விமானம் இன்னமும் என்னை பொறுத்தவரை ஒரு வியப்பான விஷயம்தான்..
பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் இப்போதும் எப்போதும் என்னோட ஆல்டைம் பேவரிட் நாவல்தான்..காரணம் விமான நிலைய பின்புலம்...பயணிகள் கவனிக்கவும் நாவலில் விமானம் பறப்பதை பற்றி ஒரு பத்தி எழுதி இருப்பார்.. ஒரு விமானம் பறக்க பல பேர் பரபரப்பாய் பறந்து பறந்து வேலை செய்வது போல அர்த்தம் வருவது போல எழுதி இருப்பார்.. அதே போல விமான நிலைய உள்கட்டமைப்பை அந்த நாவலின் மூலம்தான் நான் தெரிந்து கொண்டு இருக்கின்றேன்.
ஏர்போர்ட்டை கடக்கும் போது அந்த நாவல் நினைவில் வரும்.. நிறைய நண்பர்கள் வழியனுப்பவும் மனைவியை வழி அனுப்பவும் சென்னை விமானநிலையம் சென்று இருக்கின்றேன்..அதே போல பெங்களூர் பழைய விமான நிலையத்துக்கு சென்று இருக்கின்றேன்...
மனைவி ஆன்சைட்டுக்காக அயர்லாந்து போய் திரும்பும் போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்து அவளுக்காக வெயிட் பண்ண சொன்னாள்...அவள் மிகுந்த காதலாக திரும்ப வரும் போது இரண்டு பேரும் சேர்ந்து வராலம் என்று ஐடியா என்னிடத்தில் சொன்னாள்...
அந்த சிறப்பு வாய்ந்த ஐடியாவை நான் குப்பை தொட்டியில் வீசி ஏறிந்தேன்...காரணம் அந்த ஐடியாவை செயல்படுத்தினால் ஒரு ஆறாயிரம் ரூபாய் தண்டம் அழ வேண்டும் என்ற காரணத்தால் அதனை உதாசினப்டுத்தினேன்.
எங்கள் ஊர் கடலூரில் விமான தரிசனம் என்பது வருடத்துக்கு இரண்டு முறை கிட்டும். அந்த விமானம் ஒரு இன்ச் அளவுக்குதான் எங்கள் கண்ணுக்கு தெரியும்... ஆனால் அந்த விமானத்தை கண்ணில் இருந்து மறையும் வரை நண்பர்களோடு விரட்டி செல்வோம். கண்ணில் இருந்து ஒரு புள்ளியாய் மறையும் வரை அந்த விமானத்தை பார்வையில் கற்பழித்து விட்டுதான் மறுவேளை பார்ப்போம்...
எப்போதாவது ஹெலிகாப்டர் மிக தாழ கடலூரில் பறக்கும் போது நான் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது... அந்த பெரும் சத்தம் பெரிய வியப்பை தரும்..ஜெயலலிதா கடலூர் வருகின்றார் என்றால் கடலூர் மஞ்சை மைதானத்ததில் ஹெலிபேடு அமைக்கபட்டு இருப்பதை லோக்கல் தினத்தந்தி படங்களுடன் வவரிக்கும் அந்த செய்தியை முழுதாக வரிவரியாய் படித்து விட்டுதான் ஓய்வேன்..
ஆங்கிலபடங்களில்தான் எனக்கு விமானத்தின் உட்புற தோற்றத்தை அறிமுகபடுத்தினார்கள்..முக்கியமாக எக்சிகியூட்டிவ் டிசிஷன் படத்தில் ஒரு விமானத்தின் உள்கட்டமைப்பை பிரித்து மெய்ந்து இருப்பார்கள்..அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
ஜுனியர்விகடனில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு துணுக்கு செய்தி வந்தது.. கடலூரில் புறப்பட்ட ஒரு அரசு பேருந்து வெகு விரைவாய் சென்னை வந்து நங்கநல்லூர் பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும், விமான நிலையத்தின் சுவர் அருகில் பேருந்தை நிறுத்தி விட்டு, அந்த டிரைவர் பயணிகளிடம் சொன்னாராம் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ஒரு பிளைட் கிளம்பும் அதை பார்த்து விட்டு உடனே போகலாம் என்று சொன்னாராம்...(கடலூர்காரபயல்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க போல..)
1995 ல் மெரினாவில் பிளாட்பார வாழ்க்கையின் போது கையில் வாட்சு எல்லாம் இல்லை.. விடியலில் ஐந்து மணிக்கு வங்காளவிரிகுடாவின் உள்ளே இருந்து வெளியே வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்தான் எனக்கு நேரத்தை சொல்லும் தோழன்.. விமானத்தை புள்ளியாக பார்க்காமல் பெரிதாக பார்த்தது சென்னையில்தான். சென்னை வந்து பல வருடங்கள் விமானசத்தம் தலைக்கு மேல் எப்போது கேட்டாலும்... பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த பழமொழிக்கு ஏற்றது போலத்தான் ரியாக்ட் பண்ணி இருக்கின்றேன்...
சென்னையில் சென்ட்தாமஸ்மவுன்ட் மற்றும் திரிசூலம் மலைக்கு அடிக்கடி போவதே விமானங்கள் மேலே ஏறுவதையும் இறங்குவதையும் ஏரியல் வீயூவில் வேடிக்கை பார்க்கத்தான்...
எனது நண்பி ஒரு பைலட்.. அவளுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.. ஆனால் விமானத்தில் பறந்த அனுபவங்களை சொல்லும் போது வயிற்று எரிச்சலாக இருக்கும்...
இன்றும் சென்னையில் விமான நிலையத்தில் நெருங்கிய உறவுகளை வழி அனுப்ப விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் பார்வையாளர் பகுதிக்கு போய் விமானங்களை சில அடி தூரத்தில் ரசித்து ஆசையை போக்கி இருக்கின்றேன்..
என் மனைவியும் அப்படித்தான் அவள் அப்பாவுடன் எதிரில் விமான நிலையத்தின் மதில் சுவர் அருகே டிவிஸ் பிப்டியை நிறுத்தி அதில் கால் வைக்கும் இடத்தில் நின்று விமானம் கிளம்புவதை பார்த்து ரசித்து இருப்பதை சொல்லி இருக்கின்றாள்... அப்படி டிவிஎஸ் பிப்டியில் நின்று விமானத்தை ரசித்த போது அவள் அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள் என்பது உபரித்தகவல்...
இன்று எனது அப்பார்ட்மென்ட் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குவது ஏறுவதும் புள்ளியாக தெரியும்.. இரவில் ஒரு ஒளிப்புள்ளி வேகமாய் கடந்து போகும்..
இன்னமும் கிண்டி அருகில் 300 அடியில் டயர் இறக்கிக்கொண்டு பப்பரக்கே என்று ரக்கையை விரித்துகொண்டு இறங்கும் விமானத்தை அவலோடு பார்த்து இருக்கின்றேன்.. அந்த விமானங்களை பார்க்கும் போது எல்லாம் சின்ன வயதில் உச்சி வானில் ஒரு இன்ச் விமானங்களை கையில் குச்சிவைத்துக்கொண்டு துரத்திக்கொண்டு போனது நினைவுக்கு வந்து தொலைக்கும்.. அந்த தொலைக்கும் நினைவுக்கும் வந்தாலே உதட்டோரம் ஒரு புன்னகை ஏட்டிப்பார்க்கும்....
மடிப்பாக்கம் அக்கா வீட்டுக்கு மனைவி மற்றும் யாழினியுடன் போய் விட்டு கிண்டியை கிராஸ் செய்ய நங்கநல்லூர் தில்லைகங்காநகர் சப்வே இறங்கி ஏறி கிண்டி சிமென்ட் ரோடு பக்கம் வரும் போது அதிரவைக்கும் சத்தத்துடன் ஒரு போயிங் 747 ரகம் மிக பிரமாண்டமாய் இறங்க உத்தேசிக்க யாழினியின் ரியாக்ஷன் கவனிக்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுஅவளை கவனித்தேன்.
பெரும் சத்தம் வந்த திசை பக்கம் தலையை திருப்பியவள்...பெருத்த உற்ச்சாகத்தை வெளிபடுத்தியபடி பேபிஸ் டே அவுட் ஆங்கில பட குழந்தை போல குக்கு என்று சத்தத்தை எழுப்பினாள்.. எனக்கு சின்ன வயதில் ஒரு இஞ்சு அளவுக்கு தெரிந்த விமானத்தை துரத்திய ஞாபகத்துக்கு வந்தது..யாழினி 300 அடி உயரத்தில் பெரிய விமானத்தை நான்கு மாதத்தில் உற்சாகமாய் பார்க்கின்றாள்.. யாழினி விமானத்தை பார்த்து உற்சாகமானதை பார்த்து அவள் மேல் எனக்கு பொறாமையாக இருந்தது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
சிலவேளைகளில் பதிவுகள் நன்றாக எழுதுகிறீர்கள். படித்தேன். இரசித்தேன்.
ReplyDeleteதமிழை பிழையற எழுத உங்களுக்கு முடியாதென்பதல்ல விருப்பமில்லையென்றுதான் சொல்லவேண்டும். திரும்பத்திரும்ப அதே பிழைகள். யாழினி என்று இலக்கியத் தமிழில் பெயர் சூட்டியவருக்குக் குறைந்தது தான் அடிக்கடி போடும் பிழைகளைத் திருத்தியாவது எழுதவேண்டும் என்ற நினைப்பு ஏன் வரவில்லை ? பா. ராகவன் சொல்லிக் காட்டி எவ்வளவு நாட்களாகின்றன?
கருத்துப்பிழைகள் இருப்பின் அனானிகள் கவனித்துக்கொள்வார்கள். சொற்பிழைகள் இருந்தால் அவர்கள் வருவார்களா ? சிம்மக்கல் வருவாரா ? அவர் எப்போதாவதுதான் எட்டிப்பார்க்கும் சோம்பேறி.
போகட்டும்.
நண்பி என்றால் ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளலாம் பதிவர்களிடம். ஆனால் தமிழ் ஒத்துக்கொள்ளுமா என்று தெரியாது.
நண்பி என்பது என் பிர்ச்சினையன்று. "பெண் நண்பி" என்று சொன்னதுதான் இடர்கிறது.
ஏன் வெறும் 'நண்பி' என்று சொல்லக்கூடாது.
ஆண் நண்பி என்று எவரேனும் இருப்பாரா ?
@simmakkal
ReplyDeleteபிர்ச்சினையன்று?
நன்றி சிம்மக்கல் நீங்கள் சுட்டிகாட்டிய சொற்பிழையை திருத்திவிட்டேன்..
ReplyDeleteஎனது பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து வாசித்து வந்தால் நான் எந்த அளவுக்கு பிழை திருத்தி இப்போது எழுதுகின்றேன் என்று என் எழுத்தை வாசிப்பவர்களுக்கு தெரியும்..
எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாது.. பதிவுகள் ஆத்ம திருப்திக்கு எழுதுகின்றேன்..அவசரத்தில் எழுதும் போது இது போல நேர்ந்து விடுகின்றது..
உங்கள் பதிவுகளை வாசித்தேன்.. இந்த வருடத்தில் 5 பதிவு எழுதி இருக்கின்றீர்கள்.. அப்படி நான் எழுதினால் நானும் படித்து படித்து, பிழை திருத்தி எழுதி போஸ்ட் போடுவேன்.. நீங்கள் சொல்வது போல பிழையே இல்லாமல் ஒரு எழுத்தாளன் எழுதுகின்றான் என்றால் எதுக்கு பத்திரிக்கை மற்றும் அச்சகத்தில் புரூப் ரீடர் என்று ஒருவர் இருக்கின்றார்..
நான் என்ன பத்திரிக்கையா வைத்து நடத்துகின்றேன்..ஒரு புரூப் ரீடர் வைத்துக்கொள்ள..
தமிழ் டைப்பிங் தெரியாமல் நான் தடவி தடவி அடிக்கும் போது, மனதில்.. பாரதி பச்சைக்கலர் புடவை அணிந்து இருந்தாள் என்று நினைத்து டைப் அடிக்கின்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்..
சில நேரங்களில் பச்சை மட்டும் அடித்து விடுகின்றேன்.. கலர் போய் விடுகின்றது.. நேரம் இருப்பின் திருத்தி போடுகின்றேன்.. அவசரமாக பதிவை போஸ்ட் செய்து விட்டு போகும் போது இந்த பிழைகள் வந்து விடுகின்றது..
நீஙகளே அவசரத்தில் ஆங்கிலத்திலேயே உங்கள் மகனுக்கு கடையில் இருந்து பால் வாங்கி வராதே என்பதை foot get milk என்று அடித்து அனுப்பி இருப்பீர்கள்... இது வேண்டும் என்று செய்வது இல்லை.. உங்களையும் அறியாமல் அவசரத்தில் மொபைலில் டைப் செய்யும் போது வந்து விடும் தவறு... இது போலத்தான் என் தவறுகளும் நிகழ்கின்றது..பிழையோடுதான் எழுதுவேன் என்று எல்லாம் சத்தியபிராமானம் எடுத்துக்கொண்டு எழுதவில்லை..
பிழையோடு பதிவு போடவேண்டும் என்று அவசியம் இல்லையே என்று நீங்கள் சொல்லலாம்..
என் பிழைகளை பொருத்து படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதுகின்றேன்...
பட், சோ ,பை,ஓகே என்று பேசும் தமிழர்களுடன் நீங்கள் பேசுவதில்லையா? அது போல எழுத்து பிழையோடு இருக்கும் என் எழுத்தை ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனற் நம்பிக்கையுடன் எழுதுகின்றேன்..
அன்பின் சிம்மக்கல் இந்த நீண்ட நெடிய பதில் உங்களுக்கானது மட்டும் அல்ல........
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நண்பி என்பது என் பிர்ச்சினையன்று. "பெண் நண்பி" என்று சொன்னதுதான் இடர்கிறது.
ReplyDeleteதம்பி சிவக்குமார் சுட்டிகாட்டிய போதுதான் எனக்கே தெரிந்தது நீங்கள் செய்த தவறு?...
இலக்கியம் திருக்குறள் எல்லலாம் தெரிந்த நீங்களே நாலுவரி எழுதும் போதே ஒரு தவறு நேரும் போது.. நான் எல்லாம் உங்க அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை...
உங்களை காயப்படுத்த இதை சுட்டிக்காட்டவில்லை.. எனக்கும் இது போல தினமும் எழுதும் போது தவிர்கக முடியவில்லை என்று குறிப்பிடுகின்றேன்.
நன்றி சிவக்குமார்..
நல்ல பகிர்வு...
ReplyDeleteஎழுத்துப் பிழைகள் வருவது இயல்பே...
உங்கள் எழுதும் திறனுக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார் (http://vayalaan.blogspot.com)
Jackie,
ReplyDeleteGood post.I am long time reader of your blog.I too had similar feeling in my childhood.
Now I am working for an aerospace company(Goodrich) in Bangalore.We make slides and few aircraft parts .Let me know if you are interested,I can take you there.(When you are in bangalore)
Regards,
Siva
9845246966
மிக நல்ல பதிவு... நான் உங்கள் நீண்ட நாள் வாசகன்... மட்டக்களப்பில் விமான நிலையம் இல்லை, நாங்கள் பாட சாலையில் படிக்கும் போது, விமான சத்தம் கேட்டால் வாயை திறந்து அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன்..., ஒரு முறை ஆறாவது படிக்கும் போது தான் இந்தியா செல்வதற்காக விமான நிலையமே சென்றேன், அவ்வளவு அருகில் இருந்து பார்க்கும் போதுதான் விமானத்தின் பிரம்மாண்டம் புரிந்தது, மனிதனின் அறிவுச்சாதனையும்தான்.
ReplyDeleteபகிர்ந்தத்க்கு மிக்க நன்றி...
மட்டக்களப்பில் இருந்து சரவணா.
எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.
மேலும் ஒரு குறிப்பு.. executive decision படத்தின் விமர்சன லிங்க் வேலை செய்யவில்லை. நன்றி
நானும் விமானத்த வானத்தில பார்த்ததோடு சரி .. ..உங்க அபார்ட்மென்ட் ல வேற தினமும் புள்ளியா பார்க்கறீங்க.....வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎக்சிகியூட்டிவ் டிசிஷன் படத்தில் ஒரு விமானத்தின் உள்கட்டமைப்பை பிரித்து மெய்ந்து இருப்பார்கள்..அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
ReplyDeletethis link is not working
எனக்குப் பிடித்த பறவை மயில்; இன்னுமொன்றெனில் அது விமானமே! , அது பறந்தாலும் , இருந்தாலும் அழகும் கம்பீரமுமே! யாழ்ப்பாணம், பலாலி விமானநிலையத்துக்கு அன்றைய நாட்களில் காலை 10.30 க்கும், மாலை 2.30 க்கும் வரும் விமானத்தை , வானத்தில் பார்த்து மகிழ்ந்தோம், ஒருதடவை பாடசாலையால் பலாலி விமான நிலையம் கூட்டிச் சென்ற போது மிக அருகில் விமானத்தைப் பார்த்தோம். அன்று அது சாத்தியம். ஜெற் விமானம் வந்த ஆரம்பகாலத்தில் சந்தம் , அத்துடன் அது போடும் புகைக் கோட்டை வைத்து
ReplyDeleteஅது பறப்பதை புள்ளியாகத்தான் , பார்ப்பதே சந்தோசமே!
தங்கள் பதிவை ரசித்தேன். விமானம் பிடித்ததால்,.
நெகிழ்ச்சியாய் அவர்கள் அனுபசங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். நண்பர்களே..
ReplyDeleteகார்த்தி கவி மற்றும் நண்பர்களுக்கு லிங் சரி செய்து விட்டேன்..
அன்பின் ஜாக்..கி ...
ReplyDelete"அந்த சிறப்பு வாய்ந்த ஐடியாவை நான் குப்பை தொட்டியில் வீசி ஏறிந்தேன்...காரணம் அந்த ஐடியாவை செயல்படுத்தினால் ஒரு ஆறாயிரம் ரூபாய் தண்டம் அழ வேண்டும் என்ற காரணத்தால் அதனை உதாசினப்டுத்தினேன்."
யார் அங்கே..!
அந்த சிறப்பு வாய்ந்த ஐடியாவை செயல் படுத்த தவறிய இந்த மா மனிதருக்கு ...காலம் முழுவதும் விமானத்தில் செல்ல இலவச பாஸ் வழங்க இந்த வாசகர் வட்டம் உத்தரவு இடுகிறது.
*---------------*
"எனது நண்பி ஒரு பைலட்.. அவளுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.. ஆனால் விமானத்தில் பறந்த அனுபவங்களை சொல்லும் போது வயிற்று எரிச்சலாக இருக்கும்..."
எங்களுக்கும் தான்... (விமானத்தில் பறந்த அனுபவங்களை சொல்றதனால் அல்ல..!? )
*-----------------------------*
"யாழினி 300 அடி உயரத்தில் பெரிய விமானத்தை நான்கு மாதத்தில் உற்சாகமாய் பார்க்கின்றாள்.. யாழினி விமானத்தை பார்த்து உற்சாகமானதை பார்த்து அவள் மேல் எனக்கு பொறாமையாக இருந்தது..."
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்.. - நல்ல ஒரு தந்தை..
அது..ஓகே..இனி அவ்ளோ சத்தத்தில் குட்டிமாவை கேட்க செய்யாதீர்கள்.. நீங்கள் எவ்ளோ வேனா கேளுங்கள்.. காரணம்..உங்க காது ஒட்டையாகட்டும்!?
*---------------*
"யாழினி விமானத்தை பார்த்து உற்சாகமானதை பார்த்து அவள் மேல் எனக்கு பொறாமையாக இருந்தது..."
இருக்கட்டும்..நாளை உங்களையும் அவள் விமானத்தில் கூட்டி செல்வாள்.....
கடவுள் ஆசீர் குட்டிமாவுக்கு என்றும் உண்டு..
*-------------*
என்றும் அன்புடன்.
NTR
//"யாழினி விமானத்தை பார்த்து உற்சாகமானதை பார்த்து அவள் மேல் எனக்கு பொறாமையாக இருந்தது..."
ReplyDeleteஇருக்கட்டும்..நாளை உங்களையும் அவள் விமானத்தில் கூட்டி செல்வாள்.....
கடவுள் ஆசீர் குட்டிமாவுக்கு என்றும் உண்டு..//
என்னை நெகிழவைத்த வார்த்தைகள்.
உண்மைதான்... அந்த நங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே இரு சக்கர வாகனத்தில் நான் கடந்தபோதெல்லாம் பலமுறை மிக அருகே விமானம் தென்பட கண்டிருக்கிறேன்...
ReplyDeleteமலரும் நினைவுகள் எல்லோருக்கும்...
நண்பா ஜாக்கி,
ReplyDeleteநீங்கள் அழகி தமிழ் சாப்ட்வேர் தான் உபயோகப் படுத்துவீர்கள் என்று எண்ணுகிறேன்.
இல்லையெனில், அதனை உபயோகிக்கவும். தமிழ் டைப் தெரிய அவசியமில்லை.
நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால், அதுவே தமிழுக்கு மாற்றிவிடும். உம்: AMMAA - அம்மா
இது முற்றிலும் இலவச மென்பொருள் தான். இங்கே டவுன்லோட் செய்யுங்கள் : http://www.azhagi.com/sai/Azhagi-Setup.exe
என்றும் அன்புடன்
V.S.பிரசன்ன வரதன்
இந்தப் பின்னூட்டம் அழகான தலைப்புக்கு ஜாக்கி!
ReplyDelete//எங்கள் ஊர் கடலூரில் விமான தரிசனம் என்பது வருடத்துக்கு இரண்டு முறை கிட்டும். அந்த விமானம் ஒரு இன்ச் அளவுக்குதான் எங்கள் கண்ணுக்கு தெரியும்... ஆனால் அந்த விமானத்தை கண்ணில் இருந்து மறையும் வரை நண்பர்களோடு விரட்டி செல்வோம்.//
ReplyDeleteமுன்பு விமான தளத்தில் பணிபுரிந்த காரணத்தால் விமானத்தில் பயணிக்கும் போது த்ரில்லாக இல்லை,இடுப்பு பெல்ட்டை எப்படி இணைப்பது என்ற குழப்பம் முதற்கொண்டு:)ஆனால் நீங்கள் சொல்லும் கடலூர் அனுபவம் மாதிரியான காலங்களில் விமானம் சிகரெட் பிடிப்பதை வைத்து விமானத்தின் புள்ளியை அதோ!அதோ என்று சொல்லி நண்பர்களுடன் மகிழ்ந்த காலங்கள் மகத்தானவை.
நல்ல பதிவு.. வாழ்த்துகள் சார் ..
ReplyDeleteரெம்ப சந்தோசம் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteஇருக்கிறதுலேயே மிக கேவலமான பயணம், இந்த விமான பயணம் தான்!! கொஞ்சம் விளக்கமா சொல்லுறேன்.
விமான பயணத்திற்கு குறைஞ்சது ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நல்லா பிளான் பண்ணனும்.
நீங்க உங்கவீட்டு காச குடுத்து டிக்கெட் வாங்கி அந்த ஏர்போர்ட் ட பயன்படுத்த தனியா வரியும் கட்டி விட்டு.
இந்த ஏர்போர்ட் ஆபிசர்கள் தொந்தரவு தாங்க முடியாதுங்க! இதெல்லாம் சமாளிச்சிட்டு ஒரு ரெண்டு மணிநேரம் "தேமே" ன்னு உக்காந்து இருக்கணும். இதையும் முடிச்சிட்டு விமானத்துல ஏறுனா, 4 மணி நேரம் (சிங்கப்பூர்) ஒரே எடத்துல உக்காந்துக்கணும் ( இத நினைக்கும் போதே கடுப்பு ஆகுது). சைடு ல பார்த்திங்கனா பகலா இருந்தா ஒரே வெள்ளையா தெரியும், இரவா இருந்தா ஒரே கருப்பா தெரியும் அவ்வளவு தான்!!. அதுலயும் கொழும்பு transit ல மாட்டுனிங்க, உங்கள ஸ்கேன் பனுறேன்னு சொல்லிட்டு பெல்ட்,சூ, பர்ஸ் எல்லாத்தையும் கழட்ட சொல்லி பாடா படுத்திவிடுவானுங்க!! நீங்க பெங்களூர் போறபயே இடையில இறங்கி ஒரு ரவுண்டு அடிக்கணும்னு நினைபிங்க.
வேணும்னா ஆறயரம் போன போகுதுன்னு பெங்களூர் போகலாம் தல!
Nice entry, Jackie.
ReplyDeleteGopi,
Pretty funny AND true comments.