அப்படி ஒரு சந்தோஷம் திரைப்படங்களை பார்க்கும் போது கூட அந்த வயதில் ஏற்ப்பட்டது இல்லை... கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை...
எட்டாம் வகுப்பு படிக்கும் போது பெரிய அட்டை பெட்டியில் சுபா,பிகேபி,ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் புத்தகங்களை வகுப்பு முழுவதும் எல்லோருக்கும் வினியோகிப்பதை ஒரு பொழப்பாகவே வைத்து இருப்போம்..
செக்ஸ் புத்தகம் படிப்பது போல டாய்லட்டில் எல்லாம் போய் உட்கார்ந்து படிப்போம்.. ஈகிள் ஐ துப்பறியும் நிறுவனம் வரும் எல் கதைகளும், பரத் சுசிலா வரும் எல்லாக்கதைகளும் யார் முதலில் படிப்பது என்ற பெரிய போட்டியே நடக்கும்...
எனது நண்பன் சுபாஷ் விவேக் ரூபலா ரசிகன்.. அவன் விவேக்காகவும் ரூபலாவை காதலியாகவும் நினைத்துக்கொண்டு அவன் அறையில் பெரிய ரூபலா உருவத்தை அறையில் வரைந்து அதனுடன் கனவுகண்டு இருக்கின்றான்..
நான் வைஜெயந்தி,சுசிலா கூட எல்லாம் குடுத்தினம் நடத்திய காலங்கள் அவை... அப்படி ஒரு காதலி கிடைத்தால் எப்படி எல்லாம் பேசலாம் என்று கற்பனையில் உருவம் கொடுத்து கொஞ்சிய பொழுதுகளை நினைத்தால் இப்போதும் சிரிப்பாக இருக்கின்றது..
முக்கியமாக சுசிலாவின் குறும்பில் கவரப்பட்டு இழுத்து வைத்து நடு ரோட்டில் கற்பனையில் கிஸ் அடித்த கணங்களை மறக்க முடியாது..
ராஜேஷ்குமார் கதையில் சூர்யகலாதரன் என்ற கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது..அந்த கதையில் ஒரு பேக்ட்ரியில் போய் துப்பறிந்து இறப்பது போல ஒரு பாத்திரம் என்று நினைக்கின்றேன்.. அந்த கதை நினைவில் இருக்கின்றது... ராஜேஷ்குமார்.. கிரைம் நாவலில் காற்று உறங்கும் நேரம் இன்னும் மனதில் இருக்கின்றது.. அதே போல ஈகிள் ஐ ராமதாஸ் ஒரு ஒலிம்பிக் கேம் போட்டியில் நடக்கும் பிரச்சனையில் துப்பறிந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பது போல இருக்கும்...
பிகேபி எழுதிய கதைகளில் எனக்கு என்னவோ அந்த தலைப்பை என்னால் மறக்கவே முடியவில்லை... பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் அந்த ரைமிங் நன்றாக இருந்தது.. அந்த கதை ஒரு நகைச்சுவை கதை... அதை எத்தனை முறை ஏற்ற இறக்கத்துடன் வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை..
ஆதர்ச எழுத்தாளர்களான தமிழ்வாணன், சுஜாதா,பாலகுமாரன்,சுபா,பிகேபி,ராஜேஷ்குமார் போன்றவர்களை விட்டு விடுங்கள்.. பாக்கெட் நாவல் அசோகன் எப்படி இருப்பார்? என்று கிரைம் நாவலில் அவர் இரண்டு பக்கத்தில் எழுதும் விஷயத்தை படித்து விட்டு சந்திக்க ஆவலாய் வகுப்பில் ஒரு கூட்டமே இருந்து இருக்கின்றது.. காரணம்.. அவர் இல்லையென்றால் கிரைம்நாவல் மற்றும் பாக்கெட்நாவல் இல்லை..
எங்களுக்கு அருமையான கிரைம் நாவலை மாதா மாதம் கொடுக்கும் ஆசிரியர் அவர் அல்லவா? என்பதால் அந்த மரியாதை.. சூப்பர் நாவல் அட்டை படத்துக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு..ஏ நாவல் டைம்.. விரும்பி படிக்கும் மாதநாவல்.. அதில் பாலகுமாரன் எழுதிய வரை தொடர்ந்து படித்து இருக்கின்றேன்..
சென்னையில் அந்த எழுத்தாளர்களை சந்திக்க முடியுமா? என்று நினைத்து இருக்கின்றேன்..? மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கி சன்டிவியில் ஒளிபரப்பான காவேரி,சேத்தன் நடித்த பஞ்சவர்ணக்கிளி சீரியலில் நான் கேமரா அசிஸ்டென்ட்.. அந்த தொடருக்கு சுபா வசனம் எழுதினார்கள்.. அங்குதான் முதன் முதலில் சந்தித்தேன்..அன்று இரவு தூக்கம் வர வெகுநேரம் ஆனது..அவர்களை சந்தித்தது பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டேன்..
அதன் பிறகு சுரேஷ் சார் தங்கை திருமணத்துக்கு போய் நான் வீடியோ கேமராமேனாக பணிபுரிந்தேன்.. அப்போதுதான் பிகேபியை சந்தித்தேன்..
அதன் பிறகு கடந்த மூன்று வருடத்தில் என் வாழ்வில் நடந்த முக்கிய திருப்பங்களில் பாலகிருஷ்ணன் சாரின் பங்கு மிக முக்கியமானது...சென்னையில் நான் மரியாதையாக பார்க்கும் முக்கியமான நபர் பாலா சார்தான்..எளிமையானவர்...
(இந்த புகைபடம் ஆனந்த விகடன் போட்டோகிராபர் பொன்காசிராஜன் எடுத்தது...)
எந்த ஆத்மா ஹவுஸ் ஒரு பெரிய கற்பனை வீடாக இருந்ததோ அதே ஆத்மா ஹவுசில் பாலா சார் வீட்டில் காப்பி சாப்பிட்டு இருக்கின்றேன்..
பிளாக் தொடங்க டைட்டில் வேண்டும் என்ற மனது நினைத்தும் எனக்கு சட்டென மனதில் தோன்றிய டைட்டில் பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும்..அந்த பெயர்தான் வைத்தேன்.. பிகேபி சாருக்கு என் நன்றிகள்....
ரொம்ப நாள் ஆகிவிட்டது... கடைகளில் நாவல் புத்தகங்கள் வாங்கி.. வெகு நாட்களுக்கு பிறகு நேற்று மாம்பலத்தில் ஒரு பேப்பர் கடையில் பேப்பர் வாங்கும் போது ரொம்பவும் பழக்கப்பட்ட பெயராக இருக்கின்றதே என்று பார்த்தால் பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் என்று பிகேபி எழுதிய நாவல் உல்லாச ஊஞ்சலில் வெளிவந்து இப்போது கடைகளில் கிடைக்கின்றது...
வாங்கி நான் பத்திரபடுத்திக்கொண்டேன்..படிக்காதவர்கள் வாங்கி படித்து பாருங்கள்.. சேட்டை கோபி வீட்டில் நந்துவுக்கு கூழங்கல்லில் மின்சாரம் எடுக்கும் பார்முலா சொல்லும் இடத்தில் நீங்கள் சிரிக்கவில்லை என்றால் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று அர்த்தம்..
திரும்பவும் வாசித்தேன்.. சில இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.. ஆனால் அந்த வயதில் படிக்கும் போது வரிக்கு வரி சிரித்துக்கொண்டே இருந்தேன்.. அதனால் பாதியில் அப்படியே நிறுத்திவிட்டேன்.. அன்று இருபது முறை வாசித்ததற்கும் இப்போதைக்கும் பெரிய வித்யாசம் இருப்பதால் அந்த பழைய சந்தோஷத்துக்கு பங்கம் வராமல் மூடி வைத்து விட்டேன்..
ஏ நாவல் டைமில் அன்றைக்கு போட்டி போட்டு வாசித்த பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும் நாவலின் அட்டை படத்தில் ஒரு ரேயின் கோர்ட் போட்ட கார்ட்டுன் ஆசாமி துப்பாக்கியால் சுட்டு அதில் புகை வருவது போல இருந்த அந்த புத்தகம் கொடுத்த சந்தோஷம் இந்த புத்தகம் கொடுக்கவில்லை..சின்ன வயதில் வாய் பிளந்து மிகப்பெரிதாக பார்த்த எல்ஐசி கட்டிடம் இன்று சின்னதாக தெரிவது போல..
ஆனால் எல்ஐசியும் இந்த நாவலும் அன்று போல்தான் இன்றும் இருக்கின்றன.. நான்தான் மாறிவிட்டேன்.. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாத ஒன்று...
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஆம். சிறுவயதில் விரும்பிப் படித்த பல நாவல்கள் இன்று வேறு மாதிரிதான் தோற்றம் தரும். என்றும் பசுமையான நாவல்கள் மிகச் சிலவே. அதுசரி... ஊஞ்சல் இதழில் நாவல் தவிர மற்ற விஷயங்கள் பற்றி சொல்லவில்லையே நீங்கள்... (நான் அதில் உதவி ஆசிரியர் மற்றும் வடிவமைப்பாளராக இருந்தேன்).
ReplyDeleteYes I remember the description of his Bike...with brass wielding and neermore as fuel etc...
ReplyDeleteஉங்கள் வலை பக்கத்திற்கு முதன்முதலில் வந்த காரணமே இந்த நாவலின் தலைப்பு தான் . நான் எல்லா புத்தக கடையிலும் தேடிக் கிடைக்காத புத்தகம் இது தான். மற்றபடி நீங்கள் இந்த கட்டுரையில் பகிர்ந்து கொண்ட அத்தனையும் நான் அனுபவித்து போலவே இருக்கிறது. ஒரு சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்துட்டேன்.
ReplyDeleteநன்றி
ஃபோட்டோவில் இருப்பவர்களின் பெயர்களை குறிப்பிடவும்.
ReplyDeleteஅந்தகாலத்தில் எனக்கு பிடித்த மாதாந்த நாவல் எழுத்தாளர்கள் (சுஜாதா மாதாந்த நாவல் எழுதுவதுதில்லை):
ReplyDeleteராஜேஷ்குமார் - விவேக்
ராஜேந்திரகுமார் - ராஜா
சுபா - நரேந்திரன்
பிகேபி - பரத்
தேவிபாலா - பிரசன்னா
புஷ்பா தங்கதுரை - சிங்
சாருப்பிரபா சுந்தர்
பாலகுமாரன்
கலாதர் - ஒலியற்ற ஓசை
நீங்கள் சொன்ன ஒர் அனுபவ்ம் எனக்கும் ஏற்ப்பட்டது. அந்தக் காலத்தில் புதிய பாதை திரைப்படம்/பார்த்திபனை பார்த்து திகைத்துவிட்டேன். சென்ற கிழமை புதிய பாதை பார்ர்க்ககிடைத்தது. "அன்று பார்த்ததிற்க்கும் இப்போதைக்கும் பெரிய வித்யாசம் இருப்பதால் அந்த பழைய சந்தோஷத்துக்கு பங்கம் வராமல் படத்தை நிறுத்திவிட்டேன்"
ஓ...நான் உங்கள் பதிவை பலமுறை படிக்கும்போது பி க பி யின் நாவல் ஞாபகம் வரும் நீங்கள் அந்த கதையின் ரசிகராக இருபீர்கள் என நினைத்தேன் உண்மையாக போய்விட்டது,
ReplyDeleteநந்துவின் பைக் தண்ணீரில் ஓடும் ஒருமுறை பைக்கில் தண்ணீர் தீர்ந்து விடும் பேன்ட் ஜிப்பை திறந்து சிறுநீர் கழித்து பைக் ஓட்டி போகும் காமடி சிரித்து.... சிரித்து.... அப்பா...செம காமடி புத்தகம் கிடைக்கின்றதா என்று பார்க்கின்றேன் மீண்டும் படிக்க துண்டிய உங்களுக்கு நன்றி
Dear Jackie
ReplyDeleteWish you happy wedding anniversary today (19-Oct). Convey my wishes to your wife.
Wish you all success in personal & professional life.
David D Collinss, from Singapore
Really nice feeling. remembering those days. nice post. thanks 4 sharing
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteநான் ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் ரசிகன்.
நிரைய நாவல்களையும் நாவல் ஆசிரியர்களையும் மறுபடியும் நினைக்க வச்சபதிவு. அன்று படித்து ரசித்ததற்கும் முறுபடியும் இன்றுபடிக்கும்போதும் ஒரே நாவல் எப்படி வித்யாசமான மன உணர்வுகளைத்தருது இல்லியா? நானும் நிறைய புக்படிக்கும் பழக்கம் உள்ளவள்தான் நான் இருக்குமிடத்தில் புக் கிடைப்பதுதான் அதுவும் தமிழ் புக் கிடைப்பதுபெரும் பிரச்சனைதான்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பர்களே..உங்களை போல அந்த புத்தகத்தை பார்த்தவுடன் பழைய ஞாபகத்துக்கு சென்று விட்டேன்..
ReplyDeleteலட்சுமி அம்மாவுக்கு ஒரு ஸ்பெஷ்ல் நன்றி...
very nice
ReplyDelete