மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/2011)

ஆல்பம்.



உலகளாவிய  நண்பர்கள் வட்டத்துக்கு எங்கள் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர் மற்றும் குடும்பத்தினர்.




===========



சென்னையை ஒட்டு மொத்தமாக தூய்மைபகுதியாக மாற்ற முதல்வர் ஜெ ஹெலிகாப்டர் பயணம் மேற்க்கொண்டு இருக்கின்றார்.. அரசு நிகழ்ச்சிக்கு எல்லாம் தனி விமானத்தில் பறக்கும் காஸ்ட்லி முதலமைச்சர் நம்ம ஜெ..ஏதோ சென்னையை சுத்தபடுத்த ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றாரே அது வரவேற்க்க கூடியதே.. சாலைகளில் பயணிப்பதை விட  ஏரியில் வீயூவில் பார்த்தால்தான்.. எந்த பக்கமாக குப்பை லாரிகள் விரைவாக குப்பைகளை அள்ளி  செல்ல முடியும்... எந்த பாயிண்ட் அதிக அளவில் டன் கணக்கான குப்பைகளை சேகரித்துக்கொள்ளும் என்று பார்த்து இருக்கலாம்.. எது எப்படி இருந்தாலும் நாம் வாழும் சென்னை சுத்தமானால் சரி..

==========

ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு இன்று இருட்டில் இருக்கும் சென்னை புதியதலைமைசெயலகம் ஜெயலலிதாவின் அகங்காரத்தை காட்டுகின்றது என்று இப்போதுதான் தி ஹிண்டு சொல்லி இருக்கின்றது..தமிழ்நாட்டை ரட்சிக்க வந்த செல்வி ரேஞ்சில் ஜெவை தேர்தலுக்கு முன் பேசிய தமிழக பத்திரிக்கைகள் இப்போதுதான் பேக் டூ த பெவிலியனுக்கு திரும்பி இருக்கின்றன...சமச்சீர் கல்விக்கு நடந்த கொடுமையும்  ஜெவின் அப்பாட்மான ஈகோவையும் தமிழ்நாட்டில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் அனைத்து பெற்றோருக்கும் தெரியும்....இருப்பினும் தம்பி கார்த்தி புதிய தலைமைசெயலகம்  குறித்து விரிவாய் எழுதி இருக்கும் இந்த பதிவை படித்து பாருங்கள்..



===================

திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை  கோடி  சொத்துக்கள் அவருக்கு  இருக்கின்றது என்று ஒரு பட்டியல் இப்போது வெளியாகி இருக்கின்றது..அவர் பெயரில் இரண்டு சொத்துக்கள்தான் இருக்கின்றது.. சும்மா சொத்து இருக்கின்றது சொத்து இருக்கின்றது என்று உதார் எல்லாம் விட்டுக்கொண்டு இருக்ககூடாது...அவர்கள் வாங்கிய சொத்தில் ஏதாவது முறைகேடு நடந்து இருந்தாலோ? அல்லது மிரட்டி வாங்கி இருந்தாலோ சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதைதான் செய்ய வேண்டும்.. அதை விடுத்து சொத்து சொத்து  என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது..விக்கிலிக்ஸ் வெளியிட்ட சுவிஸ் கருப்பு பணபட்டியலில்  கலைஞர் அவர்களின் பெயர் இருக்கின்றது.. அது வேறு பெரிய புயலை கிளப்பும்... பார்ப்போம்.

==========

திரும்ப அதிரடி அரசியிலில் பாமக கால்பதிக்க போகின்றது.. திராவிட கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று சொன்னபிறகு தன் ஸ்திரதன்மையை நிருப்பிக்க  மக்களிடம் தன்னை நிரூபிக்க டாஸ்மார்க் கடைகளை அடித்து நொறுக்க போவதாக சொல்லி இருக்கின்றார் ராமதாஸ்...ஜெ ஆட்சியில் கொண்டு வந்த டாஸ்மார்க்... கலைஞர் ஆட்சியில்  வெற்றி நடைபோட்டு ,திரும்பவும் ஜெ ஆட்சியில் நடைபோட்டுக்கொண்டு இருந்தது.. குறைந்த பட்சம் இந்த தமிழகத்தில் டாஸ்மார்க் ஆட்சி பத்து வருடம் என்று வைத்துக்கொண்டாலும் இத்தனை நாள் பொங்காமல் இப்போது ஏன் பொங்குகின்றார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிச்சயம் எழும்..

 ========
இந்தவார சலனபடம்..
இந்த வீடியோ.. விழுந்து விழுந்து சிரிக்க அல்ல.. பல சேப்ட்டி பிரிக்காஷனை சொல்லிக்கொடுக்கின்றது...



========

மிக்சர்



சென்னையில் மடிப்பாக்கம் பொன்னியம்ன் கோவிலில் இருந்து புழதிவாக்கம் பேருந்து நிலையம் போவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடுகின்றது.. எல்லாம் பாதாள சாக்கடை திட்டம்தான்.. மிக முக்கியமாக மழை ரெண்டு துளி விழுந்தால் மக்கள் கொழ கொழ சகதி மண்ணில் கடந்து போகும் சிரமங்கள்  சொல்லி மாளாது.. வெயில்காலத்தில் காண்டிராக்டர்கள் ஆட்டிக்கொண்டு இருந்தார்களா ?என்று தெரியவில்லை எந்த ஆட்சியாக இருந்தாலும் ரோட்டை வெட்டி போட்டு மழைகாலத்தில் விளையாட்டு காட்டும் காண்டிராக்டர்கள் தொல்லை தாங்க முடியவில்லை...இதையே போயஸ் தோட்டத்திலும் கோபலபுரத்திலும்  தோண்டி இப்படித்தான் வைத்து இருப்பார்களா? என்பதே என் கேள்வி.??



====================

நேற்று இரவு வெகு வேகமாய் அந்த பையன் பைக்கில் போரூரில் இருந்து குன்றத்தூர் ரோட்டில்  போய்கொண்டு இருந்தான்..மதனந்தபுரத்து பஸ்ஸ்டாப்புக்கு 300 மீட்டருக்கு முன் இரண்டு பேர் பைக்கில் ரோட்டை கிராஸ் செய்ய டம் என்று பெரிய சத்தம்  கேட்டது...

நடு ரோட்டில் இரண்டு பேருமே விழுந்து கிடந்தார்கள்.. பையனிடம்  எந்த அசைவும் இல்லை ரோட்டை பைக்கில் கிராஸ் செய்தவர்களிடத்தில் ஒருவரிடம் மட்டும் சின்ன அசைவு இருந்தது...பின்னால் வந்த  வண்டிகள் சிலது கிராஸ் செய்தன.. நான் இறங்கி ஓடிபோய் வேகமாய் வந்த பையனின் மேல்  விழுந்து கிடந்த பைக்கை  தூக்கினேன். பின்னல் வந்த இரண்டு பேர் அந்த இரண்டு பேரின் மேல் இருந்த பைக்கை தூக்கினாகள்..ஒரு ஜுன்ஸ் போட்ட பெண், ஒரு ஆண்டி இரைந்து கிடந்த பொருட்களை சேகரித்து கொடுத்தார்கள். நான் அவசரத்தில் பைக்கில்  சாவியோடு விட்டு விட்டு  வந்தகாரணத்தால் நான் விபத்தான வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, எனது வண்டியயை எடுக்க  ஓடினேன். நிறைய பேர் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தி என்னவாயிற்று என்று கேட்டுக்கொண்டு  தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொள்ள கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.பையன்மேல் தண்ணி தெளிக்க அவன் பிரம்மை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டு இருந்தான்..பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவருக்கு முகத்தில் நிறைய சிராய்ப்புகள்... ஆட்டோ பிடித்து இருவரையும் அனுப்பி வைத்தோம். பைக்கில் ரோட்டை கிராஸ் செய்த இருவரின் மேல் பைக் கிடந்த போது அவரின் முகத்தில் சிராய்ப்பு இருந்தது லண்டன் மாநகரின் நடுரோட்டில் கிடப்பது போல அவர் ஹேல்ப் மீ என்று பயத்தில் கத்தியதும்.. கூட்டம் சேர்ந்து உதவிக்கு வந்ததும் தேவிடியாபையன் வேகமா வந்து மோதி என் உயிரை எடுத்துட்டானே என்று புலம்ப ஆரம்பித்ததும் எனக்கு வியப்பாக இருந்தது..

=========================

குழந்தை அழுதது என்று  எழுதியதற்கு நிறைய பெண் நண்பிகள் படித்து விட்டு அட்வைஸ் செய்து கொண்டு இருந்தார்கள்..  தம்பி சிவக்குமார் அவர் அம்மாவிடம் போன்செய்து கொடுத்து, அவர் அம்மா என்னை விசாரித்தார்.. எத்தனை மாசம் ஆகுது தம்பி, என்று விசாரித்து அவர்களுக்கு என்ன தெரியுமோ அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது..

=================

நேற்று நண்பர் ஸ்பெ வின் அழைப்பின் பேரில் பண்புடன் குழும வாசகர் சந்திப்புக்கு  போய் இருந்தேன்...தம்பி மயில்ராவணனும் வந்து இருந்தார்..நல்ல சந்திப்பு நிறைய  நண்பர்களோடு உறவாட முடிந்தது.. நிறைய பேசினோம்,நிறைய விஷயங்கள் அறிந்துக் கொண்டோம்.. விழியன் வீட்டில் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு பல நட்புகள் கிடைக்க காரணமாயிருந்தது..ஸ்பெ மற்றும் விழியன் மற்றும்  பண்புடன் குழும நண்பர்களுக்கு என் நன்றிகள்...

============



இந்தவார கடிதம்



வணக்கம் சகோதரா,



                                   இதுதான் நான் உங்களுக்கு அனுப்பற  முதல் மெயில் .நான் இப்பதான் ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னால கம்ப்யுட்டரும் நெட் கனக்சனும் வாங்குனேன்.வாங்குனப்புரம் தான் யோசிச்சேன் இதை வைச்சுகிட்டு என்னடா பண்றதுன்னு.

நெதர்லாந்தில் எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.அவனிடம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னான் ப்ளாக்கர்ன்னு ஒரு தளம் இருக்கு அதுல்ல உன்பேர்ல ஒன்னு ஓபன் பண்ணிக்கிட்டு உனக்கு என்னை தோணுதோ அதுல எழுதலாம்னு சொன்னான்.எனக்கு விளங்கல அவன் சொன்னான் அதுவும் ஆனந்த விகடன்,குமுதம் போலதான்,அதுலலாம் நாம எழுதறது கொஞ்சம் கஷ்டம் இதுல நம்ம எழுததறது ஓரளவுக்கு நல்லாருந்தா  ஒரு பத்து பேராவது வந்து படிப்பாங்க அப்படின்னான்.

இப்படி அவன் முதல் முதலா அவன் எனக்கு அறிமுகப்படுத்தியது தான் பதிவுலகம்.

அவன் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது உங்கள் தளத்தைத்தான்.அன்றிலிருந்து உங்கள் தளத்தை வாசித்து வருகிறேன்.



உங்களது எழுத்து நடை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.சின்ன வயசில ராஜேஷ்குமார் நாவல்கள் படிப்பேன்.(இப்பவும் நேரமும் புத்தகமும் கிடைத்தால்)அவரின் எழுத்து நடையைப்போலவே நீங்கள் எழுதுவதும் அவ்வளவு சுவாரஸ்யம்.





உங்கள் பயணக்கட்டுரைகள் அனைத்தும் படிப்பவர்களையும் உங்கள் கூடவே பயணித்தது போன்ற உணர்வைத்தருகிறது.உங்க கையில் இல்ல கண்ணிலே காமிரா இருக்கு.

ஒவ்வொரு விசயத்தாயும நீங்க உத்துப்பாக்கறிங்களோ என்னவோ அண்ணா எங்களுக்கு தெரியாத விஷயம் உங்களுக்கு தெரியுது.

அப்பறம் சகோ,நான் இப்ப இருக்கறது புதுச்சேரியில தான்( திருபுவனைபுதுவையிலிருந்து 20கி.மி)சொந்த ஊர் மங்களபுரம் ன்ற கிராமம் நாமக்கல் மாவட்டம்.வேலை காரணமா இப்ப இங்க அப்பா அம்மாவுடன்  வாசம்.

அடுத்த முறை கடலூர் வருகையில் தெரியப்படுத்துங்க ஒரு இந்து நிமிஷமாவது உங்களோட செலவளிக்கணும்.



நன்றி.



சகோ, இப்பதான் உங்க இன்றைய ஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு கடந்த புதன் சாண்ட்வெஜ் (27,31/07/2011) படிச்சேன்


 


\\\\ இங்கே நடு ரோட்டில் எச்சி துப்பி விட்டு பாரின் போய் ரூல்ஸ் மதிக்கும் புண்ணியவான்கள். நான் செய்தது தவறு என்று சொல்லிக்கொண்டு  இருக்கின்றார்கள்..நான் செய்தது சரி என்று எங்கேயும் வாதிடவில்லை.. இந்த இடத்தில் வாசக நண்பர் கோகுல் போட்ட பின்னுட்டம் மிச்சரியானதே...



அது கீழே..



\நான் அந்த அளவுக்கு உங்களை போல அக்மார்க் யோக்கியமானவன் அல்ல.... சென்னையில் குறைந்த பட்ச நேர்மையோடு வாழும் சராசரி மனிதன்.....\\
உண்மைதான் எல்லோரும் அந்தந்த சந்தர்ப்பங்களில் நமது மனம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் நாம் செய்கிறோம்.இதில் மாட்டிக்கிரவங்க அயோகியர்களுமில்லை ,எஸ்கேப் ஆவரங்க ஒழுக்க சீலர்களும் இல்லை



நண்பர்களே, யோக்கியம் பேசுபவர்களே.. நான் இருப்பது இந்தியாவில்...அதை அடிக்கடி நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்...\\\\



மிக்க நன்றி சகோ, இதுதான் நான் உங்களுக்கிட்ட முதல் பின்னூட்டம்.

உங்கள் பதிவில் குரிப்பட்டமைக்கு நன்றி.

நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம்!!





--
''Don't expect thinks as u like.Accept whatever comes & make it as u like''



================

வாழ்த்துகள்..



இணைய விவாத சிங்கம் நண்பர் டாக்டர் புருனோவுக்கு இனிய பிறந்தநாள் மற்றும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்

இன்று சிங்கை செல்லும் திட்டக்குடி கார்த்தியின் பயணம் சிறக்க எனது இதயம் கணிந்த வாழ்த்துகள்.





பிலாசபி பாண்டி



மாப்பளை

மச்சி

மாப்பி

நண்பா

பிரண்ட்

தோஸ்த்

சகலை

தோழா

மாமு

மச்சான்

பங்காளி

மாமா

மாம்ஸ்

உறவில் இல்லாமல் உண்மை உறவுகளுக்கு இத்தனை பெயர், அதுதான் பிரண்ட்ஷிப்.. அனைவருக்கும் திரும்பவும் நண்பர்கள் தின  நல்வாழ்த்துகள்.





=============================

நான்வெஜ் 18+



புருஷன் வீட்டுக்கு வந்தப்போ அவன் பக்கத்து வீட்டுக்காரன் அவன் பொண்டாட்டி மேல உக்காந்து இருந்தான்.



பொண்டாட்டியை அந்த கோலத்துல பார்த்து அதிர்ச்சி ஆன புருஷன்காரன் கோவமா கேட்டான், 'என்ன நடக்குது இங்க'.



உடனே பொண்டாட்டி தன் மேல உக்காந்து இருந்த பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட சொன்னா, 'நான் சொல்லலை, என் புருஷன் குழந்தை மாதிரி எதுவுமே தெரியாதுன்னு, இப்போ பார்த்திங்களா நாம என்ன செய்யறோம்னு கூட தெரியாம கேள்வி கேக்குறாரு' என்றாள்.



பிரிங்களுடன்
ஜாக்கிசேகர்

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

15 comments:

  1. @ Jacki, wikileaks news about Karunanithi is a fake , no vaild link is given by any..the image/picture shown is a fake one.

    ReplyDelete
  2. 'காண்டிராக்டர்கள் ஆட்டிக்கொண்டு இருந்தார்களா ?"
    Sir contractors thappu seivathillai ...........
    entha aatchi vanthalum contactors ul kuthu veli kuthu ellan therinthu purithu nadanthu kolvargal avargalin valvatharathukka.. contaract kudutha athigarigalai sollongal...avargalidamthan nermai illa.......

    entha aatchi nadanthalum ippadithan irukun .............
    i think you are supporting DMK pepoles..
    mer sonna vakkiyam ehukku sonnana ..........

    am not admk support .. an d am not a contractor....

    but am a manithan..............

    jaki sekarayum padikkun oru sara sari manithan.........

    ungalidam peas avalai

    pon.siva
    8056504054

    ReplyDelete
  3. \\ மக்களிடம் தன்னை நிரூபிக்க டாஸ்மார்க் கடைகளை அடித்து நொறுக்க போவதாக சொல்லி இருக்கின்றார் ராமதாஸ்...//

    அடி மடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா?
    17000கோடி வருமானமாமே?

    நன்றிகளுடன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நண்பர் தின வாழ்த்துகள் ஜாக்கி சார்!!

    ReplyDelete
  5. நன்பர்கள் தின வாழ்த்துக்ள் நன்பரே நட்புடன் நக்கீரன் குழந்தைக்கும் என் அன்பு வாழ்துக்கள்.

    ReplyDelete
  6. 1. Karunanidhi’s House in Gopalapuram –6124 sq.ft. in area—value Rs.5 crores

    2. The House of Murasoli Maran in Gopalapuram—value Rs. 5 crores

    3. The House of Murasoli Selvam in Gopalapuram—1200 sq.ft. in area—value Rs.2 crores

    4. The House of Sornam in Gopalapuram—value 4 crores.

    5. The House of Mu Ka Muthu in Gopalapuram—value Rs.2 crores

    6. The House of Amritham in Gopalapuram—value Rs.5 crores

    7. The House of daughter Selvi Ezhilarasi in Gopalapuram—value Rs.2 crores

    8. The House of wife Rajathiammal in CIT Colony—extent of Land 9494 sq.ft.—area of the house 3500 sq.ft—value Rs.12 crores

    9. The extent of land owned by Rajathiammal andKanimozhi in Mannivakkam village—300 acres—value Rs.4.5 crores

    10. A Shopping Establishment called Royal Furnitures owned by Rajathi Ammal—value Rs.10 crores..

    11. The house owned by Mu Ka Stalin at Velacheri---extent of land 2687 sq.ft.—area of the house 2917 sq.ft.—value Rs.2 crores

    12. Udyanidhi’s Snow Bowling Alley at Nungumbakkam—value Rs.2 crores

    13. Kalanidhi Maran’s palatial House on Boat Club Road in Chennai—16 grounds of land—value Rs.100 crores

    14. Farm House owned by Maran Brothers in Kottivakam—value Rs.10 crores

    15. MM Industries near Ramachandra Medical College at Porur—value Rs.2 crores

    ReplyDelete
  7. 16. Murasoli office building at Kodambakkam—6 grounds of private patta land and 1472 sq.ft. of Public and Government owned Poromboke Land—value Rs.20 crore.

    17. Sun Cable Vision property at Mahalingapuram in Kodambakkam—2 grounds of land and other TV Equipments—value Rs.5 crores

    18. Sun TV’s Lands at MRC Nagar—32 grounds in extent –value Rs.100 crores

    19. Value of 11% shares in Coromandel Cements Ltd. Rs.50 crores

    20. 4-bedroomed flat owned by Selvam in Bangalore—value Rs.4 crores

    21. Landed property of Selvi on Bangalore-Mysore Highway—a farmhouse eon 1 acre—value Rs.80 crores.

    22. A Farm House owned by Maran Brothers on 1.84 acres of land---value Rs120 crores

    23. The office of Udaya TV in Bangalore—10 grounds of land—value Rs.108 crores.

    24. Mu Ka Tamilarasu’s Rainbow Industries on Peters Road---value Rs.48 crores.

    25. Mu Ka Tamilarasu’s farmlands at Andiyur---13 grounds in extent—value Rs.30 lakhs

    ReplyDelete
  8. 26. Sun TV’s Office in New Delhi—value Rs.50 crores

    27. Share value in Express Estates—value unknown

    28. Dinakaran Publications—value unknown

    29. Sumangali publications—value unknown

    30. Murasoli Trust—value unknown

    31. 37% share holding in Spice Jet Airways—Rs.48 was paid per share at the time of purchase –purchased through Wilbur Ross and Royal Holdings Services in USA from Kansakra---Kalanidhi Maran himself had declared the value at the time of purchase of these holdings as Rs.13, 384 crores.

    32. Lands owned by Dayalu Ammal Trust at Madakulam Village in Madurai District—21 cents.—value unknown

    33. Extent of land owned by Karunanidhi at Agarathirunnallur Village in Thanjavur District—21.30 acres—value unknown

    34. Extent of land owned by Dayalu Ammal in Tiruvallur District—3.84 acres-value Rs.1 crore

    35. Lands owned by Durga Stalin in Tiruvallur District---3680 sq.ft. of land—value 60 lakhs.

    36. 2.56 acres of land owned by Azagiri at Uthangudi village in Madurai North Taluk—value Rs.2 crores

    37. 7.53 acres of land owned by Azagiri at Kallathiri Village in Madurai North taluk—value 2 crores.

    38. 1.5 acres of land owned by Azagiri at Madurai Tallakulam—value Rs.5 crores.

    39. 1.54 acres of land owned by Azagiri at Chinnapatti Village in Madurai North taluk—Rs.40 lakhs.

    40) 12 cents of land owned by Azagiri in Madurai Tirupparankundram---value Rs.50 lakhs

    41. 36 cents of land owned by Azagiri at Maddakulam Village in Madurai South Taluk—value Rs.1 crore

    42. 18,535 sq.ft. of land owned by Azagiri at Punmeni Village in Madurai South –value Rs.2 crore

    ReplyDelete
  9. @ Gonzalez

    Brother.. You continue.....>>>>>>

    ReplyDelete
  10. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

    நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.

    நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.


    பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. HELLO JACKIE SEKAR, HOW R U HOPE U AND UR FAMILY R FINE. SRY I DONOT KNOW TO TYPE IN TAMIL.SO ONLU IN ENGLISH....,, UR BLOG IS SUPER UR WAY OF WRITNG SYLE IS ALSO SUPER SEKAR SIR. CONT TO WIRTE LIKE US... THANKS FROM R.V.PRABHU MADIPAKKAM

    ReplyDelete
  12. சில கருத்துக்கள்... அப்புறம் ஒரு வாசகர் கடிதம்னு நீங்க எழுதற ஸ்டைல் தினமலர் வாரமலரில் வரும் அந்துமணி மேட்டர் போல இருக்கு... படிக்கறவங்களுக்கு சுவரசியம் கொடுக்கற எந்த பதிவும் சோடை போறதுல.. உங்க பதிவுகளும் அப்படித்தான் இருக்கு... நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பரே....

    நேரம் இருந்தா என் கவிதைப்பக்கமும் வாங்க... பலதரப்பட்ட உங்க பார்வையில என் கவிதை எப்படி இருக்குன்னும் தெரிஞ்சிக்க விரும்பறேன்..

    ReplyDelete
  13. //சென்னையில் மடிப்பாக்கம் பொன்னியம்ன் கோவிலில் இருந்து புழதிவாக்கம் பேருந்து நிலையம் போவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடுகின்றது.. எல்லாம் பாதாள சாக்கடை திட்டம்தான்.. மிக முக்கியமாக மழை ரெண்டு துளி விழுந்தால் மக்கள் கொழ கொழ சகதி மண்ணில் கடந்து போகும் சிரமங்கள் சொல்லி மாளாது.. வெயில்காலத்தில் காண்டிராக்டர்கள் ஆட்டிக்கொண்டு இருந்தார்களா ?என்று தெரியவில்லை எந்த ஆட்சியாக இருந்தாலும் ரோட்டை வெட்டி போட்டு மழைகாலத்தில் விளையாட்டு காட்டும் காண்டிராக்டர்கள் தொல்லை தாங்க முடியவில்லை...இதையே போயஸ் தோட்டத்திலும் கோபலபுரத்திலும் தோண்டி இப்படித்தான் வைத்து இருப்பார்களா? என்பதே என் கேள்வி.??
    //

    தோழர் ஜாக்கி!

    சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டரின் வீடும் அதே தெருவில்தான் இருக்கிறது. அவரது குழந்தைகளும் அதே சகதியில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். - உங்கள் குறிப்புக்காக சொல்கிறேன் :-)

    ReplyDelete
  14. நன்றி நண்பர்களே...

    நன்றி பிரபு பிரியா..

    நன்றி தோழர் லக்கி... ஸ்பாட் தகவலுக்கு...

    ReplyDelete
  15. வழக்கம் போல் அருமை.


    சே.குமார் (http://vayalaan.blogspot.com)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner