எங்கள் கிராமத்தில் இருக்கும் அந்த வீட்டுக்கு பெயர் காசுக்கடகாறவங்க வீடு.. ஏன் அந்த பெயர்?
அவர்கள் வீடு வட்டிக்கு காசு கொடுப்பதால் காசுக்கடைகாரர் வீடு என்று பெயர்...எங்கள் கிராமத்தில் இருக்கும் முதல் மாடிவீடும் அதுதான்...டிவி இருக்கும் ஒரே வீடும் அதுதான்..எங்கள் ஊரில் அவர்கள் வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது... அந்த வீட்டில் ரோட்டில் நடந்து போகும் போதே அவர்கள் வீட்டில் டிவி ஓடுவது தெரியும்...டிவி என்பது எங்களுக்கு அப்போது பெரிய விஷயம்... அது கருப்பு வெள்ளை டிவி.. ஆனால் அதுக்கு முன் ஒரு நீலக்கண்ணாடி வைத்து இருப்பார்கள்.. படம் நீலமாக தெரியும்...
அந்த டிவி 21இன்ச் டிவி...வீட்டின் உள்ளே எல்லாம் போய் உட்கார்ந்து எல்லாம் பார்க்க முடியாது..டிவி இருக்கும் தாழ்வாரத்தில் இருந்து 60 அடி துரத்தில் இருக்கும் கதவு அருகில் போய் நின்று கொண்டு பார்போம்... சில நேரத்தில் கதவை மூடிவிடுவார்கள்..சில நேரத்தில் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் டிவி எதிரில் வந்து நாங்கள் பார்க்கின்றோம் என்று தெரிந்தும், டிவி எதிரில் வந்து நிற்ப்பார்கள்.. அது அவுங்க வீடு என்ன செய்ய??? அதுல ஒரு சந்தோஷம்... அங்க மட்டுமதான் டிவி இருந்துச்சி.. நான் முதன் முதலில் அந்த டிவியில் பார்த்த காட்சி.. செல்வம் படத்தில் கேஆர்விஜயா நடந்து வருவது போலான காட்சி... ஆனால் அந்த டிவியின் பெயர் எனக்கு தெரியிவில்லை.
அதன் பிறகு எங்கள் வாத்தியார் மாமா வீட்டில் டிவி வாங்கினார்கள். அது சாலிடர் கலர் டிவி... ஒரு பெரிய ஆண்டெனா, அப்புறம் சின்ன ஆன்டெனா எல்லாம் கட்டி, கலரில் டிவி பார்த்தோம்... வெயில் காலங்களில் இலங்கையின் ரூபவாகினி சேனல் நன்றாக தெரியும்... அதில் டைனாசிட்டி என்று ஒரு ஆங்கில புரோகிராம் வரும்... அதில் வரும் விளம்பரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் செய்திகளில் அவர்கள் உச்சரிக்கும் அந்த தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
அதன் பிறகு என் வீட்டில் செகன்ட் ஹாண்டில் ஒரு சாலிடர் டிவி வாங்கினோம்.... பிளாக் அண்டு ஒயிட் டிவிகள் வெகுவாய் பலரது வீடுகளில் பரவிக்கொண்டு இருந்தது... கலர் டிவி என்பது குதிரைக்கொம்பாகவே நடுத்தர குடும்பங்களில் காணப்பட்டது..
அப்போதைய டிவியில் சாலிடர் டிவி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தது....இயக்குனர் பாலச்சந்தர் தனது புது புது அர்த்தங்கள் திரைப்படத்தில் சாலிடர் டிவி ஒரு பாத்திரமாகவே வைத்தார்.. சாலிடர் சீடி1000 மாடல் என்று நினைக்கின்றேன்.. அதில் பிராண்ட் அம்பாசிட்டாராக வரும் கட் அவுட், அமலாவுக்கு முத்தம் கொடுக்க போய் மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கும் காட்சியில் பூர்னம் விஸ்வநாதன் நடித்து இருப்பார்...
1990களில் எல்லோர் வீட்டிலும் சாலிடர்டிவிதான் இருக்கும்... சில வீடுகளில் டயனோரா இருக்கும் அத்திபுத்தது போல இருக்கும் கிரவுன், வெஸ்ட்டன்,புஷ்,ஈசிடி என்று வெகு அரிதாய் காணப்படும்....
ஆனால் டிவி விளம்பரங்களில் 1990 களில் பட்டடையை கிளம்பியவை என்றால் ஒனிடாதான்...
அண்டை வீட்டாரின் பொறாமை..
சொந்தக்காரரின் பெருமை...
என்ற இந்த கேப்ஷன் டிவி இருக்கும் வீடுகளில் வெகு பிரபலமாக இருந்தது.. தனது நல்ல விளம்பரத்தின் மூலம் தனது விற்பனை சந்தையை தமிழகத்தில் ஒனிடா டிவி கால் பதித்தது...
கடலூரில் சுமங்கலி சில்க்ஸ் பக்கத்தில் ஒனிடா டிவியின் பெட்டிகளை ஷோ கேசில் வைத்து அந்த கொம்பு மனிதன் படத்தை பெரிதாக வைத்து இருப்பார்கள்...
அப்படி ஒருகாலத்தில் மிகப்பெரிதாக கோலாய்ச்சிய சாலிடர் மற்றும் டயனோரா போன்றவை எல்லாம் கால ஓட்டத்தில் காணமல் போய்விட்டன...
ஆனால் இன்று கலைஞர் கொடுத்த இலவச கலர் டிவி.. மளிகை கடை , டீக்கடை, சின்ன ஓட்டல்,. சலூன் போன்ற இடங்கள் வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன...
சாலிடர்,டயனோரா,புஷ், கிரவுன், வெஸ்ட்டர்ன், ஈசிடிவி இவைகள்தான் என் நினைவில் இருக்கின்றன..உங்களுக்கு எதாவது தெரிந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்..அப்போதைய டிவிக்களில் வியாபித்து இருந்த சில விளம்பரங்களின் தொகுப்பு... இது
இப்போதைய பிள்ளைகள் கருப்பு வெள்ளை டிவியில் படம் பார்த்த அனுபவம் அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது...எனக்கு சாலிடர் டிவியில் கருப்பு வெள்ளை மற்றும் கலரில் பார்த்த அனுபவம் இருக்கின்றது.. இன் பிளாட், வால்மவுன்ட்,ஹேச்டி, போன்ற தொழில்நுட்பங்களில் பல பிராண்டுகளில் டிவிகள் பெருத்து விட்டன...
எனக்கு இன்னமும் சாலிடர் கலர்டிவி என் மாமாவீட்டில் புதிய அட்டை பாக்சில் இருந்து பிரித்த போது இருந்த சந்தோஷம் சொல்லிமாளாது....
அடுத்தவர் விட்டில் தன் சுயமரியாதை இழந்து, எப்போது டிவியை நிறுத்துவார்கள்...? எப்போது டிவி எதிரே நொறுக்கு தீனி கொறித்த படி டிவி எதிரில் நிற்பார்கள்..? எந்த நேரத்திலும் டிவியை நிறுத்துவிடுவார்கள்? எந்த நேரத்திலும் கதவை சாத்தி விடுவார்கள்..?? எப்போது விரட்டுவார்கள் என்ற பயம் இல்லாமல் இப்போதைய பிள்ளைகள் டிவியை பார்க்கின்றார்கள்..ஒருவகையில் அவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்தான்... டிவி பார்ப்பதற்க்காக வசவுகளையும், அவமானங்களையும் அதிகம் சுமக்காமல் வளர்கின்றது ஒரு இளையதலைமுறை.. வாழ்த்துகள் பிள்ளைகளே..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ....
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
BPL India - என்றொரு டி.வி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய முதல் டிவி அதுதான். பிளாக் அண்ட் வொயிட். 12 சேனல் தான் இருக்கும். ட்யூனர் திருப்புவது போல இருக்கும். ரிமோட் எல்லாம் கிடையாது. நான் ஆறாவது படிக்கும்போது (1989)ல் வாங்கியது. 2001ல் நான் வேலைக்குப் போன பின்புதான் கலர் டிவியாக மாற்றினோம்.
ReplyDelete//அடுத்தவர் விட்டில் தன் சுயமரியாதை இழந்து, எப்போது டிவியை நிறுத்துவார்கள்...? எப்போது டிவி எதிரே நொறுக்கு தீனி கொறித்த படி டிவி எதிரில் நிற்பார்கள்..? எந்த நேரத்திலும் டிவியை நிறுத்துவிடுவார்கள்? எந்த நேரத்திலும் கதவை சாத்தி விடுவார்கள்..?? எப்போது விரட்டுவார்கள் என்ற பயம் இல்லாமல் இப்போதைய பிள்ளைகள் டிவியை பார்க்கின்றார்கள்..ஒருவகையில் அவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்தான்... டிவி பார்ப்பதற்க்காக வசவுகளையும், அவமானங்களையும் அதிகம் சுமக்காமல் வளர்கின்றது ஒரு இளையதலைமுறை.. வாழ்த்துகள் பிள்ளைகளே//
ReplyDeleteNice!!!! Reminds me of those days. Thanq for ur nice article :)
Good Nostalgia, Jackie...
ReplyDeleteU Missed BPL, Philips TVs Jakki...
ReplyDeleteஅண்ணே இந்த டிவி பத்தி நானும் ஒரு பதிவு எழுதிருக்கேன் :) உங்க பதிவு நல்ல கொசுவர்த்தி :)
ReplyDeletehttp://dhans4all.blogspot.com/2010/03/blog-post_03.html
Jackie,
ReplyDeleteThis is really a nostalgic entry.
I have similar experience like that of your.
dear jackie, regularly i wait and read all your posting now we all miss mini sanwitch.
ReplyDeletevalavan malaysia
வாழ்க்கை பயணத்தில் நாம் ஏராளாமான விஷயங்களை இழந்தும்,பெற்றும் பயணிக்கின்றோம் அவைகளை திரும்பி பார்க்கையிலே அலாதியான ஒரு பரவசம் நம்முள் பரவுவது ஒரு பேரானந்தமே.நல்ல பதிவு.அண்ணே அப்படியே மங்காத்தா விமர்சனம் போடுங்க நான் படம் பார்த்துட்டேன் நிச்சயமா இது தல ரசிகர்களுக்கு ஒரு தலை தீபாவளி தான்.
ReplyDeleteஞாபகங்களை கிளறுகிறது உங்களின் எழுத்துக்கள்.என்னோட சின்ன வயசில இப்படிதான் ஒளியும் ஒலியும், அப்புறம் சித்ரகார் பார்க்க டிவி இருக்கிரங்கவங்க கிட்ட வீட்டுல காத்திருந்தது, அவங்க குச்சி எடுத்து மிரட்டு வாங்க.அப்படியும் போகாம அவங்க வீடு வேலி மேல நின்னு எட்டி பார்த்தது ...அருமை ...நினைக்க நினைக்க இனிமை.நான் 7 வது படிக்கும் போதுதான் அசெம்பிள் பண்ணின கலர் டிவி வாங்கினாங்க.அப்போ ரிமோட் வசதி இல்ல. ஒவ்வொரு தடவை யும் சவுண்ட் வைக்க எழுந்திரிக்கனும்..இது மாதிரி நிறைய .....வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeletethis post reminds me of my past jackie . i was 7 years old when we got the first TV "Nelco" Small Black and white . Date: the famous 21 May 1991. After that we got BPL for some years. good old TV's :)
ReplyDeleteநான் டி.வி-யில் முதல் முதலில் பார்த்த படம் பில்லா. கருப்பு வெள்ளை டி.விதான். என் கல்யாணத்திற்க்கு பரிசாக வந்த சாலிடெர் போர்ட்டபிள் B & W டி.வி இன்னும் பரணில் தூங்குகிறது.
ReplyDeleteஆமாம் அண்ணா... இது போன்ற வாழ்க்கைப் பதிவு என்னுள்ளும் இருக்கிறது. அருமையான பகிர்வு.
ReplyDeleteநல்ல பசுமையான நினைவலைகளின் பதிவு, என்னையெல்லாம் சம்பளம் இல்லாத வேலைகாரனாக பயன் படுத்தியிருக்கிறார்கள், டிவி வைத்திருந்த புண்ணியவான்கள்..
ReplyDeleteOur house is in village... My father brought New Videocon Color TV ie 5 th TV in our village. During sunday if they put M.G.R film we have keep our TV outside and 70-100 people will assemble in our corridor.. Also people are crazy for Oliyum Oliyum... Now I have LED TV But it is not Impressing like old Video-con.. Video Deck potu oru nal mattum vadakai koduthu GOLD SPOT vilambarathodu 5-6 padam parthathu antha kalam
ReplyDeleteஒரு படத்தில் சத்தியராஜ் கூட பானுப்ரியாவை பார்த்து "அவள் ஒரு டயனோரா கலர் டிவி" என்று ராகத்தோடு அழைப்பார். ரொம்ப அதிகமாக உபயோகத்தில் இருந்த கருப்பு வெள்ளை தொலைகாட்சி பெட்டி என்றால் அது சியர்ஸ் எல்காட் தான்... அதற்கப்புறம் தான் சாலிடர் பொட்டி எல்லாம்... வண்ண தொலைகாட்சி பேட்டியில் முதல் இடம் பிடித்தது முதலில் டயனோரா பின்னர் ஒனிடா வந்து எல்லாரோட மார்க்கெட்டையும் காலி பண்ணிட்டது... அத்தோடு அக்காய் அல்லது சோனி வைத்திருந்தால் அவர் லட்சாதிபதியாக தான் இருப்பார்...
ReplyDeleteELCOT,BHARATH.TELEVISTA KELTRON,NICKYTASHA ..............TELEVISIONS
ReplyDeletethere was a brand called TEXLA..
ReplyDeleteஅருமையான நினைவூட்டல் ஜாக்கி
ReplyDeleteTelerama TV- gawaskar used to come for advt
ReplyDeleteஎனக்கு இப்போது 20 வயதாகிறது.. எங்கள் வீட்டில் எனக்கு 13 வயது இருக்கும் போது தான் டிவி வாங்கனாங்க... அது வரை நண்பன் வீடு தான் கதினு இருந்தேன்... சில அவமானங்கள் நடந்து இருக்கு, ஆனால் அது வேண்டாம்... அந்த அவமானத்திற்கு பிறகு தான் எங்கள் வீட்டில் டிவி வந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம்...
ReplyDeleteஇத்தன வகையான டிவி இருக்குனு எனக்கு இப தான் தெரியுதே....
ReplyDeletei am having the same experience but with cable TV.
ReplyDeleteகேபிள் டிவி வந்த புதுசுல பக்கத்துக்கு வீட்ல சன் டிவியின் தமிழ் மாலை பார்த்தது மறக்க முடியாது
என்னை காலத்தின் பின் நோக்கி கொண்டு சென்றது. மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்க விட்டு பக்கத்தில் ஒளியும் ஒளியும் பார்க்க விடவில்லை என்றல் மெயின் சுவிட்ச் ஆப் பண்ணி விடுவோம், எப்படி அடிகடி செய்தல் பின்னர் எங்களை பார்க்க உள்ளே விடுவார்கள்
ReplyDeleteMy dad bought a shutter tv in 1986 is the first and only TV in my area till 1991 but the saddest thing is my dad is the last man our area to bought a color one
ReplyDelete/*எப்போது விரட்டுவார்கள் என்ற பயம் இல்லாமல் இப்போதைய பிள்ளைகள் டிவியை பார்க்கின்றார்கள்..ஒருவகையில் அவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்தான்... டிவி பார்ப்பதற்க்காக வசவுகளையும், அவமானங்களையும் அதிகம் சுமக்காமல் வளர்கின்றது ஒரு இளையதலைமுறை.. வாழ்த்துகள் பிள்ளைகளே..*/
ReplyDeletevery nice
OPTONICA va vittuteengale
ReplyDeletedear sir need your contact ... karthick from puthiya thalaimurai
ReplyDelete