சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு

 
அல்பம்.

நான் முன்பே சொன்னது போல இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்...சைக்கிளில் லைட்டில் இல்லாமல் சென்றவனை பிடித்து வைத்துக்கொண்டு சட்டத்தை காரணம் காட்டி அப்பாவியை பிடித்து சட்டத்தை மதித்து நடக்க கற்றுக்கொடுப்பார்கள்..

ஆனால் பாருங்கள் வாச்சாத்தி பெண்கள் பலத்கார வழக்கில் 18 வருடத்துக்கு பிறகு 12 அதிகாரிகளுக்கு சிறைதண்டனை அறிவித்து இருக்கின்றார்கள்.. குற்றம் சாட்டப்பட்ட 215 பேருமே குற்றவாளிகள் என்று சொல்லி இருக்கின்றது நீதி மன்றம் .. இதில் கொடுமை  என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்ட பலர் இறந்தே போய் விட்டார்கள்..18 வருடம் கழித்து மலை வாழ் மக்களுக்கு கொடுத்த நீதியில் இந்திய நீதித்துறை மீதான மரியாதையில் நெஞ்சம் விம்முகின்றது... சாவுக்கு வரச்சொன்னா பாலுக்கு வருவது இதுதான் போல...

==============  

மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றது தமிழகம்.. எங்கள் ஊரில் எப்போது வேண்டுமானாலும் மின்சாரத்தை பிடுங்கி விடுகின்றார்களாம்.. நேரம் காலம் எல்லாம் கிடையாது... சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் மின்சாரத்தை கட் செய்து விடுகின்றார்களாம்...சென்னையில் எல்லா இடங்களிலும் கம்பல்சரி ஒரு மணி நேரம் ஒரு நாளைக்கு கட் செய்து விடுகின்றார்கள்...கரண்ட் இல்லை என்ற காரணம்தான் திமுக ஆட்சி போக மிக முக்கிய காரணங்களில் ஒன்று...இன்னும் நாலு வருஷம் இருக்கு..கடைசி ஒரு வருடத்தில் எல்லாத்தையும் சரி செஞ்சிட்டா மக்கள் எதை பத்தியும் நினைவு வைத்துக்கொள்ளப்போவதில்லை.......===================


இந்தியாவில அதுவும் தமிழ்நாட்டுல எந்த நேரத்துல பீஸ் போவும்னு தெரியாம பய புள்ளைங்க அது அதுவும் சவுண்ட் விட்டுக்குனு கெடக்குதுங்க.. மேலும் விபரம் தெரிய படத்தை கிளிக்கி பார்க்கவும்


================

இப்போதைக்கு என்ன குட்டிக்கரணம் போட்டாலும்...தனித்தெலுக்கான கொடுக்கபோவதில்லை என்று மத்தியஅரசு அறிவித்து விட்டது... இந்த போராட்டடம் விழலுக்க இரைத்த நீராக போய் விடுமோ?

============மிக்சர்.

அந்த பெண் போருர் மார்கெட்டில் இருந்து பழங்கள் வாங்கி மீடியனில் இருக்கும் சின்ன கேப் வழியா கிராஸ் செய்தார்...22 வயது இருக்கும்...ஆனால் ராங்ரூட்டில் மிக வேகமாக ஸ்கூட்டி பெப்பில் வந்த அந்த மனிதர் அந்த பெண்ணை இடுப்பில் மோதி கிழே தள்ளினார்..  வாங்கி வந்த   பழங்கள் சிதற அந்த பெண் நடுரோட்டில் விழுந்துவிட்டார்.. அவரால் உடனே எழுந்து இருக்க முடியவில்லை..அவள் அழகாக இருந்த காரணத்தால் அவரை தூக்க பலர் தயங்கினார்கள்..ஒரு ஆட்டோ டிரைவர் 45 வயதுக்கு மேல் இருக்கும் பதறி கிட்டே போய் சங்கோஜமாக நிற்க்க, ஏங்க தூக்குங்க சங்கோஜபடவேணாம்னு சொன்ன பிறகு அவர் தூக்கினார் அப்போது கூட அந்த பெண்ணால் எழுந்து நிற்க்க முடியவில்லை.. அந்த பெண்ணை சாலை ஓரத்துக்கு அழைத்து சென்றார்கள்..கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் நான் அவசரமாய் அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்..================சில முகங்களையும் சில குரல்களையும் ஏனோ பிடித்து விடுகின்றது... எங்கேயும் எப்போதும் படத்தில் மாசமா ஆறுமாசமா பாடலில் படிக்கட்டில் உட்கார்நது பிடி பிடித்த படி, சின்னதாடியோடு கேமராவை பார்க்காமல் பீடி வலிச்சிக்கொண்டே ஆடும் அந்த பையனை பிடித்து இருக்கின்றது .......அதே போல வாகை சூடவா படத்தின் விளம்பரத்தில் விமலிடம் நாயகி தம்பி இடிக்காம வாப்பா என்று சொல்லி அசடு வழிந்து விட்டு அப்ப நீங்களாவது இடிக்காம வாங்க சார் என்று சொல்லும் அந்த பெண் குரல் அசத்தல்..==================

முகநூலில் 1000ம் பேரை செலக்ட் செய்து நட்பாய் பெற்று இருக்கின்றேன்...பிளாக்கில் 1211 பேர் பாலோயராக பெற்று இருக்கின்றேன்...டுவிட்டரில் 588 பாலோயர்ஸ்,பஸ்ல 711 பாலோயர்ஸ்.நண்பர்களுக்கு நன்றி..

===============

நானும் கவனித்து விட்டேன் பெரும்பாலான கைக்குழந்தைகள் அம்மா சாப்பாட்டில் கை வைத்து ஒரு பிடி சோறு எடுத்து வாயில் வைக்கும் போதுததான் ஒன்று ஆய் போகின்றன...அல்லது அழுது தொலைக்கின்றன..

=======================

எனக்கு இப்போதைக்கு பிடித்த ஒரே கவிதை.. காலு கிலோ ,கருப்பு புளி மஞ்சா தூளுடா...விஜய்டிவி ஜுனியர் ஏர்டெல் சூப்பர் சிங்கரின் புரோமோ பாடல்... மளிகை சாமான் வாங்கப்போகும் அந்த பையன் செமையா நடிச்சி இருக்கு... வீடியோ லிங் கெடைச்சா கொடுங்கப்பா..===============

கடைசியாக ரஜினி நடிக்க இருந்தா ராணா படம் தயாரிப்பது கைவிடப்பட்டுவிட்டது என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன..
=========== 
கதிரேசன்..... அமெரிக்கா..டூ
ராஜ்குமார்......கொச்சி...டூ
குமார்........ சென்னை. உலகம் ரொம்ப சின்னது..

==============
நேற்று கூகுள் டாக்கில் நண்பர்கள்.. கருந்தேள்,கொழந்தை,க.ரா,செ சரவணகுமார்  போன்றவர்களுடன் வெகு நாளுக்கு பிறகு பேசிக்கொண்டு இருந்தேன்..இந்த அனுபவம் புதுமையாய் இருந்தது..
நன்றி நண்பர்களே
======

நான் எடுத்த புகைபடங்கள். =============

========================

இந்தவாரகடிதம்...


ஜாக்கி

சேகர்..நலம்

தானே? தங்களுடன் இன்று (29.09.2011) தொலைபேசியில் பேசியது மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய "பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" இணைய தளத்து "Blog" ஐ "தமிழிஷ்/இண்ட்லி" வழியாக, படிப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் எழுத்து நடை (அது திரைப்பட விமர்சனமாகட்டும் அல்லது ஒரு பயணத்தில் நடந்தது ஆகட்டும்) மிக சுவராசியமாக இருக்கிறது. மேலும் இந்த மாதிரி தொடர வாழ்த்துக்கள்.என்னைப்பற்றிய

அறிமுகம்.

வயது

: 48, சொந்த ஊர், கோயம்புத்தூர்... மனைவி மற்றும் ஒரு மகள்.

வசிப்பது: (கடந்த 4 ஆண்டுகளாக) நெதர்லாந்து நாட்டில், ஆம்ஸ்டர்டாம் அருகில் 20 கி.மீ தொலைவில் ஹார்லெம் (Haarlem) எனும் நகரம்.

தொழில்: Sr. Instrumentation and Control System Engineer...

இணையத்தில் வாசிப்பது, சினிமா பார்ப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது பொழுது போக்கு.

பிடித்த ஆங்கிலப்படங்கள்: மிகப்பெரிய வரிசை உண்டு. சுருக்கமாக, Mackenna's Gold, Guns of Navarone, Force 10 From Navarone, Where Eagles Dare, 5 Man Army, Bridge To Far, 10 Commandments, Ben-Hur, All James Bond Movies, All Stephen Spielperg Films, FEW GOOD MEN (Jack Nicolson, இதில் கலக்கி இருப்பார்!), As Good as it gets, Good Will Hunting, LOTR, Pirates series, Inception, James Cameroon Films, Most of Harrison Ford Films, Mamma Mia, Jackie Chan Films, specially Rush hour series, Ben Stiller+Owen Wilson Films, all kind of archialogical related films, .... சொல்லிக்கொண்டே போகலாம்...உங்களை பார்க்கச்சொன்ன படம், FEW GOOD MEN (Tom Cruise, Demi More, Jack Nicolson,...)கோவை

சென்ட்ரல்: நான் கோவை தொழில் நுட்ப கல்லூரியில் படித்த போது (1980-84) மிக அதிகமாக திரைப்படம் பார்த்த "70mm Cinema Theatre". அது தவிர அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், "வடையும் (மசால்/கீரை) காபியும்". மாலைக்காட்சி ஆரம்பமானதிற்கு பின் (6.30 மணி) முன் வாசல் கதவுகளை திறந்து விட்டு விடுவார்கள். யார் வேண்டுமானாலும் போய் வடை(மசால்/கீரை) சாப்பிட்டு, காபி குடித்து விட்டு வரலாம். திரைப்படத்தின் இடைவேளையின் போது மட்டும் முன் வாசல் கதவுகளை மூடி விடுவார்கள். நண்பர்களுடன் வடை, காபி, தம் என்று சந்தோசமாக கழித்த நாட்கள் அவை. மற்றும் ஒரு மறக்க முடியாத Theatre, RAINBOW... (என் தந்தை B.Sc Agri படித்த காலத்தில் இருந்து) ஆங்கிலப்படம் மட்டும் திரையிடப்பட்ட ஒரே தியேட்டர்.

தொடர்ந்து எழுதுங்கள்....நான் வாரக்கடைசியில் தொலைபேசியில் அழைக்கிறேன்..

குடும்பத்தார்க்கு வாழ்த்துக்களும், மரியாதைகளும்.நன்றியுடன்

,

தி

.சங்கர நாராயணன்

நெதர்லாந்து.பின் குறிப்பு: எனக்கு இந்த மின்னஞ்சல் எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அசாத்திய பொறுமையும், எழுத்து நடைக்கான திறமையும் உங்களின் பலம். வாழ்த்துக்கள்.

===============

மிக்க நன்றி சங்கர் ...உங்களோடு உரையாடியதில் மகிழ்ச்சி...எப்போது வேண்டுமானாலும் எனக்கு போன் செய்யுங்கள்..
======================
ஒரு அறிவிப்பு...
நண்பர்களே உங்களுக்கு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கின்றதா...?

இருக்குதுசார்..

குட், அப்ப உங்க கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இந்த போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.. 
============

சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள் :

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.
இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.வாழ்த்துகள்!
============


பிலாசபி பாண்டி

நான் என்ன  சொன்னேன் என்பதற்கு மட்டுமே நான் பொறுப்பாக முடியும்.. நீ என்ன புரிந்து கொண்டாய் என்பதற்கு அல்ல..

================

நான்வெஜ் 18+

ஜோக்..1மனைவியிடம் கணவன் கேட்டான்...அன்பே உனது நெருங்கிய நண்பியோடு நான் உடலுறவு கொண்டால் நீ என்னை பற்றி என்ன நினைப்பாய்??

 நீ ஒரு ஹோமோன்னு நினைப்பேன்...

================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

15 comments:

 1. சிறுகதைப் போட்டியை உங்கள் வாசகர்களுக்கும் கொண்டு சேர்த்ததற்கு நன்றி பாஸு! 

  ReplyDelete
 2. பாஸு.. போட்டிக்கு கதை எழுத, அந்தப் புகைப்படம் இணைக்கலியே? அது இங்கே இருக்கு! http://www.parisalkaaran.com/2011/09/2011.html?m=1

  ReplyDelete
 3. கேபிள், பரிசல் நமக்குள் நன்றி அவசியம் இல்லை என்பது என் கருத்து..

  ReplyDelete
 4. yenna jackie link ungaluku illamala...idho eduthu kollungal...

  http://www.youtube.com/watch?v=vL2GTD3sjJY&feature=share

  ReplyDelete
 5. சங்கரநாராயணனின் அந்த சினிமா அனுபவங்களும், செண்ட்ரல் தியேட்டர் காஃபியும், ரெயின்போவில் ஆங்கில படங்களும்.... அப்படியே என் அனுபவமாகவே இருக்கிறது.

  செண்ட்ரலில் இப்ப அந்த சுவையான கீரைவடை, காஃபி கிடைப்பதில்லை என்பதும் ரெயின்போ தியெட்டரை மூடிவிட்டார்கள் என்பதும் வருத்தமான செய்தி.

  இப்ப ஆங்கில படங்கள் என பார்த்தால் கனகதாரா, மாருதி இரண்டும் தான்.

  ReplyDelete
 6. ஜாக்கி உங்க பதிவை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் என்னையும் சேர்த்துக்குங்க

  ReplyDelete
 7. http://www.youtube.com/watch?v=2PzeHC3dSs0&feature=related

  ReplyDelete
 8. நன்றி ஜாக்கி அண்ணா. உங்ககூட பேசுனது எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அடுத்த மீட்டிங்குக்கும் கண்டிப்பா வரணும்னு கேட்டுக்கிறேன்.

  ReplyDelete
 9. //காலு கிலோ ,கருப்பு புளி மஞ்சா தூளுடா...விஜய்டிவி ஜுனியர் ஏர்டெல் சூப்பர் சிங்கரின் புரோமோ பாடல்... மளிகை சாமான் வாங்கப்போகும் அந்த பையன் செமையா நடிச்சி இருக்கு//

  ஆமாம் சார்,, நாங்க நினைக்கைறதுக்குள்ள நீங்க பதிவுலயே போட்டு முடித்தாயிற்று..

  இன்றைய அனைத்து தகவல்களும் அருமை..

  ReplyDelete
 10. ஒரு நாளைக்கு 4000 அளவில் pageviews கிடைக்கிறது,,

  கூகுல் ஆட்சென்ஸ் விளம்பரம் இனைத்து அதன் முலம் சிறிய முதலாவது ஈட்டலாமே..

  இப்போது நிறைய தமிழ் வலைப்பதிவுகளுக்கும் ஆட்சென்ஸ் இனைக்கப்பட்டதை பார்த்திருப்பீர்கள்..

  This is only for your information as a your blog fan..

  ReplyDelete
 11. ////நேற்று கூகுள் டாக்கில் நண்பர்கள்.. கருந்தேள்,கொழந்தை,க.ரா,செ சரவணகுமார் போன்றவர்களுடன் வெகு நாளுக்கு பிறகு பேசிக்கொண்டு இருந்தேன்..இந்த அனுபவம் புதுமையாய் இருந்தது..
  நன்றி நண்பர்களே////

  என்னண்ணே இது... நான் கூட தான் உங்க கூட பேசுனேன்.... என் பேருலாம் போடவேயில்ல... போங்க நான் கோவமா கிளம்பறேன்... :) :) :)

  ReplyDelete
 12. google talk-il irunthu Skype pakkam vannga please!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner