பெங்களூரில் வசிப்பவரா நீங்கள்...? நைஸ் ரோட்டில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்...




பெண்களுர் வாசிகளே... எனக்கு இந்த வலையின் காரணமாக நிறைய  நண்பர்கள் அங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்...பெண்களூரில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவை வாசிக்கவும்.. காரணம்.. அவர்களால் மட்டுமே இது முடியும்..




மிக முக்கிய விஷயம்.. ரசனை மிக முக்கியம்...ரசனை என்றால்??? உதாரணத்துக்கு இரவு நீங்களும் உங்கள் மனைவியும் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்.. பேச்சு நீண்டு போய் தூக்கம் சுத்தமாக போய்விட்டது... என்ன செய்வீர்கள்?? திரும்புவும் பேசுவோம் என்று மட்டும் சொல்லாதீர்கள்..??



நானாக இருந்தால் விடியலில் இரண்டரை மணிக்கு பீச்சுக்கு கிளம்புவேன்... பரபரப்பு இல்லாத சென்னையின் சாலைகளில் வண்டி செலுத்தி ,மெரினாவுக்கு போய், காந்தி சிலை அருகில் வண்டி நிறுத்தி , மெல்ல  மெல்ல விடியலை ரசித்துக்கொண்டே மனைவியோடு பேசிக்கொண்டே ரசிப்பேன்..அப்படி போய் ஆறுமாதகாலம் ஆகிவிட்டது..

சார் அது ரொம்ப ரிஸ்க் இல்ல... வீட்டுல இருந்தாலும் ரிஸ்க்தான் ... வீட்டை விட்டு வெளியே வந்தாலும் ரிஸ்க்தான்.. அது உங்க இஷ்டம். உங்க ரிஸ்க்..



பெங்களூரில் வசிப்பபவர்களாக மட்டும் இருந்தால் போதாது.. பெங்களூரில் இருந்தாலும் ஒரு கார் இருந்தால் நலம்.. காரணம் சற்று இளைப்பார அது மிகவும் அவசியம்..


சரி காரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கீன்றீர்களா? எப்படியும் சனி ஞாயிறு இரண்டு நாளும் லீவ் தானே...வெள்ளிக்கிழமை இரவே பிளான் செய்துக்கொள்ளுங்கள்..சனிக்கிழமை காலையில்  எழுந்திருங்கள்..காலையில் என்றால் விடியலில் 5 மணிக்கேவா?

ஆமாம்... 

விடியலில் 5 மணிக்கு எழுந்து ஒரு பெரிய பிளாஸ்க்கில் தேனீரோ அல்லது காபியோ கல்ந்துக்கொள்ளுங்கள்.. காதலி இருந்தால் காதலி மனைவி இருந்தால் மனைவி நண்பர் இருந்தால் நண்பரை அழைத்துக்கொள்ளுங்கள்.. சோம்பேறி பிள்ளைகளாக இல்லாவிட்டால் விருப்பம் இருந்தால் அவர்களையும் அழைத்து செல்லுங்கள்...

சார் விடிகாத்தலே எழுந்து காரில் காபி எடுத்துக்கினு  எங்கசார் போக சொல்லறிங்க??


பெங்களூரில் இருப்பவர்கள் பலர் அங்கு போய் இருக்கலாம்.. அல்லது  அந்த வழியாக  சென்று இருக்கலாம்.. பெங்ளூர் மடிவாலாவில் இருந்து பண்ணார்கட் வழியாக போனால் நைஸ் ரோடு என்ற ரோடு வரும்... அது ஒரு பிரைவேட் ரோட் அது வழியாக மைசூர் போகலாம்.. என் வாழ்வில் அது போல ஒரு ரோட்டை இந்தியாவில்  பார்த்தது இல்லை..


ஆங்கில படங்களில் மட்டுமே நல்ல ரோட்டை பார்த்த தமிழர்களுக்கு ஒரு ரோடு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து அதிசியத்து போனது சென்னை டூ பாண்டிச்சேரி வரை போடப்பட்ட ஈசிஆர் ரோடுதான்.. முதன் முதலில் பல தமிழர்கள் அந்த ரோட்டை பார்த்து வாய் பிளந்தார்கள்.. அதன் பிறகு பாஜக ஆட்சியல் வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது தங்க நாற்க்கரதிட்டம் என்ற பெயரில் ரோடுன்னா அது இப்படித்தான் இருக்கனும் என்று இந்தியாவுக்கே புரிய வைத்தார்கள்..


ஈசீஆரை எல்லோருக்கும் பிடிக்க இன்னோரு காரணம் அது போகும் வழியெங்கும் பகூமை பூத்துக் குளுங்கும்.. கல்பாக்கம் தாண்டி மரக்கானம் வரை இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சாலையின் இருப்பக்கமும் இருக்கும்...


அது போலத்தான் இந்த ரோடும் இரண்டு பக்கம்  சின்ன சின்ன பள்ளதாக்குகள்..சிறு குன்றுகள், இரு பக்கமும் பனிப்பொழிவால் புகை மூட்டமாக இருக்கும்  மெல்ல மெல்ல டுவைலைட்டில் இருந்து சன்லைட்டுக்கு வரும் அழகே அழகு...


அந்த இடத்தில் காரை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டு இருக்கலாம்..நீங்கள் எடுத்து சென்ற தேநீரை அங்கு அருந்தலாம்.. அப்படி ஒரு அற்புதமான லோகேஷன்.. வாக்கிங்  போல கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம்... பெங்களூர் அசுர வளர்ச்சி காரணமாக அங்கே கூட பெரிய பெரிய குடியிருப்பு வளாகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன..


விஜய் மல்லையாவின் பெரிய ஹவுசிங் புராஜக்ட் அங்கே வந்து  கொண்டு இருக்கின்றது...அப்படி ஒரு ரோட்டை இயற்க்கை அழகு கொஞ்சும் ரோட்டை நான் பார்த்தது இல்லை..சமீபத்தில் ரிலிஸ் ஆனா முரண் படத்தில், அந்த ரோட்டில் பல காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்..



நைஸ் ரோட் ஒரு பிரவேட் ரோடு.... நாலுலேருந்து ஆறு லேன் வரைக்கு இருக்கு... மொத்த கிலோமீட்டர்...111.. ரோடு ரொம்ப நைசா இருக்கும் போல அதுக்குதான் இதுக்கு பேர் நைஸ் ரோடுன்னு பேர் வச்சி இருக்காங்கன்னு நான் நினைச்சேன்.. கிராமத்தான் புத்தி வேற எப்படி யோசிக்கும்...??

அப்புறம்தான் தெரிஞ்சிது...
Nandi Infrastructure Corridor Enterprices (NICE) என்பதன் சுருக்கமே நைஸ்...

நான் சொன்னது போல சிலர் இந்த வழியை, இந்த  சாலையை பிடிக்கலாம் ரசிக்கலாம்...சிலருக்கு உவ்வேவாக இருக்கலாம்.. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது...



சார் என்கிட்ட கார் இல்லை ஆனா நான் பெங்களூர்லதான்  இருக்கேன்.. நான் என்ன செய்ய?? பைக்ல போயிட்டு வாங்க..ஒரு பிரச்சனையும் இல்லை..கார் என்றால் கொஞ்ச நேரம் ரிலாக்சாக இருக்கலாம் என்பதால் சொன்னேன்.



ஹலோ ஜாக்கி நீ சொல்ற அந்த நைஸ் ரோட்டுல அப்படி என்னதான் இருக்குன்னு நானும் ஒரு வாடகை கார் எடுத்துட்டேன்.. ரோட்டை ஒரு மணிநேரத்துக்குமேல பார்த்துட்டு காபியும் குடிச்சிட்டேன்..  என் பொண்டாட்டி சொல்லறா.. யோவ் இதுக்குதான் என்னை தீ தீ ன்னு தூங்கிகிட்டு இருந்தவளை எழுப்பி அழைச்சிகிட்டு வந்தியான்னு நக்கல் விடறா?


யோவ் நான் என்ன செய்ய சொன்னாலும் செய்வியா? இப்படி ஒரு இடம் இருக்கு, அழகா இருக்கு, மைசூர் பக்கம் போறாப்பல இருந்தா அனுபவிங்கயான்னு சொன்னா? நீ பாட்டுக்கு நான் சொன்னதை கேட்டு வாடகைகார் எல்லாம் எதுக்குய்யா எடுத்தே??




 என் ரசனை வேற.. உங்க ரசனை வேற.. உங்க மனைவி ரசனை வேற...கார் வேற வாடகை எடுத்திட்டிங்க.. இருங்க... ஒரு ஐடியா...ம், ஒன்னும் பிரச்சனை இல்லை அப்படியே வண்டிய மைசூர் பக்கம் விடுங்க....


உங்க வீட்டு அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா..??நிறைய ஜாக்கி.. அப்படியா நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு போங்க..


மைசூர் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு முன் இருக்கும் நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு என் மனைவி வேண்டிக்கொண்டாள்... நேர்த்தி கடன் செலுத்த அந்த கோவிலுக்கு போகும் வழியில்தான் இந்த ரோட்டை பார்த்தேன்..  அதனால்தான் சொன்னேன்....குழந்தைக்கு முதல் திட உணவை ஆங்கே கொடுப்பதாக வேண்டுதல்...
நவநீதகிருஷ்ணர் கோவிலின் முகப்பு தோற்றம்..


அப்படியே நவநீதகிருஷ்ணனை பற்றியும் லைட்டா சொல்லிடறேன்..நான் நிறைய கிருஷ்ணர்  சிலைகள் பார்த்தாலும்.. இந்த சிலை ரொம்ப ஸ்பெஷல்... 
கோவிலுக்கு வெளியே விற்பனைக்கு காத்து இருக்கும் நவநீதகிருஷ்ணர்

குழந்தை தவழ்ந்து செல்வது போல ஒரு  குட்டி சிலை...குழந்தை வரம் வேண்டுபவர்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் பலர் அதிகம்  தென்படுகின்றார்கள்..


இந்த கோவில் மிகப்பழமை வாய்ந்த கோவில் அதனால், இது இந்திய தொல்பொருள் துறை  கட்டுப்பாட்டில் இருக்கின்றது...



அப்படியே ஸ்ரீரங்கபட்டினம்.... இந்த பயணம் கடந்தஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று சென்றோம்.... அதுக்கு பக்கத்திலேயே பன்சங்கரி டெம்பிள்..போயிட்டு நேரா மதியம் சாப்பாடு மயூரா ரீவர் வியூ ரெஸ்ட்டாரண்டுக்கு போனோம்..இதை கர்நாடக அரசு நடத்துகின்றது..
ஸ்ரீரங்கபட்டினம்...முகப்பு தோற்றம்.


ரெஸ்ட்டாரன்ட் அது காவிரி ஓடும் கரையில் அமைந்து இருப்பதுதான் அதன் சிறப்பு...12ரூம் இருக்கு... வேனும்னா புக் பண்ணிக்கலாம்..

போய் மதிய சாப்பாடு  சொல்லிட்டு காவிரியில் கால் வைத்துக்கொண்டு இருந்தேன்.. 
 காவிரியில் கால் நனைத்த படி...

அங்கே சரக்கும் கிடைப்பதால் ஒரு பிரைட் சிக்கன் மற்றும் இரண்டு  லார்ஜ் வாங்கி வச்சிகிட்டு சிக்கனை கடிச்சிகிட்டு அப்படியே காவிரி தண்ணில கால வச்சிகிட்டு சாப்பிடறது சுகம்தான்..


மயூரா ரெஸ்ட்டாரண்ட் முகப்பு...
காவிரி ரொம்ப ஜில்லிப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.. சென்னையில் இருந்து விட்டு , ஆறு முழுவதும் தண்ணீர் பாய்வதை பார்க்க பார்க்க மனது கொள்ளை கொள்ளும்....மனதை விட்டு நீங்காத இடம் அந்த மயூரா ரெஸ்ட்டாரண்ட்... 
நானும் மச்சானும்..


அதே போல சாப்பிடும் போது ஜாக்கிரதை...  காக்கா வந்து கொத்திகிட்டு போக ரொம்ப சான்ஸ் இருக்கு... நல்ல இயற்கை சூழலில் ஒரு ரெண்ட்டாரண்ட்.. நல்ல ரிலாக்ஸ் செய்ய அந்த ரெஸ்ட்டாரண்ட் மிகச்சிறந்த இடம்.. இது என்னோட சாய்ஸ் மேலும் அந்த ஓட்டல் பற்றி அறிய குகூள் அடித்து விபரம் படித்துக்கொள்ளவும்...காசு பணம் இருக்கற பெங்களூர்வாசிகள் அங்க அடிக்க போலாம்...நான் எல்லாம் ஆடிக்கொரு முறை அம்மாவசைக்கொருமுறைதான்..
 குடில்கள்..



பணம் அதிகம் வைத்து இருப்பவர்கள் இங்க சென்னையில் எப்படி வீக் என்ட் என்றால் நேராக ஈசீஅர் ரோட்டில் பாண்டிச்சேரிக்கு மவுன்ட் ரோடு போவது போல போகின்றார்களோ... அது போல பெங்களூர்வாசிகள் லீவ் கிடைத்தால் மைசூருக்கு ஒரு ஜாலி ரெய்டை காரில் அடிக்கின்றார்கள்..அதனால் சனி ஞாயிறு அந்த ஹைவேஸ் டிராபிக்தான்..



அடுத்த முறை சென்னை வாசிகள் மற்றும் பெங்களூர் வாசிகள்... ஸ்ரீரங்கபட்டிணத்தில் இருக்கும் மயூரா ரெஸ்ட்டாரண்டை மிஸ் செய்யவே செய்யாதிங்க.. 

ஓட்டலின் உட்புறத்தோற்றம்.
அங்க போயிட்டு வரும் போது  வரும் வழியிலேயே கேரிசன் கல்லறை இருக்கு.. அதையும் மிஸ் பண்ணாதிங்க... கேரிசன் கல்லறையா? அது என்ன ஜாக்கி.. அது என்னன்னுதெரியனும்னா இந்த பதிவை வாசிச்சி பாருங்க அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்...

என் ரசனையும் உங்கள் ரசனையும் ஒரு போதும் ஒத்து போகவேண்டும் என்று கட்டாயம் இல்லை.. தாஜ்மகாலை பார்த்து விட்டு ஒரு சாமதியை பார்க்க இத்தனை கூட்டம் எதுக்கு வருதுன்னு கேட்பவர்களும் இருக்கின்றார்கள்.. அதுக்காக அவர்கள்.. இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவர்கள் அல்ல....


காவிரிப்பாயும் கர்நாடக மண்ணில்...
=======
குறிப்பு... நைஸ் ரோடு படங்கள் மட்டும்...இணையத்தில்  இருந்து எடுத்தது.. மற்றவை எல்லாம் நம்ம கைவண்ணம்தான்..



========



பெங்களூர் நைஸ் ரோடு குறித்த ஒரு ஆவணப்படம்..



பொது மக்கள் வேண்டுவது தரமான சாலையும்.... நல்ல குடிநீர்தான்...ஆனா  நாம  சுதந்தரம் வாங்கி 60 வருஷத்துக்கு மேலா...  இந்த  ரெண்டுத்துக்கும்  போராடிக்கிட்டு இருக்கோம்...


சென்னை ஈசிஆர் ரோடு வந்த போது தான்...  ஒரு  ரோடு எப்படி இருக்கனும்ன்னு பல பேர்க்கு தெரிஞ்சிது... வாஜ்பாய் கவர்மென்ட் தங்க நாற்கரசாலை அமைக்கலைன்னா....இன்னும் பயண நேரம் அதிகரிச்சி இருக்கும்..

 இருந்தாலும்... பெங்ளூர்ல இருக்கும் நைஸ் ரோடு என் மனம்  கவர்ந்த ரோடு...

அந்த ரோட்டின் சிறப்புகளை  நான்  ஜாக்கி சினிமாஸ் யூடியூப் சேனலுக்காக அவணப்படுத்தியுள்ளேன்... அந்த ரோட்டை காதலிக்கும் இரண்டு பேரின்  பேட்டியும் இதில் உண்டு...

ஒளிப்பதிவு வேற யாரு.. நாந்தேன்... எடிட்டிங் நானேதான்..  நிறைய ஷாட்  நான் ரசிச்சி எடுத்து இருக்கேன்..


 தனியார் நிர்வகிக்கும் சாலை என்பதை நான் குறிப்பிட மறந்து விட்டேன்... மற்றபடி நைஸ் ரோடு வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள் தளத்தை சப்ஸ் கிரைப் செய்யுங்கள்..

@Karthikeyan Manickam

Anand Ps

#bangalore

#niceroad

#NandiInfrastructureCorridorEnterprises







பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

22 comments:

  1. solle eruntha nannum vanthu erupen ,next time pogum pothu solluga k..

    ReplyDelete
  2. வழக்கம்போல அருமை ஜாக்கி.

    இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்

    //நைஸ் ரோடு படங்கள் மட்டும்...இணையத்தில் இருந்து எடுத்தது.. மற்றவை எல்லாம் நம்ம கைவண்ணம்தான்..//

    நைஸ் ரோட் தவிர மீதி போட்டோக்கள் எல்லாம் உங்கள் கைவண்ணம் என்றால், எல்லா போட்டோக்களிலும் நீங்களே இருக்கிறீர்களே? அது எப்படி?

    ReplyDelete
  3. எனக்கு தெரிந்து ஆகஸ்ட் 15தான் சுதந்திர தினம்னு நினைக்கிறேன். எதுக்கும் செக் பண்ணிடுங்க.

    ReplyDelete
  4. நீங்கள் தந்திருக்கும் படங்களையும் விவரங்களையும் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். நேரில் செல்லும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியாத எனக்கு நேரில் பார்த்த உணர்வைத் தந்த உங்கள் பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //எனக்கு தெரிந்து ஆகஸ்ட் 15தான் சுதந்திர தினம்னு நினைக்கிறேன். எதுக்கும் செக் பண்ணிடுங்க.// REPEAT!!!

    ReplyDelete
  6. கண்டிப்பா போலாம் டியர்..

    ReplyDelete
  7. மஞ்சூர் தாமோதர் மாத்திட்டேன் நன்றி.

    ReplyDelete
  8. ரொம்ப சிம்பிள் யுவா டைமர் செட் பண்ணி எனக்கு நானே எடுத்துக்கலாம்...

    ReplyDelete
  9. ரசனையான பதிவு.கண்டிப்பா போயே ஆகணும் ...

    ReplyDelete
  10. இதே மன நிலையில் நான் ஒவ்வொருமுறையும் இந்த சாலையில் செல்லும்போது, இரு புறமும் தவழும் மேகங்களையும் நீர்நிலைகளையும் ரசித்திருக்கிறேன்...

    நீங்கள் குறிப்பிடும் இந்த NICE சாலை சந்திக்கும் மைசூர் Road அருகே Kengeri Satellite townஇல் தான் நான் வசிக்கிறேன்....
    சென்னை நண்பர்கள் அனைவரும் இந்த பசுமையை பார்த்து இதே போல தான் ஆச்சர்யம் அடைகிறார்கள்...
    உண்மையை சொல்லப் போனால் இந்த சாலை பல நீர்நிலைகள் பல மரங்களின் தியாகத்தினால் உருவானது...
    எது எப்படியோ மக்கள் பயனடைகிறார்கள்...

    ReplyDelete
  11. //நைஸ் ரோட் தவிர மீதி போட்டோக்கள் எல்லாம் உங்கள் கைவண்ணம் என்றால், எல்லா போட்டோக்களிலும் நீங்களே இருக்கிறீர்களே? அது எப்படி?//

    எனக்கு கேட்க தோன்றியது. யுவா கேட்டுவிட்டார். புத்திசாலிகளெல்லாம் ஒரே மாதிரி சிந்திக்கிறோம். :)

    ReplyDelete
  12. டைமர்ங்கறது பாம் வெடிக்க மட்டும்தான்னு நினைச்சேன்...உங்களை நீங்களே போட்டோ எடுக்க உதவி செய்யும்னு புரிஞ்சுது...மகிழ்ச்சி...

    நீங்க ஒரு கருத்த வெள்ளக்காரன் ஜாக்கி.

    ReplyDelete
  13. சீரங்கபட்டணத்துக் காவிரியில் கால் நனைத்துக் கொண்டே பீர் குடித்திருக்கிறேன். அங்கே படித்துறை இறங்கிக் காவிரியில் குளித்தும் இருக்கிறேன்.

    இதையெல்லாம் விட அத் திக்கத்துக் காடு கரையெல்லாம் அலைந்திருக்கிறேன் (அவ்வழி போகும் Powergrid கோபுரங்கள் நாங்கள் எழுப்பியது). மனசுக்கு ரம்மியமான ஒரு நிலப்பகுதி அது.

    அது இருக்கட்டும். இந்தக் கட்டுரையில் நீங்கள் நனவோடை உத்தியைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? (உங்கள் மனதுக்குள் நடப்பனவற்றை எந்த விளக்கமும் தராமல் அப்படியே பதிந்திருப்பது).

    பெரிய எழுத்தாளர்தான் நீங்கள். ஆனால் உங்கள் சினிமாத் துறை அனுபவமே இதாற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். அதாவது voice-over இல்லாமல் காட்சிகளை நேரடியாகத் தருவது, Well done.

    ReplyDelete
  14. பெங்களூரில் இருப்பதால் இந்த இடமெல்லாம் பலமுறைபார்த்தாலும் அலுப்பதே இல்லதான் உங்க பதிவு அருமை!

    ReplyDelete
  15. அன்பு நண்பரே உங்களுடன் சேர்ந்து நாங்களும் பங்களூர் வந்தது போல் உள்ளது .மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ;
    நன்றி ,
    ராமசந்திரன்

    ReplyDelete
  16. நினைப்பது அல்ல நீ
    நிரூபிப்பதே நீ.....

    ReplyDelete
  17. ஜாக்கி!

    சமகால தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞரான ராஜ.சுந்தரராஜன் உங்களை பாராட்டியிருக்கிறார்.

    இது உங்களுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரம்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. இதில் மயூராவில் சுவைத்ததில்லை. என்னவொரு நடை... கலக்குங்க!!!

    ReplyDelete
  19. மிக அருமையான ரோடு இது...நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்....இதே போல, மும்பை-புனே ரோடும் இந்தியாவின் மிக அருமையான ரோட்டில் ஒன்று. அந்த பக்கம் போனால் டிரைவ் அடித்து பாருங்கள்...

    ReplyDelete
  20. Add Art of living ashram. Nice place.. Organic food items...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner