தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....
பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...???
ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட முடிச்சா அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகத்தில், கல்வியில், கட்டகலையில் சிறந்து விளங்கி இருக்க முடியும்??
ஆயிரம் ஆண்டு கோவில் ஒரு சான்று அவ்வளவே...
250 வருசத்துக்கு முன்னாடி இருக்கும் பொருளை கூட ஒரு அமெரிக்கன் கடவுளை பார்ப்பது போல பீல் பண்ணி பார்ப்பான்.ஆனா இங்க ஆயிரம் வருஷத்து கோவில் சுவத்துலேயே பான்பராக் போட்டு எச்சி துப்பி வைப்போம்.....காரணம் நம்ம கிட்ட இருக்கும் அலட்சியம்.. அப்படி அலட்சியம் வரக்காரணம் என்ன?? நாம் மிக மிக பழமையானவர்கள்..
பொதுவாகவே தமிழர்கள் பற்றிய செய்தியை இருட்டடிப்பு செய்வதற்க்கு என்றே உலகம் முழுவதும் பல குழுக்கள் இருக்கின்றது.. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் எட்டிக்காய் போல கசக்கும்...தமிழ் என்ற வார்த்தையை பிரயோகித்தால் நக்கல் விடுவார்கள்.. தமிழில் பேசினால் அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்...அதனால்தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் கிளர்ச்சியும் முக்கிய கிளர்ச்சியுமான வேலூர் சிப்பாய் கலகத்தை வரலாற்றில் இருந்தே தூக்கி தூர எறிந்தார்கள்..இந்திய அளவில் தமிழன் பெயர் பெற்றவிட்டால்..??
எப்போது எல்லாம் தமிழர்கள் ஒற்றுமையாக எந்த செயலை செய்தாலும் உறவாடிக்கெடுக்க அவர்கள் காய் நகர்த்துவார்கள்.. அதனை செய்து முடிக்க தமிழ் இனத்திலேயே எட்டப்பர்கள் நிறைய பேர் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.. உதாரணம் இலங்கை ...
இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்து பசி தீர்த்தார்கள்..ஒரு இனத்தை வேர் அறுக்க அவர்கள் பற்றிய பழம்தகவல்களையும் கலாச்சாரத்தையும் சொல்லும் நூல்களை அழித்தாலே போதும்... உதாரணத்துக்கு தஞ்சை பெரிய கோவிலே இல்லையென்றால் நம்மாளே நம்மளை பத்தி பெருமையா நினைச்சி இருக்கமாட்டான்..
கல் தோன்றுவதற்கு முன் பிறந்த மூத்த தமிழ் என்று பெருமையாக சொன்னால் எல்லாம் நாம் நம்பப்போவதில்லை.. ஏதோ அந்த தஞ்சை பெரிய கோவில் இருப்பதால் இப்ப இருக்கற பயபுள்ளைங்க எங்களுக்கு ஆயிரம் வருஷத்திய பாராம்பரியம் இருக்குன்னு பீத்திக்கிறோம்..
இப்படியாக தமிழ் இனத்தின் மீது திட்ட மிட்ட காய் நகர்த்தலின் காரணமாக ஆறாம் நூற்றாண்டில், இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால் எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார் என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்..
காரணம் மேலே சொன்னதுதான்.. காலம் காலமாய் நடந்து வரும் தமிழ் இனத்துக்கு எதிரான போர்...தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களை தட்டி வைக்கவில்லை என்றால் வளர்நது விடுவார்கள் என்பதுதான் பொறாமைக்கான அடிப்படை...
எம்ஜியார், சிவாஜி, ரஜினி , கமல் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் தமிழர்களுக்கு சீனா, ஜப்பான்,தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தமிழரின் பெருமையை சொல்லும்கதைதான்..ஏழாம் அறிவு.. அதை கமர்சியல் கலந்து மசாலா தூவி சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் முருகதாஸ்...
===============
ஏழாம் அறிவு படத்தின் கதை என்ன??
தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது பிள்ளை போதி தர்மர்.. சீனப்பயணி யுவான் சுவாங் போலவே தமிழ்நாட்டில் இருந்து மூன்று ஆண்டு கால பயணத்தின் முடிவில் சீனாவை சென்று அடைகின்றார்..முதலில் அம்மக்கள் அவரை வெறுத்தாலும் அங்கு மக்களுக்கு மருத்துவம் மற்றும் தற்காப்புகலையை கற்றுதருகின்றார்..இன்றுவரை அவரை மறக்காமல் இருக்கின்றார்கள்..அவரை பற்றி சென்னையில் சுபா (சுருதிஹாசன்) என்ற ஆராய்ச்சி மாணவி போதிதர்மன் பற்றி ஆராய்கின்றார்.. அவரின் பரம்பரை வாரிசுகள் இப்போதும் காஞ்சிபுரத்தில் வசித்துக்கொண்டு இருப்பதை கண்டு பிடிக்கின்றார்.. போதிதர்மரின் வாரிசு..அரவிந்தன் (சூர்யா) ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை செய்கின்றார்..அரவிந்தன் டிஎன்ஏ மற்றும் போதி தர்மர் டிஎன்ஏ இரண்டும் பெருமளவு ஒத்து போகின்றது.. இப்படி ஒரு உண்மை கண்டு பிடிக்கும் போதே.. சீன அரசு..டோங்லி என்ற கொலைகாரனை அனுப்பி சுபா மற்றும் அரவிந்தனை தீர்த்து கட்ட அனுப்புகின்றார்கள்.. அது ஏன் என்பதை திரையில் பாருங்கள்..
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இது போல ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டதுக்கு முதலில் இயக்குனர் முருகதாசுக்கு நன்றிகள்.
யார் சொன்னது உலகதரத்துக்கு இணையாக தமிழில் படம் செய்வது இல்லை என்று முதல் இருபது நிமிடங்கள்.. அவ்வளவு அற்புதமான காட்சிகள்... எனக்கு தெரிந்து இந்த படத்தில் வரும் அந்த முதல் 20 நிமிடத்தை மட்டும் இன்னும் விரிவாய் த லெஜன்ட் போதி தர்மர் என்று டைட்டில் வைத்து ஒரு முழுநீளப்படம் எடுத்து இருந்தால் அது உலகபடமாக உருவாகி இருக்கும்.. ஆனால் பைசா தேறி இருக்காது.. அதனால் 20 நிமிடம் மட்டும் தங்கள் ஆசை மற்றும் திறைமைக்கு படம் எடுத்து விட்டு அப்படியே கமர்சியலுக்கு தாவி இருக்கின்றார்கள்..
படம் முழுக்க சூர்யாவும் சுருதியும் வியாபித்து இருக்கின்றார்கள்.
சூர்யா போதி தர்மராகவே வாழ்ந்து இருக்கின்றார்...போதிதர்மர் கேரக்டருக்கு தன் உடலை வருத்தி அற்பணித்து இருக்கின்றார்..சுருதியோடு பேசும் காட்சிகளில் இயல்பாய் நடித்து இருக்கின்றார்.. ஆனால் நெருக்கமான காட்சிகளில் ஒரு சின்ன தயக்கம் சூர்யாவிடம் இருப்பது தெரிகின்றது...மவனே நாங்க கண்டுபிடிச்சிட்டோம் இல்லை..
சுருதிஹாசன் பளிச் என்று இருக்கின்றார்... மாசு மருவற்ற என் தேகம் என்று சொல்லிக்கொண்டே, கழுத்தை தடவிக்கொண்டு , கொடுத்த காசுக்கு மேல் கண் கிரங்கி பேசும் பாம்பே மாடல் போல இருக்கின்றார்...நல்ல உடலைமைப்போடு தமிழ் பேசும் ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கின்றார்.. நல்வரவு...
சில நேரத்தில் மெச்சூர்டாக தெரிகின்றார்.. சில காட்சிகளில் பிளஸ் டு மாணவி போல இருக்கின்றார்...உடைகளை பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.. முன் அந்தி சாங்கில் சுதந்திரமாய் சுருதியை நிறைய ஷுட் செய்து, பொறுப்பாய்.. சின்ன பயத்துடன் எடிட் செய்து இருப்பது பாடலை பார்க்கும் போது தெரிகின்றது...
போதிதர்மர் தமிழர் என்று ஒரு கோஷ்ட்டி... அவர் தமிழரே அல்ல என்று ஒரு கோஷ்ட்டி என ஒரு பெரிய விவாதம் இனி நடக்க வாய்ப்பு இருக்கின்றது..
படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள்..உதாரணத்துக்கு தசவதாரத்தில் வெள்ளைக்கார கமல் மொழி தெரியாத தமிழகத்தில் மொழி தெரிந்த மல்லிகா, எம்எஸ்பாஸ்கர் போன்றவர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளுவார்.. ஆனால் இந்த படத்தில் சைனாவில் இருந்து வரும் வில்லன் சென்னையில் எல்லா இடத்திலும் தனி ஒருவனாக பயணிக்கின்றார்...
முதல் இருபது நிமிடம்...ஒளிப்பதிவு, எடிட்டிங், சூர்யா ஆக்ஷன் சீக்குவென்ஸ் எல்லாம் உலகதரம்.ஆனால் சென்னையில் முதல் பாடல் காட்சியில், ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வைத்துக்கொண்டு பர பர வென அடுத்த ஷாட் ,அடுத்த ஷாட் என்று ஓடிக்கொண்டே இருப்பது காட்சிகளில் தெரிகின்றது...
யம்மா யம்மா சோகபாடலை ரயில்வே யார்டில் வைத்து வாம் டொனில் எடுத்து இருக்கும் அந்த பாடல் அழகு., அதே போல ஷிப்ட் போக்கஸ் கண், முகம் என்று முக்கிய இடங்களை மட்டும் போக்கஸ் செய்தது போல படமாக்கியது அருமை..
சிறு சேரியில் எடுத்த சண்டைகாட்சியும் சரி, காட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி சண்டை காட்சிகளையும் குறைத்து இருக்கலாம்..
படத்தின் முரணான விஷயம்... படம் முடியும் போது தமிழர்களுக்கு சமர்பணம் என்று டைட்டில் தமிழில் போட்டு விட்டு அடுத்து நடித்தவர்கள் பெயர் எல்லாம் ஆங்கிலத்தில் ஓடுவது செமை காமெடி...அந்த சமர்பணம் டைட்டில் கார்டை படத்தின் ஆரம்பத்திலேயே போட்டு தொலைத்து இருக்கலாம்..
===========
படத்தின் டிரைலர்..
==================
படக்குழுவினர் விபரம்..
Directed by A. R. Murugadoss
Produced by Udhayanidhi Stalin
Written by A. R. Murugadoss
Starring Suriya
Shruti Haasan
Produced by Udhayanidhi Stalin
Written by A. R. Murugadoss
Starring Suriya
Shruti Haasan
Johnny Tri Nguyen
Music by Harris Jayaraj
Cinematography Ravi K. Chandran
Editing by Anthony
Studio Red Giant Movies
Distributed by Red Giant Movies
Release date(s) 26 October 2011
Running time 168 minutes
Country India
Language Tamil
Budget INR84 crore (US$18.73 million
====================
தியேட்டர் டிஸ்கி..
ஸ்பெஷல் ஷோ சத்தியம் தியேட்டர் டிக்கெட்டை எனக்கு கொடுத்த நண்பர் முத்துகுமாருக்கு எனது நன்றிகள்.
தியேட்டரில் ஒரு கல் ஒரு கண்ணாடி டிரைலருக்கு செமை கிளாப்ஸ்..
தமிழ் மொழி பற்றி உணர்ச்சியாக பேசும் காட்சிகளில் முக்கியமாக பிரபாகரனை பற்றி பேசும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது..
==============
பைனைல்கிக்..
அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

யாழினிக்கும் யாழினியின் பெற்றோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய தீப ஒளி திரு நாளில் உங்கள் குடும்பத்தில் வந்துள்ள புதிய வரவு கொடுக்கும் சந்தோஷத்தை போலவே எங்கள் தேவியர் இல்லத்தின் வாழ்த்துக்களை இங்கு எழுதி வைப்பதில் மகிழ்ச்சி சேகர்.
ReplyDeleteதிரைப்பட விமர்சனங்கள் நான் எப்போதும் படிக்க விரும்பதில்லை. காரணம் அதை வெறும் வார்த்தைகளாகத் தான் எழுதி வைக்கின்றார்கள். ஆனால் உங்கள் விமர்சனம் பாராட்டுக்குரியது.
நிறைய பின்புல காரணங்களை அழகாகச் சொல்லி இருக்கீங்க. நிறைய ஆச்சரியங்களை தந்து கொண்டிருக்கும் முருகதாஸ் ( இன்னமும் பள்ளிக்கூட பையன் கணக்காகவே தோற்றம் இருப்பதன் காரணம் ரகசியம் தான் என்ன?) இன்னும் முருகதாஸ் நிறைய ஜெயிக்க வேண்டும்.
தமிழ் மொழி பற்றி உணர்ச்சியாக பேசும் காட்சிகளில் முக்கியமாக பிரபாகரனை பற்றி பேசும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது..
ReplyDelete----
நன்றிகள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteமுதலில் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteசுவாரசியமான விமர்சனம்! :-)
தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDelete///படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள்..உதாரணத்துக்கு தசவதாரத்தில் வெள்ளைக்கார கமல் மொழி தெரியாத தமிழகத்தில் மொழி தெரிந்த மல்லிகா, எம்எஸ்பாஸ்கர் போன்றவர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளுவார்.. ஆனால் இந்த படத்தில் சைனாவில் இருந்து வரும் வில்லன் சென்னையில் எல்லா இடத்திலும் தனி ஒருவனாக பயணிக்கின்றார்...///
ReplyDeleteஎக்ஸ் CIA வரும் ஹாலிவூட் படங்களில் ஒருபோதும் அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களை உபயோகிப்பதில்லை. அண்டர் கவர் "எலிமினடேர்ஸ்" செயல்படும் விதம் அதுவே. தசாவதாரம்தான் லாஜிக் ஓட்டையாக படுகிறது.
ஜாக்கி,
ReplyDeleteவிமர்சனம் இப்படியாகத்தான் இருக்கும் என நினைத்தேன், அப்படியே!
ஆளுக்கு ஒரு பார்வை இருக்கும் தானே, டிஎன் ஏ டிரான்ஸ்பெர் பண்ணா பழைய அறிவு திரும்ப வருமா? ஹி..ஹி. பி.டி கத்திரிக்காய் எப்படினு படிச்சுப்பாருங்க.
அப்புறம் பதிவுக்கு சம்பந்தமில்லாதது.
//இந்த கமென்ட் பாக்ஸ் என் பதிவுக்கு உங்கள் பதில் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளவே... அதில் எதை வெளியிடுவது, எதைவெளியிடக்கூடாது என்பது என் விருப்பமே...
எல்லாத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியாது...எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன்
உங்களை வெளிபடுத்திக்கொள்ள தைரியம் இருப்பவர்கள் மட்டும் இங்கே கருத்துக்களை இடவும் புரோப்பைலை மறைத்து விட்டு பொங்குபவர்களோடு நான் வாதம் செய்வதில்லை...//
ஹி..ஹி. இதே ஸ்டேட்மென்ட் நீங்க பதிவுப்போட ஆரம்பித்த காலத்திலும் சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும் அப்போ
இவ்வளவு தூரம் வந்த்உ படிச்சுட்டிங்க ஒரு கமெண்ட் போட்டா குறைந்தா போயிடுவிங்க கமெண்ட் போடுங்க..போடுங்கனு கேட்டதாக நியாபகம். ஹி..ஹி... மாற்றம் ஒன்றே மாறாதது என்பது சாகாவர்ம் பெற்றதுனு தெரியுது.
விமர்சனம் நன்று...
ReplyDeleteஎப்படியும் ஒரு முறை பார்த்துவிடுவோம் தமிழனாய்
சூப்பரா ஒரு பால்பாயசத்த தீயவிட்டுட்டாங்களேன்னுதான் என்னோட ஆதங்கமும். போதி தர்மரைப்பத்தி படம் எடுக்க ஜாக்கிசான்தான் சரியான ஆளோ என்னமோ? # ஆதங்கம்!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த படத்தின் திரைகதையை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம்...படம் முதலில் டாகுமெண்டரி படம் போல் ஆரம்பிப்பது ஒரு மைனஸ்...நிறைய லாஜிக் ஓட்டைகள்.. படத்தின் சிறப்பு போதிதர்மர் பற்றி தமிழர்களுக்கு அறிமுகம் செய்தது !!!! :) சூர்யா பிரபாகரனை பற்றி பேசுவது சாத்தான் வேதம் கூறுவது போல் இருந்தது.. மொத்தத்தில் திரைகதையை இன்னும் சிறப்பாக,விறுவிறுப்பாக செய்து இருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லா இருநது இருக்கும்... வேலாயுதம் நன்றாக இருந்தால் இந்த படம் ஓடாது.. கிராபிக்ஸ்,தமிழர் பெருமை மட்டும் படம் வெற்றி பெற உதவாது
ReplyDeleteஜாக்கி என்ற (தன) சேகர் அவர்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் தனமும் புகழும் மென்மேலும் கிடைத்திட வாழ்த்துக்கள்
ReplyDeleteவிமர்சனம் சூப்பர், கலக்குறிங்க பாஸ்,,,
ReplyDeleteடிபிகல் ஜாக்கி விமர்சனம்!
ReplyDeleteகலக்கல்!
நண்பர்கள்,குடும்பத்தார் யாவருக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!
happy diwali for u and ur family sir.....
ReplyDelete*.* தீபாவளி வாழ்த்துக்கள் *.*
ReplyDeleteஇன்று மாலை சென்னை FAME National திரையரங்கில் படம் பார்க்கப்போகிறேன். படம் பார்த்துவிட்டு என் கருத்தை கூறுகிறேன். தங்களின் விமர்சனம் அருமை.
முதல் விமர்சனம் தீபாவளி இனிப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி திபத்திருநாள் வாழ்த்துக்கள்
Wish you and family a Happy Deepavali.
ReplyDeleteபோதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ஜாக்கி அண்ணா...
ReplyDeleteஉங்கள் விமர்சனமும் கேபிள் அவர்கள் விமர்சனமும் இருவேறு பாதையில் பயணிக்கிறது.
உங்களுக்கும் அண்ணி, மற்றும் சின்னக்குட்டிக்கும் (இது முதல் வருட தீபாவளிதானே) தீபாவளி வாழ்த்துக்கள்.
சே.குமார்
மனசு
happy deepavali.. boss
ReplyDeleteவில்லன் ஜானியப் பற்றி ஒன்றுமே சொல்லல...
ReplyDeleteஅவர்தான் ஸ்பைடர்மான் கேரக்டர பண்ணுனவராம்...
அதாவது ஹீரோவுக்கு டூப்...
டைரெக்டர் முருகதாஸ் விஜய் டிவில சொன்னாரு...
நல்ல விமர்சனம்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ஜாக்கி...!!
Happy Deepavali Jackie sir.
ReplyDelete/////நல்ல உடலைமைப்போடு தமிழ் பேசும் ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கின்றார்.. ///
ReplyDeleteநல்ல உடலைமைப்பு உண்மை தான்.
ஆனால் அவர் டமில் பேசுகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.
ஸ்ருதிக்கு இது சிறந்த அறிமுக படம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் சூர்யா, முருகதாஸ் ?
Saran R
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழர் பெருமையை உணராத பலருக்கு சிறிதாவது அறிவு ஒளியேற்ற முயற்சித்த 7ஆம் அறிவு திரைப்படக் குழுவினருக்கு பாராட்டுகள். அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்!
ReplyDeleteபுது பதிவரின் தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDeleteரொம்ப நன்றி ஜாக்கி! ஏழாம் அறிவு பத்தி நிறைய டிவியிலும், நெட்டிலும் பார்த்து இருந்தாலும் உன் விமர்சனத்தை இவ்வளவு சூடா படிக்க முடிஞ்சதும் தான் தீபாவளியே நிறைவாயிருக்கு. திரும்பவும் தீபாவளி வாழ்த்துக்கள் ஜாக்கி – குறிப்பா முதல் தீபாவளி கொண்டாடும் யாழினிக்கு!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹி.ஹி..
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்,ஜாக்கி.
ReplyDeleteThe advantage of entering feedback after a while is that I can copy / paste words from the feedback of others.
ReplyDeleteSo thanks to my previous comments. :-)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணே உங்க விமர்சனம் பாசிடிவ் இனி தைரியமா போய் படம் பார்க்கலாம்....
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு. இன்னும் ஒரு 10 நாளைக்கு திரை அரங்கு பக்கம் போகமுடியாது.... கண்டிப்பா பாக்க வேண்டிய படம்.... தமிழனோட வாழ்க்கைய தமிழனுக்காக தமிழன் எடுத்த உலகத்தமிழ் படமாச்சே.....
ReplyDelete//கமர்ஷியல்விஷயங்கயோடு இந்த திரைப்படம் பேசுகின்றது... ஒரு தமிழனாய் இந்த படத்தை பார்க்கும் போது சில காட்சிகளில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க முடியவில்லை..சில மைனஸ்கள் இருந்தாலும் இந்த படம் அவசியம் பார்க்கவேண்டிய படம்..//
ReplyDeleteகண்டிப்பா ஜாக்கி.... ஒவ்வரு தமிழனும் திரையரங்கு போய் பார்க்க வேண்டிய படம்...
//இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால் எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார் என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்..//
ReplyDeleteசிந்தனைக்குரிய வரிகள்
நன்றி!
தமிழ்,தமிழர் பெருமை பேசி இருக்கு என்பற்க்காகவும் வரலாற்றில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட ஒரு தமிழனை செல்லுலாயிடுவில் பதிவு செய்ததற்க்காக தமிழன் என்ற வகையில் மார்தட்டிகொள்ளலாமே தவிர.
ReplyDelete7ஆம் அறிவு சிறந்த படம் என்று கொண்டாட முடியாது என்பதுதான் உண்மை.
தனது திரைகதையை நம்பாமல் போதிதர்மனை மட்டும் நம்பி படமெடுத்திருக்கிறார் முருகா.
போதிதர்மன் மட்டும் தமிழனாக இல்லாமலிருந்தால் 7ஆம் அறிவு,முருகதாசின் கதி???????
Read your article - an alternate thought of why we Tamils are not coming up is we still think about the past and wanted someone to tell our greatness. We are just self -sympathisers. Our downfall is by us and not by any other outside forces.We need to come out of this but unfortuntately we do not have leaders who can do that ...we have been continously back stabbed by many people who call themselves the "leaders of Tamil". Our achivement and greatness lies within us ...even if it is another 5000 years we would still remain distinct comapred to other sects and race because as you said we are the front runners of covilization. When there is a riot everywhere around the country Tamilnadu would still remain calm because we are civilized...we are the only state where we gave a standing ovation when Srilanka won the cricket match. 7am arivu wants to just provoke people ..create sympathy of being a tamil ..nothing less than that. This could have been one of the best movie in the decade and they missed it up by losing focus on some pro=tamil dialogues. ( sorry I am stil learning to type in Tamil ).
ReplyDelete//இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது// - any proof pls..
ReplyDeleteRoomba Nalla Story & Nalla Screenplay.Thuupaaki Vetri Pera Valthukal
ReplyDelete