சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்


ஆல்பம்.

நான் முன்பே சொன்னதுதான்..இந்தியாவில்  செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்..இந்தியாவின் சட்டம் காசு பணம் இருந்தால், உங்களை சகலவழக்கிலும் மரியாதையுடன் காப்பாற்றும்..
108 முறை வாய்தா வாங்கி ஒரு கேசை எப்படி எல்லாம் இழுத்து  அடிக்க முடியுமோ? அப்படி எல்லாம் இழுத்து அடித்து 14 வருட வனவாசத்துக்கு பிறகு, அதுவும் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு காட்டிய பிறகு, 3000 போலிசார் பாதுகாப்பு கொடுக்க...கர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க வைத்து ,பொது வாழ்க்கையில் தன்னை அற்பணித்துக்கொண்ட தமிழக முதல்வர் ஜெ தன் மீது குற்றம் சாட்டப்பட்ட  ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கின்றார்...இதே போல ஒரு கேசில் சாமான்ய மனிதன் நேரில் ஆஜராக 14 வருடம் கடத்த முடியுமா? சட்டம் அனைவருக்கும் சமம்..... போங்கடே....
======================
கடந்த திமுக ஆட்சியில் எதுக்கு எடுத்தாலும் ராஜினாமா செய்யசொல்லுவார்.. ஜெ.. அதே போல கோர்ட்டில் நேரில் ஆஜரான அன்று திமுக தலைவர் கலைஞரிடம்..பத்திரிக்கையாளர்கள் ...ஜெ உங்கள் ஆட்சியில் சொன்னது போல, நீங்கள் அவரை ராஜினாமா செய்ய சொல்லுவீர்களா? என்று கேட்ட போது அப்படி கேட்பது அவர் சுபாவம் என்று புன்முறுவலுடன் கலைஞர் பஞ்ச் வைத்தார்.....
=======================
முதன் முறையா சென்னையில் அதிமுக  மேயராக சைதை துரைசாமி தோர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றார்...அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்... துரைசாமிக்கு அரசியல்வாதி என்ற முகம் தவிர்த்து அவர் இலவசமாக நடத்தும் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக படித்தவர்கள் மத்தியில் பிரபலம்..ஸ்டாலின் சென்னை மெயராக இருந்த போது இருந்த சுத்தம் அதன் பிறகு சென்னையில் பெரியதாக சோபிக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை..பெங்களூரில் காணப்படும் சுத்தம் சென்னையில் இல்லை...புது மேயர் துரைசாமி அவர்கள் என்ன செய்கின்றார் என்று பார்ப்போம்..??

============
உள்ளாட்சி தேர்தலில் பல சொதப்பல்கள் நடந்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது...இருப்பினும் வெற்றி பெற்ற  வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்..மக்கள் நல திட்டங்களுக்கு வரும் தொகையில், மொத்த காசில் பத்து பர்சென்ட்டை அபிட் விட்டு மீதி 90 பர்சென்ட் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிட வேண்டுகின்றேன்..சார் என்ன இப்படி சொல்லிட்டிங்க.. பொதுசேவை செய்ய வந்த எங்களை இப்படி சொல்லலாமா?? மன்னிக்கவும் சம்பாத்திக்கவே அரசியலுக்கு வருபவர்களுக்கான வேண்டுகோள் இது...  
==================
திருச்சி இடைதேர்தல் முடிவு ஏற்க்கனவே தெரிந்த விஷயம்தான்...பொதுவான மக்கள் மனோபாவம் என்னவென்றால் ஆளுங்கட்சி எம்எல்ஏ என்றால் திட்டங்கள் வெகு விரைவாக செயல்படுத்துவர்கள்.. எந்த தடையும் ஏற்ப்படுத்தமாட்டார்கள் என்ற எண்ணவோட்டம்தான்..யார் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது நல்ல சாலை மற்றும் குடிநீர் இந்த இரண்டுதான்.. அதை யார் ஒழுங்காக நிறைவேற்றினாலும் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே...தேமுதிக மற்றும் காங்கிரஸ் பாமக போன்ற கட்சிகள் சுயபரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும்..

=============
என்னதான் கொடுங்கோலனாக இருந்தாலும் கண் எதிரில் கதற கதற அடித்து துவைத்து சாகடிப்பது என்பது ஒரு சின்ன சாப்ட் கார்னரை அந்த நபரின் மேல் ஏற்படுவதை நாம் மறுக்க முடியாது..கடாபி உயிருக்கு கெஞ்சுகின்ற வீடியோக்கள் எல்லாம் வெளியே வந்து கொண்டு இருக்கின்றன..தன் மக்களை கொன்ற பெரிய கொடுங்கோலன் கொல்லப்பட்டு இருக்கின்றான்..யாருமே நாம்தான் இந்த உலகில் பெரிய பருப்பு என்று நினைத்துக்கொண்டு தவறு மேல் தவறு இழைக்கவே கூடாது..  என்பதற்கு கடாபி மரணம் உதாரணம்.
==========================
ஹாலிவுட் சினிமா ரசிகர்களே இரண்டு மாதம் கழித்து ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாராகுங்கள்...


இந்த படத்தை பெங்களூர் ஊர்வசி அல்லது சென்னை சத்யத்தில் பார்க்க ஆசை...
 =========
மிக்சர்..
மனைவிக்கு உதவி செய்கின்றேன் என்று காலையில் குழந்தையின் டயப்பரை நான்தான் அவிழ்ப்பேன்... திரவ உணவு கொடுக்கும் வரையில் எனக்கு எந்த வேறு பாடும் தெரியவில்லை...திட உணவுக்கு மாறி சில தினங்கள் ஆகின்றன... யப்பா சாமி... தாய்க்குலங்களே உங்கள் சகிப்பு தன்மைக்கு கோடி கும்பிடு..
 ==========
 வலையை அதிகம் யூஸ் செய்பவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்நாடு போக்குவரத்து கழக ஆன்லைன் புக்கிங் சென்டரை ஓப்பன் செய்து விட்டார்கள்..

============
இப்படி எல்லாம் நடக்கும்  என்று தெரிந்து இருந்தால் சிம்ரன் திருமணத்தை என் உயிரை கொடுத்தாவது தடுத்து இருப்பேன்.நேற்று ஜெயாடிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு கண்ணே கலங்கி விட்டது....என்னமாதிரி ஆட்டம் அடிய உடம்பு.. 
ஜாக்பாட் நிகழ்ச்சியில்  சிம்ரன்.


ச்சே....டெலக்ஸ் பாண்டியன்  வடிவேலு ரெட் லைட்டை சுட்டு விட்டு கோவைசரளாவிடம் சிம்ரன் சிம்ரன் என்று சிவாஜி போல சொல்லுவாரே அது போல நேற்று முழுவதும் சொல்லிக்கொண்டு இருந்தேன்..இனி இந்த பாட்டை பார்த்து மனசை தேத்திக்க வேண்டியதுதான்..சிம்ரனே இந்த பாட்டை பார்த்தாலும் மனசை தேத்திக்கவேண்டியதுதான்..



 ===============
நான் ரொம்ப ரசித்த படம்... பாஸ் என்கின்ற பாஸ்கரன் திரைப்படம்  கலைஞர் தொலைகாட்சியில் தீபாவளிக்கு ஒளிபரப்புகின்றார்கள்...மனசு விட்டு எல்லா கவலையும் மறந்து சிரிக்க ஏற்றப்படம்...அதே போலஇந்த படத்தில் நயனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்...நயனுக்கு ஆர்யாவை பிடிக்கும் ஆனால் பிடிக்காதது போல நடிப்பார்.. 

கீழே வரும் பாடலில் முதல் ஷாட்டில் மாடியில் இருந்து பார்த்து லெப்ட் ரெரைட் என இரண்டு பக்கமும் ஒரு பெரிய கும்பிடு போட்டு சின்ன சிரிப்போடு போகச்சொல்வதும் அதுக்கு இயல்பாய் ஆர்யா வழிவதும் செமை கியூட்..இந்த காட்சிக்காகவே இந்த பாடல் வந்தால் சேனல் மாற்றாமல் ரசிப்பது வழக்கம்..



குறுக்காலபோவான் என்ற நபர் ஒரு பின்னுட்டம் போட்டு இருக்கின்றார்... அதை படித்ததில் இருந்து சிரித்துக்கொண்டு இருக்கின்றேன்.. யப்பா.....முடியலை..

==

குறுக்காலபோவான் has left a new comment on your post "Oosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...":

தமிழ் பதிவர்களிலேயே மிக சிறந்த பதிவர் தாங்கள்தான்.
அதிலும் குறிப்பாக உலக சினிமாவை தமிழில் நுணுக்கமாக விமர்சிபவ்ரும் தாங்களே.
எனவே ஒசரவல்லி,உட்க்காரவந்த கள்ளி என்று சினிமா குப்பைகளை விமர்சிப்பதை இயன்றவரை தவிருங்கள்.
நான் உங்கள் தளத்தின் தொடர் வாசகன் .இது போன்ற குப்பைகளால் உங்கள் தளம் குப்பைதொட்டி ஆகிவிடக்கூடாது
=========================
அன்பின் குறுக்கால போவான்.. அது டைம்பாஸ் பட கேட்டகிரி... அதை விட  அது போல பல படங்கள் பார்த்து இருக்கின்றேன்...ஆனால் எழுதியது இல்லை..காரணம் நீங்க சொன்னதுதான்.. நன்றி. உங்கள் கருத்துக்கு..
========


 த ரியல் பிருந்தாவனமும் நொந்தக்குமாரனும்

இந்த நாவலின் தாக்கத்தை இரண்டு பதிவுகளுக்கு முன் எழுதி இருந்தேன்.. இந்த அட்டை படத்தை என் நினைவில் இருந்த வரையில் விவரித்து  இருந்தேன்..அதை கிங் விஸ்வா எனக்காய் மெனக்கெட்டு ஸ்கேன் செய்து அனுப்பி என்னை நெகிழ் வைத்தார்... கிங் விஸ்வாவுக்கு நன்றிகள்..
நன்றி பிகேபிசார்..
 ==============

இந்தவார கடிதம்..

ஜாக்கி,


எப்போது உங்களை வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியாது.
2008 ம் ஆண்டாக இருக்கலாம். உங்கள் பதிவு எல்லாம் எனது கூகிள் ரீடர் இல் கூட இல்லை, தேவையும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருநாளும் வேகமாக உங்கள் முகவரியை டைப் செய்தே பக்கத்துக்கு வருவேன். அப்படி ஒரு வாசகன்!

உங்களை
பலர் விரும்புவதற்கு உங்கள் கோபத்தில் இருக்கும் innocence உம் காதலும் தான், எங்கேயும் காதல் அஞ்சலியின் கோபம் போல! நீங்கள் மற்றவர்களுக்காக கொபப்படுவதே அதிகம். ஈழத்தமிழன் ஆதலால் எமக்காக கொபப்பட்டதேல்லாம் கண்ணுக்குள் நிற்கிறது.

எழுதுவதற்கு
orgasm போன்ற ecstasy மனநிலை இருந்தாலே சாத்தியம், அது வடியாமல் இத்தனைகாலம் புது புது substance தேடி எழுதுவதே உங்களில் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். எது உங்களை இப்படி எழுத இயக்குகிறது என்று தெரியாமலேயே இருந்தேன் நேற்றுவரை!

எழுத
ஆரம்பித்து இருபது நாட்கள் இருக்கும். அந்த மனநிலை மெல்ல மெல்ல புரிகிறது இப்போது. என்னுடைய இந்த orgasm உங்களுடையது போல நிலைக்குமா தெரியாது. ஆனால் உங்களை மேலும் மேலும் புரிந்து கொள்ள அது உதவுகிறது. அடுத்தடுத்து நான் எழுதுவதைப்பார்த்து நண்பன் ஒருவன் கேட்டான் "Man you got shit loads of time to kill, don't you?" என்று. அவனுக்கும் உங்கள் பதிவு முகவரியை மேற்கோள் காட்டி, "Man, I now got shit loads of time to kill on rest now" என்று அனுப்பினேன். உங்களைப்போன்றவர்கள் கடந்து வராததையா நான் மூன்று வாரத்தில் பார்த்து விட்டேன்?

வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள
உறவு அந்த எழுத்து தான். உண்மையான வாசகன் வாசித்து முடித்து விட்டு, மனதிலேயே பாராட்டிவிட்டு சும்மாவே போய் விடுவான் என்ற ரீதியில் சுஜாதா ஒருமுறை கூறியிருந்தார். மற்றவர் தளங்களில் கருத்து எழுதுவது தமது தளத்துக்கான marketing என்ற ரீதியில் லக்கி சில வருடங்களுக்கும் முன் பதிவு எழுதி இந்த வாரம் மீண்டும் புதுபித்து இருந்தார். அதனாலேயே எழுத வந்த போதெல்லாம் சிறு சங்கடம் ஏற்பட்டு தவிர்த்துஇருக்கிறேன். இதையும் எழுதிஇருக்க மாட்டேன். உங்கள் "close to heart" எழுத்து தூண்டிவிட்டது. மனம் மாறும் முன்னரே போஸ்ட் பண்ணி விடுகிறேன்.
ஜேகே....
அன்பின் ஜேகே.. ரொம்ப பெரிய படிப்பாளி போல.. நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சி இருக்கிங்க..ரொம்ப  நெகிழ்ச்சியா  உங்கள் கடிதத்தை வாசிக்கும் போது உணர்ந்தேன்..

மிக்க நன்றி நண்பரே..
  நேரம் இருந்தால் தயங்காமல் தொலைபேசியில் பேசுங்கள்...

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.
===========

அன்புள்ள ஜாக்கி

நேரம் ஒதுக்கி பதில் அனுப்பியற்கு மிக்க நன்றி. 

நான் அப்படி ஒன்றும் படிப்பாளி இல்லை. சின்ன வயதில் எங்கு பார்த்தாலும் சண்டையும் உயிர் இழப்பும் என்பதால் அம்மா என்னை வெளியே அனுப்பியதே கிடையாது. வீடும் பக்கத்தில் இருந்த நூலகமும் தான் வாழ்க்கை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பலன் புரிபடுகிறது.

உங்களோடு பேசுவேன். ஒரு புதியவனுக்கே உள்ள கூச்சம். அது அடங்கிய பின், சில நல்ல பதிவுகளையாவது எழுதி உங்களோடு பேசும் தகுதி உள்ளவன் ஆன பிறகு பேசுவேன்.

இன்னும் எழுதுங்கள். உங்கள் பாணி உங்களுக்கே உரியது. ஜெயமோகன் உங்கள் ஜனரஞ்சகத்தை குறை கூறி எழுதியபோது தோன்றியது, இது தான் முறையான எழுத்து என்று ஒருவரும் எழுத்துக்கு proprietary கொண்டாடமுடியாது. அது வாசிப்பவனை போட்டு தாக்கவேண்டும். அதை அநேகமான எழுத்தாளர்கள் செய்கிறார்கள். இல்லை இல்லை, அதை செய்பவர்கள் தாம் எழுத்தாளர்கள் ஆகின்றனர். நீங்கள் அதை உங்கள் பாணியில் நீங்கள் செய்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்,
ஜேகே 

=========================
போட்டோ கார்னர்.. வலையில் ரசித்தவை...
செமைக்கியூட்
 ============
 எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்பது இதுதானோ?
=========
பிலாசபி பாண்டி...
நான் இதுவரை எந்த தப்புமே செய்யலைன்னு எவன் சொன்னாலும்... அவன் வாழ்க்கையில புதிய முயற்சிகளை செஞ்சு பார்க்கலைன்னு அர்த்தம்..

சொன்னது ஐன்ஸ்டைன்.
================
நான்வெஜ்18+

ஒரு டீன் ஏஜ் பையன்  கடவுளை நினைச்சி தவம் செஞ்சான்..

கடவுள் வந்தார்..


கடவுளே ....

சொல்லுமகனே..


வயசுக்கு வந்த  என் மாமா பொண்ணு பக்கத்துல என்னை படுக்க விடமாட்டேன்னு சொல்லறாங்க...பக்கத்துல படுக்கறது தப்போ கடவுளே??


குழந்தாய் என் ரேஞ்சிக்கு பதில் சொல்லட்டுமா? இல்லை உன் ரேஞ்சிக்கு பதில் சொல்லட்டுமா?


என் ரேஞ்சுக்கே பதில் சொல்லுங்க காட்...


வயசு பொண்ணு பக்கத்துல படுக்கறது தப்பே இல்லை...இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து  எந்த பேமானியும் கைய, கால சும்மா வச்சிகிட்டு படுத்து தூங்கினதா சரித்திரமே இல்லை

 =========
சக பதிவர்கள் வாசகநண்பர்கள் அனைவருக்கும் எனது தித்திக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்..

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

13 comments:

  1. நாம் மிகவும் இரசித்த திரைப்பட நடிகைகள் மேல் வெறுப்பு வர இதுப்போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன்.

    எப்படியிருந்த சிம்ரன் இப்படி ஆகிட்டாங்களே :((

    ReplyDelete
  2. ஜாக்கி சேகருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். நல்ல பதிவு. செம க்யூட் என்று ஒரு படம் வைத்துள்ளீர்களே... செம ஓவர்.

    ReplyDelete
  3. // இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து இருந்தால் சிம்ரன் திருமணத்தை என் உயிரை கொடுத்தாவது தடுத்து இருப்பேன்.//

    நெசந்தான் ஜாக்கி! வாலி படத்துலே பார்த்த சிம்ரனை நினைச்சு வாளி வாளியா கண்ணீர் வருது!

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. உங்கள் எழுத்து மீது உள்ள நம்பிக்கை :
    இப்போது எல்லாம் "Likes" கிளிக்க் பண்ணிட்டுத்தான் "மேலும் சுவைக்க...." கிளிக் செய்கிறேன்.

    மேலும் ... சென்னை இல் நடந்த உலக சினிமாவை பற்றிய பதிவுகளை எதிர் பார்கிறேன்.

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள்...ஜாக்கி....வீட்டில் அனைவரிடமும் சொல்லவும்....யாழிநியிடமும்..!!!!

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...


    சே.குமார்

    ReplyDelete
  8. 2006‍ல் இருந்து இன்றுவரை என் Handphone-ல் Mission Impossible theme-தான் Ringtona இருக்கு. இப்ப கொஞ்ச நாளா மங்காத்தா theme-மை விரும்பினாலும் MI மாற்ற மனசு வரலை!

    ReplyDelete
  9. .ஜொள்ளு சூப்பர் போட்டோ கார்னர் கலக்கல் .செமைக்கியூட் HOT ரொம்ப ..

    ReplyDelete
  10. டேய் மச்சி ...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தல !

    ReplyDelete
  11. உங்கள் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் இதயத்தில் இருப்பவர்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
    (யாழினி பாப்பாவுக்கும்தான்)

    ReplyDelete
  12. நான்தான் அந்த குறுக்காலபோவான்.
    என் சிரிகிறீங்க? பாஸ்.
    மிகச் சிறந்த பதிவர் என்று சொன்னதுக்கான தன்னடக்க பதிலா? புரியலையே!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner