ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்.
சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...
நான் பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு என்ஜீன்மேல் வந்து உட்கார்ந்த கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தேன்...
ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல கொட்டத்தொடங்கிய விஷயங்கள் கோர்வையாக இல்லாவிட்டாலும் கிழே அவர் சொன்ன அத்தனை விஷயத்தையும் பொய் கலப்பில்லாமல் சொல்லி இருக்கின்றேன்...
நாங்களும் மனுங்கதான் சார்.. உங்க அவசரம் தெரியாமலா சீட் ஏத்தறோம்...?? என்ன செய்ய??? சில பொறம் போக்குங்க ஐஏஎஸ் படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? கலெக்ஷன் காட்டு கலெக்ஷன் காட்டுன்னு படுத்தி எடுக்கறானுங்க...
நாங்க என்ன சார் செய்வோம் ரோட்டுல போறவனை எல்லாரையும் அடிச்சி இழுத்து போட்டா டிக்கெட் கொடுக்க முடியும்...??
சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் பரவாயில்லை... கூட்டம் அலை மோதும் கலெக்ஷன் பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் அதே கலெக்ஷனை அதே ரூட்டுல காட்டுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????
எட்டு டன் இருந்த பஸ்.. இப்ப ஆறு டன்னா மாத்திட்டாங்க... வண்டி தக்கை போல ஆயிடுச்சி.... காரணம் டீசல் கொடுக்கனும்றதுதான் காரணம்..
தனியார் பஸ் எல்லாம் பக்கான்னு எல்லா பேசஞ்சரும் சொல்லறாங்க.. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் தவமா தவம் கெடக்கனும்..
ரோடு மோசம்.. ஆனா டயர் வெடிச்சாலோ அல்லது கல்லடி பட்டாலோ என்னவோ நாங்க வேனும்ன்னு கத்தியால கிழச்சிது போல நிக்க வச்சி கேள்வி மயிரை கேட்டபானுங்க....
எங்க நீங்கலே சொல்லுங்க.. தமிழ்நாட்டுல ரோடு எப்படி இருக்குதுன்னு?? கிருஷ்ணகிரியில் இருந்து பாண்டிச்சேரி போற ரோட்டை பார்த்துட்டு அந்த கேள்வியை கேட்டா பரவாயில்லை...ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம கேள்வி கேட்பானுங்க..
சரி பொறுமையா போன... 20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்ட, இறங்கும் போது பேசஞ்சர் இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு சொல்லிட்டு இறங்கறான்.. எங்க கஷ்ட்டம் அவனுக்கு எங்க தெரிய போவுது...???
இப்ப ஓசூர்ல இருந்து பெங்களூர் போயி அங்க இருந்து பாண்டிச்சேரி போயி, திரும்ப பெங்களுர் வரனும்.. மொத்தம் போக வர 850கிலோ மீட்டர் ஆனா அங்க போய் டிரைவர் மாறமாட்டர்.. அதே ஆளுகிட்ட எக்ஸ்ட்ரா டூட்டின்னு சொல்லி திரும்ப உடனே போக சொல்லுவாங்க..
இந்த 850 கிலோ மீட்டர் ஓட்றறவனுக்கு ரெஸ்ட் எத்தனை நிமிஷம் தெரியுமா? வெறும் 15 நிமிஷம்தான்...வயித்தை கலக்கி வண்டி ஓட்டிகிட்டு வர டிரைவருக்கு உடம்பு சூட்ல 15 நிமிஷத்துல சரியா பாத்ரூம் கூட வராது..??அப்புறம் ஏன் விபத்து நடக்காது..??
மேலதிகாரிகிட்ட ஐயா எனக்கு ரொம்ப டயர்டா இருக்குன்னு சொல்லிப்பாருங்க... சரின்னு ரெஸ்ட் கொடுப்பான் ஆனா அதுக்கு அப்புறம் டூட்டி ஏறுவதற்க்கு எப்படியும் ஒரு வாரம் ஆக்கிடுவானுங்க.... அப்படியே டூட்டி கொடுத்தாலும் அது ரொம்ப ரொம்ப கண்டம்மான ரூட் மற்றும் பஸ்சா இருக்கும்..
ஒரு பனிஷ்மன்ட் போலன்னு வச்சிக்கிங்க.. சரி அதுக்கு போவலன்னா..?? டூட்டி செய்ய சொன்னா செய்யவில்லைன்னு குறிப்பு எழுதிடுவாங்க...
டீசல் டீசல்னு உயிரை எடுத்த காரணத்தால் திருச்சிகிட்ட டீசல் சிக்கனம் பண்ண ஆப்போசிட் ரூட்ல போன அரசு பேருந்து தனியார் பேருந்து மோதி 15 பேருக்கு மேல ஸ்பாட் அவுட்.
பொதுமக்களுக்கு மின்சாரம் எப்படியோ அப்படித்தான் போக்குவரத்தும்.. ஆனா எங்களை விட மின்சார ஊழியர்களுக்கு, எங்களை விட சம்பளம் அதிகம்.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சம்பளம் கம்மி...
டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து பஸ் டிக்கெட் ஃபேர் ஏத்தலை..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்.. ஆனா இரண்டாரூபாவுல நினைச்ச இடத்துக்கு போய் வர்ரீங்க... என்ன செய்ய??
அதே போல படிக்கற பசங்க எல்லாருக்கும் பிரி... டிரெயின்ல கூட மாசம் ஒரு 100ரூபாய் பணமாவது வாங்கறானுங்க.. இங்க அப்படி இல்லை.,...
அதே போல மென் பவர் தேவையான அளவுக்கு இல்லை...போக்குவரத்து கழகத்துல இருக்கற முக்கால்வாசி டிரைவர் டாஸ்மார்க்லதான் பழியா இருக்கான்...ஒன்னாம் தேதி சம்பளம் வாங்கிட்டு டாஸ்மர்க் போனா, அடுத்த நாள் காலை சிங்கள் எடுக்க டிரைவர் வர மாட்டேங்கிறான்.. எக்ஸ்ட்ரா டூட்டிக்கு ஆசைப்பட்டு கண் விழிச்சி ஓட்டுவதால் மானிக்சந்,ஹண்ஸ்,மாவா,பான்பராக் எல்லாம் போட்டு உடம்பை கெடுத்துக்கறாங்க..
டிரைவருங்களை உறுதி மொழி எடுப்பது போல கையை நேரா நீட்டி நிற்க்க சொல்லுங்க.. எல்லாரோட கையும் தட தடன்னு ஆடும்..அதே போல சரக்கு சரக்குன்னு அடிச்சி வாழ்க்கையை முடிச்சிக்கற டிரைவருங்கதான் அதிகம்...45 வயசுக்கு மேல திடக்காத்திரமான டிரைவருங்க பத்து பர்சன்ட்பேர்தான் இருப்பாங்க...
இந்த அரசியல்வாதிங்க தொல்லை அதுக்கும் மேல... வட்டம் மாவட்டம்னு லட்டர் வாங்கிட்டு வந்துட்டு,நாலு பேர் நைட்டு ஊருக்கு போற கிராமத்துக்கு எல்லாம் பஸ் விடச்சொன்னா அப்புறம் நஷ்டத்துல போவாம லாபத்துலயா போவும்..லாப நோக்கம் இல்லாம நடத்தற ஒரு நிறுவனம் என்பதால் நிறைய அட்வான்டேஜ் எடுத்துக்கறாங்க...
ஏற்கனவே நஷ்டத்தில் போயிகிட்டு இருக்கு... இது போக்குவரத்து அமைச்சர் பத்து பஸ் புது வழித்தடத்துல விட்டா அதுக்கு விழா எடுத்துட்டு இரண்டு லட்சம் விழா செலவுன்னு கணக்கு எழுதறானுங்க.. இப்படி இருந்தா எப்படி விளங்கும்..
தோ வர மாசம் எங்களுக்கு சம்பளம் வருமா வராதான்னு தெரியலை.. கண்டக்டர் டிரைவருக்கு வேனா சம்பளம் கொடுப்பாங்க.. காரணம் வேலைக்கு வரனும் இல்லையா? டெக்னிஷியனுக்கு லேட்டாதான் கிடைக்கும் போல...டிச்ம்பர் மாசத்துல பஸ் பேர் ஏத்தினாதான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..
எவ்வளவோ கஷ்டப்பட்டு ராப்பகலா கண்விழிச்சி வேலை செய்யறோம்... நோவாம ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு அது நொட்டை இது நொள்ளைன்னு ஏன் கலெக்ஷன் இல்லை?? ஏன் டயர் போயிடுச்சி? ஏன்லேட்டு?? ஏன் டீசல் கொடுக்கலைன்னு? ஏன் ஸ்பிடா வந்தே? படுத்தி எடுக்கறானுங்க பாருங்க அதுதாங்க ரொம்ப கொடுமை...
நாங்களும் மனுசங்கதான் சார்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Good post. They need Paid better
ReplyDeleteகொடுமை தான். அதனால் தான் சில கண்டக்டர் டிரைவர்கள் பயணிகள் மீது எரிந்து விழுகிறார்களோ?
ReplyDeleteIthe anaubavam theepavali appa enakum nadanthathu
ReplyDeleteits not about their pay, its about maintenance of the buses and practicality
ReplyDeletegreat post
ReplyDeleteஅன்பின் ஜாக்.கி..
ReplyDeleteநன்றி.தங்களின் இந்த பதிவுக்கு...
நிஜம் எப்போதும் சுடும்...இப்போது அதிகமாய்..
உண்மை அவர்களும் மனிதர்கள் தான்.. உணரகூடிய பெரும் தலைகள் அதை முதலில் உணரட்டும்..
மீண்டும் நன்றி..
NTR
உழைப்பாளிகளின் கஸ்ரத்தை முதலாளிகள் என்றுதான்
ReplyDeleteமுறையாக உணர்வார்களோ !...நெஞ்சைநெகிழவைத்த
பகிர்வுக்கு மிக்க நன்றி .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற .
இப்படி வசூலில் இலக்கு வைப்பதனால்தான் பல விரைவு வண்டிகள் விறகுவண்டிகளைப் போல ஆமைவேகத்தில் செல்கின்றன.
ReplyDeleteஎப்படியாவது அரசு போக்குவரத்தை ஒழித்துவிட்டு எல்லா ரூட்டுகளையும் தனியாருக்கு தாரை வார்க்கவேண்டும் என்பதுதான் இரண்டு கழகங்களின் கொள்கை.முக்கியமாக கொங்குநாட்டு பஸ் ஓனர்கள் கழுகுபோல் காத்திருக்கிறார்கள்.அது என்ன 1967 -லிருந்து ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவனே போக்குவரத்து மந்திரியாய் இருக்கிறான்.{விதிவிலக்கு K .N .நேரு.}இது ஏன்இப்படி.
ReplyDeleteஅருமையான பதிவு ஜாக்கி..
ReplyDeleteGood read:)
ReplyDeleteலாரி சங்கங்கள் ஸ்ட்ரைக் பண்ணுற மாதிரி, இவர்களும் பண்ணினாதான் நம்ம மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இவர்கள் படும் கஷ்டம் புரியும்!
ReplyDeleteஎன்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, ஜாக்கி!!!
யாருடா இவன்?
Wow!
ReplyDeleteI would have never known of the troubles of government bus drivers and conductors. Thanks for bringing it to the light.
இதில் கூறப்பட்டுள்ள காட்சிகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன்....தனியார் பேருந்து அலுவலகத்தில். டிரைவரும் கண்டக்டரும் கைக்கட்டிக்கொண்டு பஞ்சாயத்துல நாட்டாமைக்கு முன்னாடி நிக்கிறா மாதிரி அந்த தனியார் பேருந்து ஓனர் முன்னாடி நிப்பாங்க....அது இப்போ அரசாங்கத்துல நடக்குது....
ReplyDeleteஇந்த பதிவை அந்த கண்டக்டர் சொன்ன மரியாதையை மிக்க நபர்கள் படிக்கவேண்டும்!
ReplyDelete//
நாங்களும் மனுங்கதான் சார்.. உங்க அவசரம் தெரியாமலா சீட் ஏத்தறோம்...?? என்ன செய்ய??? சில பொறம் போக்குங்க ஐஏஎஸ் படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? கலெக்ஷன் காட்டு கலெக்ஷன் காட்டுன்னு படுத்தி எடுக்கறானுங்க...
//
நன்றி JACKIE
அட நாம பார்க்காதப் பக்கங்கள். நல்ல பதிவு
ReplyDeletearumaiyaana pathivu jackie avargalum manithargal thaan. thanjai, pattukottai side oor bus drivergalin thiramaiyum, salai patrriyum neegnal ( or yuva? ) yerkanavey pathinthathaga ninaivu. Tamilnadu drivers are pretty talented and skilled but getting lesser wages for more work. thats why their life got twisted ( with drinks and bad habits ) gold smith, weavers, farmers are also not recognised for their duty. even before IT people, Call centre guys these above men are doing Night jobs but after IT industry came Night Shifts are projected as a tough one to do (but getting higher salary for night shifts in call centres will not come to their mind ). yes what i can say " yezhai sol ambalam yerathu "
ReplyDeleteerstwhile " nesamani transport corporation " ( do you remember those corpns ? ) kanyakumari drivers were the fastest and skillest one but their driving skill got struck after SETC / TNSTC applied Speedometer restrictions and hence they drive buses as kattavandi imagine 16 hrs 2 drivers driving 800 kms to kk from chennai. too pathetic for both passengers and drivers too. life is precious i agree but speedomenter restriction limit may be raised to little bit higher speed. our drivers are capable of good driving. i remember once tennis legend boris becker came to chennai and after the taxi drive he said there is no road sense in your country all men, animals everything walks on their own in roads, still i am in unbelivable state that how could my driver has not met with an accident ? this is what our people's road sense and drivers ability. they should be provided good rest rooms (check out at koyambedu all drivers, technicians take rest on floor amidst all noises then how can they perform well while driving still they are doing a fine job. not for my pride after each and every long drive i usually thank the drivers and conductors for a safe and happy journey i am still following this to encourage them because we are all want to be drivers (esply me) during our childhood days. still i prefer bus to train because bus driving is my passion. thanks for nice article. let us make those IAS officers to read your article and understand and hope will do good for those unrecognised services of poor folks.
anbudan
sundar ( rasanai )
அருமையான பதிவு ஜாக்கி. தயவுசெய்து இந்த பதிவினை வார பத்திரிக்கைக்கு அனுப்பவும்.
ReplyDeleteit is true!
ReplyDeleteஇத்தனை காலமாக அவர்கள் கோணத்தில் நின்று நான் யோசித்ததில்லை சேகர். உண்மை சுடுகிறது. டிரைவர்கள் நிலை இப்படி எனில் விபத்தைத் தடுப்பதுதான் எப்படி? சொல்லப்பட வேண்டிய விஷயத்தை பதிவிட்டு பலரை சிந்திக்கத் தூண்டிய உங்களுக்கு நன்றிகள் பல!
ReplyDeleteஅவர்களும் மனிதர்கள் தான்...
ReplyDeleteபல manufacturing நிறுவனங்களில் BE / ME/ MBA போன்ற படிப்புகளுடன் executive பதவிகளுக்கு வருபவர்களை field training என்ற பெயரில் ஒரு சாதாரண தொழிலாளி என்ன வேலையை செய்வாரோ அதே வேலையை executive பதவிகளுக்கு வருபவர்கள்ளையும் செய்யப் பணிக்கும் வழக்கம் இருக்கிறது. இது போன்ற பயிற்சிகள் தொழிலாளின் முழு சிரமங்களை உணரவும் முழுமையான அனுபவ அறிவினைப் பெறவும் மிகவும் உதவும். (உயர் அதிகாரி ஆகப்பட்டவர் தொழிலாளியினால் ஏமாற்றப்படாமல் இருக்கவும் இது உதவும்). இது போன்ற நடைமுறைகளை போக்குவரத்து துறையிலும் கொண்டு வரலாம் என்பது என் ஐடியா.
ReplyDelete(ஆனால் அடிமட்ட சிரமங்களை தெரிந்தும் ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் உயர் அதிகாரிகளும் நிறையவே உள்ளனர்)
நல்ல பதிவு. அதிகம் பேரை இந்தப் பதிவு அடைய வேண்டும்
ReplyDelete100% right...
ReplyDeleteஅன்பு நண்பரே தங்களின் தளம் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது .அனால் தங்கள் post commend பகுதியில் நீங்கள் கூறியிருந்த (எல்லாத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியாது...எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன்) என்று சொல்லியிருந்தது சற்று நெருடலாக உள்ளது .தங்களை போன்ற பதிவர்களுக்கு ,பின்னூட்டங்கள் தான்,மிக சிறந்த கிரியா ஊக்கி, ஆனால் தங்கள் நேரம் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் .சிறு நன்றி யாவது அனைவருக்கும் கூறுங்கள் ,அது எங்களுக்கு மீண்டும் பதில் அளிக்க தூண்டுதலாக இறுக்கும்,இதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் .
ReplyDeleteஅன்பு ,
நண்பர்,
ராமசந்திரன்.
அன்பின் ராமச்சந்திரன் மிகவும் கூச்சமாக உணர்கின்றேன்.. இனி இப்படி இருக்காது என்று உறுதி கூறுகின்றேன்..உங்கள் கருத்தை அப்படியே ஏற்க்கின்றேன். மிக்க நன்றி..
ReplyDeleteபின்னுட்டத்தில் கருத்துகள் பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.. மொத்தமாக நன்றி சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்து மறந்து போனதால் ராமச்சந்திரன் போன்றவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.. மிக்க நன்றி நண்பர்களே.,.
ReplyDeletejackie ana nalla pathivu... evalavu prachanai avanga santhikiranga nu epa than puriyuthu... keep posting ana...unga blog romba nalla iruku...
ReplyDeletenice posting sir,,,
ReplyDeleteநல்ல பதிவு........
ReplyDeleteThese are the Ill Effects of Capitalism.
ReplyDeleteI am expecting your review eagerly on film 'THIEVES HIGHWAY'.It is about the ill effects of capitalism.
ReplyDeleteமிக முக்கியமான பதிவு.
ReplyDeleteஇது சரியான பதிவு.
ReplyDeleteஅதே போல் மற்றொரு கொடுமை தமிழகத்தில் நடக்க ஆரம்பித்து உள்ளது. தற்போது இட்லி அளவு மாத்திரை போல் ஆகிக்கொண்டு இருக்கிறது. அரசு இதில் தலை இட்டு இட்லி என்றால் இத்தனை கிராம் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். விலை எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளட்டும். ஆனால் அளவு standard ஆக இருக்க வேண்டும்.
ReplyDeleteஒவ்வொருவருக்கும் தெரியவேண்டிய சரியான பதிவு.
ReplyDeleteஒவ்வொருவருக்கும் தெரியவேண்டிய சரியான பதிவு.
ReplyDelete