நீங்கள் ஒரு 25 வயதுமதிக்கதக்க பெண்மணி…
தேவையில்லாத சந்தேகங்கள் உங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றது...
உங்கள் கணவரோடுதான் படுக்கையில் படுத்து இருக்கின்றீர்கள்..அவன் உங்களை தொடுவது கூட பூப்போலத்தான் தொடுகின்றான்.. முத்தமிடுவதும் அப்படியே...ஆனால் உள் மனதில் அவன் கணவன் என்ற உள் உணர்வு மட்டும் வரமாட்டேன் என்கின்றது.. அவன் நல்லவன்தான்..ஆனால்.. ஆனால்.. அவன் தன் கணவன் என்ற பீல் மட்டும் உங்களுக்கு வரவேயில்லை...
சைக்கியாரிஸ்ட் இடம் சென்று நீங்கள் புலம்புகின்றீர்கள்.. நான் யார் என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் டாக்டர் நீங்கள் ரொம்ப நார்மல் என்று சொல்லுகின்றார்...
கணவனும் அப்படியே சொல்லுகின்றான்.. ஆனால் உங்கள் தேடல் மட்டும் நின்ற பாடில்லை.. நீங்கள் ஒரு ஹோம் மேட் சாக்லேட் விற்கும் கடையில் வேலை செய்கின்றீர்கள்.. அங்கு தினம் வரும் வாடிக்கையாளனை உங்களுக்கு மிக நெருக்கமாய் சந்தித்தது போன்ற உணர்வை அவனின் முகம் கொடுக்கின்றது
திடிர் திடிர் என்று இரவு நேரங்களில் பல உருவங்கள் உங்களை வந்து வாட்டுகின்றது...உங்கள் நியாபகங்கள் சிலது உங்களுக்கு நினைவுக்கு வருகின்றது.ஆனால் கனவை மட்டும் முழுதாய் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்..
முகமாற்று அறுவை சிகிச்சை பற்றி கேள்வி படுகின்றீர்கள்..ஒரு வேளை,உங்கள் கணவர் முகம் விபத்தில் அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றார்? என்று இரவு நேரத்தில் அவர் முகத்துக்கு இரவில் டார்ச் லைட் அடித்து பார்க்கின்றீர்கள்..ஆனால் அப்படி எந்த வடுவும் இல்லை..
ஆனால் ஒரு நாள் நீங்கள் குளித்து விட்டு உங்கள் முகத்தை செக் செய்யும் போது உங்கள் முகத்தில் பிளாஸ்ட்டிக் சர்ஜரி செய்த வடு இருக்கின்றது...உங்களுக்கு எப்படி இருக்கும்?? அப்போது உங்கள் பழைய முகம் எப்படி இருக்கும்? நீங்கள் என்னவாக இருந்தீர்கள்.? என ஒரு பெண் தேடும் பரபர திரைக்கதைதான் இந்த படம்...
==================
Empire of the Wolves-2005 /பிரெஞ்/ படத்தின் கதை என்ன???
அன்னா (Arly Jover) 31 வயசு பெண்மணி கல்யாணம் ஆயி 8 வருஷம் ஆவுது ஆனா குழந்தை இல்லை.. ஆனா புருசன் தன் புருசன் அப்படின்ற நினைப்பே இல்லை..அதே போல அவ்ள் வாழும் நகரத்தில் மூன்று இளம்பெண்கள் கொலை செய்யபடுகின்றார்கள்.. அதுவும் சாதாரணமாக இல்லை..உடலில் 32 இடங்களில் சதைகளை வெட்டி டார்ச்சர் செய்து முகத்தை சிதைத்து அந்த பெண்கள் கொலை செய்யபடுகின்றார்கள்..
கொலையாளியை பிடிக்க க்ளு கிடைக்காமல் போலிஸ் தவிக்கின்றது.. போலிஸ் இண்ஸ்பெக்ட்ர் நெர்டெக்ஸ்(Jocelyn Quivrin) க்ளு இல்லாமல் அந்த கொலையைளியை கண்டு பிடிக்க போராடுகின்றார்.. பட் இது போலான கொலைகளை துப்பறிவதில் கில்லாடியான ஆதே நேரத்தில் முரட்டுதனத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலிஸ் ஆபிசர் ஷீபர் (Jean Reno) உதவியை நாடுகின்றான்..
இரண்டு பேரும் சேர்ந்து கொடுர கொலையாளியை கண்டு பிடித்தார்களா?? முகத்தை மாற்றிக்கொண்ட அன்னா தான் யார் என்று கண்டுபிடித்தாலா? என்பதை வெண்திரையில் பாருங்கள்..
==============
படத்தின் சுவாரஸ்யங்களிவ் சில..
நல்ல சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் திரைப்படம்..
ஜேன் ரீனோவோட என்ட்ரி செமையா என்ட்ரி...
தான் யார் என்ற தேடலுடன் படிப்படியாக பயணிக்கும் அன்னா பாத்திரம் அவிழ்க்கும் மர்ம முடிச்சிகள் படத்தை சுவாரஸ்யபடுத்தும்..
ஜேன் ஒரு மாபியாவிடம் இறந்து போன பெண்களின் டீடெய்ல் அவனிடம் இருக்கின்றது என்று சொல்லி ஒரு கும்பு வடிவ கிளாசை வாங்கி சென்று உன் மகனுக்கு இந்த பரிசு என்று சொல்லிவிட்டு அவன் அந்த பெண்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று சொன்னதும் அவன் முகத்தை அந்த கூம்பில் அடிக்கையில் அந்த கேரக்டரின் முரட்டுதனம் விஷுவலில் காட்டப்படும் போது டிரைவிங் லைசென்ஸ் பிடிங்கியது நியாயம் என்று சொல்ல வைக்கும் காட்சி..
எப்போதும் எதையாவது மென்று கொண்டு துப்பறியும் கேரக்டர் ஜேன் கேரக்டர்.. அதே போல அந்த இளம் போலிஸ் ஆபிசரை கிட் என்று அழைப்பதும் அப்படி அழைக்காதே என்று கோபத்தோடு சொல்வது...அவனின் அம்மாவை இதே போல சீரியல் கில்லர் ஒருவன் கொலை செய்ததையும் அதனால்தான் இந்த போலிஸ் வேலையில் சேர்ந்து இந்த கொலையாளியை இன்றுவரை தேடுவதாக சொல்லி சின்ன கதையை அந்த இன்ஸ்பெக்டர் பக்கம் வைத்து இருக்கின்றார்கள்.
அன்னாவுக்கு உதவும் அந்த டாக்டர் பாத்திரம் மனதில் நிற்க்கும் பாத்திரம்...
அன்னா கேரக்டரில் நடித்து இருக்கும் பெண்ணின் நடிப்பும் அருமை.....
திரைக்கதை சின்ன புள்ளியில் ஆரம்பித்து கடைசியில் அது பல நாடுகளுக்கு பயணம் ஆவது என அசத்தி இருப்பார்கள்.
===============
படத்தின் டிரைலர்.
==========
படக்குழுவினர் விபரம்.
Directed by Chris Nahon
Produced by Andrew Colton
Patrice Ledoux
Written by Christian Clavier
Chris Nahon
Jean-Christophe Grangé
Franck Ollivier
Luc Bossi
Simon Michaël
Starring Jean Reno
Arly Jover
Jocelyn Quivrin
Music by Olivia Bouyssou
Luca De' Medici
Grégory Fougères
Dan Levy
Pascal Morel
Samuel Narboni
Cinematography Michel Abramowicz
Editing by Marco Cavé
Distributed by Gaumont/Columbia TriStar Films
Release date(s) 20 April 2005
Running time 128 minutes
Country France
Language French
Budget €24,000,000
Box office $11,875,866
Produced by Andrew Colton
Patrice Ledoux
Written by Christian Clavier
Chris Nahon
Jean-Christophe Grangé
Franck Ollivier
Luc Bossi
Simon Michaël
Starring Jean Reno
Arly Jover
Jocelyn Quivrin
Music by Olivia Bouyssou
Luca De' Medici
Grégory Fougères
Dan Levy
Pascal Morel
Samuel Narboni
Cinematography Michel Abramowicz
Editing by Marco Cavé
Distributed by Gaumont/Columbia TriStar Films
Release date(s) 20 April 2005
Running time 128 minutes
Country France
Language French
Budget €24,000,000
Box office $11,875,866
=================
பைனல்கிக்..
==================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ...நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நச் என்று ஒரு விமர்சனம்
ReplyDeleteஎன்ன சொல்ல ...
JAKIE SEKAR = JACKIE SEKAR..
one of your best.....thanks
ReplyDeleteVimarsanam padaththin meethu ethir parppai erpaduththukirathu.
ReplyDelete