வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்

தினமும்  போஸ்ட் போடற...  எப்படி உன்னால் முடியுது--?

நேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை  செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...


இப்போது குழந்தை இருக்கும் போதும் நேரம் ஒதுக்கி எழுதுகின்றேன். விமர்சனங்களை பற்றி கவலைபடாமல் எழுதுவேன்...எவன் கொடுக்கற ஐஎஸ்ஓ 9001 சர்ட்டிபிகேட்டுக்கும் நான் எழுதுவதில்லை..என் மனசாட்சிக்கு எது பிடித்து இருக்கின்றதோ அதை நான் எழுதுகின்றேன்.டெய்லி போஸ்ட்  போடுற.. என்னதான் கிடைக்குது?? நாம் சொல்லற விஷயம் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் படிக்கும் மக்களிடம் இந்த வலைமூலமாக சென்று சேர்கின்றது அல்லவா?? அது எவ்வளவு பெரிய விஷயம்..

அது மட்டும் அல்ல  நல்ல மனிதர்கள் கிடைக்கின்றார்கள்.. நல்ல நட்புகள் கிடைக்கின்றன.. சின்ன வயதில் இருந்து பழகியவர்கள் கூட அப்படி நட்பாய் இருக்கமாட்டார்கள்.. என்னோடு  நட்பு பாரட்ட அவர்கள் விரும்புகின்றார்கள்..மிகப்பெரிய நட்பு வட்டத்தை பெற்றுத்தந்ததும் அதை கொடுத்ததும் இந்த பதிவுலகம்தான்.. அதுக்காக எழுதுகின்றேன்..


எங்களுக்கு குழந்தை பிறந்த போது வந்த வாழ்த்து செய்திகள் பார்த்த போது.. எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவனாய் என்னை வைத்து பார்க்கின்றார்கள், நினைக்கின்றார்கள் என்பதை  அறிந்து கொண்டேன்...


என் சொந்தங்களை விட யாழினி பிறந்த போது  குடும்பத்துடன் வந்து யாழினியை பார்த்து விட்டு  வாழ்த்தி சென்றவர்கள்.. நிறைய பேர்... யாரும் ரத்த சம்பந்த உறவுகள் அல்ல.. தொடர்ந்து எனது  வலைதளத்தை வாசிப்பவர்கள் மட்டுமே...


கோர்வையா இல்லாமல் அவசரத்தில் எழுத்து பிழையோடு பல போஸ்ட்டுகள் திருத்தாமல் போட்டு இருக்கின்றேன்.. அதையெல்லாம் சகித்துப்படித்து ஒரு ஞாயிறு அன்று குடும்பத்துடன் கிளம்பி எனக்காய் நேரம் ஒதுக்கி என் பிளாக்கை வாசிப்பவர்கள் மட்டும் கிளம்பி வருவது எவ்வளவு பெரிய விஷயம்..?-??கும்பகோணத்தில் நடக்க இருந்த  மனைவியின் உறவினர் திருமணத்துக்கு போயே ஆக வேண்டும்..காரணம் அவர் எங்கள் காதல் திருமணத்துக்கு வந்து கடைசிவரை இருந்து நடத்திக்கொடுத்தவர்... மூன்று மாத குழந்தையை வைத்துக்கொண்டு திருமணத்துக்கு போவதா வேண்டமா? என்று குழம்பியே எந்த முடிவும் எடுக்காமல் டிக்கெட் எதுவும் புக் செய்யவில்லை.. போலாம் என்று முடிவு செய்த போது..பேருந்தில் கூட சீட் இல்லை...பஸ்சில் டிக்கெட் ஏதாவது கிடைத்தால்  சொல்லுங்கள் என்று கூகுள் பஸ்சில் டிக்கெட் வேண்டும் என்ற செய்தியை பகிர்ந்தேன்..

அகநாழிகை வாசு... ஜாக்கி என் கிட்ட கார் இருக்கு.. வேண்டும் என்றால் எடுத்துகிட்டு போங்க.. என்று கார் சாவியை கையில் கொடுத்தார்...சொந்த அண்ணன் தம்பிங்க கூட கார்  சாவியை சட்டுன்னு கையில் கொடுக்க  யோசிப்பாங்க...கார் பைக் எல்லாம் அவ்வளவு எளிதில் யாரும் யாருக்கும் கொடுத்து விட மாட்டார்கள்..எனக்கு சட்டுன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சி...ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்... வாசுவுக்கும் எனக்குமான பழக்கம் நான்கு ஐந்து சந்திப்புக்கள் இருந்தாலே அது பெரிய விஷயம்... அன்றைய கும்பகோண பயணத்தை மிகச்சிறப்பாக ஆக்கிக்கொடுத்தது.. இந்த வலையுலக  நட்புதான்.. அதே பயணத்தில் பதிவர் மயில்ராவணனும் குடும்பத்துடன் மாயவரம் வந்தார்...மிக்க நன்றி வாசு...நான் மட்டும் தனியாக கும்பகோணத்தில் இருந்து திருநள்ளாறு வாசு காரில் சென்றேன்... அந்த சாலைபயணமும்.. காரில் இருந்த வாசுவின் இளையராஜா சாங் கலெக்ஷனும் என் வாழ்வில் மறக்கமுடியாத பயணத்தை கொடுத்தது  என்றால் அது மிகையில்லை..

==========

ஒரு வாரத்துக்கு முன் பெங்களுரில் நான் இருந்த போது, ஜாக்கி நான் யுவா பேசறேன்.. நான் யாழினியை வந்து பார்க்கனும்னு நினைச்ச போது எல்லாம் வெளிநாட்டுல சுத்திகிட்டடு இருந்தேன்.. இன்னைக்கு எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வர முடியுமா? என்ன புரட்டாசி  சனி என்பதால் நான்வெஜ் இருக்காது வருகின்றீர்களா ? என்று அழைத்தார்.. சரி என்றேன்.. நானே வருகின்றேன் அட்ரஸ் கொடுங்கள் என்ற போது வீட்ல ரெடியா இருங்க.. என் கார்ல வந்து அழைச்சிகிட்டு போறேன் எனறார்.. 

அவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் அவரது மகனும் யாழினியை கொஞ்சி தீர்த்து விட்டார்கள். யுவாவின் மனைவியும் என் மனைவியும் நெடுநாள் பழகிய பள்ளித்தோழிகள் போல  பழகியதும்.. நாங்கள் அவர் பிள்ளைகளுக்கு வாங்கி சென்ற பரிசு பொருட்களை பார்த்து சந்தோஷப்பட்டதும்.. அவர்கள் யாழினிக்கு கொடுத்த பரிசு பொருட்களும் மறக்கமுடியாதவை.. முதன் முதலில் யாழினிக்கு தீபாவளிக்கு பட்டு சட்டை பட்டுபாவடை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்...அவர்கள் வாங்கி கொடுத்து விட்டார்கள்...

==============

செமையான பணமுடை..இரண்டு பேருக்கும் வேலை இல்லை...செம டைட்டில் இருந்தேன்.. மணிஜி வர்ணம் படம் பார்க்கும் போது ஒரு ஆட் ஷுட் பண்ணறேன் பிரியா இருந்தா போட்டோ எடுத்து கொடு என்றார்.. போனேன்.. வேலை முடிந்தது... கையில் 3000ரூபாய் பணத்தை திணித்தார்...நெகிழ்ந்து போனேன்..தீபாவளி நேரத்தில் என்னை பொருத்தவரை அது பெரிய விஷயம் .. நன்றி மணிஜி... அதே போல நண்பர் நித்யா அவர் மனைவி எங்களுக்காக காலத்தில் செய்த உதவி பெரிய விஷயம்...நன்றி நித்யா மிசஸ் நித்யா..

===============

ஜாக்கி திருச்சியில் இருந்து சீனு பேசறேன்.. போன முறை நீங்க எடுத்த  சர்விஸ் அப்பார்ட்மென்ட் போட்டோஸ் எங்க கிளைன்டுக்கு ரொம்பவே பிடிச்சி போச்சு.. புதுசா இரண்டு அப்பார்ட்மென்ட் சென்னையில் ஓப்பன் பண்ணி இருக்காங்க.. நீங்க போய் கொஞ்சம் போட்டோ எடுத்து தர முடியுமா? என்று அடுத்து அடுத்து வேலைகள் கொடுத்து என்னை வாழ வைப்பது இந்த பதிவுலகம்தான்..============எந்திரன் படம் டிக்கெட் யாரிடமாவது இருக்குமா? என்று சொன்ன ஒரு மணி  நேரத்தில் என்னிடம் மூன்று டிக்கெட் இருக்கின்றது என்று வாசக நண்பர் குறும்பழகன் சொன்னார்...மூன்று டிக்கெட்டுக்கும் காசு கொடுத்த போது, உங்க டிக்கெட்டுக்கு பைசா வேண்டாம் மத்த  ரெண்டு டிக்கெட்டுக்கு மட்டும் பைசா கொடுத்தா போதும் என்றார்.. அப்படி ஆரம்பித்த நட்பு அது...இரண்டு நாட்களுக்கு முன் நான் சென்னைக்கு வந்து விட்டேன் என்பதை அறிந்து குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார்கள்..குழந்தைக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்து கொடுத்தார்கள்...


ஜாக்கி நான் ஊருக்கு போறேன்.. தீபாவளி கழிச்சிதான் வருவேன் வீட்டுல இண்டிகா கார் இருக்கு.. யாழினியை வெளியே அழைச்சிகிட்டு போக அது உதவும்.. அதனால வந்து காரை எடுத்துகிட்டு போங்க என்றார்..நேற்று போய் காரை எடுத்து வந்தேன்..சென்னையில் என் பைக்கை என் அப்பாட்மென்ட்டில் இருப்பவர்கள்.. தங்கள் பைக் பஞ்சர் ஆன போது எடுத்து ஓட்டி இருக்கின்றார்கள். என் மச்சான் சென்னையில் இருக்கும் போது  எடுத்து ஓட்டி இருக்கின்றான்,.... வேறு யாரும் எடுத்து ஓட்டியதில்லை... அவ்வளவுதான் என் நண்பர் வட்டமே....ஆனால் கார்  கொடுப்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம்..

=========================

மனைவி வேலை தேடிக்கொண்டு இருக்கும் விஷயத்தில் பலர் அவரவர் தகுதிக்கு உதவிகளை செய்தார்கள்..  நண்பர் பெங்களுர் ராம்குமார்.. அவரும் தொடர்ந்து டிரை செய்தார்...

Thank you Jackie. Nice to see your immediate response. Since i am little occupied with my personal and official things, i cld not help much on your wife's job.

last week, i had a chat with my contact in the HR team. Since the job is like a rare skill, the people once get in to Honeywell will not move out often. So he said, he is holding your wife's CV. When the next opening comes, he will surely consider. I will track and let you know if anything comes positive..

Hope you, Yalini and wife are doing good and great..

Regarding missing bangalore, i dont think so.. other than the climate, i does like anything there.. off late i started disliking bangalore heavily which is also a force behind my decision to move out..!!!

Any time you plan to visit madurai, do ping me we can meet. All the very best and thank you for your wishes..!!!

நன்றி ராம்...உங்கள் முயற்சிக்கு.....கண்டிப்பாக மதுரை வந்தால் சந்திக்கின்றேன்.

====


ஹலோ ஜாக்கியா??


ஆமாம் சார் சொல்லுங்க..


என் பெயர் பழனிவேல்.. ஊர் பாண்டிச்சேரி.. நான் கிருஸ்த்துவ மத புத்தகங்கள் அச்சடித்து விற்பனை செய்பவன்..உங்க பிளாக் ரெகுலரா வாசிப்பேன்..


ரொம்ப நன்றிங்க பழனிவேல்...


உங்க மனைவி வேலை தேடிக்கொண்டு இருப்பதா பிளாக்குல எழுதி இருந்திங்க... சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் இருக்கும் செயின்ட் கோபின்ல டீம் லீடர் வேகன்சி இருக்கு.. என் மகள் அந்த இண்டர்வியூவுக்கு போக வேண்டியது.. அவளுக்கு உடம்பு சரியில்லை...அதனால அவ போகலை.. சரி உங்க மனைவிக்கு செட் ஆகுதா என்று பாருங்கள்...என்று தொடர்பு கொள்ளும் நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள  சொன்னார்..இண்டர்வியூவை எனது  மனைவி அட்டன் செய்தார்..  வேலை கிடைத்து விட்டது...மூன்று நாட்களாக போய் கொண்டு இருக்கின்றார்...


யார் சொல்லுவாங்க? இங்க வேலைஇருக்கு.. சகோதரியை போய் பார்க்க சொல்லுங்கள் என்று??


அவரின் குரல் சின்ன பையனின் குரல் போல இருந்தது ...தகவலுக்கு மிக்க நன்றி பழனி வேல் சார்...உங்களின் வயது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டேன்...


அறுபது வயதை கடந்தவன் நான் என்றார்.... 

மிக்க நன்றி
ஐயா...உங்கள் உதவிக்கு.....


பழனிவேல்சார்.. இந்த ஆறு மாதத்தில் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டோம்.. இப்போது நம்பிக்கை வந்து இருக்கின்றது...நன்றி ஐயா..


குழந்தையை யார் பார்த்துக்கொள்ளுகின்றார்கள்??


சாட்சாத் நானேதான்...மகளிர் மட்டும் படத்துல மொதக் காட்சி ஊர்வசி அவசரம் அவசரமா கணவனை கிளப்புவாங்க.... ஆனா வாசலுக்கு போய் ஊர்வசிகிட்ட பேகை கொடுத்து ,அவங்களை வேலைக்கு அனுப்பி  விட்டு வீட்டு வாசலில் நிற்ப்பார் ஒருத்தர்.. அவர் வேறுயாரும் இல்லை எனது குருநாதர் ஒளிப்பதிவாளர் எம்எஸ்பிரபு.. 

அவரை போல நிஜத்தில் நான் இருக்கின்றேன்... என் குழந்தையை என்னை விட சிறப்பாக யார் பார்த்துகொள்ள முடியும்...???


அதே போல திருமணநாளுக்கு வாழ்த்து சொல்லிய அத்தனை உள்ளங்களுக்கும்  என்  நன்றிகள்.. அந்த பதிவுக்கு வந்த பின்னுட்டங்கள் மற்றும் எனது போனுக்கு வந்த அழைப்புகள்,குறுஞ்செய்திகள்..என்னை திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.. நன்றி நண்பர்களே.

ஜாக்கி இதையெல்லாம் எழுதுனுமா? என்று சம்பந்தபட்டவர்கள் செல்லமாக கோபிப்பார்கள்.. எதுக்கு இதெல்லாம் என்பார்கள்..சிலர் இதையும் வழக்கம் போல நக்கல் விடுவார்கள்..

நான் இன்னும் எழுதுவேன்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

38 comments:

 1. நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி

  ReplyDelete
 2. கிடைக்கும் எல்லா உறவுகளிலே நட்பு தான் மிகவும் பெரியது என்பார்கள். அதுவும் நல்ல நட்பு கிடைப்பதென்பது கொடுப்பினை என்றுதான் சொல்லவேண்டும். வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 3. //ஜாக்கி இதையெல்லாம் எழுதுனுமா? என்று சம்பந்தபட்டவர்கள் செல்லமாக கோபிப்பார்கள்.. எதுக்கு இதெல்லாம் என்பார்கள்..சிலர் இதையும் வழக்கம் போல நக்கல் விடுவார்கள்..

  நான் 3rd category .என்னை பொறுத்த வரை நீங்க அந்துமணி மாதிரி...... நீங்க எழுதுற எல்லாமே படிச்சிட்டு intresting ங்க்னு சொல்ல முடியாது , படிக்காம மிஸ் பண்ணவும் முடியாது. Folloewing for 2 years

  ReplyDelete
 4. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது ஜாக்கி.

  ReplyDelete
 5. நன்றி மறப்பது நன்றன்று , வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 6. ஜாக்கி,

  நெகிழ்வாக உணரும் தருணங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 7. யார்ற இந்த ஆளு!!
  பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
  ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
  (மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
  ப்ளாக் வந்தான் இந்த யானைக்குட்டி .
  டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
  உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
  உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
  உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
  வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

  ReplyDelete
 8. யார்ற இந்த ஆளு!!
  பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
  ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
  (மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
  ப்ளாக் வந்தான் இந்த யானைக்குட்டி .
  டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
  உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
  உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
  உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
  வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

  ReplyDelete
 9. யாருப்பா அது... பதிவு எழுதுவதில் என்ன கிடைக்கும் என்று சொன்னது... இத்தகைய நட்பு எங்கு கிடைக்கும்... வாழ்க பதிவுலகம்... வாழ்க கூகுள்.... படிக்கும்போதே கண் கலங்கியது நண்பா.... காரணம் வேற தேவையா....

  ReplyDelete
 10. எழுதுங்கண்ணா... இதுபோல் மனதில் இருப்பதை வெள்ளந்தியாய் எழுதி, அதே போல் இருக்கவும் முயற்சிக்கிறீர்கள்.

  பிரபாகர்...

  ReplyDelete
 11. பல சமயங்களில் உறவுகளை விட நட்புகள் ஓடிவந்து கை கொடுக்கும். அதை அனுபவித்து உணர்ந்தவர் என்ற முறையில் நெகிழ்வாகச் சொல்லி இருக்கிறீர்கள். பதிவுலகில் புதியவர்களுக்கு மிகவும் உந்துதலாக இருக்கும் உங்கள் பதிவு. மனதைத் தொட்டது நண்பா!

  ReplyDelete
 12. நட்பினை உயர்வாக போற்றும் பதிவு. நான் நட்பு எனும் வட்டத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறேன். இது போன்ற பதிவுகள் சில நேரங்களில் மனதை உறுத்தும். ஆனால் காலம் செலுத்தும் வேகத்தில் பல விசயங்கள் அடிபட்டு போகின்றன. வாழ்த்துகள் சேகர்.

  ReplyDelete
 13. Good to hear that one of your issues is solved by a fellow reader. The entire credit goes to your blogging skills ONLY.

  Please continue your blogging. We are here to follow.

  May all the nicest blessings shower on your family.

  ReplyDelete
 14. ஜாக்கியின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவருக்கு நண்பர்களாவது இயல்பாகவே அமைந்து விடும்! வாழ்க!! :-)

  ReplyDelete
 15. உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டுவர முடிகிறது அல்லவா, நீங்கள்தான் சிறந்த எழுத்தாளர்.

  வாசு, மணிஜி இவர்களை அறிவேன்: அப்படித்தான். உங்களுக்குக் கிட்டுகிற எல்லா நணபர்களும் அப்படியே அமைவதும் பாக்கியம்தான். எழுத்துலகில் இப்படி என்று எண்ணிப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.

  வாழ்க படைப்பாளிகள்! வாசகர்கள்!

  ReplyDelete
 16. ஜாக்கி...உங்க ப்ளாகின் வெற்றியே....எதில்...கூறுங்கள்....."தமிழ்" ல் எழதுகிறீர்கள்...மனதில் பட்டதை...பளிச் என்று கூறுகிறீர்கள்....மொத்தத்தில்...கடலூரில் இருந்து...."ஒரு மாடர்ன் சுஜாதா"

  ReplyDelete
 17. வாழ்தல் இனிது என்பதை சொல்லும் தருணங்கள் மிக நெகிழ்வானவை

  ReplyDelete
 18. மிகவும் நெகுழ்சியான பதிவு ...

  எனது gmail லில் வந்த ஏதோ ஒரு email லிருந்துதான் உங்களளோட ப்ளாக் லிங்க் எடுத்தேன்...

  உங்களடுய பதிவில் மறக்கமுடியாத பதிவு எது என்று யோசித்து பார்த்தேன்....

  எதை சொல்வது என்று தெரியவில்லை .. எதை விடுவது என்று தெரியவில்லை...

  அனைத்துமே கலக்கல் பதிவுகள்தான்...

  ஒன்று மட்டும் உண்மை...

  என்னதான் தமிழ் எனது தாய்மொழி என்றாலும்..
  HINDU, TOI, Yahoo News, Economics என்று ஓடி ஓடி படித்து கொண்டு இருந்த நான்... உங்கள் பதிவுகள் முலம் வழக்கமாக தமிழ் படிக்க ... எழுத .... ஒரு வாய்பு

  நன்றி ... நன்றி ...

  //சிலர் இதையும் வழக்கம் போல நக்கல் விடுவார்கள்.
  அவனுக எவோளோ பெரிய அப்பாடகர் இருந்தாலும்... இந்த பதிவை படிக்கும்பொது... கொஞ்சமாவது யோசிப்பான் ..(நாம கொஞ்சம் ஓவர்தான் நக்கல் அடிசிடோமோ!!!)

  ReplyDelete
 19. thannambikai tharum pathivu....nalla iruku brother..

  ReplyDelete
 20. நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்.

  வாழ்த்துகள் ஜாக்கி!!!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் சகோதரம்...

  ReplyDelete
 22. indeed it was awesome jackie.......so many times i thought of calling u.. but i dont think i deserve that..my friend told me about ur blog and from that moment i never missed a single blog of urs....kudos keep up ur good work..convey my regards to family and especiaaly YALINI too....

  ReplyDelete
 23. உங்கள் பதிவுகளை நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். எப்படி தினசரி பதிவு போட முடிகிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் பின்னூட்டம் இட்டதில்லை. சோம்பேறித்தனம்தான் காரணம். இந்த முறை உங்கள் பதிவு என்னை தூண்டி விட்டது. பக்கம் பக்கமாக நீங்கள் எழுதும் போது சில வரிகளுக்காக நான் நேரம் ஒதுக்கக் கூடாதா.

  எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் நட்பு நம்மை முழுமையாக புரிந்து கொண்டவர்களுடையது. எனவே இங்கே உண்மையான அக்கறையும் இருக்கும், நிலைத்தும் இருக்கும்.

  அதுவும் நம்ம ஊர்காரார் என்ற வகையில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி...

  நெகிழ்வான படமும் கூட (ஹி..ஹி.. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் ஏரியாவுல).. :)))))

  ReplyDelete
 25. ஜாக்கி!
  நீ எங்களில் ஒருவன்!
  எங்களுக்காக ஒருவன்!

  ReplyDelete
 26. ஜாக்கி சார் , எனக்கும் அவ்வளவா நண்பர்கள் கிடையாது .... நானும் கொஞ்சநாளா அனைத்து பதிவுகளையும் நிறைய பேரோட பதிவுகள படிச்சிட்டு வரேன்... குறிப்பா கமெண்ட் பகுதி தவறாம படிப்பேன்......... அதில் தான் எவ்ளோ நட்பு, புரிந்துணர்வு , உரிமை ................ பொறாமையா இருக்கும் நமக்கும் இந்த மாதிரி நல்ல நண்பர்கள் கிடைபன்களா அப்படின்னு? நட்ப விட்டு விடாதிங்க சார் , நட்புங்கறது உயிர் மூச்சு மாதிரி .......................

  ReplyDelete
 27. உறவை விட நட்பு எப்போதும் சிறந்தது என்பதை மீண்டும் நிரூபணம் செய்யும் அருமையான பதிவு

  ReplyDelete
 28. All the best Jackie..though you try to portray yourselves as a rigid/harsh/rough person, you really have a heart of Gold. You will sure go places and wish you for that.

  ReplyDelete
 29. ஜாக்கி,


  எப்போது உங்களை வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியாது. 2008 ம் ஆண்டாக இருக்கலாம். உங்கள் பதிவு எல்லாம் எனது கூகிள் ரீடர் இல் கூட இல்லை, தேவையும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருநாளும் வேகமாக உங்கள் முகவரியை டைப் செய்தே பக்கத்துக்கு வருவேன். அப்படி ஒரு வாசகன்!

  உங்களை பலர் விரும்புவதற்கு உங்கள் கோபத்தில் இருக்கும் innocence உம் காதலும் தான், எங்கேயும் காதல் அஞ்சலியின் கோபம் போல! நீங்கள் மற்றவர்களுக்காக கொபப்படுவதே அதிகம். ஈழத்தமிழன் ஆதலால் எமக்காக கொபப்பட்டதேல்லாம் கண்ணுக்குள் நிற்கிறது.

  எழுதுவதற்கு orgasm போன்ற ecstasy மனநிலை இருந்தாலே சாத்தியம், அது வடியாமல் இத்தனைகாலம் புது புது substance தேடி எழுதுவதே உங்களில் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். எது உங்களை இப்படி எழுத இயக்குகிறது என்று தெரியாமலேயே இருந்தேன் நேற்றுவரை!

  எழுத ஆரம்பித்து இருபது நாட்கள் இருக்கும். அந்த மனநிலை மெல்ல மெல்ல புரிகிறது இப்போது. என்னுடைய இந்த orgasm உங்களுடையது போல நிலைக்குமா தெரியாது. ஆனால் உங்களை மேலும் மேலும் புரிந்து கொள்ள அது உதவுகிறது. அடுத்தடுத்து நான் எழுதுவதைப்பார்த்து நண்பன் ஒருவன் கேட்டான் "Man you got shit loads of time to kill, don't you?" என்று. அவனுக்கும் உங்கள் பதிவு முகவரியை மேற்கோள் காட்டி, "Man, I now got shit loads of time to kill on rest now" என்று அனுப்பினேன். உங்களைப்போன்றவர்கள் கடந்து வராததையா நான் மூன்று வாரத்தில் பார்த்து விட்டேன்?

  வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள உறவு அந்த எழுத்து தான். உண்மையான வாசகன் வாசித்து முடித்து விட்டு, மனதிலேயே பாராட்டிவிட்டு சும்மாவே போய் விடுவான் என்ற ரீதியில் சுஜாதா ஒருமுறை கூறியிருந்தார். மற்றவர் தளங்களில் கருத்து எழுதுவது தமது தளத்துக்கான marketing என்ற ரீதியில் லக்கி சில வருடங்களுக்கும் முன் பதிவு எழுதி இந்த வாரம் மீண்டும் புதுபித்து இருந்தார். அதனாலேயே எழுத வந்த போதெல்லாம் சிறு சங்கடம் ஏற்பட்டு தவிர்த்துஇருக்கிறேன். இதையும் எழுதிஇருக்க மாட்டேன். உங்கள் "close to heart" எழுத்து தூண்டிவிட்டது. மனம் மாறும் முன்னரே போஸ்ட் பண்ணி விடுகிறேன்.

  ReplyDelete
 30. அண்ணே உங்களை பார்த்தல் பொறாமையா இருக்கு....

  ReplyDelete
 31. hi jackie
  i am a new reader of your blogs.
  வாசிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே புரிந்துவிட்டது, நீங்கள் விஷயம் உள்ளவர் என்று.
  so you pulls me
  உறவுகள் கடவுளால் ஏற்படுத்தப்படுபவை!
  நட்புக்களோ நாம் தேர்வுசெய்துக்கொள்வது!
  CHOICE IS OURS!!
  உறவுகளில் நாம் விட்டுக்கொடுப்பதில்லை.
  நட்புக்களில் நாம் விட்டுக்கொடுப்பதே அதிகம்.
  உறவுகளையும் நட்பாக்கிக்கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறக்கும்.
  மனதில்பட்டதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதே உங்களின் மிகப்பெரிய பலம்.
  KEEP IT UP
  நட்புடன்
  சைதை அஜீஸ்

  ReplyDelete
 32. பின்னுட்டம் இட்ட அத்தனை பேருக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகள்..

  ReplyDelete
 33. வராதவங்க எல்லாம் வந்து இருக்கிங்க.. உங்களுக்கு எனது நன்றிகள்..வானம்பாடிகள்,வடகரை வேலன்,
  Damodar,சேட்டைக்காரன்,rajasundararajan, Appaji,நேசமித்ரன்,அரவிந்தன்

  ReplyDelete
 34. vazhthukkal anna...

  iniya deepavali nalvazhthukkal

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner