The Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்..??

 

தகவல் தொழில் நுட்பமும் அறிவியலும செமையாக வளர்ந்துவிட்ட நிலையில் பெண்கள்  நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. நம்மை யாரும் கவனிக்கவில்லை என்று.. ஆனால் உங்களை யாராவது ஒருவர் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மறவாதீர்கள்..


சகலநேரமும் விழிப்பாய் இருங்கள்.. உங்கள் வயதுக்கு வந்த மகளுக்கு கீழே நான் சொல்லி இருக்கும் விஷயங்களை ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்...

சார் வரும் புராட்டாசி வந்த 40 வயதை தாண்டப்போறேன்..  என்னை எல்லாம் எவன் பார்ப்பான்....?

சாரி மேடம் நீங்க எழுபது வயதானாலும் நீங்க பெண்தானே?ஆமாம்.. அதுதான் அவுங்களுக்கு தேவை..

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் யாருமற்ற பூங்காவில்  காதலனின் கைகள் எல்லை மீறும்  போது யாரும் இல்லை என்று நீங்கள் அந்த சீண்டலை அனுமதிக்கலாம்.. ஆனால் அது  புதர்மறைவில் இருந்து யாரோ ஒரு வக்கர ஆசாமியால் செல்போன் கேமரா மூலம் படமாக்கபடுகின்றது என்று..

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் நாம் தானே உடைமாற்றுகின்றோம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்.. ஆனால் உங்கள் எதிரில் இருக்கும் கண்ணாடி மற்றும் பிளக் பாயிண்டில் ரகசிய கேமரா ஒளிந்து இருந்து,நீங்கள் உடை மாற்றுவதை படம் எடுப்பதை நீங்கள் அறிந்து கொள்ள நியாயம் இல்லை.


நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் காதலனோடு கதவு சாத்தப்பட்டு பிரவுசிங் சென்டரில் யார் பார்க்க போகின்றார்கள் என்று.. ஆனால் உலகமே பார்க்க அங்கு கேமரா பொருத்தி இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் காலேஜ் டாய்லட்டில் யார்  பார்க்கபோகின்றார்கள் என்று அப்படி நினைக்காதீர்கள்..மேலே இருந்து செல்போன் கேமராவை நீட்டி படம் எடுத்து உலகம் புல்லா உலவ வீட்டு இருக்கின்றார்கள்..ஒன்னுக்கு இருப்பதை கூட நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் அந்த வக்கிர ஆசாமிகள்..

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் ஹாஸ்டல் பாத்ரூமில் யார் நம்மை பார்க்க போகின்றார்கள்  என்று... வாஷ் பேஷனுக்கு கீழே.. பப்பில்காம் ஒட்டி அதில் செல்போன்கேமராவை ஒட்டி வைத்து நீங்கள் குளிப்பதை படம் எடுத்து விடுகின்றார்கள்...

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் லாட்ஜ் அறையில் கணவனுடன் உடலுறவு கொள்வதை யார் பார்த்து விட முடியும் என்று? அறையில் இருக்கும் கண்ணாடி, பிளாக்பாயிண்ட், பிளவர் வாஷ், என்ற எதாவது ஒரு மறைவிடத்தில்  கேமரா மறைந்து இருக்கும் ஜாக்கிரதை.

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் சுற்றுலா  சென்ற இடத்தில் அருவியில் நீங்கள் குளிப்பதை குறிப்பிட்டு யார் பார்க்கபோகின்றார்கள் என்று?? ஆனால் அப்படி குறிப்பிட்டு செல்போன் கேமராவில் வீடியோ எடுக்க ஓரு கோஷ்ட்டியே சுற்றுக்கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

இவ்வளவு ஏன் நீங்களே அருவருப்பு அடையும் சானிடரி நேப்கின் மாற்றுவதை கூட டாய்லட்டில் கேமரா மறைந்து வைத்து வீடியோ எடுத்து இருக்கின்றாகள்.. 

நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம் நாம் தனியாகத்தானே இருக்கின்றோம் நம்மையார் கவனிக்கபோகின்றாக்ள் என்று...? நீங்கள் பெண்ணாய் இருந்தால் போதும் வயது அழகு எதுவும் முக்கியம் இல்லை.. 

உங்கள் தனிமை உங்கள் அனுமதி இல்லாமல் களவாடப்படும்...அப்படி தனிமை களவாடப்பட்ட ஒரு பெண் டாக்டரின் கதைதான் ரெசிடென்ட் திரைப்படம்..
=================
The Resident-2011 ரெசிடென்ட் திரைப்படத்தின் கதை என்ன??

நீங்கள் ஒரு டாக்டர்...உங்கள் பெயர்... (Hilary Swank ) Dr. Juliet Devereau இன்னும் திருமணமாகவில்லை..ஒரே ஒரு பாய் பிரண்ட் மட்டும் இருக்கின்றான்.. அவனையும் திருமணம் செய்து கொள்வது பற்றி இனிதான் முடிவு எடுக்கவேண்டும். நியுயார்க்கில் தங்க ஒரு அப்பார்ட்மெண்ட் தேடுகின்றீர்கள்.. 

எல்லா இடத்திலேயும் ஏதாவது ஒரு குறை பாடு... ஒரு அப்பாட்மெண்ட்டில்  வாடகைக்கு ஒரு அறை இருக்கின்றது..நீங்கள் எதிர்பார்த்த லோக்கஷேனில்.. (Jeffrey Dean Morgan ) Max என்பவனின் அப்பாட்மெண்ட்டில் இடம் கிடைக்கின்றது... அது மேக்சின் தாத்தாவின் சொந்த  இடம்.. அந்த வீடு ரொம்பவே உங்களுக்கு பிடித்து விட்டது..ஆனாலும் வீட்டில் முதல் நாள் இரவு உங்களுக்கு உங்களை யாரோ கவனிப்பது போல தெரிகின்றது...


அது கூட பராவயில்லை வழக்கத்துக்கு மாறாக நீங்கள் அதிகமாக தூங்குகின்றீர்கள்.. சில வேளைகளில் உடலுறவு முடிந்து அசதியில்  தூங்குவது போல உணர்கின்றீர்கள்...ஆனால் நீங்கள் உடலுறவு கொள்ளவில்லை.. ஆனாலும் அது எப்படி என்று குழப்பி போகின்றீர்கள்...?? 

நீங்கள் டாக்டர் என்பது உங்கள் மண்டையில் உறைக்கினறது.. ஏன் இப்படி அடித்து போட்டது போல தூங்குகின்றோம் என்று அறிய உங்கள் பிளட்டை டெஸ்ட்டுக்கு கொடுத்தால் அதில் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கலந்து இருப்பது தெரிகின்றது.. எப்படி இருக்கும் உங்களுக்கு??  சரி மீதி என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்...
===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஒரு அப்பார்ட்மென்ட் அறை மற்றும் மூன்ற முக்கியகதாபாத்திரங்கள்.. அவ்வளவுதான் நடிகர்கள் கூட்டம்.

நல்ல திரில்லர் என்று எல்லாம் கதை அடிக்க மாட்டேன்... 

இந்த படம் யூகிக்க கூடிய திரைக்கதைதான்...

ஒரு அழகான பெண் அறைக்கு உள்ளே போக வாய்ப்பும். அந்த பெண் மயக்கத்தில் ஆழ்த்தி விட்டால் என்னவெல்லாம் ஒரு ஆண் செய்வானோ? அதை எல்லாம் காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..

வேறு என்ன சொல்ல? எதையும் சொல்வதற்கு இல்லை...
 Hilary Swank இவருக்காக வேண்டுமானால் படததை பார்க்கலாம்.... படத்தை தாங்கி நிற்ப்பது இவர்தான்.. அவரின்  பதட்டம் இயல்பாய் இருக்கின்றது...
=============
படத்தின டிரைலர்...




==============

 படக்குழுவினர் விபரம்..

Directed by     Antti Jokinen
Produced by     Simon Oakes
Cary Brokaw
Guy East
Nigel Sinclair
Written by     Antti Jokinen
Robert Orr
Erin Cressida Wilson
Starring     Hilary Swank
Jeffrey Dean Morgan
Christopher Lee
Cinematography     Antti Jokinen
Editing by     Bob Murawski
Stuart Levy
Studio     Hammer Film Productions
Distributed by     Exclusive Film Distribution
Release date(s)     March 29th, 2011
Country     United States
United Kingdom
Language     English
===========



பைனல்கிக்..


எதிர்பார்த்த திரைக்கதை... இது போல பல படங்கள் பார்த்து விட்டோம்.. அதனால் இந்த படத்தை டைம்பாஸ் படங்கள் வரிசையில் சேர்க்கின்றேன்.. இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் யாரும் ஜாதியை விட்டு விலக்கி வைக்கபோவதில்லை...இந்த படம் மூவீஸ் நவ் கடையில் கிடைக்கின்றது...


நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...


6 comments:

  1. \\இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் யாரும் ஜாதியை விட்டு விலக்கி வைக்கபோவதில்லை...\\
    படத்தின் விமர்சனத்தை விட இந்த கிக் அட்டகாசம்...
    உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு படத்தை பார்க்கும்போதே அது ஒர்த்தா என்பது தெரிந்துவிடும். அது ஒர்த் இல்லைஎனில் அதற்கு நேரம் ஒதுக்கி எதற்காக பதிவிட வேண்டும் ?? அந்த நேரத்தில் இன்னொரு படத்தையே பார்த்துவிட முடியுமே? உங்களின் ஒவ்வொரு பதிவையும் தினமும் படிக்கும் வாசகன் என்ற உரிமையில் கேட்கிறேன்.. கேள்வி தவறெனில் மன்னிக்கவும்...

    ReplyDelete
  2. இந்த படம் அடித்து பிடித்து பார்க்கவேண்டிய படம் அல்ல.,..இது ஒரு டைம்பாஸ் படம்... ஒர்த்தே இல்லை ஒரு வரியில் சொல்லி விட முடியாது.,.. அசோக். ஒர்த் இல்லாத படங்களை நான் நேரம் செலவிட்டு எழுதுவதில்லை... எதாவது ஒரு விஷயம் அதில் இருக்கும்... வேலூர்மாவட்டம்னு ஒரு படம் பார்த்தேன்.. ஜாலியா பாத்தேன் ..ஆனா அதை பத்தி எழுதலை.. காரணம்.. எழுதற அளவுக்கு விஷயம் இல்லை.

    ReplyDelete
  3. //வேலூர்மாவட்டம்னு ஒரு படம் பார்த்தேன்.. ஜாலியா பாத்தேன் ..ஆனா அதை பத்தி எழுதலை.. காரணம்.. எழுதற அளவுக்கு விஷயம் இல்லை.

    இரு வரிகளில் ஒரு பட விமர்சனம்.

    ReplyDelete
  4. ஜாக்கி அண்ணே உங்க விமர்சனம் படிச்சிட்டு பாத்தாதான் இங்கிலீஷ் படமே சுவாரசியமா இருக்கு கண்டிப்பா நீங்க பார்க்கிற படதுகெலாம் விமர்சனம் போடுங்க மறந்துடாதிங்க

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்.

    சே.குமார்
    மனசு

    ReplyDelete
  6. "சரி மீதி என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்..."

    இந்த லைன் பாத்ததும் கடுப்ப இருக்கு சார்.
    படம் சொல்ற கதைய விட நீங்க கதை சொல்ற விதம் நல்ல இருக்கு.
    so ,"படத்தின் கதை என்ன?" பகுதிய ஓவரா சுருக்காதீங்க!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner