Varnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிமாவின் நம்பிக்கை..தமிழ் சினிமாவில்  நல்ல படங்கள் வராதா என்று நாம் ஏங்கி கொண்டு இருக்கின்றோம்..அப்படி வரும் படங்களை நாம் கொண்டாடுவதே இல்லை... அப்புறம் எப்படி நல்லப்படம் வரும்?
சில நேரங்களில் நஷ்டப்பட்டு நல்ல படம் எடுக்கும் புரொட்யூசர் கடனை உடனை வாங்கி தியேட்டரில் படத்தை ரிலிஸ் செய்தால் போதும்  என்ற நிலையில் இருப்பதால், மேலும் விளம்பரத்துக்கு அதிகமாக செலவு செய்யமால் இருந்து விடுவதால் இது போன்ற நல்ல படங்கள்  உதாசினப்படுத்த படுகின்றன...இந்த படத்தின் மீது என் கவனம் பதிய முக்கிய காரணம்...  இந்த படம் உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டது என்ற அந்த வார்த்தைதான் இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியது..மிகக் குறைந்த செலவில் சில பல தவறுகள் இருந்தாலும், லோ பட்ஜெட்டில்  நேர்த்தியாக கதை சொன்ன படம்.. என் மண்ணின் கிராமத்து பக்கங்களை மிகை இல்லாமல் செல்லுலாய்டில் பதிந்த படம்சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று சொல்லி பல வருடங்கள் ஆகி விட்டன.. இன்றைய கம்யூட்டர் உலகிலும் வளர்ந்த நகரங்களிலும் சாதி இன்னும் சம்மனமிட்டு உட்கார்ந்து இருக்கும் இந்த இருபத்தோரம் நூற்றாண்டில் கிராமப்புறங்களில் முக்கியமாக ரிமோட் வில்லேஜ்களில் இன்னும் சாதிக்கொடுமைகள் அதிகம் நடந்தேறி வருகின்றது... அதனை  பொட்டில் அடித்தது போல சொல்லுகின்றது இந்த படம். படத்துக்கு வர்ணம் என்று பெயர் வைத்து வர்ணாசிரமத்தை லைட்டாக நக்கல் விட்டு இருந்தாலும், தனி தனி வர்ணங்கள் ஒரு போதும் அழகிய ஓவியத்தை தராது..வர்ணங்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு அழகான ஓவியம் உருவாகும்... மனிதர்கள் ஜாதிகளால் தனி தனி வர்ணங்களாக இருக்கின்றார்கள் என்று உரத்து சொல்லுகின்றது...

==============
வர்ணம் படத்தின் கதை என்ன??

மலை பகுதியில் உள்ள ஒரு  ஓடையில் தண்ணீர் சல சலத்து  ஓடிக்கொண்டு  இருக்கின்றது. உடல் தண்ணீரில்  முழுவதும் நனைய விட்டபடி, முகத்தை மட்டும் வெளியே நீட்டிய படி மணி என்ற டீன்ஏஜ் பையன்  தன் வராலறு கூறுவது போல சொல்லும் காட்சிகள்தான்  மொத்த படம்.....


மணி அப்பா ஜாதி  சண்டையில் இறந்து போய் விட்டார்.. மணி பள்ளியில் செய்த அதீத சேட்டை காரணமாக அவன் அம்மாவால் அவனின் தாய்மாமன்  சம்பத் வீட்டுக்கு அனுப்பி வைக்க படுகின்றான். அந்த மலைவாழ் கிராமத்தில் இன்னமும் இரட்டை குவளை முறை நடை முறையில் இருக்கின்றது...

சம்பத் பணக்காரன், செமையான  சோக்காளி... எந்த வயசு பொண்ணா இருந்தாலும் விட்டு வைக்க மாட்டான். மணி படிக்கும் பள்ளியில் மோனிகா(கவிதா) டீச்சரா இருக்காங்க...


அந்த கிராமத்தில் பசங்க, டீச்சர் என எல்லா இடத்திலேயும் தீண்டாமை தலைவிரிச்சி ஆடுது. மணியோட சக வகுப்பு தொழி  அஸ்வதா (தங்கம்) கீழ் ஜாதி பொண்ணு.. முதலில் அந்த பெண்ணை வெறுப்பவன் எப்படி மெல்ல மெல்ல அந்த பொண்ணோடு  நட்பாகின்றான் என்பதையும் அந்த நட்பின் முடிவு என்னவாகின்றது என்பதையும் சில  கிளைக்கதைகளில் வரும் டுவிஸ்ட்டுகளையும் சேர்த்து திரையில்  கண்டு ரசியுங்கள்..===============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
முதலில் இது போன்ற ஒரு இயல்பான கிராமத்து படத்தை எடுத்து தயாரித்து இயக்கிய இயக்குளர் ராஜுவுக்கு நன்றிகள்..இயக்குனர் ராஜு யாரிடமும் உதவியாளராக இல்லை..ஒரு மாணவனின் பார்வையில் கதை சொல்லுவது போல திரைக்கதையை அமைத்து இருக்கின்றார்...டைட்டிலில் பயண்படுத்தி இருக்கும் படங்கள் எல்லாம் அற்புதமாக இருந்தன.. அந்த கலர், அந்த பெயிண்டிங் ஸ்டைல் எல்லாம் அற்புதம்.அந்த  எல்லை சாமி  கோயில் முனி பாட்டுல வரும், முனியோட சின்ன ஸ்டோரி ரசிக்க வைக்கும் ஹைக்கு...

எனக்கு தெரிந்து திரைக்கதை வசனத்துக்கு நிறைய பேர் பெயரை டைட்டிலில் போட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வசனம் என்று டைட்டிலில் போட்டு ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது.. உரியவர்களிடம் உழைப்பை வாங்கி எல்லாம் நான்தான் என்று இறுமாப்பு கொள்ளும் தமிழ்சினிமாவில்  உரியவருக்கு கொடுத்து இருக்கும் முக்கியத்துவத்துக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராஜுவுக்கு ஒரு சல்யூட்இந்த படத்தை சூப்பர் 16  கேமராவில் எடுத்து இருக்கின்றார்கள்.. ஆனால் நிறைய பிரேம்களில்  கிரையன்ஸ்.. பட் பிரேம்கள் அத்தனையும் அருமை.... எல்லா லாங் ஷாட்டுக்கும்ட மெனக்கெட்டு இருக்கும் ஒளிபதிவாளர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்..இந்த படத்தில் என்னை மிகவும் ரசிக்க வைத்த கதாபாத்திரம் தங்கம் என்ற கேரக்டரில் நடித்த அஸ்விதா.. யப்பா  என்ன துர்க்கமான  கண் மற்றும் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தும் பெண்... சான்சே இல்லை...மணி முதலில் தன் மீது எரிந்து விழுவைதையும் தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசாதவன், பரிச்சை ஹாலில் அவனே பேப்பர் கேட்டு வாங்குவதும் அந்த  பேப்பரை அவன் அக்சப்ட் செய்து கொண்டான் என்றவுடன் அந்த பெண்ணின் முகத்தில் வெளிப்படுத்தும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் எல்லாம் கவிதை.. ஒரு புது இயக்குனரின் படத்திலேயே இந்த பெண் இப்படி ஒரு திறமையை வெளிப்படுத்தும் போது பெரிய இயக்கனர்களின் கணமான பாத்திரத்தில் நடித்தால் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார்..... மோனிகா அண்ணன் கேரக்டர் படத்தில் ரகளையான கேரக்டர்...சீரியல் பல்பு  மேலே ஏறி கட்டுபவனின் காலுக்கு நடுவில் நடந்து அப்படியே மேலே பார்த்து விட்டு வள்ர்ந்துட்டியா அதான்  பேச்சு எல்லாம் தடிப்பா வருது என்பதாகட்டும், சீரியல் பல்பு எரிவதுக்கு மட்டுமே காசு தருவேன் என்ற அளப்பறை அற்புதம்..

இரண்டு பாடல்கள் அற்புதம்.. முக்கியமாக முனி பாடல்...

திருவிழாவின் சின்ன சின்ன ரசனைகளை காட்சிபடுத்தியது அருமை..சம்பத் அற்புதமாக நடித்து இருக்க்கின்றார்.. அதே போல தென்மேற்கு பருவக்காற்று ஹீரோவும் திண்ணியத்தை நினைவுபடுத்தும் அந்த காட்சியில் அற்புதமாக நடித்து இருக்கின்றார்..மோனிகா  கட்டி வரும் சேலைகள் அற்புதம் என்று இயக்குனரிடம் சென்னேன்.. எல்லாம் நல்லி சில்க்ஸ்சில் எனது  செலக்ஷன் என்றார்.. அப்படி ஒரு டீச்சர் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கின்றார்... அவரின் ஸ்டெக்சர் சான்சே இல்லை...

நிச்சயதார்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.. மோனிகா தலை சீவிக்கொண்டு இருக்கும் போது மெல்ல மெல்ல அவர் காட்டு முகபாவம் அது அப்படியே வீரிட்டு  வெடித்து வெளிப்படும் அழகை பார்க்கும் போது  மோனிகாவுக்கு மட்டும் நல்ல சினிமா வாய்ப்பு அமைத்தால் பேர் சொல்லும் ஒரு குணச்சித்திர நடிகையாக வர வாய்ப்பு இருக்கின்றது....

மோனிகா குழந்தை நட்சத்திரமாக பார்த்தாகிவிட்டது.. கவர்ச்சியாக பார்த்தாகி விட்டது... மோனிகா நடிப்பை பார்க்க இந்த படத்தை பாருங்கள்.. மோனிகா டீச்சரை பார்க்கும் போது எனது பால்யகாலத்தில் சைட் அடித்த டீச்சர்கள் என் கனவுக்கு வருகின்றார்கள்.. என்ன மோனிகா அளவுக்கு யாரும் இல்லை.. அப்படி இருந்து இருந்தால் ஒரு வேளை இந்த அளவுக்கு கூட படித்து இருக்க மாட்டேன்..சரக்கு அடித்து கும்மாளம் இடும் அந்த ஒரு குத்து பாடலை ஒரு ஷாட்டில் எடுத்து இருக்கின்றார்கள்....

வசனங்கள் மிக இயல்பு.. ஏன்டா மச்சி அதுகூட என்ன குடும்பமா நடத்த சொல்லறோம் அந்த பக்கம் இழுத்து போய் இரண்டு அமுக்கு அமுக்குவியா அதை விட்டு போட்டு என்ற வசனங்கள் போகிற போக்கில் சொல்லபடுகின்றது.. ஆனால் தொடுதலில் ஒட்டிக்கொள்ளும் ஜாதி சனியன் ஒட்டி துணியில்லாமல் படுக்கையில் பொறள மட்டும் ஜாதி பார்ப்பதில்லை என்று நச் என்று சொல்லி இருக்கின்றது இந்த படம்..


 =====================

படத்தின் டிரைலர் ==========================

படக்குழுவினர் விபரம்


Banner:    Alka Films Corporation
Cast:    Giri, Ashwatha, Monica, Samath, Gowtham
Direction:    S M Raju
Production:    Ajayendran, Rajendran
Music:    Isaac Thomas

 =================
 

பைனல்கிக்..


 ரைட் லுக் மற்றும் லெப்ட் லுக் மற்றும் திரைக்கதையில் சின்ன சின்ன மைனஸ்கள் இருந்தாலும் இந்த படத்தை அனைவரும்  பார்த்தேதீரவேண்டும். இந்த படம் லோ பட்ஜெட்டில் எப்படி படம் சுவாரஸ்யமாக எடுக்கலாம் என்பதற்கு இந்த படம் உதாரணம். சின்ன டுவிஸ்ட்டுகள் ரசனைக்குறியவை...இந்த படம் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.


========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ....
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

12 comments:

 1. நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள். நன்றி.

  ReplyDelete
 2. உண்மைல்யிலேயே நல்ல படம்தான் அண்ணே

  ReplyDelete
 3. ம்... அவசியம் பார்த்திடுறோம். மோனிகா டீச்சரைப் பத்தி நீங்க சொன்னதும் எனக்கு மெலினா திரைப்படம் நினைவுக்கு வந்தது. வர்ணம் தவறவிடாம பாத்துடுவோம்.

  ReplyDelete
 4. மழைக்கு முன் வரும் வானவில்லை பார்பது போல ....
  நான் படம் பார்க்கும் முன் JACKIESEKAR விமர்சனம் படிப்பது ..

  //அப்படி வரும் படங்களை நாம் கொண்டாடுவதே இல்லை... அப்புறம் எப்படி நல்லப்படம் வரும்?
  உண்மைதான்.

  //என்ன மோனிகா அளவுக்கு யாரும் இல்லை.. அப்படி இருந்து இருந்தால் ஒரு வேளை இந்த அளவுக்கு கூட படித்து இருக்க மாட்டேன்.
  JACKIE டச்

  ReplyDelete
 5. திரைப்பட விமர்சனமே நேர்த்தியான ஒரு திரைக்கதைவசனம்போல எழுதியிருக்கிறீர்கள் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 6. Boss,Direction:S M Raju'nu kuduthu irukinga, appram yen raja'nu solringa, pls change to raju.. ellarum jeyam ravi anna'nu nenachika poranga ;)

  ReplyDelete
 7. பார்க்கனும் போலிருக்கு அண்ணே, படித்ததும். எழுத்தில் நிறைய மெருகேறியிருக்கிறது, முதிர்ச்சியும் பிழை குறைவும் கூட.

  பிரபாகர்...

  ReplyDelete
 8. நன்றி மொக்கை நண்பன் திருத்தி விட்டேன்.

  ReplyDelete
 9. நன்றி ராஜா, கணேஷ், சீனிவாஸ், அம்பலத்தார்...

  ReplyDelete
 10. விமர்சன்ம் படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 11. அழகான விமர்சனம் இது இன்னும் எங்கள் ஊரில் (பெங்களூர்) ரிலீஸ் ஆகவில்லை என்றே நினைக்கிறேன்.. வந்த உடன் பார்க்க வேண்டும்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner