சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி

ஆல்பம்..

உடம்பு பெங்களூர் குளுருக்கு பழக்க படுத்த சில மணி நேரங்கள் ஆகத்தான் செய்கின்றன..350 கிலோமீட்டரில் இருக்கும் சென்னையில் வெயில் கொள்ளுத்தோ   கொளுத்து என்று கொளுத்துகின்றது...
இரவு படுக்கும் முன் போட்டு இருக்கும் துணி எல்லாத்தையும் கயிட்டி கடாசி விட்டு அக்காட என்று தூங்கவே சென்னையில் விருப்பம்..ஆனால் இங்கு டிஷர்ட் அணியாமல் தூங்க முடிவதில்லை...

சில நேரங்களில் பெங்களூரில் செட்டில் ஆகி விடலாம் என்று தோன்றும், மொழி தெரியாத ஊர்.. அதே போல என் முன் கோபத்துக்கு செட்ஆகாத ஊர்... பார்ப்போம்.
நாளைக்கு ஞாயிறுகிழமை சென்னைக்கு வந்து விட்டு திங்கள், செவ்வாய்,புதன் கிழமைகளில் பெண்களுர் வாசம்.

=============

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் களைகட்ட ஆரம்பித்து விட்டது..எங்கள் தெருவில் பூட்டு சின்னதில் ஓட்டு போடச்சொன்னார்கள்...எல்லா நாளிலும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று பம்மினார்.. நான் சிரித்து  வைத்தேன்.

===================
உள்ளாட்சி தேர்தலில் எனக்கு ஓட்டு போடலைன்னா சாமி கண்ணை குத்தும் என்று  தேமுதிக தலைவர்  விஜயகாந் திருவாய் மலர்ந்துள்ளார்.. எதிர்கட்சி தலைவராக இருந்து எதுவும் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றாலும்  அதே சாமி கண்ணை குத்தும் என்பதை மறந்து விட வேண்டாம். எல்லாத்தையும்  விட பெரிய காமெடி அன்னா ஹசாரேவுக்கு முன்னே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் என் கணவர்தான் என்று திருமதி பிரேமலதா விஜயகாந் சொல்லி இருக்கின்றார்... தமிழகத்துக்கு இன்னும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்

============.
எந்த பவர்கட் திமுகவுக்கு எதிராக இருந்ததோ அதே பவர்கட் எங்கே தங்களையும் பாதிக்குமோ என்று உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நினைக்கின்றார்கள்...பவர் கட் முன்னை விட  அதிகமாகி இருக்கின்றது...கலைஞர் ஆட்சியில் சொன்ன நேரத்துக்கு நிறுத்தி மின்சாரம் திரும்ப வரும் ஆனால் இப்போது எப்போது வேண்டுமானாலும் போகின்றதால் தென்மாவட்டத்து மக்கள் நிரம்ப சிரம படுகின்றார்கள்.. ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை ஆறு மாதத்தில் சரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள்.. இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்று  நிறைய கதைகள் சொல்லுகின்றார்கள்.. காரணம் ஆட்சிக்கு வந்தாகிவிட்டது....அவர்கள் சொல்வதை கேட்டு ஆகவேண்டியதை தவிர வேறு என்ன செய்து விட முடியும்???...

=================
கூடங்குளம் அனுமின் நிலையம் பணிகள் தற்போது முடங்குவது போல தோற்ற்த்தை உருவாக்கினாலும், நிச்சயம் அதை செயல்படுத்தியே தீருவார்கள் என்று நினைக்கின்றேன்...காரணத்தை அப்புறம் சொல்லறேன்..

/===================
பெண்களுரில் மெட்ரோ ரயில் இந்த மாதம் 20 ம்தேதி ஓட்டத்தை துவங்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள்... சின்ன கட்டிங் துணையோடுதான் முதல் பயணத்தை  மேற்க்கொள்ள இருக்கின்றேன். பார்ப்போம்.

=================


சன்னில் ஏழாம்அறிவு பாடல் வெளியிட்டு விழா ஒளிபரப்பில்,ஆடிய லட்சுமிராயை பார்க்கும் போது, இன்னும் நாலு வருடத்துக்கு தமிழ் மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று நம்புகின்றேன்...
===========
சூரைத்தேங்காய் உடைக்க கோவிலில் தனி இடம் இருப்பது போல,காங்கிரஸ்காரர்கள் சூறையாடவென்றே சத்தியமூர்த்திபவன் இருக்கின்றது போலும்...

=================
இந்தவார சலனப்படம்.

தமிழ் சினிமா ரசிகர்கள்...காஜலை பார்த்து இருப்பீர்கள். சமந்தாவையும் பார்த்து இருப்பீர்கள்.ஆனால் அவர்கள் இருவரும் ஆடிய இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்து இருக்க மாட்டார்கள்..பாவம் தமிழ் சினிமா ரசிகர்கள்...ஒரு ஹைகிளாஸ் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்து போல இருக்கும்.. தெலுங்கு படங்களை பொறுத்தவரை திரைக்கதையில் சொதப்பினால் கூட இது போலான பாடல்கள் மூலம் ரசிகனின் கவனத்தை முற்றிலும் திருப்பி விடுவார்கள்.. அந்த பாடல் உங்களுக்காக....==============================

மிக்சர்

நண்பர் ரிஷி தங்கள் வீட்டு கொலுவுக்கு எங்களை அழைத்து இருந்தார்..நான் குடும்பத்தோடு கொலுவுக்கு போனேன்..ரிஷி அம்மா என் மனைவியை பாடச்சொன்னார்கள்..என்ன ஆச்சர்யம்? பி சுசிலா போல வாய்ஸ் இருக்கற ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சிகிட்டது மட்டும் இல்லாம இவ்வளவுநாள் என் பொண்டாட்டிக்கு பாடத் தெரியும்ன்ற உண்மை தெரியாம போச்சேன்னு வருத்தப்பட்டேன். வெண்புலியின் மீதினிலே, வீரமணி கண்டனே வா...எனும் பாட்டை பாடினாள்...தினமும் குழந்தையை தூங்க வைக்க இதே பாடலை பாடினாலும் இன்று பாடும் போது,கொலுப் படிக்கட்டில் உள்ள கடவுள்கள் எல்லோரும் இறங்கி வந்து பாடலை கேட்கவேண்டும் என்பது போல அந்த பாடலை பாடினாள். ஆனால் அதுக்கு பிறகு ஹேப்பி டேஸ் படத்தில் தமன்னா பாடும் முதல் பாடலான யாகுந்தேந்து துஷாரா பாடலை நன்றாக பாடினாள்...ஆனால் பாடலை பாதியில் நிறுத்தி விட்டாள்.. ஏன் என்று கேட்டேன்.. சாமியை நினைக்காம நீ தமன்னாவை நினைச்சது தெரிஞ்சிடுச்சி அதனால நிறுத்தினேன் என்று சொன்னாள்.. எனக்கு வந்த ஒரு நல்ல கனவை கலைத்த சந்தோஷத்தை அவள் முகத்தில் பார்க்க முடிந்தது..

====================


கொய்யால இப்பத்தான் புரியுது..எதுக்கு பட்டிணத்தார் பொண்டாட்டி புள்ளைய எல்லாம் விட்டுட்டு, போட்டுக்கினு இருந்த சொக்கையோடு வீட்டை விட்டு கிளம்பி போனார்னு..?சொன்ன நேரத்துக்கு முன்ன போல எங்கேயும் கௌம்பவே முடியலை..இல்லறம் அற்புதமான நேரவிழுங்கி....

===================

இரண்டாவது பிளாக் ஆரம்பிச்சு 24 மணி நேரத்துல 28 பாலோயர்ஸ்... அப்படியே நான் பிளாக் உலகுக்கு வந்த போது நினைச்சி பார்க்கிறேன்.. இதே 28 என்  பிளாக்ல பாலோயரை சேர மூனு  மாசம் ஆச்சி...

================

இந்தவாரக்கடிதம்Dear Jackie,

I am regular reader of your website. I am basically from Perambalur place near trichy & currently based in Mumbai.
I recommend you to watch the movie mulholland drive (2001) and write a review on the same. I have recommended the same movie to cablesankar also. expecting  the review of this movie from either of you soon.
This is one of the complex movie that i have watched so far. Even after watching the movie 3 times, i am still not able to understand it properly.
Expecting review of that movie soon from you.

please use the below clues to unlock the story line.

Contained within the original DVD release is a card titled "David Lynch's 10 Clues to Unlocking This Thriller". The clues are:
Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
Notice appearances of the red lampshade.
Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
An accident is a terrible event — notice the location of the accident.
Who gives a key, and why?
Notice the robe, the ashtray, the coffee cup.
What is felt, realized, and gathered at the Club Silencio?
Did talent alone help Camilla?
Note the occurrences surrounding the man behind Winkie's.
Where is Aunt Ruth?

Regards
Viknesh Raja


==============

நண்பர் ராஜாவுக்கு நேரம் கிடைக்கும் போது நிச்சய்ம் பார்க்கின்றேன்.. நான் டவுன்லோட் செய்து பார்க்கும் படங்கள் மிகக் குறைவு உங்களிடம் இருந்தால் எனக்கு டிவிடியை அனுப்பி வையுங்கள்..98402 29629. எண்ணுக்கு எனக்கு போன் செய்யுங்கள். மிக்க நன்றி...

================
வாழ்த்துகள்..

அன்பின் பாரா சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

========
இன்று பிறந்தநாள் காணும் நண்பர்  ஈரோடு கதிருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்..

===============
பிலாசபி பாண்டி....

உங்கள் எதிராளிக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய தண்டனை புறக்கணிப்பு மட்டுமே..

=====
டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு படம்.. சிராக்கோ எப்படி ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களின் கைரேகை அழிய காரணமா இருந்துச்சோ? அது போல டிவைன் லவ்வரும் கைரேகை அழிக்க வச்ச படம்தான்.. இப்ப அந்த படத்தின் இரண்டாம் பாகம் வரப்போகின்றது...கோயம்புத்தூர் அப்ஸ்ரா தியேட்டர்ல இந்த படத்தை பார்த்ததும் மலரும் நினைவுகளும் நினைவுக்கு வருகின்றது..கீழே போஸ்டர்
============
நான்வெஜ் 18+

மினிஸ்கர்ட் யாரு போட்டுகிட்டா நல்லா இருக்கும் ??? பையன்போட்டு கிட்டா நல்லா இருக்குமா? இல்லை பொண்ணு போட்டுகிட்டா நல்லா இருக்குமா?
மினிஸ்கர்ட் பொண்ணு போட்டு கிட்ட செக்ஸியா இருக்கும்...ஆனா பையன் போட்டு கட்ட சர்ச் பெல்லை நினைவுபடுத்தும்.

=============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.============


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. // இரண்டாவது பிளாக் ஆரம்பிச்சு 24 மணி நேரத்துல 28 பாலோயர்ஸ்... //

  my favourite number :28

  ReplyDelete
 2. இல்லறம் அற்புதமான நேரவிழுங்கி....
  excellent thinking

  ReplyDelete
 3. இந்த நான்வெஜ் உங்களுக்கு எங்கயிருந்து கிடைக்குது..ஒவ்வொரு பதிவிலும் சூப்பர்..

  ReplyDelete
 4. //சூரைத்தேங்காய் உடைக்க கோவிலில் தனி இடம் இருப்பது போல,காங்கிரஸ்காரர்கள் சூறையாடவென்றே சத்தியமூர்த்திபவன் இருக்கின்றது போலும்...//


  Super... Ha.. ha...haa

  ReplyDelete
 5. வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஜாக்கி!

  ReplyDelete
 6. உங்கள் எதிராளிக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய தண்டனை புறக்கணிப்பு மட்டுமே..//nice

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner