ஒரு சேரில் உட்கார வைத்து உங்கள் கையை கட்டி விட்டார்கள்... உங்கள் காலையும் கட்டி விட்டார்கள்... காலம் காலமாக இது போல சீனில் ஹீரோவை சேரில் கயிற்றால் கட்டி வைத்தால் என்ன செய்வார்கள்..??
சண்டையில் உடைந்து கிடக்கும் கண்ணாடியை எடுத்து கயிற்றை அறுத்து தப்பித்து ஹீரோயினை காப்பாற்றி, மிக அழுத்தமாக கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்துவார்கள்.. இரவில் இதை விட அதிகமாக அழுத்தம் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லுவார்கள்.
ஆனால் இப்படி ஒரு சீனை சமீபத்தில் வெளிவந்து இருக்கும் ஒசரவெல்லி திரைப்படத்தின் டிஸ்கஷனின் பொழுது சொல்லி இருப்பார்கள்.. அதற்கு இப்படித்தான் எல்லாப்படத்திலும் சீன் வச்சிஇருக்கின்றார்கள் நாம வித்யாசமா வைப்போம் என்று ஜுனியர் என்டிஆர் இயக்குளர் சுரேந்திரரெட்டியிடம் சொல்லி இருக்கலாம்...
ஆனா சும்மா சொல்லக்கூடாது வித்யாசம்னாஅப்படி ஒரு வித்யாசம்.. கயிற்றுக்கு பதில் சலபன் டேப், இன்சூலேஷன் டேப்பை எல்லாம் போட்டு கையையும் காலையும் கட்டி வைத்து இருக்கின்றார்கள்.. சாரி ஒட்டி வைத்து இருக்கின்றார்கள்...
வில்லன் பிரகாஷ்ராஜ் எதிரில் துப்பாக்கியோடு ஆள் பலத்தோடும் நிற்கும் போது, சரி அர்னால்டு போல சேரை உடைச்சிகிட்டு ஜுனியர் என்டிஆர் எழுந்துருக்கபோறார்னு நினைச்சா?
அப்படியே சேரில் உட்கார்ந்தபடியே கை காலை சலபன் டேப்பில் ஒட்டியிருக்கும் போது அதை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், அப்படியே பறந்து டைவ் அடித்து, டைவ் அடித்து எதிரிகளை அடிக்கின்றார் பாருங்கள் அதுக்கே படத்துக்கு கொடுத்த காசு எல்லாம் சரியா போச்சு.... சரி அப்படியே கதையை சொல்லிடறேன்.. கேட்டுக்குங்க..
======================
ஒசரவெல்லி தெலுங்கு படத்தின் கதை என்ன???
பணத்துக்காக எதையும் செய்யும் (டோனி) ஜுனியர்என்டிஆர் காஷ்மீரில் (நிஹாரிக்கா) தமன்னாவை தீவிரவாதிகள் பினைக்கைதியாக பிடித்து இருக்கும் போது அதில் இருந்து தமன்னாவை காப்பாற்றுகின்றார். அதில் இருந்து தமன்னாவை காதலிக்கின்றார்... ஆனால் தமன்னா ஜுனியர்என்டிஆரை காதலிக்க மறுக்கின்றார்..காரணம் அவருக்கும் ஒரு அரசியல்வாதி பையனின் மேல் காதல்....
ஆனால் இன்டர்வெல் பிளாக்கில் தமன்னாவின் காதலன், அரசியல்வாதி, வில்லன் எல்லாரையும் ஜுனியர்என்டிஆர் போட்டுத் தள்ளிவிடுகின்றார்... அப்புறம் சார் போய் திரையில் படத்தை பாருங்க...
============
எனக்கு பிடித்த மகேஷ்பாபு நடித்த அதீதி படத்தை இயக்கியவர் சுரேந்திர ரெட்டி இயக்கியபடம் இது..
படத்தின் பெரிய பிளஸ் திரைக்கதை.. இன்டர்வெல் பிளாக்கில் எல்லா வில்லன்களையும் ஜுனியர்என்டிஆர் போட்டு தள்ளி விடுகின்றார்.. இண்டர்வெல்லுக்கு பிறகு என்ன செய்ய போகின்றார்கள் என்ற கேள்விக்கு, டன் டன்னாக காதில் பூ சுற்றி மீதக்கதையை சொல்லுகின்றார்கள்..
திரைக்கதையில் சின்னதாக லாஜிக் பார்த்து இருக்கின்றார்கள்..பில்டப் தவிர்த்து பார்த்தால் ஒரு கமர்சியல் படத்துக்கு தேவையான முலாம் பூசிய திரைக்கதை..
ஜுனியர்என்டிஆர் பூந்து விளையாடுவது மட்டும் அல்லாமல் கமெடியிலும் அசத்தி இருக்கின்றார்..அந்த வில்லன் கோஷ்ட்டி கடைசி வரை காமெடி டிராக்கில் பயணிப்பது அருமை..
படத்தை நான் தம்ன்னாவுக்காக போய் பார்த்தேன்.. தமன்னாவுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள ஒரு திரைப்படம்.. தமன்னா நன்றாகவும் நடித்து இருக்கின்றார்...தமன்னா ஒரு பேன்ட் சர்ட்டில் ஏர்போர்ட்டில் ரொம்பஸ்டைலாக நடந்து வரும் அந்த நடை எனக்கு பிடித்து இருந்தது.. அந்த காஸ்ட்யூமும்தான்..அந்த போட்டோ கீழே...
தமன்னா இடைவேளைக்கு பிறகு வரும் ஒரு பாடலில் தனது குழைவான இடுப்பையும், தாராளமான ஒரு பக்கத்தையும் பாடல் முழுவதும் காட்டி கிறங்கடிக்கின்றார்...
அதே போல ஒரு காட்டுவாசி பாடலில் லாஜிக்கை காலில் போட்டு மிதித்து விட்டு பேன்ட் சட்டையோடு ஜுனியர்என்டிஆர் ஆடுகின்றார்.. அதில் அவர் போட்டு இருக்கும் சட்டை இன்னும் என் கண்ணில் இருக்கின்றது.. ஆனால் தமன்னாவுக்கு காட்டுவாசி டிரஸ்.. அதில் பெல்லி டான்ஸ் ஆடவும் டிரை பண்ணி இருக்கின்றார்... பிளீஸ் கேமராவை பின்னாடி பக்கம் கொஞ்சம் வையுங்களேன் என்று ரிக்வெஸ்ட் செய்து டான்ஸ் மாஸ்டரிடம் கேட்டு இருக்கலாம்.
ஜுனியர்என்டிஆர் பாடலில் ஒரு ஸ்டெப் போடுகின்றார்.. அதனை எந்த பலசாலியாளும் செய்யவே முடியாது.. இருந்தாலும் ஜுனியர்என்டிஆர் செய்கின்றார். ஆனால் அவருக்கு ரோப் துணைபுரிவது பின்னால் சட்டையை தூக்கி,ரோப் உதவிசெய்வதை காட்டிக்கொடுத்து விடுகின்றது...
டிஎஸ்பி இசையில் மூன்று பாடல்களை ரசித்து கேட்கலாம்.. ஜுனியர்என்டிஆர் எல்லா பாடலிலும் காலை புழுதி கிளப்பி எத்தி எத்தி ஆடுவது போல ஒரு ஸ்டெப் படம் முழுவதும் போடுகின்றார்...
=======================
படத்தின் டிரைலர்..
================
படக்குழுவினர் விபரம்.
Cast : Jr NTR, Tamana, Prakash Raj, Tanikella Barani,Advik Mahajan,Ali, Jayaprakash Reddy, MS Narayana
Director : Surendar Reddy
Producer : BVSN Prasad
Story : Vakantham Vamsi
Music : Devi Sri Prasad
Photography : Rasool Ellora
Art : Ravindar
Editing : Kotagiri Venkateswarao
Lyrics writers : Chandrabose,Ananth Sriram,Ramjogaia Sastry
Co-Director : Satyam Babu, Suresh Kota
Production Controller : Surapanenni Kishore
Director : Surendar Reddy
Producer : BVSN Prasad
Story : Vakantham Vamsi
Music : Devi Sri Prasad
Photography : Rasool Ellora
Art : Ravindar
Editing : Kotagiri Venkateswarao
Lyrics writers : Chandrabose,Ananth Sriram,Ramjogaia Sastry
Co-Director : Satyam Babu, Suresh Kota
Production Controller : Surapanenni Kishore
========================
தியேட்டர் டிஸ்கி
படத்தை சென்னை கேசினோவில் பார்த்தேன்... நல்ல கூட்டம்.. தியேட்டரில் சில்வர் ஸ்கிரின் போட்டு புரொஜக்ஷனை டிஜிட்டல் ஆக்கிவிட்டார்கள்..
எசி போட்டு 50ரூபாய்க்கு, பால்கனியில் படம் காட்டுகின்றார்கள்.
விசில் சத்தம் கதை பிளந்தது...
===========
பைனல்கிக்.
லாஜிக்கை இந்த படத்துக்கு நான் சத்தியமாக பார்க்க மாட்டேன் என்று பாடிகாட் முனிஸ்வரன்மேல் சத்தியட்ம செய்து விட்டு படம் பார்த்தால் செமை ஜாலியாக இந்த படத்தை ரசிக்கலாம்.. அக்மார்க் டைம் பாஸ் கமர்சியல் படம்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
vimarsanathin adipadaye logic thaan.....athu illamal paarthaal ella thirapadangalum super thaan...
ReplyDeleteஎங்க ஊர் பக்கமெல்லாம் தெலுங்கு படம் வராது. டப்பிங்-ல வந்தா பார்க்கலாம். இல்லைன்னா இருக்கவே இருக்கு TORRENT. தமன்னாவை பார்த்து நாளாச்சு... பார்த்துர வேண்டியதுதான் என்று ஜொள்ளிக்கொள்ள விழைகிறேன்
ReplyDeleteதமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் இல்லை
ReplyDeleteஇதில் தெலுங்கு படம் வேற
நல்ல விமர்சனம்.
ReplyDeletejunior ntr என்ற பெயருக்கு பதில் விஜய் என்று ஒரு பெயர் போட்டு அடுத்த வருடம் ஒரு பதிவு இட நேரிடும் என்று நினைக்கின்றேன்,
ReplyDeleteதெலுங்கு மசாலா!
ReplyDeleteதமிழ் பதிவர்களிலேயே மிக சிறந்த பதிவர் தாங்கள்தான்.
ReplyDeleteஅதிலும் குறிப்பாக உலக சினிமாவை தமிழில் நுணுக்கமாக விமர்சிபவ்ரும் தாங்களே.
எனவே ஒசரவல்லி,உட்க்காரவந்த கள்ளி என்று சினிமா குப்பைகளை விமர்சிப்பதை இயன்றவரை தவிருங்கள்.
நான் உங்கள் தளத்தின் தொடர் வாசகன் .இது போன்ற குப்பைகளால் உங்கள் தளம் குப்பைதொட்டி ஆகிவிடக்கூடாது.