கற்றுக்கொடுத்தவள்..




மூக்குமேல் கோபம் வரும்.. சட்டென கை நீட்டி விடும் ஆள் நான்..கோபத்தில் இடம் பொருள் எல்லாம்  பார்க்காமல் வாயில் வரும் கெட்ட வார்த்தைகள் அதிகம்..
யோசித்து எல்லாம் பார்க்கவே மாட்டேன்... என்னோடு பழகியவர்களுக்கு எல்லாம் அது தெரிந்து போன விஷயம்.. என் முன் கோபத்தால் பிரிந்து போன நட்புகள் நிறைய...


சில வருடங்களுக்கு முன் ராமபுரத்தில் இருந்து  கிண்டிக்கு போகவேண்டும்...பைக்கில் என் காதலியை அழைத்து செல்கின்றேன்..முன்னாள் சென்ற ஒரு பைக்காரர்  அவருக்கு போன் வந்த காரணத்தால் ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறக்கிய வண்டியை ஓரம் கட்டாமல் அப்படியே நிறுத்தி பேச,  எனது வண்டி ஸ்பீட் பிரேக்கர் மேல் ஏறியதும் என்ன பிரேக் போட்டும் பின்னால் அவர் வண்டியை மிக லைட்டாக இடித்து விட்டது....


போனில் பேசிக்கொண்டே என்ன என்றார்...டக்குன்னு பிரேக் போட்டுட்டிங்க.. சாரி என்றேன்..


சாரி சொல்லிட்டா எல்லலாம் சரியா போயிடுச்சா... என்று சொல்லி நான் அப்பறம் பேசறேன் என்று சொல்லி அந்த பைக்காரர் போனை கட் செய்தார்..


அப்படி இல்லைங்க..போன் வந்ததும் நீங்க சட்டுன்னு பிரேக் போட்டுட்டிங்க வண்டியை ஓரமாவும் நிறுத்தலை... ஸ்பீட் பிரேக் இருப்பதால் நானும் ஸ்லோவாதான்  வந்தேன்.. சட்டுன்னு நீங்க வண்டியை நிறுத்திட்டதால லைட்டா இடிச்சிடுச்சி...சாரி வேனும்னு இடிக்கலை..


எனக்கு பின்னால் என் காதலி இருந்த காரணத்தால் அவரை பார்த்தவுடன் தன் பேச்சை அந்த பைக்காரர் வளர்க்க ஆரம்பித்தார்..



பின்னாடி பொண்ணு இருந்தா உங்களுக்கு கண்ணு தெரியாதே..எதுக்கெடுத்தாலும் சாரி...


பாருங்க அனாவசியா பேசாதிங்க...?  ஏதாவது டெமேஜ் இருந்தா சொல்லுங்க நான் பே பண்ணிடறேன் என்றேன்..


துரை உட்டு புள்ள பொல இருக்கு...காசு விளையாடுது போல.. என்று தேவையில்லாமல் பேசினார்.. சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போயிடுமா என்று திரும்ப ஆரம்பித்தார்....

எனக்கு உடைந்தபானையே வேண்டும் என்பது போல..ரொம்பவே ஓவராக போக....


என் காதலியை வண்டியை விட்டு இறங்க சொன்னேன்


என் வண்டியை அப்படியே ரோட்டில் போட்டேன்...


ஏய் ங்கோத்தா வண்டியை ஓரம் கட்டமா சட்டுன்னு பிரேக் அடிச்சி வண்டியை நிறுத்தி பேசற, சாரி கேட்டா?  சாரி கேட்டா போச்சான்னு சொல்லற... சாரிக்கேக்காம....உன் பு.... இங்க வச்சி நடு ரோட்டுல ஊம்ப சொல்றியா??? பு......மவனே என்று பர பர என்று அவனை நோக்கி வெறியோடு  முஷ்ட்டி மடக்கி முன்னேறினேன்...


அமைதியா இருந்தவன் பைக்கை ஸ்டண்ட் கூட போடாமல் வண்டியை ரோட்டில் போட்டு விட்டு கோபத்தோடு முன்னேறி வரும் என்னை பார்த்து, அவன் மிரண்டு போனான், வண்டியை அவசரமாக ஸ்டேன்ட் போட்டு இரண்டு  மூன்று அடி நகர்ந்து ஓடத்தொடங்கினான்..பக்கத்து தெருவில் நுழைந்து ஒடினான்..அவனை சில அடிதூரம் துரத்தி விட்டு,
ஒம்மால இந்த ஏரியாவுல  உன்னை பார்த்தேன்...நீ அவ்வளவுதான் என்று கத்தி  சொல்லிவிட்டு வெறியோடு திரும்ப  வந்து, விழுந்து கிடந்த வண்டியை எடுத்தேன்..

என் காதலியை உட்காரசொன்னேன்.. அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்...


ராமபுரம் எங்களை  வேடிக்கை பார்த்தது...

நான் என் காதலியிடம் எதுவும் பேசவில்லை.. அவளும் பேசவில்லை...அவளை வீட்டில் இறக்கி விட்டேன்...


இரண்டு நாள்  கழித்து மெரினாவில்  என் காதலியிடம் பேசினேன்....

பொது இடத்தில் உன்னை வச்சிகிட்டு அப்படி நடந்துகிட்டதுக்கு சாரி என்றேன்..


சாரி எல்லாம் எதுக்கும்??? உன்மேல தப்பே இல்லை... நடுரோட்டுல நிறுத்திட்டான்... வண்டியை லேசா இடிச்சிது.. சாரி கேட்டாச்சி...சேதம்னா  சரி பண்ணி தரோம்னு சொல்லியாச்சி.. திரும்ப எகிறினா??? நீ செஞ்சது தப்பில்லை சரி என்றாள்..


என் விருப்பு வெறுப்புகளை அப்படியே ஏற்றுக்கொண்டாள் என் மனைவி.....ஆனால் நான் முன்பு போல் முன் கோபியாக இப்போது இல்லை..

முன் கோபம் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் சட்டென  நிதானம் வந்து விடுகின்றது... நிதானமாய் கோபத்தையும், எதிர்ப்பையும் காட்ட எனக்கு  கற்றுக்கொடுத்தவள் என் முன்னாள் காதலியான  என் மனைவிதான்..


இதோ மூன்று வருடம் கழிந்து இன்றில் இருந்து நாலாவது ஆண்டில் யாழினியுடன் அடி எடுத்து வைக்கின்றோம்...நேற்றுதான் திருமணம் நடந்தது போல இருக்கின்றது...


வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள்.,.



 எங்களுக்காக நேரம் ஒதுக்கி கிரிட்டிங் கார்டு ரெடி செய்து அனுப்பி வாழ்த்து சொன்ன திருச்சி நல்லதம்பிக்கு எனது நன்றிகள்


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

63 comments:

  1. தல திருமண நாள் வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  2. Congratulations to both:)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணா, அண்ணி!... இருவரும் இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. மகிழ்ச்சியான தம்பதிகளாய் நீங்கள் பல்லாண்டு வாழ இந்த நண்பனின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சேகர்!

    ReplyDelete
  5. • » мαηソ мσяє нαρρソ яєтυяηѕ σƒ тнє ∂αソ נα¢кιє αηηα»»»»

    мσнαη « •

    ReplyDelete
  6. Good Post Anna.. Best Wishes to Both of You!

    ReplyDelete
  7. //ஏய் ங்கோத்தா வண்டியை ஓரம் கட்டமா சட்டுன்னு பிரேக் அடிச்சி வண்டியை நிறுத்தி பேசற, சாரி கேட்டா? சாரி கேட்டா போச்சான்னு சொல்லற... சாரிக்கேக்காம....உன் பு.... இங்க வச்சி நடு ரோட்டுல ஊம்ப சொல்றியா??? பு......மவனே என்று பர பர என்று அவனை நோக்கி வெறியோடு முஷ்ட்டி மடக்கி முன்னேறினேன்...
    //

    இந்த சீன் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :))

    வாழ்த்துகள் தல!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஜாக்கிண்ணா

    ReplyDelete
  9. This is your wedding anniversary – a very important date in your life. We all love you and believe in your star. Star that will lead you to intoxicating success, happiness and prosperity!

    ReplyDelete
  10. திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி!!!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  12. திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  13. Wishing many more wedding anniversaries....

    ReplyDelete
  14. அண்ணே இதயம் கனிந்த மனப்பூர்வமான திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் உங்கள் இல்லறம் சிறக்கட்டும்.

    ReplyDelete
  15. இனிய மணநாள் வாழ்த்துக்கள்! இன்றுபோல் என்றும் வாழ்க அண்ணே!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ஜாக்கி..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும் அண்ணிக்கும், குட்டி தேவதை யாழினிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் சேகர்.

    ReplyDelete
  19. திருமணநாள் நல்வாழ்த்துகள் .இன்றுபோல் என்றும் வாழ்க !!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  20. திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. என்னுடைய பிறந்த நாளன்று திருமண நாள் காணும் நீங்கள் எல்லா இன்பமும்,வளமும்,செல்வங்களும் பெற்று.... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூடி வாழ்க....

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ஜாக்கி. இன்னும் நூறு மண நாள் காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. பல படங்கள் எடுக்கிற அளவு மேட்டர் வச்சிக்கிறீங்க ஜாக்கி...

    தெலுகு படம் சீன் பாத்தமாதிரி வர்ணனை பிரமாதம்.

    வாழ்த்துக்கள் பல...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  24. ஜாக்கி தம்பதியனர்களுக்கு மனமுவர்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள். ...

    ReplyDelete
  25. Dear jackie

    thangalukkum thangal thunaiviyarukkum manmaarntha iniya thirumana nalvazhthukkal. my favourite usual quote for wedding:

    " UNDERSTANDING IS THE SHORTEST DISTANCE BETWEEN TWO PEOPLE "

    manamotha thambathigalaga needuzhi vazhavum ella valamum petru inbutru vazhavum paramporulai vendikollgiraen.

    anbudan
    sundar g rasanai

    ReplyDelete
  26. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் ! ! ! ! ! :-)

    ReplyDelete
  27. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

    ---Muthuvel

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் ஜாக்கி,
    இந்தப் பதிவை படிக்கையில் ஏனென்றே தெரியாத ஒரு மகிழ்வை உணர்ந்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. //நிதானமாய் கோபத்தையும், எதிர்ப்பையும் காட்ட எனக்கு கற்றுக்கொடுத்தவள் ///

    வாழ்த்துகள் ஜாக்கி!

    இன்னாலும், எந்நாலும் காதலிதான்

    ReplyDelete
  30. திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  31. Wish you many more happy returns.. My best wishes to you & your family

    ReplyDelete
  32. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா.

    ReplyDelete
  33. வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Good. Wishes... sometimes others make lots of differences in us. one of them is mom and wife....

    ReplyDelete
  36. இன்னாள் உவகை என்னாளும் பெருக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  37. நண்பா ஜாக்கி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  39. திருமண நாளை இவ்வளவு அழகாக எழுதியமைக்கு பாரட்டுக்களும்! உங்கள் இருவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  40. திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி. உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், குழந்தை யாழினிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  42. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சேகரண்ணா.
    அண்ணிக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
    சில இடங்களில் சில நேரங்களில் கோவம் தேவைப்படத்தான் செய்கிறது.

    ReplyDelete
  43. மனமார்ந்த வாழ்த்துக்கள்....ஜாக்கி

    ReplyDelete
  44. திருமண நாள் வாழ்த்துக்கள் தனசேகர்!!!

    ReplyDelete
  45. திருமண நாள் வாழ்த்து...


    ஆர்பரிக்கும் கடல்..
    அமைதியாகி..
    இத்தனை காலமா!
    அவ்வப்போது எழும்..
    என்
    ... கோப அலைகள் கூட..
    கரையோர
    உன் தவத்தை பார்த்து..
    கால்களை தழுவிக் கொள்ள செய்[தாய்]..
    நீ..
    இன்னொரு..அம்மா..
    காரணம்..
    உன்னிடம்..மட்டும் தான்..
    நான் "நானா" கா..
    என்னை..உணர்ந்தவள்..
    என்னை உணர செய்தவள்
    என்னை உயர செய்தவள்..
    என் கூட்டலும் கழிதலும்..நீ அறிவாய்..
    உன்னை..உயர்த்துவது..
    உனக்கு பிடிக்காது..
    ஆனால்..
    கண்ணிமைகளை..
    கண்கள் பாராட்டாமல்..
    வேறு..யார் பாராட்டுவர்?
    என் வாசம்..எப்போதும் உன் சுவாசத்தில்..
    அதனால் தான்...எப்போதும்..
    உன் நினைவுகளுடன்.

    ReplyDelete
  46. //கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்.//- பாரதி தாசன்.
    இந்த பாட்டிகள், அம்மாக்கள், அக்காக்களின் சொல்லுக்கோ, பார்வைக்கோ இல்லா
    வசீகரம்...காதலிகள் வாக்குக்கும் , நோக்குக்கும் உண்டு.
    இந்த ஜாக்கி இதுக்கு விலக்காகிவிட முடியுமா?
    அவர்கள் அனுசரியுங்களை, வாழ்க்கையை அனுபவிங்கள்.

    ReplyDelete
  47. அன்பின் ஜாக்கி....

    தங்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்... தாங்கள் இன்று போல் என்றும் நல்ல உடல் நலத்துடன், அனைத்து வளங்களுடனும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  48. திருமண நாள் வாழ்த்துக்கள். Sorry brother forget to call

    ReplyDelete
  49. உங்கள் இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. ஜாக்கி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. திருமண நாள் வாழ்த்துக்கள் Boss....

    ReplyDelete
  52. தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி சார்...

    ReplyDelete
  53. வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் தம்பிகளுக்கும் மிக்க நன்றி.. ரொம்ப நெகிழ்ச்சியா பீல் செய்யறேன்.. நன்றி மக்கள்ஸ்..

    ReplyDelete
  54. வாழ்த்துகள் ஜாக்கி..வாழ்க்கைக்கும் எழுத்துக்கும்..இச்சம்பவத்தை இங்கே நினைவு கூர்ந்தது சிறப்பு..உங்கள் பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner