம் அஅஅஅ, ஜஜஜஜ என்று நிறைய மாடுலேஷனில் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.. அவள் பேசிய எல்லா கேள்விகளுக்கும் எனக்கு புரிந்தது போல நான் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஒரு பைவ் ஸடார் சாக்லேட்டை அவளிடம் நீட்டினேன்எனக்கு அது சாக்லெட்..அவளுக்கு அது கலரான பேப்பர் இரண்டு நிமிடத்தில் பைவ்ஸ்டார் சாக்லெட்டை உறுமாற்றி கூழ் போல ஆக்கி விட்டாள்.. 

சாக்லேட்டை மேலாக, கீழாக, என பல நிலைகளில் கைகளால் பிடித்துக்கொண்டு ,அதனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்...பதில் வரவில்லை என்ற கோபமோ என்னவோ சாக்லேட்டை தரையில் போட்டு அடித்தாள் எவ்வளவோ இம்சித்தும் பைவ்ஸ்டார் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.... பைஸ்டார் போராட்டத்தில் களைத்து போன அவளின் அருகில் உட்கார்ந்து நான் என்னம்மா என்றேன்? உருண்டு வந்து என் கை பற்றிக்கொண்டாள்... என் கை பற்றிய அந்த வினாடியில் நானும் அவளும் நிறைய புரிந்துக்கொண்டோம்...
==================
முன்பெல்லாம் பெங்களூரில் இருக்கும் மனைவியை பார்க்க சென்னையில் இருந்து பஸ் எறினால் பஸ் கிருஷ்ணகிரியை தாண்டும் போது மனைவியை பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி குளிர் காற்றோடு வந்து தொற்றிக்கொள்ளும்..ஆனால் இப்போதெல்லாம் சென்னையில் பேருந்து ஏறும் போதே யாழினியை பார்க்க போகும் உற்சாகம் மனது முழுவதும் வந்து ஒட்டிக்கொள்கின்றது...

=================

இந்தவாரப்புகைப்படம்.

மணிஜியின் விளம்பரபடத்தில் நடிக்க வந்த டண் டணா டன்னுடன்....
=============================
பிலாசபி பாண்டி

ஒரு பெரிய  ஹாலில்  இருக்கும் கூட்டத்தில் இரண்டு பேர் மட்டும் செக்ஸ் பற்றி நினைக்க... மற்றவர்கள் சாப்பாட்டை பற்றி  நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த ஹாலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?? திருமணமண்டபம்.

 ==================
 நான்வெஜ்18+

ஒருத்தன் கேட்டான்... மச்சி  மேட்டடர் முடிஞ்ச உடனே உன் பொண்டாட்டிகிட்ட பேசுவியா? அதுக்கு அவன் சொன்னான்.. உடனே எல்லாம் பேச முடியாது... போனை தேடி எடுத்து பேறறதுக்குள்ள விடிஞ்சிடும்..ஆனா அவ செல்போன்ல பேசினா நான்  பேசுவேன். 
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

7 comments:

  1. // வீச்சு வீச்சுன்னு கத்திகிட்டு கிடக்குதுங்க... //

    இந்த மாதிரி வார்த்தையெல்லாம் யாழினி பாப்பா அழும்போது மனதில் தோன்றியிருக்கும்... கரெக்டா ஜாக்கி...

    ReplyDelete
  2. //ஒரு பெரிய ஹாலில் இருக்கும் கூட்டத்தில் இரண்டு பேர் மட்டும் செக்ஸ் பற்றி நினைக்க... மற்றவர்கள் சாப்பாட்டை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த ஹாலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?? திருமணமண்டபம்.//கலக்கல்

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.
    யாழினிக்குட்டி உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.

    -சே.குமார்
    http://vayalaan.blogspot.com

    ReplyDelete
  5. அன்னா ஹசாரே டிரண்ட் ?(உண்ணா விரதம் ) என்பதே காந்திய வழி தானே .அதை நாம தான் இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அது நம் கடமை தானே .
    ////- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த.

    - தன்னைச் சார்ந்த மக்கள் / தொண்டர்கள், தவறான காரியத்தில் ஏதோவொரு வேகத்தில் இறங்கிவிடும்போது, பரிகாரம் தேட / அவர்களை நல்வழிக்குத் திருப்ப.

    - மக்களின் மனசாட்சியுடன் பேசுவதற்கான கடைசி ஆயுதமாக பயன்படுத்த.

    - சண்டையிட்டுக் கொள்ளும் தனது இருதரப்பு மக்களை ஒன்றுபடுத்த.

    ஆம், மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம்./////---செங்கோவி பதிவிலிருந்து
    எனக்கு என்னவோ அன்னா காங்கிரஸின் அல்லக்கை என்றே தோணுது .

    யாழினி --நிறைய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது.கற்று கொள்ளுங்கள் .
    யாழினி கற்று கொடுப்பாள்

    ReplyDelete
  6. பிலோசொபி செமையா இருக்கு.
    யாழினி குட்டி பற்றிய பத்தி ஒரு குட்டி கவிதை போல் இருந்தது.
    மறுபடியும் சொல்றன் பிலோசொபி சூப்பர்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner