என்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…




பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு குழந்தைகளின் மீதான பிரியம், சின்ன வயதில், அவர்களுக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே அனிச்சையாக  தொடங்கி விடுகின்றது.. ஆனால் ஆண்குழந்தைகளுக்கு அப்படி இல்லை...



நீங்கள் கவனித்து இருக்கலாம்..ஒரு வீட்டுக்கு கைக்குழந்தையை அழைத்து சென்றால் முதலில் அந்த குழந்தையின் மீது அன்பு பாராட்டுவது அந்த வீட்டில் இருக்கும் பெண்குழந்தைகள்தான்..

அவர்கள் கொஞ்சுவதை பார்க்கும் போது எப்படி இப்படி ஒரு பாசத்தை குழந்தைகள் மீது செலுத்த முடிகின்றது என்று தோன்றும்.. அது ஒரு அனிச்சை செயலாகவே இருக்கும்...


ஆனால் அதையே ஒரு ஆண்குழந்தை...குழந்தையின் கண்ணத்தை தொட்டு கிள்ளிவிட்டு பாப்பா என்றுகொஞ்சி விட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவான்..


ஆனால் அந்த வீட்டின் பெண்குழந்தை குழந்தையை விட்டு ஒரு அடிக்கூட நகராமல் வீட்டை விட்டு  நாம் கிளம்பும்வரை குழந்தை உடனே இருப்பாள்..


நாங்கள் 5 பேர் ஆனால் ஒரு குழந்தையை கூட  என் அப்பா தூக்கி கொஞ்சியது கிடையாது.. என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார்....அப்பா தெருவில் சும்மா போகும் சின்ன சின்ன பிள்ளைகளை மிரட்டுவார்.. அதில் அந்த குழந்தைகள் அலறி அடுத்து ஓடுவதில் அப்பாவுக்கு  ஆனந்தம்...


சினிமாவுக்கு கூட நாங்கள் எல்லாம் ஒன்னாரை ரூபாய் டிக்கெட்டில் அம்மாவுடன் போய் உட்கார்ந்து இருப்போம்..அப்பா ஐந்து ரூபாய் டிக்கெட்டில் தனியாக வந்து உட்காருவார்..ஒரு நாளும் பாசத்தை வெளிப்படுத்தியதில்லை... இப்போதும் அப்படித்தான்..



அதனாலே என்னவோ நானும் அதிகமாக குழந்தைகளை கொஞ்சி விளையாடியது கிடையாது..அதற்க்கா பாசம் எல்லாம் இல்லாமல் இல்லை.. அதிகம் பூசிக்கொள்வது இல்லை...

ஆனால் அடம்பிடித்து அழும் குழந்தைகளை, முக்கியமாக தரையில் உருண்டு புரண்டு காரியத்தை சாதிக்க நினைத்து அழும் குழந்தைகளை எனக்கு பிடிப்பதே இல்லை... அந்த குழந்தைகளை மேலும் வெறுப்பு ஏற்ற அந்த குழந்தைகள் எதிரில்  போய் அவர்கள் கத்துவது போல நானும்  கத்துவேன்.



என்னை பார்த்தாலே பெண்குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்... வரவே வராது என்ற பெற்றோரால் சவால் விட்ட பெற்றோர்கள் முகத்தில் கரி பூசிவிட்டு என்னிடம்  குழந்தைகள் தாவி வந்து இருக்கின்றார்கள்..ஆனால் ஆண்பிள்ளைகள் என்னை பார்த்தாலே காதூரம் ஓடுவார்கள்..



என் அப்பார்ட்மெண்ட்டில் போட்டோகார மாமா வருகின்றார் என்று மிரட்டி மிரட்டி தங்கள் குழந்தைகள் வயிற்றை ரொப்பும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்..ஒரு பையன் இருக்கின்றான் என்னை பார்த்தலே அவன் நின்ற இடத்தில் கால் உதறி அழ ஆரம்பித்து விடுவான்..நான்  அவனை மிரட்டியது கூட இல்லை



அதே போல  தன் குழந்தைகள் அது செய்தது இது செய்தது, அப்படி ரியாக்ஷன் கொடுத்தது, இப்படி ரியாக்ஷன் கொடுத்தது என்று யாராவது சொன்னால் பத்திக்கொண்டு வரும்.. ஓத்தா குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்  என்று  இதுக்கு போய் இந்த பில்டப்பு கொடுக்கின்றார்கள் என்று மனதில் நினைத்துக்கொள்ளுவேன்..


சில வீட்டில் ரிமோட் உடைந்து உடைந்து மாற்றுவார்கள்.. குழந்தை கைக்கு எட்டுவது போல ஏன் வைக்க வேண்டும்?? குழந்தை உடைக்கும்னு தெரியும் இல்லை அப்புறம் எதுக்கு அதுங்க கை எட்டற இடத்தில வைக்க வேண்டும் ??இதுங்க லூசு போல என்று மனதில் நினைத்துக்கொள்ளுவேன்..பாசம் கண்ணை மறைச்சிடுச்சி என்று நினைத்துக்கொள்ளுவேன்....


வீட்டில் அழகான சுவர்களை எல்லாம் குட்டிப்பசங்க கிறுக்கி வைப்பாங்க.. அதை பெருமையாவும் சொல்லுவாங்க.. நல்ல சுவத்தை  நாஸ்த்தி பண்ணி வச்சி இருக்குதுங்க இதுல பெருமை வேற என்று மனதில் நினைத்து இருக்கின்றேன்..


எங்கள் ஊர் கடலூரில் நியூசினிமா தியேட்டர்  எதிரில் தரைகாத்த காளிஅம்மன் கோவிலுக்கு பக்கத்தில் கெடிலம் ஆற்று ஓரமாக டிங்கர் ஒர்க் ஷாப் வைத்து இருக்கும் எனது பெரியப்பா மகன் குமார் அண்ணன் பிள்ளைகளை அப்படி பார்த்துக்கொள்ளுவார்.. 

அவருக்கு மூன்று பிள்ளைகள்.. இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை...காரில் சுத்தியால் அடித்து வேலை செய்து கொண்டே இருப்பார்... குழந்தை மூக்கு சளியோடு பக்கத்தில் வரும் போது அப்படியே அதனை துடைத்து சிந்தி போட்டு விட்டு,அப்படியே தனது கைலியில் துடைத்து விட்டு வேலையை தொடருவார்... ஒருமாதிரி இருக்கும் எனக்கு...



அவருடைய ஆம்பளை பசங்க ஓடி விழுவானுங்க.. கேஸ்வெல்ட் வைத்துக்கொண்டு இருப்பார் அப்படியே கன்னை ஆப் செய்யாமல் போட்டது போட்டபடி , பதறி ஓடி  தூக்கி விடுவார்..


ஏண்ணே விழுந்தா எழுந்து திரும்ப ஓடத்தான் போறானுங்க.. அதுக்கு எதுக்கு இந்த பதட்டம் என்பேன்..


டேய்.. கண்ணுக்கு மறைவா குழந்தைங்க விழுந்தா பிரச்சனை,, இல்லை ஆனா கண்ணுக்கு எதிர விழுந்தா மனசு தாங்காது.. உனக்கு புள்ளை பொறந்தாதான் தெரியும் அந்த வலி புரியும் என்பார்...



ஆனால் என் அப்பா ஒரு போதும் இது போல பதறியது இல்லை.. ரோட்டுக்கு அந்த பக்கம்  இருக்கும் வாத்தியார் வீட்டில் என் அக்கா  நொண்டி விளையாடிக்கொண்ருந்தாள்..அக்காவோடு விளையாட ரோட்டை கண்மூடித்தனமாக கடக்க, ஒரு சைக்கிள்காரர் இடித்து என் அழகான பல்வரிசை பெயர்ந்து கொண்டது.. என் முன் பல் பெயர்ந்து  ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது... ஊரே என்னை பரிதாபமாக பார்க்க நான் வலியில் துடிக்க.. எனது அப்பா  என்னை தூக்கி தலைக்கீழாக தொங்க வீட்டு என் சூத்தாம் பட்டையில் கோவத்தில் அடித்தார்...


//மொண்ட்டட்டஓத்தாது ஒரு இடத்துல சும்மா குழச்சி போட்ட சாணி போல கிடக்காம அரந்த வாலு கணக்கா அங்கயும் இங்கேயும் ஓடி என் உயிரை வாங்குது// என்று அடித்தார்... நான் பல் பெயர்ந்து ரத்தம் வர அந்த வலிக்கு அழுவதா அல்லது அப்பா அடித்த அடிக்கு அழுவதா என்று கேவினேன்..


அப்படி பட்ட அப்பவை சிறுவயதில் இருந்து பார்த்த காரணத்தால் எனக்கு பல பெற்றோர் குழந்தைக்காக பதறுவது எனக்கு வியப்பாக இருந்தது என்பேன்...


பெற்றோர் பதறுவது குழந்தைக்கா பிதற்றுவது எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது நறைய நக்கல் விட்டு இருக்கின்றேன்... நக்கல் எல்லாம் கடந்த 2011 மார்ச் 15ம் தேதி மாலை மூன்றரை மணிவரைதான் .. யாழினி பிறந்தாள். அவ்வளவுதான் நான் அப்பாவாகிவிட்டேன்.. ஒரு நொடியில் உலகம் மாறிவிட்டது...

என் குழந்தை  எனும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது..மூன்று மாதம் கழித்து குழந்தை என் முகத்தை அடையாளம் கண்டு குதிக்கும் போதும் தன் பொக்கை வாய் சிரிப்பை உதிர்க்கும்போதும்.....கால் கை உதறி தூக்க சொல்லி உற்சாகமாகி சிரிக்கும் போது.... ஓம்மால இந்த சிரிப்புக்காக உலகத்தையே ஜெயித்து  அவள் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது...


குழந்தை பிறந்து நான்கு மாதம் கழித்து டாஸ்மார்க்கில் ஒரு குவாட்டர் வாங்கினேன்.. வீட்டில் தனியாக உட்கார்ந்து இரண்டு ரவுண்டு போனதும் டிக்கர்குமார் அண்ணக்கு  போன்  செய்தேன்..


அதுக்கு முன் சின்ன பிளாஷ் பேக்..


என் வீட்டில் என் தங்கை திருமண நலங்கு விசேஷத்துக்கு குமார் அண்ணனின் பெண் பிள்ளை அண்ணியாரோடு வந்தாள்.. அவளின் உண்மையான பெயர் எனக்கு தெரியாது..அவளை சுனாமி என்று அழைப்போம்...காரணம் சுனாமி வந்து கடலூரே பயத்தின் பீதியில் இருந்த போது பிறந்தவள்..அதனால் அவள் பெயர் சுனாமி.. 

வீட்டு விசேஷத்தின் போது அவளுக்கு நான்கு வயது இருக்கும்.. அண்ணி இடுப்பை விட்டு இறங்காமல் அண்ணியை படுத்திக்கொண்டு இருந்தாள்.. எதுக்கோ அவள் தரையில் விழுந்து அழுது புரண்டாள்.. பதினைந்து நிமிடமாகியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.. 

கோவத்தில் நான் சுனாமியை எனது பைக்கில் முன் புறத்தில் உட்கார வைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் கோவிவிலின் உள்ளே சென்று  சுனாமியை அம்போ என விட்டு விட்டு நான் போய் மறைந்துக்கொண்டேன்... 

சட்டென யாரும் இல்லாமல் தனியாக இருந்த காரணத்தால் சுனாமி அழுகையை நிறுத்தி பிடிவாதம் தளர்ந்து, தன்னை யார் வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் சேர்ப்பார்கள் என்ற பயம் வந்த காரணத்தால் கோவிலுக்கு வருபவர்களிடம் யாராவது தெரிந்தவர்கள் வருகின்றார்களா? என்று ஏக்கத்துடன் சுனாமி உதடு வெதும்பி  பார்த்துக்கொண்டு இருக்க, நான் நேரில் போய் நின்றேன்..

என்னை பார்த்ததும் ஒடி வந்து என்னை கட்டிக்கொண்டாள்...


இனிமே அம்மாவை படுத்திவியா-?


இல்லை சித்தப்பா??


இனிமே அப்படி செய்யமாட்டேன் என்று கேவி கேவி அழுதாள்... எனக்கே ச்சே சின்னபுள்ளையை ரொம்ப படுத்தி விடடோமோ என்று கடைக்கு அழைத்து போய், சாக்லேட் எல்லாம் சுனாமிக்கு வாங்கி கொடுத்து அண்ணியிடம் அழைத்து போய் விட்டடேன்...

அதன் பிறகு அவள் அடம் பிடிப்பதே இல்லை..ஆனாலும்  எனக்கு குழந்தை பிறந்த பிறகு அப்படி குழந்தைகளை  கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட என் அண்ணன் டிங்கர் குமார் மீது எனக்கு பெரிய மரியாதையே வந்தது...


பிளாஷ் பேக் முடிந்தது...


இரண்டவது ரவுண்டில் அண்ணணுக்கு ரிங் போய் கொண்டு இருந்தது..


ஹலோ... நான் ஜாக்கிபேசறன்னா...


சொல்லுப்பா எப்படி இருக்கே? மாமி எப்படி இருக்காங்க?? குழந்தை எப்படி இருக்கா? 


நல்லா இருக்கா அண்ணே


என்ன திடிர்னு போன்?


இல்லை இப்பதான்  நீ  சொன்னதை உணர்ந்தேன்..


நான் என்ன சொன்னேன்.. 


உனக்கு புள்ள பொறக்கும்  போதுதான்  அந்த வலி தெரியும்னு ஒரு நாள் சொன்னியே.. அதை நான் இப்பதான் உணர்ரேன்..


அதுக்கு இன்னா இப்ப..  அது சும்மா சொன்னது..தண்ணி அடிச்சி இருக்கியா??


ஆமாம்...



நேற்று கூட குழந்தை ரொம்ப நேரம் அழுதிச்சி... ஒன்னும் பண்ண முடியலை.. சுனாமி இது போல ஒரு வாட்டி அழுதா, நான் களத்தூர் கோயில்ல எடுத்து போயி விட்டு விட்டு மறைஞ்சிகிட்டேன்.. நான் அப்படி செய்து இருக்க கூடாது..


என்னை மன்னிச்சிடு குமார் அண்ணே...


மன்னிப்பு எல்லாம் எதுக்கு.. நீ புரிஞ்சிகிட்டா போதும் போய் நிம்மதியா தூங்கு....


அன்று இரவு ஏதோபாரத்தை இறக்கி வைத்தது போல நன்றாக தூங்கினேன்..


மறுநாள் காலை  திரும்பவும் டிங்கர் குமார் அண்ணணுக்கு போன் செய்தேன். காரணம் மன்னிப்பை தண்ணியில கேட்டா அதுக்கு என்ன மரியாதை மயிறு இருக்கு?? அதனால் திரும்ப போன் செய்தேன்..


ஹலோ ஜாக்கி பேசறன்னே...


சொல்லுப்பா... நேத்து நைட்டு என்ன செமை பீலிங் போல...


அதேதாண்ணே இப்ப பகல்லயும் தெளிவா சொல்லறேன்...
 என்னை மன்னிச்சிடு குமார் அண்ணே.......

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

=================
யாழினியை நிறைய புகைப்படங்கள் எடுத்து இருந்தாலும் மேலே இருக்கும் அந்த படம் நான் அவளை எடுத்ததிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம்...
========

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

31 comments:

  1. அப்பாவாக, அதுவும் பெண்பிள்ளைக்கு அப்பாவாக இருப்பதே தனி சுகம் தான் அண்ணே.

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான பதிவு

    ReplyDelete
  3. அன்பின் ஜாக்கி
    சில வருஷங்களாக உங்கள் பதிவுகளை படிக்கிறேன் கற்று கொடுத்தவள் பதிவிற்கு முதல் பின்னூட்டமிட்டேன், ஆனால் வரவில்லை.
    இந்த பதிவு ரொம்ப உண்மையான மனநிலையோடு எழுதி இருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

    லியோ சுரேஷ்

    ReplyDelete
  4. Bro, நீங்கள் இந்த பாடலை இதற்கு முன் கேட்டிருந்தாலும், இப்போது கேளுங்கள் !
    http://music.cooltoad.com/music/song.php?id=463018&PHPSESSID=95a3eb218d11dab7dc686b68803f30ef

    ReplyDelete
  5. ஜாக்கி அண்ணே . எப்டினே நான் குழந்தைகளபார்த்தல் எப்டிலாம் நினைப்பேனோ அதே அப்டியே எழுதிருகனே சூப்பர் ணே. உங்க ப்ளாக் டெய்லிபடிகின்றேன் சராசரி மனுஷன் எப்டிலாம் நினைபனோ அதெலாம் எதார்த்தமா எழுதுறிங்க பாருங்க அதானே ... உங்ககிட்டே பிடிச்சது கலக்குங்க . தீபாவளி வாழ்த்துக்கள் .உங்களுக்கும் அக்கா மற்றும் யாழினிக்கும் .

    ReplyDelete
  6. அருமை ஜாக்கி. கண்களை கலங்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. நான்காவது வருட வாழ்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் நட்புடன் நக்கீரன்

    ReplyDelete
  8. //
    யாழினியை நிறைய புகைப்படங்கள் எடுத்து இருந்தாலும் மேலே இருக்கும் அந்த படம் நான் அவளை எடுத்ததிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம்...
    //

    படம் நல்ல இருக்கு

    ReplyDelete
  9. //வீட்டில் அழகான சுவர்களை எல்லாம் குட்டிப்பசங்க கிறுக்கி வைப்பாங்க.. அதை பெருமையாவும் சொல்லுவாங்க.. நல்ல சுவத்தை நாஸ்த்தி பண்ணி வச்சி இருக்குதுங்க இதுல பெருமை வேற என்று மனதில் நினைத்து இருக்கின்றேன்..//

    எப்படி மிரட்டினாலும் என் பையன் இன்னும் சுவற்றில் கிறுக்குவதை நிறுத்தலை...............எப்ப அப்படி செய்றான்னே தெரியது அண்ணே.....................

    அருமையான பதிவு அண்ணே

    ReplyDelete
  10. உங்களுக்கே உரிய பாணியில் நெகிழவைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
  11. Grey scale photography looking good. I really wondering about this post. thanks dear jackie

    ReplyDelete
  12. My daughter also born sunami date at japan. (11.03.2011 Japan). In my family everyone call her "sunami" some time. she is four days elder your daughter Yazhini.My daughter name Ajra Judi. we call Judi. enakku tamil therium but type adika theriyathu sorry brother.

    ReplyDelete
  13. Now you are a father - for her sake, please drop your "drinking" habit - hope that will make her more happy when she grows - sorry if i am wrong - but neither i have drinking habit nor a child - I know both the pain(s) - thx

    ReplyDelete
  14. சூப்பர் ஜாக்கி சார், குழல்இனிது, யாழினிது, உங்கள் யாழினியும், உங்கள் பதிவும் இனிது.....

    ReplyDelete
  15. எப்படி...இப்படி எல்லாம் .....?....குழப்பத்தில்...இல்லை...இல்லை...தெளிவாய்...முடிவாய் ....எழுதி உள்ளீர்கள்...ஜாக்கி!!! Good.

    ReplyDelete
  16. சும்மா சொல்லக்கூடாது.. செப்பிட்டடா மவனே..!!

    ReplyDelete
  17. நல்ல பதிவு.....
    உங்களுக்கு அஞ்சுல கேது இருக்கா?

    ReplyDelete
  18. Dear jackie

    @ ramesh : vazhimozhikiraen....

    mannippai mappil kaettal enna mariyadhai.... athanaal thelinthapin meendum mannippu kaettathu great. nice of you jackie. this is why you have a great fan following. keep it up.

    anbudan
    sundar g (rasanai)

    ReplyDelete
  19. jackie

    sorry forgot to tell that photo was excellent. eppozuthum photo eduppavarai vida photovukku pose koduppavargal azhagaga irukkirargale # photogenic # yempa naan sariyathaan ketkirena ?? enna sariya kekkiraena ? (vadivelu stylil vasikkavum ) :-)))

    ReplyDelete
  20. Dear jackie

    @lucky yuva : "mgr rasigan"
    luckyin engrossing narration with sub plot (anil) & fine rejoinder (kudikaaran pechu ) finish padithavudan
    enakku thagaludaya pathivil " MOTHER KOREAN FILM " screen play kayalankadaikaaran nizhaladinan -- similar to that style of pogira pokkil sollivittu pinbu fine rejoinder koduppathu. good screen play kind of writing.
    thangalidam pagiravendum endru thondriyathu (after seeing your comment on yuva's page)
    anbudan
    sundar g

    ReplyDelete
  21. ஒரு தந்தையின் உணர்வு பூர்வமான பதிவு. குழந்தைகள் நம் உலகத்தையே அப்படியே மாற்றி விடுவார்கள்

    A daughter is a treasure & a gift of love.

    ReplyDelete
  22. மன்னிப்புக் கேப்பதிலும் ஒரு தனி சுகம் இருக்கு .
    கதை அந்த உணர்வின் வெளிப்பாட்டை மிக
    அருமையாகத் தாங்கி நிற்கின்றது .ஒருகணம்
    நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு அருமை !......
    வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  23. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்ட்குறவன் பெரிய மனுஷன்.

    ரியலி டச்சிங் ஜாக்கி....

    பெண்ணை படைக்க மட்டுமே கடவுளால் முடியும். தாயாய், சகோதரியாய்,தோழியாய், குழந்தையாய் பார்க்க நல்ல மனது உள்ள மனிதர்களால் மட்டுமே முடியும்.

    போட்டோல யாழினியும் ஃபீல் பண்ணுற மாதிரி தெரியுது. :))

    ReplyDelete
  24. குழந்தை மிக அழகு, புகைப்படமும் அழகு, எழுத்து நடை சில வார்த்தைகளை தவிர்த்து அருமை (சில கெட்ட வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்தால் பயன்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறன் ),

    @ரமேஷ் - நானும் வழிமொழிகிறேன், குறைந்த பட்சம் நீங்கள் குழந்தை இருக்கும் போது வெளியிலாவது குடிக்கலாம். (உங்கள் பர்சனல் இல் தலையிடுவதாக நினைத்தால் மன்னிக்கவும்)

    யாழினி நல்ல தமிழ் பெயர், குழந்தை அணைத்து செல்வங்களும் பெற்று வாழ்க வளர்க.

    ReplyDelete
  25. bro mela irukura Yazhini atho wallpaper nu nenachan... romba nalla iruku... long live bro wit ur family :)

    ReplyDelete
  26. //"அதே போல தன் குழந்தைகள் அது செய்தது இது செய்தது, அப்படி ரியாக்ஷன் கொடுத்தது, இப்படி ரியாக்ஷன் கொடுத்தது என்று யாராவது சொன்னால் பத்திக்கொண்டு வரும்.. ஓத்தா குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும் என்று இதுக்கு போய் இந்த பில்டப்பு கொடுக்கின்றார்கள் என்று மனதில் நினைத்துக்கொள்ளுவேன்.." //

    ஹஹா...எங்க ஆபீஸ்ல இந்த மாதிரி ரெண்டு பேர் குடுத்த torcher இருக்கே...எனக்கு எப்படா resign பண்ணுவேன்னு ஆய்டுச்சு ...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner