Sathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )தமிழில்  நான் மதிக்க தகுந்த இயக்குனர்களில் ஒருவர் கரு. பழனியப்பன்..அவரை மதிக்க ஒரே காரணம் அவர் படங்களில் விரவி இருக்கும் ஷார்ப் வசனங்கள்..


கரு.பழனியப்பன் எழுதிய ஒரு வசனத்தால் என் வீடு எப்போதும் குப்பையும் கூலமுமாக இருக்கின்றது.

ஏங்க இத்தனை டிவிடி இறைஞ்சி கிடக்குதே,இப்படி துணி இறைஞ்சி கிடைக்குதே எடுத்து வச்சா என்ன? என்று என் வீட்டுக்கு வரும் உறவினர்கள் யாராவது கேட்டால் ?

கலைஞ்சி கிடைந்ததான் அதுக்கு பேரு வீடு...
அடுக்கி வச்சி இருந்தா அதுக்கு பேரு மீயூஸியம் என்று சொல்லிச் சொல்லி என் வீடு குப்பையாக இருக்கின்றது..

யோவ்... கரு பழனியப்பா  சநதோஷமாய்யா???
======
எப்போதுமே நான் வெளிப்படையாக இருக்கு காரணம்.. என் மனைவியோ என் குடும்பமோ என்னை புரிந்து கொண்டால் போதும்.. மற்றவர்களுக்காக நான் ஒரு போதும் வாழ்வது இல்லை..என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கின்றேன்.. அதே  போலத்தான் எழுதுகின்றேன்..

மற்றவர்கள் கொடுக்கும் ஜாக்கி ரொம்ப நல்லவர் என்ற பட்டம் எனக்கு தேவையே இல்லை...அதை நான் வாங்கி எங்கே வைப்பது என்பதுதான் என் கேள்வி..?? அதே டயலாக் மந்திரபுன்னகை படத்தில் பழனியப்பன் சந்தானத்திடம் சொல்லுவார்...அதனால அந்த ஆளை ரொம்ப பிடிக்கும்.. மந்திரபுன்னகை படம் பார்த்த போது என் மனைவி சொன்னாள் திரையில் உன் கேரக்டரை பார்த்தது போல இருந்தது என்று...அதனால் கரு பழனியப்பன் படங்கள் மீது எனக்கு ஒரு காதல்..

பழனியப்பன் படங்களில் நிறைய இயல்புதன்மை மீறாமல் காட்சிகள் இருக்கும்...

சமகால வாழ்வில் நாம் கடந்து போகும் சின்ன சின்ன விஷயங்களை  காட்சி படுத்துவதில் வல்லவர்....எல்லா கேரக்டர்களிடமும் சின்ன மெச்சூரிட்டிநஸ் இருக்கும்.. அது இயல்பை மீறாமல் இருப்பது இன்னும் சிறப்பு...

2005 ல் சென்சார்  செய்யப்பட்ட இந்த படம்....... புரொட்யூசர் பணப்பிரச்சனையால் பொட்டியில் தூங்கிய படம். நேற்றில் இருந்து இந்த படம் சுதந்திர காற்றை சூவாசிக்கின்றது..

==============
சதுரங்கம் படத்தின கதை என்ன??

திருப்பதிசாமி (ஸ்ரீகாந்) திசைகள் பத்திரிக்கையின் நிருபர்.. சமுக அவலங்களை தைரியமாக எழுதுவதில் வல்லவர்...அதனால் அரசியில்வாதியில் இருந்து அதிகார வார்கத்தில் இருக்கும் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க படுகின்றனர்.. 

சந்தியா (சோனியா அகர்வால்) கல்லூரியில் படிக்கும் பெண்.. ஒரு சில சந்திப்புகளில் ஸ்ரீகாந்தின் நேர்மை மீது காதல் கொண்டு அவரை காதலிக்கின்றார்..ஸ்ரீகாந்தும் சோனியாவை காதலிக்கின்றார்..ஒரு சுபயோக சுப தினத்தில் சோனியா ஸ்ரீகாந் எதிரில் கடத்தப்படுகின்றார்.

15 நாளில்  சோனியாவை கண்டு பிடிக்க டைம் கொடுக்கின்றான் வில்லன்.. இல்லையென்றால் சோனியாவை காலி செய்து விடுவேன் என்று சொல்லுகின்றான்.. கடைசிவரை கண்டுபிடிக்க முடியாது... காரணம் நான் தான் ஜெயிப்பேன் என்று சொல்லி செஸ் ஆட்டம் தொடங்குவதற்க்குள் செக்   மேட் என்று ஸ்ரீகாந்திடம் சொல்லுகின்றான்..செக் மேட்டை ஸ்ரீகாந் எப்படி உடைத்தார் என்பதை தியேட்டரில் போய் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்..
=============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கரு பழனியப்பனுக்கு இது இரண்டாவது படம்.. ஆனால் அந்தோ பரிதாபம்.. படம்  ஆறு வருடம் கழித்து அந்த படம் ரிலிஸ் ஆகும் என்று முதல் நாள் ஷுட்டிங் பிரேக்கில் தம் அடிக்கும் போது கூட  அவர் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்...

இந்த படத்தில் வேலை செய்த கேமராமேன் திவாகர் இரண்டு மூன்று படங்கள் செய்து விட்டு இப்போது பம்பாயில் பெரிய பெரிய டிவி நிகழ்ச்சிகளுக்கு டிஓபியாக இருக்கின்றார்..

மார்க்கெட் பீக்கில் இருந்த போது  சோனியா  நடித்த படம்...எப்போது எதையோ பறிகொடுத்து போல இருக்கும் சோகமான கண்களுமாக இருக்கும் நடிகை சோனியா... சொந்த வாழ்வில் இந்த  ஆறு வருடங்களில் நிறைய மாற்றங்கள் பார்த்து இருக்கின்றார்.

இந்த ஆறு வருடத்தில எளிதில் கண்டு பிடிக்கக்கூடிய ஓரே விஷயம் செல்போன் மாடலும் அதன் ரிங்டோனும்தான்.. மற்றபடி ஆறு வருடத்துக்கு முன்னால் எடுத்த படத்தை பார்க்கின்றோம் என்ற உணர்வே இல்லை..அதே போல பிரின்ட் எல்லாம் டிஜிட்டலில் இருப்பதால் அது இன்னும் பெரிய பிளஸ்..

முதலில் ஜெயில் காட்சிகளில் உண்மைத்தன்மையைதோல் உரித்து இருப்பது  எல்லா காலத்துக்கும் பொருந்தும் அதே போல ரஜினி அரசியலுக்கு வருவாரா கேள்விக்குறி எள்ளல் போன்றவைகளை சொல்லாம்..

படத்தில் இருந்து இப்போது இல்லாத ஒரே நபர்  நடிகர் விஜயன் மட்டுமே,..

ஜெயிலில் அரசியல்வாதிமேல் பெருச்சாளி விடும் ஜெயில் மேட்டர் நமக்கு புதுசு... அதே போல பத்திரிக்கையாளர்களை எலியோடு ஒப்பிடுவதும்..அதுக்கு நிகராக விளக்க அங்கே இங்கே என்று அலையவிட்டு அவன் நிலையை உணரவைப்பதும் அற்புதமான காட்சி.

சோனியா ,ஸ்ரீகாந்த காதலில் ஒரு உண்மைதன்மை இருப்பதை ரசிக்க முடிகின்றது...2005ல் எல்லா எப்எம்களிலும் ஒலித்த பாடல் விழியும் விழியும்... அதில் வரும் ஒரு வரி.. வசதியாக வசதியாக வளைந்து கொடு... வாவ் என்ன வரி??

ஒரு நல்லவனுக்கு நம்பிக்கை ஊட்ட கூட  ஒரு கெட்டவன்தான் சொல்லுகின்றான்.

காரில் ஸ்ரீகாந் இந்தியாவில் எல்லாம் இருக்கும் ஆனா இருக்காது என்று சொல்லும் டயலாக்குகள் ஆணித்தரம்....

இளவரசன் கேரக்டர்கள் மூலம் பேச்சாளர்களை ஒரு பிடி பிடித்தாலும் முக்கிய திருப்பம் அவர் சொல்லும் வரிகள் மூலம் லீட் எடுத்து அடுத்தக்கட்டத்துக்கு போவதும் திரைக்கதை சிறப்பு...

சட்டசபை உரிமை மீறல் பிரச்சனையில் பழனியின் டயலாக்குகள் வெரி ஷார்ப்.

வித்யாசாகர் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். 


மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி மற்றும் கருபழனியப்பன் இரண்டு பேரும் நெருக்கமான நண்பர்கள் ....இரண்டு பேரும் பத்திரிக்கையில் வேலை பார்த்தவர்கள். அதனால்தான் அவரின் நினைவாக ஸ்ரீகாந் கேரக்டருக்கு அந்த பெயரை வைத்தார்..

இடைவேளைக்கு முன் வரை கேமரா பாலுமகேந்திரா கேமரா போல ஒரு சின்ன டில்ட் அப் மற்றும் டில்ட் டவுன் கூட செய்யாமல் காட்சிப்படுத்தி இருப்பதும், இடைவேளைக்கு பிறகு பரபரப்பாக கேமரா ஸ்டேடிகேம் மற்றும் ஹேண்ட்ஹெல்ட்டில் கேமரா பயணிப்பதும் படத்தின் பரபரப்பை பறைசாற்றுகின்றன.

நல்லவேளை கோ படத்துக்கு முன் இந்த படம் வரவில்லை...வந்து இருந்தால் கோ படத்தை சதுரங்கம் படத்தில் இருந்து காப்பி அடித்து விட்டார்கள் என்று சொல்லி இருப்பார்கள். காரணம் இரண்டுத்துலேயே பத்திரிக்கை ஆபிஸ் வருதே..

==============
படத்தின் டிரைலர்...===================
படக்குழுவினர் விபரம்.

Directed by     Karu Pazhaniappan
Produced by     S. S. Durairaj
Written by     Karu Pazhaiappan
Starring     Srikanth
Sonia Agarwal
Music by     Vidyasagar
Editing by     Suresh Urs
Release date(s)     October 2011
Country     India
Language     Tamil 

===============
தியேட்டர் டிஸ்கி...

சென்னை பிளாக்கர்சுக்காக இந்த படம் நேற்று பிரசாத் பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது... 

குடும்பத்தோடு வந்தவர்கள்.. மூன்று பேர்.. நான், நித்யகுமாரன், விழியன் என மூவர் குடும்பத்துடன் வந்து இருந்தோம்...

யாழினியை உண்மைதமிழன் அண்ணனும், கேபிளும், ஊர்ச் சுற்றி சங்கரும், பட்டர்பிளை சூர்யாவும் கொஞ்சிக்கொண்டு இருந்தார்கள்..

யாழினி பார்த்த  அரைமணி நேரம்  முதல் தமிழ்திரைப்படம் சதுரங்கம்...
படம் பார்ப்பதை விட பின்சீட்டில் இருப்பவர்களிடம் சென்று அப்படியே படிப்படியா எல்லா சீட்டையும் கடந்து ஆப்பரேட்டர் ரூமுக்கே செல்ல என் மடியிலும் மனைவி மடியிலும் முயற்சி செய்து கொண்டு இருந்தாள்..படம் பார்க்க விடவேயில்லை...அழ ஆரம்பித்த காரணத்தால் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி அத்தை வீட்டுக்கு அனுப்பி  விட்டேன்..

படம் முடிந்து இயக்குனர் கரு பழனியப்பனோடு உரையாடினோம்..எல்லா இடத்திலும் லாஜிக் மிஸ் செய்யாத படம் இந்த படம்.. ஏன் கடைசியில் இப்படி ஒரு சொதப்பலான கிளைமாக்ஸ் என்றேன்...

வைசாக்கில் போய் இறங்கிய போது என்னிடம் ஸ்ரீகாந்தும், பிலிம் ரோல் மட்டுமே இருந்தது..இப்படி ஒரு கிளைமாக்சை அங்கேயே எழுதி எடுத்தேன்.. அப்படி மட்டும் எடுக்கவில்லை என்றால் இந்த படம் முடிந்து இருக்காது என்று சொன்னார்...

திறமையானவராக இருந்தாலும் தமிழ்சினிமாவை பொருத்தவரை காம்ரமைஸ் செய்யாமல் எந்த இயக்குனரும் படம் எடுக்க முடியாது என்பதை சொன்னார்.. 
இன்னும் நிறைய பேசினோம்..நிறைய பேசினார்.. அது அப் த ரெக்காட்..

வேறு ஒரு நாளில் நீங்கள்  யார் என்று கூட கேட்கலாம் ஆனால் நேரில் நின்று கொம்பு முளைக்காமல் இயல்பாய் பேசுகின்றாரே அதுவே தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய விஷயம்.

பதிவர்கள் நிறைய பேர் வந்தார்கள்.. பெண்களும் கனிசமாக வந்தார்கள்.. இரவு எவிஎம் எதிரில் நண்பர் நித்யா குடும்பத்தினருடன் இரவு உணவு உண்டோம்.

ஒரு போன் வந்தது..

ஹலோ ஜாக்கியா?

சொல்லுங்க..

உங்கபின் சீட்ல கருப்பு சட்டை போட்டு உட்கார்ந்துகிட்டு இருந்தேன்.நான் துபாய்ல வேலை பார்க்குறேன்.. லீவுக்கு சென்னைக்கு வந்து இருக்கேன். உங்களிடம் பேச முயற்சித்தேன் நீங்கள் பிசியா இருந்திங்க என்று சொன்னார்...

அவர் என்னிடம்  பேச கூச்சம்  என்பது அவர்  பேச்சில் தெரிந்தது...நிச்சயம் சந்திக்கலாம் நண்பரே...

 =================
பைனல்கிக்....
மிக நல்ல படம்.. பரபரபப்பான திரைக்கதை... அற்புதமான சமுக சாடல்கள்....  பார்த்தே தீரவேண்டிய படத்தின் லிஸ்ட்டில் போய் இருக்க வேண்டும்.... எந்த இடத்திலும் லாஜிக் மீறல் இல்லை.. ஆனால் அந்தோ பரிதாபம்...  சோனியா ஸ்ரீகாந்துக்கு போன்  செய்யும் இடமும்,கடைசி  கிளைமாக்சும் படத்தின் பெரிய சருக்கல்..ஆனால் அஅதை தவிர்த்து பார்த்தால் இந்த படம் அவசியம் பார்க்க வேண்டியபடம்..

====
பிரிய்ங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

6 comments:

 1. கலைஞ்சி கிடைந்ததான் அதுக்கு பேரு வீடு...
  அடுக்கி வச்சி இருந்தா அதுக்கு பேரு மீயூஸியம் என்று சொல்லிச் சொல்லி என் வீடு குப்பையாக இருக்கின்றது..

  //

  நிறைய பேர் வீட்டுல இப்படித்தான் அவரு விளக்கேத்தி வைச்சுருக்காறு.என் வீட்டுலயும் அப்படிதான்!
  //

  கரு.பழனியப்பனின் வசனங்களுக்காகவே அவர் படங்களை பார்ப்பதுண்டு.
  இதையும் பார்க்கணும்.
  வலைப்பதிவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது

  ReplyDelete
 2. இன்றைய அரசியலுக்கு ஏற்ற வசனம்.

  “எங்கள மாதிரி தப்பானவங்க ஜெயிப்போம்னு நம்புறோம். உங்களை மாதிரியான நல்லவங்க தோத்துடுவோம்னு நம்புறீங்க. முதல்ல ஜெயிப்போம்னு நம்புங்க..”

  ReplyDelete
 3. கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படம் மன உணர்வுகளை அருமையாகப் பிரதிபலித்தது. அவரே நடித்து இயக்கிய மந்திரப்புன்னகை படத்தை நான் சமீபத்தில் பலமுறை பார்த்தேன். சதுரங்கம் படப் பாடல்களை முன்னொரு நாட்களில் பலமுறை கேட்டதுண்டு. நல்ல இயக்குநர்களின் படங்கள் பெட்டிக்குள் தேங்குவது திரையுலத்திற்கு நன்மையல்ல.

  ReplyDelete
 4. உங்க வீட்டிலையுமா அண்ணா! எங்க வீட்டையும் இப்படித்தான் கெடுத்து வெச்சிட்டார் கரு. நல்லா இருப்பா மகாராசா!

  ReplyDelete
 5. விரைவில் படம் பார்க்குறேன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner