Vaagai Sooda Vaa-2011/உலகசினிமா/தமிழ்/வாகைசூடவா..


இந்த சமுகத்துக்கு என்னால் என்ன  செய்ய முடியும்?? ஒரு தனிமனிதனாக சின்ன சின்ன உதவிகள்  செய்ய முடியும்...


உதாரணத்துக்க ரோட்டின் வளைவின் திருப்பத்தில் லோடு லாரியில் ஏற்றி சென்ற ஒரு பெரிய கருங்கல் ரோட்டில் விழுந்து இருந்தால்,எனக்கு என்ன என்று கடந்து போகாமல் வண்டியை ஓரம் நிறுத்தி, அந்த கல்லை எடுத்து ரோட்டின் ஓரம் போட்டு விட்டு செல்லுவேன்...

சாலையில் மழையில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டால் வாகனஓட்டிகள் விழுந்த விடக்கூடாது என்பதற்க்காக ஒரு பெரிய மரக்கிளையை உடைத்து அந்த பள்ளத்தில் நட்டு பலர் விபத்தில் சிக்காமல் இருக்க என்னால் ஆன உதவியை செய்து இருக்கின்றேன்..

அது போல ஒரு கலையின் மூலம் எம் சமுதாயத்தின் பிரச்சனையை, எந்த வியாபார நோக்கமும் இல்லாமல், தான் கொண்ட கொள்கையில் இருந்து வழுவாமல்,எந்த காம்பிரமைசும் செய்து கொள்ளாமல்,  என் சமுகத்தின் வாழ்வியல் பிரச்சனையை ஒருவன்  சொல்லுகிறான் என்றால் நான் அதனை பாராட்டுவேன்.. 

என் மேதாவி தனங்களை அதில் தினிக்காமல் அந்த  செயலை நான் பாராட்டுவேன். அவன் கை வலிக்க கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பேன். மிக மிக நன்றி மற்றும் வாழ்த்துகள் இயக்குனர் சற்குணம்.. காரணம் வாகைசூடவா படத்தின் மூலம் குழந்தை தொழிளார்கள் வேதனையை திரையில் செதுக்கி இருக்கின்றார்..

இந்த உலகில் அனைவருமே சுயநலவாதிகள் இல்லை..நிறைய பேர் நல்லது செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்..  பொதுநலத்துக்காக தங்கள் கனவுகளை இழந்தவர்கள் நிறைய பேர்..
எல்லோருமே அவசரமாக செல்ல முயற்ச்சித்து சான்கு சாலை சந்திப்பில், பெரிய டிராபிக் ஆகும் போது அங்கே  பக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களை பாருங்கள்... திடிர் டிராபிக் போலிசாராக உருமாறி டிராபிக்கை  சரி வெய்வார்கள்...மற்றவர்களை போல அவர்களுக்கு என்ன என்று அவர்கள் இருந்து இருந்தால் அந்த டிராபிக் எளிதில சரியாகாது...

பென்னிகுக் ஒரு வெள்ளைக்கார என்ஜினியர்..மாட்டை மேச்சோமா? கோலை போட்டோமா ? என்று அவர் இருந்து இருந்தால் இன்று முல்லைபெரியாறு அணை இல்லை...பொதுநலத்துக்காக தன்  சொத்துக்களை விற்று தமிழ்நாட்டு மக்களுக்கு அணைக்கட்டி கொடுத்தவர்..

அதனால்தான் இன்றும் முல்லை பெரியாறு அணைப்பக்கம் அருகில் உள்ள வீடுகளில் பென்னிகுக் புகைபடம் இல்லாத வீடு இல்லை...அவர் இறந்து பல காலம் ஆகியும் அவர் பெயரை தன் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்... அப்படி சுயநலமாக ஒரு கிராமத்துக்கு வந்து, பொதுநலத்தில் அக்கறை செலுத்திய ஒரு வாத்தியாரின் கதைதான் வாகை சூடவா....
========================

வாகைசூடவா படத்தின் கதை என்ன?



கதை நடப்பது 1960 களில்....விமலின் பெற்றோருக்கு சர்க்கார் உத்யோகத்தில் தன் பிள்ளை பணிபுரிய வேண்டும் எனற ஆசை...கண்டெடுத்தான் காடு கிராமத்தில் செங்கல் சூளையில் முதலாளி பெண்வண்ணன் ஏவலுக்கு கட்டுப்பட்டு, படிப்பறிவு இல்லாமல் செங்கல் கல் அறுக்கும் தொழில் செய்யும் மண்ணின் மைந்தர்கள்..அவர்கள் பிள்ளைகளும் படிப்பறிவு இல்லாமல் வேகாத வெயிலில் கஷ்டப்படுகின்றனர்..கிராமசேவா சங்கத்தினர் மூலம் அந்த பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்டினால், ஒரு சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள்.. அதனை கொடுத்து அரசாங்க வேலையில் சேர்ந்து விடலாம் என்று அந்த கிராமத்துக்கு வரும் வாத்தியார் விமல்..

கல்வி பாடம் என்றாலே காதூரம் ஓடும் பிள்ளைகள்.. படிப்புவாசனை இல்லாத மக்கள்...அந்த ஊரில் டீக்கடை வைத்து இருக்கு பெண் இனியா , விமல் மீது காதல்வயப்படுகின்றார்.. கிராம சேவா சர்ட்பிகேட் கிடைத்ததும்  அந்த கிராமத்தை விட்டு கிளம்பிடவேண்டும் என்று முடிவில் இருக்கும் விமலிடம், எந்த பையனும் பாடம் படிக்க மறுக்கின்றார்கள். விமலிடம் பசங்க பாடம் படிக்க வந்தார்களா? டீக்கடை பெண்ணின் காதல் என்னவானது? விமலின் அரசாங்க உத்யோகம்??? அதுக்குதான் தியேட்ட்ர்ல போய் பார்த்து முடிவு தெரிஞ்சிக்கோங்க.....
=========================           
படத்தின் சுவாரஸ்யங்கள்..

களவானி என்ற காமெடிப்படம் எடுத்த இயக்குனர் சற்குணத்தின் அடுத்த படைப்பு..இப்படி ஒரு சமுக பிரச்சனையை உரக்க சொன்னதற்கு என்ன குறை படத்தில் இருந்தாலும் கைகுலுக்க பாராட்டலாம்..

1960களில் கதை நடக்கின்றது என்பதால் ஆர்ட்டைரக்டரின் பெண்டைநிமித்தி இருக்கின்றார்கள். என்பது எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...

மாட்டுவண்டி, அந்தகாலத்து லாரி, பேருந்து, ரேடியோ, குட்டிகுரா பவுடர்,விகடன் என்று ஆர்ட் டைரக்டரின் உழைப்பு எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...

ஒளிப்பதிவு அற்புதம்... முக்கியமாக அந்த கால காடவிளக்கு மற்றும் லாந்தர் விளக்குகள் என்பதால் ஒளி தொடர்ந்து ஒரே மாதிரியாக டென்சிட்டியில் கிடைக்காது, காற்றுக்கு தக்கபடி ஒளி மாறுபடும்.. அதனை இரவு நேரக் குடிசை காட்சிகளில் கேமராமேன் ஓம்பிரகாஷ்  சிறப்பாகவே செய்து இருக்கின்றார்

விமல் வீட்டில் இருந்து சேதி சொல்லிவிட்டு ஓடும் ஒரு பையனின்  கால்களிலில் இருந்து கேமரா பயணித்து அப்படியே அந்தரத்துக்கு போகும் அந்த லாங் ஷாட் இரட்டை வழிப்பாட்டையின் சென்டரில் போய் நிற்பது, மிளகாய்  தொட்டத்தில் பேக் லைட்டாக அதிகம் லைட் வைத்து விட்டு போர்கிரவுண்டில் ஆர்டிஸ்ட் என்று இரவு நேரக்காட்சிகள் மற்றும் பாடல்காட்சிகளில் ஒளிப்பதிவு கவிதை...

புது இசைஅமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் என்பதால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.. சரசர சாரை காத்து சாங் இனிமேல் மியூசிக் சேனல்களில் வளம் வரும்...முக்கியமாக நிறைய குட்டி குட்டி பாடல்களை போட்டு நெஞ்சை அள்ளுகின்றார்கள்..

விமல் வாத்தியார் பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்துகின்றார்..அவரின் குரல் அவருக்கு பெரிய பிளஸ்.. அந்த கிராமத்து அலட்சிய பேச்சு அவருக்கு பிளஸ்தான். இயக்குனர் சொன்னதை செய்து இருக்கின்றார்.. விளாங்காய்  தெரியாமல் ஒரு வாத்தியார் இருக்கின்றார் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

பசங்களின் குறும்புகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றது.

அந்த பைத்தியக்கார குருவிகாரர் கேரக்டர் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட கேரக்டர் என்றாலும், இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் போல தான் வாழும்  மண்ணையும், கனிமங்களையும் இயற்க்கையையும் நேசிக்கும் கேரக்டர்.. கடைசியில் அது அழகிய தீயே படத்தில் நடித்த சித்தப்பா என்று தெரிய வரும் போது வியப்புதான்...

இனியா... பூ படத்து நாயகியை ரசித்த பிறகு  எக்ஸ்பிரஷனில் மிரட்டும் நடிகையை இந்த படத்தில்தான் பார்க்கின்றேன்.. அவரின் கண்கள் பெரிய பிளஸ்.. அதுலேயே பல உண்வுகளை வெளிபடுத்தி விடுகின்றார்...

பால் வருமா சார்?  என்று  சொல்லி விட்டு பிள்ளைகள் போனதும் மீதிக்கதையை எனக்கு எப்ப சொல்லப்போறே? என்று சொல்லி மாரப்பை இழுத்து விட்டு ஒரு பார்வை பார்ப்பரே சான்சே  இல்லை...

ஊருக்கு போகவில்லை என்று சொன்னதும் வரும் உற்சாகத்தில் ஆடும் அந்த சின்ன பாடல் காட்சிகளில் இனியா கியூட்...

ஆ என்று எழுதி அந்த கல் அப்படியே லாரியின் செங்கல் லோடில் செல்வது போலான காட்சி அருமை.....

உரையாடல்களில் சில சமகால வார்த்தை பிரயோகங்கள் வந்தாலும் ரொம்ப வருடத்துக்கு பிறகு சும்மா ''விட்'' அடிக்காதிங்க என்ற பழைய வார்த்தையை கேட்டேன்........நிறைய கிராமத்து பழக்க வழக்கங்களை மிகையில்லாமல் இந்த படம் பதிவு செய்து இருக்கின்றது... அதுக்காக படக்குழுவினருக்கு ஒரு ராயல் சல்யூட்.

இன்னும் நிறைய 1960களை நியாபகப்படுத்த பலது இருந்தாலும் பட்ஜெட் கருதி  முடிந்தவரை போராடி இருக்கும் இந்த திரைக்குழுவினருக்கு என் நன்றிகள்...

=================
படத்தின் டிரைலர்...


====================
படக்குழுவினர் விபரம்.
Directed by     A. Sarkunam
Produced by     S. Muruganandham
N. Puranna
Written by     Sarkunam
Starring     Vimal
Iniya
K. Bhagyaraj
Ponvannan
Music by     M. Ghibran
Cinematography     Om Prakash
Editing by     Raja Mohammed
Studio     Village Theatres
Release date(s)     September 29, 2011
Country     India
Language     Tamil

=========================
தியேட்டர் டிஸ்கி...

எல்லாத்தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காம கடைசியா மவுண்ட் ரோட் அண்ணா தியேட்டருக்கு போனோம்.. படம் பார்க்கறதை விட எல்லாத்தலையும் திரையை மறைக்கும், நடந்து போறவன் மறைப்பான் இருந்தாலும் சரி வேற வழியில்லைன்னு போனோம்..

படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது விமலிடம் இனியா உங்களை கல்யாணம் செய்துக்கனும்னா என்ன செய்யனும் என்று கேட்பார்..? அதுக்கு தியேட்டரில் இருந்து பதில்.. 
முதலில் நீ மேக்கப் போடனும்னு சொல்லி  ஒரே கலாட்டா...

படம் முடிந்து வெளியே வருகையில் இனியா நின்று கொண்டு இருந்தார்... கேமராவும் மைக்கை வைத்துக்கொண்டு படத்தின் ரிசல்ட் எப்படி என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.  படத்தை பார்த்து விட்டு வந்த ஒரு முண்டம், அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,..
=============
பைனல் கிக்
இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்..ஒரு கிராமத்தில் வாழ்ந்த திருப்தியை இந்த படம் எனக்கு தந்தது..

 ==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

12 comments:

  1. //சரசர சாரை காத்து சாங் இனிமேல் மியூசிக் சேனல்களில் வளம் வரும்.//
    சற்றுமுன்தான் அந்தப் பாடலைத் தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன்.

    ReplyDelete
  2. கொஞ்சம் late ah வந்தாலும் உங்களது விமர்சனம் நன்று.

    ReplyDelete
  3. படத்தை பார்த்து விட்டு வந்த ஒரு முண்டம், அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,..

    அடப்பாவிங்களா ...?

    ReplyDelete
  4. // அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,.. //

    கண் இருந்தும் குருடன்!

    ReplyDelete
  5. //அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.//

    இப்படிப் பட்ட முண்டங்களுமா? சீ

    ReplyDelete
  6. dear jackie
    viraivil ippadathai paarkiraen. "bennyquik" patri ezhthiulleargale padathil avaraippatri varugiratha?? he is a great person as i had already read about him. paruthiveeran padathil "Douglas" --- kanja karuppu ---adhisiyamaga englishkaaran paeru eppadi then tamizhnatthil yeana en thunaiviyar kettataharkku naan bennyquik and logan thurai patri sonnathu gnajabagam varugirathu. this is what a good directors talent on minute detailing the characters and the film. kudos to sargunam and his unit. ( my wife liked his debut film kalavani a wholesome entertainer )
    bennyquik nostalgia and hence this comment. thanks
    anbudan sundar g

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம்....
    படம் சூப்பர்........

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்....
    உடனே பார்த்திட வேண்டியதுதான்.......

    ReplyDelete
  9. andha padathin trailer paathu ...andha heroine kurumbukkaga thaan padam pakka ponen...sema azhaga irundha ...close up shot vachi ,,,koranja makeup la .....naan sathyam theater la than paathen...yaaro plan panni idhai seiranga....oru 10 peru theater vandhu kindal adichchi ..padatha kevalama vimarsanam ...senjikite padam pakkaranga ...yaaru panra velai theriyla ...aduvum first show pona kooada ....andha group ..etho vimarsanam panikite pakkaranga...producer unga kavankkkanum indha vishayatha ...:) nalla vimarsanam. naan romba adigama ethir pathen...45% thaan thirupthi ...:D

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner