காலையில் இருந்தே சமுகவலைதளங்களில் அவருக்கு அழந்த இரங்கல்கள் தெரிவித்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு டுவிட்டர் செய்தியை பார்க்கும் போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது..ஆப்பிளால் மூவர் புகழ் பெற்றார்கள்.. ஒருவர் ஆதாம், அடுத்தவர் நியூட்டன், மூன்றாமவர் ஸ்டீவ் ஜாப்ஸ்...என்று ஒருவர் டுவிட்டி இருக்கின்றார் அதற்க்கு மற்றவர் மூன்றாவது ஆப்பிளும் விழுந்து விட்டது என்று டைமிங்காக டுவிட்டரில் பதில் சொல்லுகின்றார்..
ஸ்டீவ் நீ இறந்து போய் இருக்கலாம்.. ஆனால் எங்கள் டெஸ்ட்டாப்புகளிளும், எங்கள் இயர் போன்களிலும், எங்கள் கைகளிலும் நீ விட்டு சென்ற மிச்சம் எங்களோடு கலந்து விட்டது... என்று மிக சோகமாய் தன் வருத்தத்தை சமுகதளத்தில் வேறு ஒருவர் பகிர்ந்து இருக்கின்றார்...
நண்பர் சிங்கை கிரி... இன்று போட்ட தனது வலைதளத்தில் ஸ்டீவ் போட்டோ போட்டு விட்டு 1955-2011 வருடத்தை மட்டும் கொடுத்து விட்டு வேறு ஏதும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று அந்த போஸ்ட்டை சோகமாய் நிறைவு செய்கின்றார்.
என்னாச்சி மக்கள்ஸ் உங்க எல்லாருக்கும் ஸ்டிவ் என்ற அந்த மனிதனை அப்படி காதலித்தீர்களா? அப்படி என்னய்யா செய்துவிட்டான்? அந்த ஆள்...?? நேற்று இரவு கலைஞர் செய்தியில் தமிழகத்தில் ஸ்டீவ் இறந்து போனார் என்று செய்தி சொன்ன போது தமிழகத்தில் பலர், காரக்குழம்பை வாயில் போட்டு குதப்பிக்கொண்டு, அடுத்த வாயிக்கு காரகுழப்பு சாதத்தோடு கூட்டு சேர்க்க ஆம்லட்டோ அல்லது காரசேவையோ கைகளால் தேடிக்கொண்டு இருந்து இருப்பார்கள்..
ஒரு பத்துசதவீதத்தில் 5 சதவீத பேர் இடிந்து போய் உட்கார்ந்து இருப்பார்கள்..மீதம் 5 சதவித பேர் உச்சி கொட்டி விட்டு,காதலியோடோ அல்லது மனைவியோடோ எப்படி இரவு விளையாட்டை தொடங்களாம் என்று யோசித்த படி இருந்து இருப்பார்கள்..
ஆனால் உலகம் எங்கும் இருக்கும் கம்யூட்டர் தொழில் நுட்பத்தை காதலிப்பவர்களுக்கு நேற்று இரவு தூக்கம் போய் இருக்கும்... அதே துறையில் இருப்பவர்கள் கூட ஸ்டிவ் பற்றி ஹுஸ்தட் என்று கேள்வி கேட்கும் வாய்ப்பே ரொம்ப குறைவுதான்...
சரி ஜாக்கி எல்லாம் ஓகே... உங்களுக்கு என்ன ஸ்டீவ் பத்தி என்ன தெரியும்...?
இன்று பலரும் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் புராடெக்ட்டை அறிமுகபடுத்தியவர், அவரின் ஸ்டேன் போர்ட் பல்கலைக்கழக பேச்சு ரொம்ப பிரபலம். டாய் ஸ்டோரி போன்ற அனிமேஷன் படங்களை தயாரிக்க காரணமாக இருந்த பிக்சர் மற்றும் ஆப்பிள் கம்பெனியின் சேர்மேன் அவ்வளவுதான் எனக்கு தெரியும்.. அவர் பின்புலம் எனக்கு தெரியாது..
இதுக்கு முன்பே ஒரு நண்பர் அந்த பேச்சை என்னை கேட்க சொல்லி இருந்தார்... காரணம் அப்போது நான் லோக்கல்.. பெரிய படிப்பு எதும் படிக்கவில்லை என்று இணையத்தில் ஒரு சர்ச்சையின் போது பதில் சொல்லுகையில் என்னை உற்சாகபடுத்த அந்த வீடியோவை பார்க்க சொன்னார்...
அப்போது அதை அப்புறம் பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..சில வாரங்களுக்கு முன் நண்பர் கார்த்திக் நாகராஜன் சார் அந்த வீடியோவை குறிப்பிட்டு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.....மனது நிம்மதி இல்லாத காரணத்தால் அதில் பெரிதாய் நான் லயிக்கவில்லை...
இன்று காலை கார்த்திக்நாகராஜன் சார் திரும்ப போன் செய்து அந்த வீடியோவை பார்க்க சொன்னார்..ஸ்டீவ் இற்ந்து விட்டடதை சொன்னார்.. சார் நானும் கேள்விப்பட்டேன் என்று சொன்னேன். அந்த வீடியோவை காலையில் பார்த்து விட்டு இன்ஸ்பயர் ஆகி கண்கள் கலங்க இவ்வளவு பெரிய பதிவு எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.
ஸ்டீவ் ஜாப் பற்றிய செய்தியை தேடி தேடிப்படிக்கின்றேன்.. காரணம் என்னை போன்று அந்த ஆளும் வெளிப்படையாக பேசி இருக்கின்றார்.. அந்த பேச்சுதான்... உலகில் பலரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஆப்பிள் கம்பெனி சிஇஓ என்ற பந்தா இல்லாமல் நான் கல்லூரி பட்ட படிப்பை கூட முடிக்காதவன் என்று புகழ் பெற்ற கல்லூரியில் உரையாற்றும் போதும் ஒருவனால் சொல்ல முடியுமா? ஸ்டீவ் சொன்னார்..
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் எதிர்கால கனவை நோக்கி, பயத்தோட உட்கார்நது இருக்கும் மாணவர்கள் மத்தியல், என் வாழ்நாளில் நான் செய்த ஒரே நல்ல செயல் கல்லூரியில் படிக்காமல் பாதியில் வந்ததுதான்.. முதலில் எதிர்காலம் பற்றிய பயம் இருந்தாலும், பிற்காலத்தில் நான் யோசிக்கும் போது, நான் கல்லூரி பட்டபடிப்புக்காக காத்திருக்காமல் கல்லூரியில் இருந்து பாதியில் வந்து எனக்கு விருப்பமானதை செய்தேன் என்று சொல்லுவதையும், தன் வாழ்வியல் சோகங்களை பகடியாய் பகிர்ந்து கொண்டதாகட்டும் என ஸ்டீவ் நம் மனிதில் நிற்க்கின்றார்..
பட்டபடிப்பையே படித்து முடிக்காதவனை பட்டமளிப்பு விழாவில் ஒருவனை சிறப்பு விருந்தினராக பேச அழைக்கின்றார்கள் என்றால் அவனின் உழைப்பையும் அவன் வளர்ச்சியையும் யோசித்து பாருங்கள்.. அந்த கடும் உழைப்பிலும் பந்தா இல்லாது இயல்பான பேச்சு அவரிம் என்னை கவர்ந்தவை...
2005 ல் ஸ்டேன்ட் போர்டு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பேச்சை எல்லோரும் அவசியம் கேட்க வேண்டும்.. அதில் ஸ்டீவ் மூன்று கதைகள் சொல்லுவார்..ஒரு திரைக்கதைக்கான கட்டமைப்போடு அது இருக்கும்... இன்ட்ரோடேக்ஷன், பிராப்ளம், சொல்யூஷன் ஆர் என்ட் என்பது போலான கட்டமைப்பு.. அது...
டாட் பற்றி முதல் கதையில் சொல்லும் விஷயங்கள் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவனுக்கும் அது பால பாடம்... ஸ்டீவ்க்கு பிடித்த கோவில் நம்ம ஊர் கிருஷ்ணர் கோவில்தான் காரணம் பிரசாதம் அங்குதான் கிடைக்கும் ..அந்த அளவுக்கு வறுமையை அனுபவித்தவர்.
பெரிய ஆளுமை புரிந்து இடைவிடாத உழைப்பால் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஸ்டீவ் நேற்று இரவு புற்று நோய் காரணமாக இறந்து போனார்...
ஒரு தனிமனிதன் பற்றி விக்கிபீடியாவில் அவர் பற்றிய தகவலை தேடும் போது பல பாராக்கள் அவர் புகழ் பாடிக்கொண்டு இருக்கின்றது... யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் வறுமை பக்கத்தில் பிறந்து இன்று உலகை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்த உழைப்பும் பூமி பந்தின் மறுப்பக்கத்தில் இருக்கும் லட்சோப லட்ச மக்கள் அஞ்சலி செலுத்தும் அளவுக்கு வாழ்ந்து மறைவதுதான் கொடுத்து வைத்த சாவு என்பேன்...
ஸ்டீவ் யூ டன் எ குட் ஜாப் மேன்... ஆல் த பெஸ்ட் குட்பை.. உன் ஆன்மா சாந்திஅடையட்டும்..
உலகில் ஆப்பிள் பழத்தை கடிக்கும் போது எல்லாம் ஆதாம்,நியூட்டன்,ஸ்டீவ் போன்றவர்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.. முக்கியமாக கடித்த ஆப்பிளை ஆதாமே மறந்து போனாலும் நாம் ஸ்டீவை மறக்க முடியாது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நல்லாருக்குண்ணா!... அதென்ன கடித்த ஆப்பிளை ஆதாமே மறந்தாலும்?...
ReplyDeleteபிரபாகர்...
Yeah he did a good job, may his soul rest in peace..
ReplyDeleteRIP Steve.... :(
ReplyDeleteடியர் ஜாக்.கி..
ReplyDeleteஒரு மாதத்திற்கு முன்பு தான்.. பி.கே.பி யின் வலையில் படிக்க நேர்ந்தது.. படித்ததும் பிடித்தது.. அவரின் மரணத்தை பற்றிய பேச்சும் அவரின் புற்று நோய் பாதிப்பையும், ஆனால் காலனுக்கு இத்தனை அவசரம் ஏன் ?.
பி.கே.பி யின் லிங்க்....
http://pkp.blogspot.com/2011/08/blog-post_25.html
ஒரு ஐ-போன் வாங்கி அதை பயன்படுத்தும் போது நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஞாபகம் வரும். அது தான் அவரின் வெற்றி.
அவரின் ஆத்துமா சாந்தியடைய அனைவரும் வேண்டுவோம்.
என்றும் நட்புடன்.
NTR
yes jackie . he is a legend.always . he was such a great inspiration to millions of people like me.
ReplyDeletei am so very sad :( that he is no more here . but he will live in our memory for ever. RIP Steve.we love you steve.
"ஏழையாக பிறப்பது எங்கள் தவறல்ல. ஆனால் ஏழையாகவே இறந்தால் அது எமது தவறு மட்டும்தான்!"
ReplyDeleteஅந்த தவறை ஸ்டீவ் செய்யவில்லை.
ஸ்டீவ் ஜோப்ச்க்கு இறப்புக்கு ஆழ்த்த அனுதாபங்கள்.
nalla padivhu.
ReplyDeleteஸ்டீவ் உன் ஆளுமைக்குத் தலைவணங்குகிறேன். சரியான தருணத்தில் சரியானதொரு
ReplyDeleteபதிவு இட்டது super
Sir,
ReplyDeleteVery thoughtful article.
Those who have used Mac systems will know how their lives and creativity has enhanced by apple products. That's why so much respect for Steve Jobs. He has made life easier and simpler for the computer users.(Mac Users).
Jobs has always thought and considered the users' perspective in designing and delivering them.
Dear jackie
ReplyDeletemy heartfelt condolences yes steve is always with us in some other forms. intha pathivirkku enna reaction koduppathu endru kooda ninaikka mudiyavillai ( thangal label/reaction box) no other words simply tears
sorrowingly
sundar g
இன்று ஒரு நிமிடமாவது
ReplyDeleteவருத்தப்பட்டு இருப்பார்கள்..இல்லையேல்
உன்னை நினைத்து இருப்பார்கள்...
உலகம் சுற்றிலும் உள்ள
உன் "ஆப்பிள்"ஐ கடித்த
ஆதாம்களும் ஏவாள்களும் .......
RIP, STEVE
//ஸ்டீவ் ஜாப் பற்றிய செய்தியை தேடி தேடிப்படிக்கின்றேன்.. காரணம் என்னை போன்று அந்த ஆளும் வெளிப்படையாக பேசி இருக்கின்றார்.. //
ReplyDeleteசமீபத்தில் நான் படித்த ஆகச்சிறந்த நகைசுவை துணுக்கு ஜாக்கி.
Pirates of the Silicon Valley என்று ஒரு படம் உண்டு. youtubeல் கிடைக்கும். ஒரு மணி நேரம் தான். பாருங்கள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன சில யதார்த்தமான விஷியங்கள் உண்மையென்றபோதும் (5, 6ம் பத்திகள்), மொத்தமாகப் படிக்கும் போது ஜெயமோகன் ஐயாவின் இரங்கல் கட்டுரை படிப்பதைப் போன்று ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி தேடித் தேடிப் படித்து, அவரது நேர்காணல், apple keynote போன்றவற்றை திரைப்படங்கள் போல பல தடவை பார்த்ததால் என்னால் இந்தக் கட்டுரையோடு ஒன்ற முடியவில்லை. மன்னிக்கவும்.
ஸ்டீவ் ஆப்பிளை உருவாக்கும்போது அதனைச் சிலர் அதிர்ஷ்டம் என்று சொல்லினர். ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், பிக்சாரைத் தொடங்கி அதே அளவுக்கு முன்னேறியவர் ஸ்டீவ். "முடியாது முடியாது.. இது கள்ள ஆட்டம்.. அழிச்சிட்டு மொதல்ல இருந்து ஆரம்பிங்க" என்று புரோட்டா சாப்டும்போது சொல்வாரே.. அந்த மாதிரி.. இதிலிருந்து தெரிவது.. ஸ்டீவ் அதிர்ஷ்டத்தை நம்பவில்லை.. உழைப்பை நம்பினார்.. அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்தது என்று சொன்னவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்... வாழ்க ஸ்டீவ்...
ReplyDeleteஸ்டீவ் பற்றி ஹாலிவுட் பாலா எழுதியுள்ள பிக்சார் ஸ்டோரியில் பார்க்கலாம்...
ReplyDeletekaditha apple aatham marakka mudiyaathu.... mudinthaal naam ellam illai..
ReplyDeletehttp://suresh-tamilkavithai.blogspot.com
WELL SAID . ..
ReplyDelete