தீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…பெங்களுருவில் இருந்து தமிழ்நாட்டு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. பேருந்து புதியதாக இருந்தது... டிக்கெட் எடுக்க வழக்கம் போல 225ரூபாய் கொடுத்தேன்..


சார்..295 கொடுங்க என்றார் நடத்துனர்... 

நான் ஏன் என்றேன்..?

சார் ஒரு மாசம் ஆயிடுச்சி... ரேட் ஏத்தி...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... எப்படி இவ்வளவு கட்டண உயர்வு அதுவும் ஒரு ரூபாய் இல்லை இரண்டு ரூபாய் இல்லை பழைய கட்டணத்தை விட 70ரூபாய் அதிகம்..

ஏன் இப்படி அநியாயமாக வாங்குகின்றீர்கள் என்று கேட்டேன்?

சார் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி ஈக்குவலா எங்களையும் வாங்க சொல்லிட்டாங்க...

சரிடா... வாங்குங்க.. ஆன அவனுங்க மெயின்டெயின் பண்ணறது போல நீங்க எங்கயாவது மெயின்டெயின் பண்ணறிங்களாடா? என்று மனதில் கேட்டுக்கொண்டேன்..

சென்னையில் ஓடும்  வால்வோ ஏசி பேருந்துகள் மற்றும் பெங்களுர் மாநகரில் ஓடும் வால்வோ ஏசி பேருந்துகளை ஓப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும்.. அந்த பேருந்தின் சுத்தத்தையும் இந்த பேருந்தின் சுத்தத்தையும்... வால்வோக்கே அதுவும் தலைநகரில் ஓடும் பேருந்துக்கே இப்படி என்றால் தென்மாவட்டத்து பேருந்துகளின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள்..

பல பேர் யூஸ் செய்யும் பேருந்து.. ஆனால் அவர்கள் இன்னும் புத்தம் புதிது போல பொலிவாக வைத்து இருக்கின்றார்கள்..ஆனால்  நம் பேருந்துகளை பாருங்கள்..இத்தைனைக்கு வல்வோ கட்டணங்கள் அதிகம்தான்...ஆனாலும் சுத்தம் கிடையாது..மெயிண்டெனன்ஸ் என்ற பார்த்தால் ?  போங்கடா... நீங்களும் உங்க மெயின்டெயின்சும் என்றுதான் சொல்லத்தோன்றும்..

எங்கேயும் எப்போதும் படத்தில்தான் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் எப்படி சுத்தம் செய்து பயணத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியே வருகின்றது என்று பார்த்தேன்...? ஆனால் அப்படி சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தது போல ஒரு பேருந்தையும்  நான் பார்த்தது இல்லை...
(தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் புதிய பேருந்து...புகைபடம் வேலூரில் எடுத்தது..)

ஆனால் 295 வாங்கிய பேருந்து புதிய பேருந்து..அல்ட்ரா டீலக்ஸ் ஹைவே ரெய்டர் என்று பெயர் போட்டு இருக்கின்றார்கள்..ஆனால்பேருந்தன் உள்ளே சீட்டுகள் அதிகம் வைத்து இருக்கின்றார்கள்..  ஜன்னல் ஓர சீட்டில்  உட்கார்ந்து விட்டு வெளியே வருவதற்க்குள் பெரிய அக்கப்போராக இருக்கின்றது..

(புதிய பேருந்தின் உள்ளே) 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பெங்களுருக்கு போக கோயம்பேட்டுக்கு போனால், ஒரு 100 பேருந்துக்கு மேல் பெங்களூர் மற்றும் மைசூர் செல்ல கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் வரிசையில் அணிவகுத்து நிற்க்கும்...நம் போக்குவரத்து கழகத்தை விட பல மடங்கு கட்டணம்தான் என்றாலும் கூட்டம் அலை மோதும்...

பெரும்பாலும் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளை பயண்படுத்தும் அத்தனை பேரும் லட்சங்களில் சம்பாதிப்பவர்கள் ஆனால் நம் பேருந்துகளை பயண்படுத்தும் மக்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்து மக்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்...

மற்ற ஸ்டேட்டை கம்பேர் செய்யும் போது பேருந்து கட்டணம் தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்பதை மற்ப்பதற்கு இல்லை...
பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு இல்லை.. இப்போது ஏற்றப்போகின்றார்கள்..பத்தாண்டு காலம் ஆட்சி  செய்த இரண்டு திராவிடகட்சிகளுமே பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை... ஆனால் இப்போது  உயர்த்த போகின்றார்கள்..அது அவசியமும் கூட என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை...

நடுத்தர மக்களின் நிலை அறிந்து பேருந்து கட்டணத்தை ஆளும் அரசு உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..

மேடம் தனியார் பேருந்துகள் பெங்களுருக்கு ரூ450 வாங்குகின்றார்கள்.  அதுக்கும் மக்கள் கூட்டம் மொய்க்கின்றது அதனால் நம் தமிழ்நாட்டு பேருந்து கட்டணத்தையும் அந்த அளவுக்கு உயர்த்தினால் நல்லது என்று யாராவது ஒரு ஐஏஎஸ் சொன்னால்...

ஒய் நாட் சேம் பிரைஸ் நம்ம பஸ்ஸஸ்க்கும் அதே ரேட் பிக்ஸ் பண்ணிடுங்க என்று  ஹெலிகாப்டரிலேயே எதுக்கெடுத்தாலும் பறக்கும் நமது முதல்வர் ஓகே  சொல்லிவிடக்கூடாது என்பதே நம் கோரிக்கை....

ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் நமது முதல்வர் ஜெவின் தீபாவளி பரிசாக போக்குவரத்து கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.. அது தீபாவளிக்கு முன்னாடியே அல்லது தீபாவளிக்கழித்து பேருந்து கட்டண உயர்வு இருக்கலாம் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

ஆல் த பெஸ்ட் தமிழக மக்கள் மற்றும் குறிப்பாக தென்மாவட்டத்து மக்கள்...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துகள்..

===========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

14 comments:

 1. அட ஆமா தீபாவளி வந்திடிச்சில்ல

  ReplyDelete
 2. இப்பொழுதல்லாம் வியபார நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையை அதன் உற்பத்திச் செலவுகளை கணக்கில்கொண்டு நிர்ணயம் செய்வதில்லை. நுகர்வோரின் வாங்கும் திறனை அடிப்படையாககொண்டே விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரசும் அவ்வழியே. அதிகவிலை கொடுத்துப் பயணிக்கவே சனம் முட்டிமோதிக்கொள்ளும்போது................ தாங்கள்மட்டும் எதற்கு சலுகைவிலையில் என எண்ணுகிறதுபோலும்

  ReplyDelete
 3. யாரு ஆட்சிக்கு வந்தாலும் நம்ம பர்ஸுக்குத் தான் அதிகமா கடி! :-(

  ReplyDelete
 4. வாங்குகிற காசுக்கு ஒழுங்கா வசதி பண்ணி கொடுத்தாலே நம்ம ஊர் பேருந்து பயணம் நல்லா இருக்கும். ஆனா யார் அதை செய்யவாங்கன்னுதான் தெரியல...

  ReplyDelete
 5. as per the intra state rules, both the state buses should collect the same tarrif. already they are doing the same for the routes b/w bangalore -> hosur,salem. now chennai also joined in the race.

  bangalore bus fares are very high. KSRTC is running in profit only because of their bus tarrif. KSRTC bus rates immediately will increase if there any change in the diesel rates.but in tamilnadu its difficult to implement.

  ReplyDelete
 6. அதிமுக விற்கு வோட்டு போட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. sir enga oorla bus charge athiga paduthi 3 month aachu...soona paana ku vote pottavanga valga....

  ReplyDelete
 8. guys know one thing setc and all other transport companies cancelled the contract for bus cleaning 2 years back itself because of it financial status, and asked respective depot to clean buses by themself

  ReplyDelete
 9. // எங்கேயும் எப்போதும் படத்தில்தான் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் எப்படி சுத்தம் செய்து பயணத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியே வருகின்றது என்று பார்த்தேன்...? ஆனால் அப்படி சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தது போல ஒரு பேருந்தையும் நான் பார்த்தது இல்லை... //

  அந்த காட்சியை கண்ட‌ உடனே இதையேதான் என் நண்பர்கிட்ட சொன்னேன். இது நாள்வரை நான் பயணம் செய்த அரசு பேருந்து சுத்தமா பாத்ததில்லை. என்னை பொறுத்தவரை அரசு பேருந்தை தவிர்க்க முடியாத அவசரத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறேன். இதையெல்லாம் விட ஒரு கொடுமை சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் விக்ரவாண்டியில் ஒரு அரை மணி பேருந்தை நிறுத்தும் போது இனிமேல் இந்த வண்டில ஏறுவாயான்னு கேட்பது போல் இருக்கும்!

  ReplyDelete
 10. உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகெண்ட அத்தனை நண்பபர்களுக்கும் என் நன்றிகள்.

  மோகன் உங்களுக்கு செமை நக்கலுங்க..

  ReplyDelete
 11. http://wheretheworldisgoing.blogspot.com/2011/11/government-bus-la-ticket-008-paise.html?spref=bl

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner